Monday, July 07, 2008

கச்சா எண்ணெய் உயர்வும் தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும் - க.அருணபாரதி

கச்சா எண்ணெய் உயர்வும்
தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும்

க.அருணபாரதி

'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு "இனிப்பு" வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு "அணுசக்தி" ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் பேனாவை புடுங்கிக் கொண்டு எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு "மார்க்சிஸ்ட்" மாவீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

கச்சா எண்ணெயின் விலையை பெருமுதலாளிகள் தலைமயிலான நாடுகள் திட்டமிட்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உயர்த்தியுள்ளன. இதனால் அதனைத் தயாரிக்கும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த விலைஉயர்வு மட்டுமின்றி "இந்தி"ய அரசு விதிக்கும் வரிகளின் சுமையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதற்கிடையே இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்ட டீசல் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்க டீசல் மற்றும் பெட்ரோல் விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளன. இதனைக் கண்டித்து லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இவ்வேலை நிறுத்தத்தினால் உணவுப் போக்குவரத்து பாதிக்கப்படும். ஏற்கெனவே பலமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ள விலைவாசி இன்னும் அதிகரிக்கும். இதற்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைப் பற்றி சிந்திப்பதா அல்லது விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திப்பதா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்திய அரசு.

மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான "ஏழைகள்" ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம் ஒதுக்கக் கூட காசில்லை என் கபட நாடகமும் ஆடுகிறது.

"மிகச்சிறந்த பொருளாதார நிபுண" "ராம்" மன்மோகன் சிங், "புள்ளிவிவரப் புலி"யாம் ஏழைகளின் பசி அறியாத ப.சி(சிதம்பரம்), "சிறந்த நிர்வாகி"யாம் மான்டேக் சிங் அலுவாலியா... இவர்கள் தாம் இந்நாட்டை முன்னேற்றப் போகின்றனர் என ஊடகங்களால் ஊளையிடப்பட்டு அறிவிக்கப்பட்ட "அமெரிக்க" அறிவு ஜீவிகள். இப்பொழுது அதே ஊடகங்களுக்கு பயந்து நெளிந்து கொண்டு அங்குமிங்கும் இவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்காவே ஆடிப்போயிருப்பதால் இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.

அமெரிக்கா சொன்னதை தான் அப்படியேச் செய்தார்கள். சட்டம் போட்டார்கள். சலுகைக் கொடுக்கப்பட வேண்டிய ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா உள்ளிட்ட "மாபெரும்" "ஏழைகளுக்கு" சலுகைகள் அளித்தார்கள். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சுமையை சுமக்கத் தான் "மக்கள்" இருக்கிறார்களே என்ற தைரியத்தில் அச்சுமையை "மக்கள்" தலையில் இறக்கி வைத்துவிட்டு, அதே எண்ணெயை அதிகவிலைக்கு சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்து கொழுத்து சம்பாதிக்க ரிலைன்ஸ் - எஸ்ஸார் போன்ற "ஏழை" நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி அவர்கள் லாபம் சம்பாதிக்க அரசை நடத்தினார்கள்.

'நாங்கள் தான் "புரட்சிகரப் போராளிகள்", அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் பாருங்கள்" என "மார்க்சிஸ்ட்" நடிகர்கள் ஒருபுறம் நடித்துக் கொண்டே மேற்கு வங்கத்தில், "தொழிலில் மிகவும் பின்தங்கிய எழையான" ரத்தன் டாட்டாவிற்கு "சோஷலிச" சமுதயாம் மலர்ந்திட தொழிற்பரட்சியில் ஈடுபடவேண்டுமெனக் கூறி ரூ 300 கோடியை கடன் உதவி செய்தார்கள். பாவம் ரத்தன் டாட்டா. எவ்வளவு "மிகச்சிறிய எழை"? எப்படி அவரால் இந்தத் தொகையை கொடுக்க இயலும்? பரவாயில்லை. கடந்த ஆண்டில் 800க்கும் குறைந்த "பணக்கார ஏழைகள்" வாங்கிய சுமார் 44,000 கோடி ரூபாயை வாராக் கடனாக அறிவித்து அந்த "பணக்கார கடங்கார ஏழை"களை சுதந்திரமாக திரியவிட்டதை போல ரத்தன் டாட்டாவையும் விட்டுவிடலாம். இந்த கடனையெல்லாம் சுமக்கத் தான் எப்பொழுதும் "விவசாயிகள் + நடுத்தரவர்க்கத்தினர் + வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள்" என்ற கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே... அவர்கள் தலைமையில் இறக்கி வைப்போம் என இறக்கி வைத்தார்கள். இறக்கி வைத்துக் கொண்டிரும் இருக்கிறார்கள்.

"இவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே காவிக் கூட்டம் இரத்த வெறியுடன் சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. இவற்றுக் கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைத்த அவர்களே இவ்வாறு சொல்கிறார்கள் என்றால் "விரைவில் தேர்தல்" வருகிறது என்று அர்த்தம். அவர்கள் அலைவதைப் பார்த்தால் விரைவில் அயோத்திக்குச் சென்று இராமரையும் தேர்தலுக்காக அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு பிரச்சனை "பெட்ரோல் விலை உயர்வைத் தடுப்பதோ" - "பணக்கார ஏழைகளுக்கு சலுகை அளிக்கக் கூடாது" என்பதோ அல்ல. தனக்கு தரவேண்டிய தேர்தல் நிதியை அந்த "பணக்கார ஏழை"களிடமிருந்து மற்றவர்களை விட அதிகம் பெற்றிடவே இந்த காவி கோஷ்டியினர் அங்கலாய்கின்றனர்.

அமெரிக்க ஆண்டை சொல்வதைத் தான் இந்த "இந்தி"யத் தேசிய அடிமை அரசியல்வாதிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதனை வெட்கமற்று நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் "இந்தி"ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையேயே "இறக்குமதி" வரியை விதித்துக் கொள்ளையடிக்கும். இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்து "தேர்தல்" அரசியல் கட்சிகள் "கச்சா" எண்ணெயை பற்றி கதையளந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல்கட்சிகள் ஆளாளுக்கு ஆர்ப்பாட்டம் வைத்துக் கொண்டு கண்ணேதிரேக் கொள்ளையடிக்கும் தில்லி அரசைத் தட்டிக் கேட்க நாதியற்று "கச்சா" எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை கண்டித்து உள்ளுர் "கேபிள்"டீவியில் அறிக்கை விடுகிறார்கள்.

தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் "முத்தமிழ் விற்றவர்" முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி "மிகவும் கவலையுற்று" ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தை பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துள்ளியமாகக் கண்டிறிந்து "அறிக்கை" மட்டுமெ விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த "இந்தி"ய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம். இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த "அரசியல் நகைச்சுவையாளர்" வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ""சீட்" கொடுத்தால் அடங்கிப் போ" என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, "அகில இந்திய" சமத்துவக் கட்சி" என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் "நாட்டாண்மை" சரத்குமார், "2011-ல் தமிழக முதல்வராகப்போகும்" "லட்சிய" தி.மு.க. டி.ஆர்.இராசேந்தர், தீடீர் கட்சியான "அகில இந்திய" நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள்.

அமெரிக்க அடிவருடியாகவும், உலகமயத்தின் ஊதுகுழலாகவும் "இந்தி"யா தொடர்ந்து இப்படித்தான் செயல்படும். அந்த "இந்தி"யாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

பெட்ரோல் விலை உயர்வும் விலைவாசி உயர்வும் தற்பொழுதுள்ள அரசியல்கட்சியினர் யாருக்கானவர்கள் என்பதை நமக்கு சொல்லித் தருகின்றன. பணக்காரர்களுக்கான அரசை பாதுகாக்கவும் அதில் பங்குபெறவுமே இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சியனரும் செயல்படுகின்றனர். தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்துத் தேர்தல் அரசியல் கட்சிகளும் உலகமயத்தின் பாதந்தாங்கிகள் தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. என்ன தான் இதற்குத் தீர்வு?

