Monday, November 20, 2006

இந்த வார மாமனிதர்: பெரியார்

Periyar E.V.Ramaswamy
பெரியார்
1879 - 1973

"நான் மனிதனே!  நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி.  இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.  "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "


4 comments:

  1. வலைப்பூவுலகில் உங்கள் படைப்பைக் காண்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

    ReplyDelete
  2. வணக்கம். நல்வரவு.
    நல்ல பதிவு இட்டிருக்கிறீர்.

    பெரியார் கூறிய இதே கூற்றுகளைத்தான் ஜெ. கிருஷ்ணமூர்த்தியும் கூறியிருந்தார்.
    மனிதனுக்கு கடவுளும் தேவையில்லை, தலைவனும் தேவையில்லை என்று.
    தான் அறிந்ததிலிருந்தும் விடுபடவேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
    சிறு பிள்ளையாக் இருந்தபோது பெரியோர் நமக்கு ஆயிரம் சொல்லி வளர்த்திருப்பர்.
    பெரியவன் ஆனதும் அவற்றிலிருந்து சற்றே விடுபட்டு, சுயமாக சிந்திக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
    கூட்டங்கள், கோஷ்டி, கொள்கைகள், மதம், தலைவன், நாடு, எல்லை, மொழி சார்புடையவர்கள் அனைவரும் பலவீணமுடயவர்கள் எனவும் கூறியிருந்தார்.
    அடடா, எங்கேயோ போய்விட்டேன் போலிருக்கிறதே!

    அப்புறம்,
    நம்ம பூர்வீகமும் பாண்டிதாங்க.
    ஹி! ஹி! ஹி!

    நன்றி! தொடர்க!

    ReplyDelete
  3. அருணா!
    நிறைய படிக்கணும்ப்பா..கடவுள் இத்தனை கோடி உயிர்களை படைத்தவர்.
    அவருக்கு சுனாமி ஒரு ஊழி. ஒரு கர்மம். பெரியாருக்கு கடவுள் 90 வயசு கொடுத்ததால் அவர் திருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அவ்வளவுதான்.
    நீங்கள் விரும்பும் பாரதியாருக்கு கடவுள் 40 வயசு கிட்ட கொடுத்தார்... எனில்... கடவுள் பாரதியை விரும்பலை என்று அர்த்தமா?
    சாதி மெள்ள அழியும். ஆனால் மனித வேற்றுமை / மனித குழுவினம் அழியாது...
    வேறு ரூபத்தில் அவை வாழும். என்னை பொறுத்தவரை பெரியாரின் கொள்கைகள் பல மூடத்தனமான பார்ப்பன எதிர்ப்பு / இந்து மத எதிர்ப்பு...நிறைய தவறு பெரியார் சிந்தனைகளில் உள்ளது...
    நல்லதை மட்டும் பெரியாரிடம் இருந்து எடுக்கலாம்...
    தீயதை மறப்போம்...
    please see my other blog
    www.periar.blogspot.com

    ReplyDelete
  4. தோழர் பசுஜி அவர்கட்கு வணக்கம் ..

    மறுமொழியிட்டதற்கு நன்றி...
    இந்த உலகை படைத்தது கடவுள் என்பது அறியாமையும் முட்டாள் தனமும் கலந்தது..
    படிப்பறிவு இல்லாத அல்லது அதை பற்றி ஆராய்ந்திடாதவர்கள் சொல்லும் வாதம் அது..
    தாங்கள் சார்லஸ் டார்வின் என்னும் இங்கிலாந்து அறிஞரை பற்றி கேள்விப் பட்டதுண்டா ?
    அவர் எழுதிய நூலான Origin of Species படித்ததுண்டா ?
    அதை இன்று உங்களால் மறுக்கமுடியுமா ?
    அதை முட்டாள்தனம் என்று உங்களால் சொல்லமுடியுமா ?
    நிறைய படிக்கவேண்டும் என்று சொன்னீர்களே.. அதை தங்களுக்கு திருப்பிக் கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன்...
    தங்களுக்கு வேண்டுமாயின் உலகம் தோன்றியது எப்படி என ஆராய்ச்சி செய்தவர்களின் நூல்களை சொல்கிறேன்.. முதலில் அதை படியுங்கள்.. அதை படிக்காத பாமர மக்கள் தாம் அறியாமையில் உலகை படைத்தது பிரம்மா விஷ்னு என்று கதை கட்டிவிடுகிறார்கள்.. தங்களை போன்ற படித்தவர்கள் கூட ஆராய்ந்து பார்க்கிற திறனற்று கடவுளைப் பற்றி வார்த்தை விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. படித்தவர்களுக்கு ஆராய்ந்து உணர்வது தான் சிறப்பு.. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.. மூடநம்பிக்கைகளை தூக்கி பிடிப்பதை கைவிட்டு விட்டு சிந்திக்க தொடங்குங்கள்...


    Learn
    Origin of Species
    Thoery of Evolution

    http://en.wikipedia.org/wiki/The_Origin_of_Species
    http://en.wikipedia.org/wiki/Creation-evolution_controversy
    http://en.wikipedia.org/wiki/Theory_of_evolution
    தோழமையுடன்
    க.அருணபாரதி

    ReplyDelete