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான பெரு முதலாளிகளின் லாபவெறிக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும். ஆன்லைன் பங்குச்சந்தை வாத்தகச் சூதாட்டத்தை தடைவிதிக்க வேண்டும். முதலாளிகளின் லாபவெறிக்கு எதிராக தடைவிதிக்க இங்குள்ள இந்திய அரசோ தமிழக அரசோ நிச்சயம் முன்வராது. ஏனெனில் அரசு இங்குள்ள அரசுகளே அவர்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இவ்வரசை மாற்ற முடியுமா என்றால் முடியாது.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும். இது நடக்கும் செயலா? ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா.? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..? அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்த போது அதனை தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது "இந்தி" யா தானே..?
இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையை பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் "இந்தி"யனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே ததிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் "இந்தி"யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும். உலகமயத்தை எதிர்க்க நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானேத் தவிர பெரு முதலாளிகள் தலைமையிலான "இந்தி"யத் தேசியத்தை அல்ல. தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் புரட்சி பற்றிய விழிப்புணர்வே இவர்களை மிரள வைக்கும் சக்தியாகும். அந்த புரட்சிகான முன்னேற்பாடுகளை வரலாறு நமக்கு செய்து தரும். அதனை வேகப்படுத்த வேண்டியதே நமது கடமை என செயல்பட வேண்டும்.


நன்றி : கீற்று இணையம்


-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Friday, July 04, 2008

தில்லைப் போராட்டம் - புதிய ஜனநாயகத்தின் அவதூறு

தில்லைப் போராட்டம்
புதிய ஜனநாயகத்தின் அவதூறு
கி.வெங்கட்ராமன்
 
அடிப்படையற்ற அவதூறு மற்றும் வசைபாடல்களோடு வழக்கம்போல் 'புதிய ஜனநாயகம்' ஏடு (மே,2008) ஒரு விமர்சனக் கட்டுணிμ வெளியிட்டிருக்கிறது. தில்லைப்பேணிμணிட்டம் குறித்து 'தமிழர் கண்ணோட்டம்' ஏப்μஅ 2008 இதழில் நாம் எழுதியிருந்த செய்திக் கட்டுணிμக்கு எதிர்வினையாக இது வெளியாகி  யிருக்கிறது. தில்லைப் பேணிμணிட்டத்திஅ ம.க.இ.க. அணியின் பங்கு பணியைக் குறைத்தோ, மறைத்தோ நான் எதுவும் எழுதவில்லை என்பதை 'தமிழர்  கண்ணோட்டம்' கட்டுணிμணியப் படித்த நடுநிலை வாசகர்கள் அறிவார்கள். எனவே மீண்டும் அதுபற்றி இப்போது விவாதிக்கப்போவதில்லை. ஆயினும் புதிய ஜனநாயகத்தின் "தெரட்டி்'' கூறியுள்ள சிலவற்றுக்கு மட்டும் உண்மைத் தகவல்களைப் பதிலாகத் தரவேண்டியுள்ளது.
 
1. சிற்றம்பல மேடையேறி பாடி வழிபடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி தீட்சிதர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு ஒன்று கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. வழக்கறிஞர் நடராசன் என்பவர் அதை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கும், நமக்கும் நேμடி அறிமுகம் கிடையாது. ஆயினும் இப்பிரச்சினையில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை ஆறுமுகசாமி மூலம் அவர் அறிந்திருக்கிறார். வழக்கு தொடர்பாக பேசவேண்டியிருப்பதால் வழக்கு நடக்கும் நாளில் நேரில் கடலூர் வருமாறு ஆறுமுகசாமி மூலம் அழைத்தார். நானும் சென்றேன். அன்று சாட்சிகள் குறுக்கு விசணிμணிண முடிந்திருந்தது. வழக்கின் நிலைமைகளை விளக்கிய அவர் "இதனை மனித உரிமை வழக்காக உயர்நீதிமன்றத்தில் நடத்த வேண்டியது அவசியம்' என்றார். அப்போது அவர் கையில் விருத்தாச்சலத்தில் தோழர் μணிச்த தலைமையில் நடக்கவிருந்த பொடா எதிர்ப்புக் கருத்தμங்க அழைப்பு இருந்தது. அதனை என்னிடம் காட்டி, "அஇக்குணிμஞர் μணிச்த மூலம் இப்பிμச்சினையை எடுத்துச்  செல்லலாம் எனக் கருதுகிறேன் அஅணிμப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்கள் வழியில் வேறு நல்ல  வழக்கறிஞர்களை வைத்தாலும் சரியே. எப்படி யிருந்தாலும் வழக்கை உறுதியாக நடத்த வேண்டும்" என்றார். "μணிச்த எனக்கு நெருக்கமானவர் தான். அவர் மூலமே நடத்தலாம். பொடா எதிர்ப்புக் கூட்டத்திற்கு பார்வையராக நானும் வருவேன். அங்கு பேசி முடித்துவிடலாம்" என்று நான் கூறினேன். அன்று விருத்தாசலம் வருமாறு ஆறுமுகசாமியிடமும் கூறிவிட்டு வந்தேன். விருத்தாச்சலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் பொடா எதிர்ப்புக் கருத்தμங்கம் தொடங்குவதற்கு முன்பாக அμங்கத்தில் நாங்கள் சந்தித்தோம். ஆறுமுகசாமியை μணிச்தஅக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சுருக்கமாக வழக்கு குறித்துப் பேசினோம். μணிச்த இளைஞர் என்பதால் ஆறுமுகசாமிக்குத் தொடக்கத்தில் சிறு தயக்கம் இருந்தது. அப்போது இவர்களது அமைப்பு பற்றியெல்லாம் ஆறுமுகசாமிக்கு எதுவும் தெரியாது. "உங்களுக்கு அரசு வைத்துத் தரும் இலவச வழக்குரைஞர்களை விட இவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள்தாம்" என்று சொல்லி, அஅμது தயக்கத்தைப் போக்கினேன்.

2. இதற்கு சில நாள்கள் சென்று μணிச்தஅம் அஅμது ச €கணிதμரும் சிதம்பμத்திஅ என்னைச் சந்தித்தார்கள். த.தே.பொ.க. தோழரின் உழுவை பராமரிப்பகத்தில் அந்த சந்திப்பு நடந்தது. "அமைப்பில் பேசி விட்டேன். வழக்கையும் இதுகுறித்த இயக்கங்களையும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். நாம் கூட்டாக இதன் மீதான இயக்கங்களை நடத்தலாமா?" என தோழர் ராஜீ கேட்டார். "ம.க.இ.க.வுடன் த.தே.பொ.க. கூட்டு இயக்கம் நடத்துவது சாத்தியமில்லை. ஏனெனில் ம.க.இ.க. நடைமுறையில் ஒரு சீர்குலைவு அமைப்பு; மறைமுகமான பார்ப்பனிய அமைப்பு என்பது த.தே.பொ.க.வின் மதிப்பீடு. எனவே கூட்டியக்கமோ, ம.க.இ.க.வுக்கு  துணையாக செயல்படுவதோ சாத்திய மில்லை. நீங்களே உங்கள் வழியில்  நடத்துங்கள்" என நான் தெளிவுபடக் கூறிவிட்டேன். ஆயினும் அதற்குப் பிறகு 2004, 2005, 2006ஆம் ஆண்டுகளில் இப்பிμச்சினை குறித்து நாம் தனியே நடத்திய உண்ணா நிலைப் பேணிμணிட்டங்கள், தெருமுனைப் பரப்புரை இயக்கங்கள், பொதுக் கூட்டம் ஆகியவற்றை சிதம்பரத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும், செய்திகளை ஊன்றி கவனிக்கிற நோக்கர்களும் அறிவார்கள்.
 
3. திருச்சிற்றம்பல மேடையில்  பக்தர்கள் பாடி வழிபட ம.க.இ.க. போராட்டம் நடத்தியதால் ம.க.இ.க. மறைமுக பார்ப்பனிய அமைப்பு என்ற நமது மதிப்பீடு பொய்யாகி விடாது. ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் நிதி பெறும் சில 'தன்னார்வ' அமைப்புகள் கூட உலகமயத்தை எதிர்த்து சில பேணிμணிட்டங்கள் நடத்துவதைப் பார்க்கிறோம். ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. எனவே இந்த அமைப்புகளை மறைமுகப் பார்ப்பனிய அமைப்புகள்; இந்திய ஆளும் சக்திகளுக்கு மறைமுகமாக சேவை செய்யும் சீர்குலைவு அமைப்புகள் என த.தே.பொ.க. மதிப்பிடுகிறது. இண்Oஅணிμ ம.க.இ.க. வின் இந்த அடிப்படை நிலைபாடுகளில் மாறுதல் இல்லை. எனவே நமது அதே மதிப்பீடும் தொடர்கிறது.

 4. வ.சுப. மாணிக்கனார் தலைமையில் தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் பேராடுவதற்கு அதற்கு முன்னால் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதை தீட்சிதர்கள் மறுத்தே வந்தனர். அவர்களது போராட்டத்திற்குகு பிறகே, 1987 முதல் தீட்சிதரில் ஒருவர் பாடுவது என்ற வகையில் €தஅணிμம் ஒலித்தது. இது முதல்கட்ட வெற்றி என்றோம். காலை பூசை முடிவில் ஒருவர் ஒரு பாடல்பாடி அந்த 'சடங்கை' தீட்சிதர்கள் முடிக்கிறார்கள். அதை முனைவர் த.செயராமன் குறிப் பிட்டிருந்தார். இரண்டுமே உண்மைதான். இதில் முμண்பாடு இருப்பது போல் 'தொரட்டி' குதிக்கிறார்.
 
5. மார்ச் 2 (2008) மாலை காவல்துறை தடியடிக்குப் பிறகு ஆறுமுகசாமி 'அனாதையாக' அமர்ந்திருந்தார் என்று பு.ஜ. த.தே.பொ.க. மீது பாய்கிறது. கைதானது 34 பேர். ம.க.இ.க. பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மீதமுள்ள பலரும் அங்கேதான் இருந்தார்கள். இந்நிலையில் அவரை அனாதையாக விட்டு விட்டதாக நம்மீது தோழர் 'தொரட்டி' பாய்வது வியப்பாக இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன?  காவல்துறை ஆறுமுகசாமியைக் கைது செய்யவில்லை. கைதானோர் பட்டியலில் அவரையும் சேர்த்துவிட வேண்டும் என்று ம.க.இ.க.வினர் முயன்று கொண்டிருந்தனர். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள நடைமேடையில் அவரை அமர  வைத்திருந்தனர். அருகே சென்னையிலிருந்து ம.க.இ.க. சார்பில் வந்திருந்த வழக்கறஙிஞர் இருந்தார். ஆறுமுகசாமியைக் கைது செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

த.தே.பொ.க. சிதம்பர நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிராகாசமும் நானும் இரவு நீண்ட நேரம் அவர்கள் அருகிலேயே இருந்து சிறு சிறு உதவிகளைச் செய்து
கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத் தினார்கள். அதன் பிறகு ஆறுமுகசாமியும் கைது செய்யப்பட்டார்.

5. அதன் பிறகு மார்ச் 12 தொடங்கி நாளதுவரை சிவ நெறியார்கள் தமிழகமெங்கிருந்து த.தே.பொ.க.- தமிழ்க் காப்பணியைத் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட
நாள்தோறும் வருகிறார்கள். திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி மனமுருகி வழிபடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் காலை
நேரத்திலேயே வந்து வழிபடவே விரும்புகிறார்கள். தங்கவைப்பது, ஒய்வு நேரத்தில் இரண்டு ஊர்களிலிருந்து வந்து மனநிறைவாக வழிபட முடியாமல் திரும்புவதைத் தவிர்க்க நேரத்தை ஒழுங்கு செய்வது, தீட்சிதர்களோடு அவ்வப்போது எழும் உரசல்களை எதிர்கொண்டு நெறிப்படுத்துவது.... போன்ற பணிகளில் த.தே.பொ.க., தமிழ்க் காப்பணி தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிக்கென்று தமிழ்க் காப்பணி சார்பில் 'தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்குழு' அமைக்கப்பட்டுள்ளது. இதன்
நெறியளாராக தோழர் சிவப்பிரகாசம் இருந்தாலும், வழமையாகக் கோயிலுக்குச் சென்று வழிபடும் இளைஞர்களைக் கொண்டே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் தேசிய இயக்கத்தின் வை.இரா.பாலசுப்பிரமணியன் இக்குழுவின் அமைப்பாளராக உள்ளார். தமிழகமெங்குமிருந்து பல சிவனடியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இக்குழுவைத் தொடர்புகொண்டு பாடி வழிபடுவது தொடர்கிறது.

பெரும்பாலோர் காலையில் வழிபட்டுச் சென்று விடுகிறார்கள். ஆம்பூர், திருநெல்வேலி, வடலூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் காலை8, காலை 10 மணி, மாலை என
வெவ்வேறு நேரங்களில் பாடி வழிபட்டதும் உண்டு. தொடக்கத்தில் பதட்டம் இருந்த சூழலில் மேடையில் பாட விரும்பு கிறவர்கள் காவல்துறையை அணுக வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பாளர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் அமைதிக் கூட்டம் நடந்து எழுத்துப்பூர்வமாக செய்து கொள்ளப் பட்டதுதான் நான் குறிப்பிட்ட
உடன்பாடு. காலை வேளையைத் தவிர பிற  காலங்களில் பாடமாட்டோம் என்பது அதன் பொருளல்ல என எல்லோருக்கும் புரியும். 'தொரட்டி'க்கு மட்டும் அது
புரியவில்லை.
 
அரசாணைக்கு மாறாக உள்ளூர் காவல்நிலையத்தில் எழுதிக் கொள்ள முடியாது. நாம் அவ்வாறு செய்யவுமில்லை. உண்மை இவ்வாறிருக்க, ஏதோ ம.க.இ.க. பெற்றுத்தந்த ஆறுகால வழிபாட்டு உரிமையை ஒரு காலமாக வெட்டிக் குறுக்கிவிட்டதாக த.தே.பொ.க. மீது 'புதிய ஜனநாயகம்' அவதூறு அள்ளி வீசுகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மீதும், வ.சுப.மாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள் மீதும் ம.க.இ.க. வசைமாரி பொழிந்தாலும் தில்லைப் பிரச்சினையில்  ம.க.இ.க.வின் பணியை நாம் குறைத்துக் கூறியதே இல்லை. அதேநேரம் "ம.க.இ.க.வின் அரசியலானது சாரத்தில் இந்திய  ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது. இந்துமதம், இடஒதுக்கீடு குறித்த அதன் பார்வை பார்ப்பனியத் திற்குச் சேவை செய்கிறது" என்ற நமது திறனாய்விலும் மாற்றமில்லை.


மேலும் கட்டுரைகளுக்கு பார்க்க : புதிய தமிழர் கண்ணோட்டம், சூன் இதழ் 2008.

Thursday, July 03, 2008

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள் - முனைவர் த.செயராமன்


யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள்

முனைவர் த.செயராமன்

 

முன்பு எப்போதையும் விட தேசிய இன அடையாளங்கள் மீது கடும் தாக்குதல் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. தேசிய இன உரிமைகளை இந்திய ஒற்றையாட்சி அரசியல் சட்டத்தின் மூலம் முன்னமே பறித்துவிட்ட நிலையில், மாநில அரசுகளின் எஞ்சியிருக்கக் கூடிய உரிமை களையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட புதிய உத்திகளை வகுக்கிறது டில்லி வல்லாதிக்க அரசு.


கடந்த ஏப்ரஅ மாதம் 22-24 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் உள்ளாட்சித் தலைவர்கள் மாநாட்டை மைய பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் நடத்தியது. இம்மாநாட்டிற்கு, தமிழகத்திலிருந்து மாவட்ட மற்றும் ஒன்றிய உள்ளாட்சித் தலைவர்களை அனுப்பிவைக்க மறுத்து, அம்மாநாட்டில் பேசப்பட இருக்கும் அணிரஅ அறிக்கையிலுள்ள சிக்கலான பகுதிகள் நீக்கப்பட வேண்டுமென்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருநதார். அதன்படி சிக்கலுக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு விட்டதாக மன்மோகன்சிங் பதில் அனுப்பியிருந்தார்; ஆனாலும் பேரணிஐர்களை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம் இல்லாமற் போனமையால் தமிழ் நாட்டிலிருந்து ஊரணிட்சித் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரணிஅ ‹ல் அறிவித்தார்.


ஏப்ரஅ மாதம் புதுடில்லியில் நடைபெற்ற இந்த அனைத்திந்திய மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் ஊரணிட்சி ஒன்றியத் தலைவர்கள் கூடி உள்ளாட்சியை வலுப் படுத்துவது என்பது பற்றிய முன்னமே தயாரிக்கப்பட்டிருந்த அணிரஅ அறிக்கையை விவாதித்து, எடுக்கப்படட முடிவுகளுடன் சேர்த்து அந்த அறிக்கையை பிரதமரிடம் ஒப்படைப்பது என்பது திட்டம்.


இதை உள்ளாட்சியை வலுப்படுத்தும் நோக்கம்தானே என்று எளிதில் ஒதுக்கிவிட முடியாது. படிப்படியாக மாநில அரசுகளை அலங்கணிர அமைப்பாக ஆக்கிவிட்டு மாவட்ட உள்ளாட்சிகள் அணிர டில்லியின் நேரடி ஆட்சியைக் கொண்டுவரும் நாசகணிர அரசியல் திட்டம் ஒரு அணிரஅ  அறிக்கையாகத் தயணிரணிகி இருந்தது.


15 ஆண்டு நிறைவு விழா என்ற பெயரில் புதிய உத்தி புதிய பஞ்சாயத்து ரணிச் முறையைக் கொண்டுவந்த 73ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செய்யப் பட்டு 15 ஆண்டுகள் ஆவதை யொட்டிய நிகழ்ச்சியாக ஊரக, உள்ளாட்சி, மாவட்ட, ஒன்றியத் தலைவர்கள் மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற இம்மாநாட்டில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. 'உள்ளாட்சித் துறையை வ ல ப் ப டு த் து வ த ற் க õ ன நடைமுறைகள் குறித்து ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை புதுடில்லியில் மீண்டும் ஒரு மாநாட்டில் விவாதித்து, அவ்வறிக்கையையும், முடிவுகளையும் பிரதமரிடம் அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படியே ஒரு குழு அமைக்கப்பட்டு, மார்ச் 14-15 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் மீண்டும் விவாதித்து ஓர் அறிக்கையைத் தயாரித்திருந்தார்கள். இந்த அறிக்கையுடன் உள்ளாட்சித் துறைக்கான மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், ஒரு கடிதத்தை இணைத்திருந்தார். அந்த அறிக்கையை சிற்றூர் பஞ்சாயத்து முதல் மாவட்ட பஞ்சாயத்து அணிர வைத்து விவாதித்து பரிந்துணிர களுடன் பிரதமர்  மன்மோகன் சிங்கிடம் அளிக்கலாம் என்று கூறியிருந்தார்.

 

இந்திய அரசியலமைப்பு வலிமையான மைய அரசு, அதிகணிரங்கள் இல்லாத மாநில அரசுகள் என்ற ஓர் ஒற்றையாட்சி முறையையே இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. தொன்றுதொட்டு செயல்பட்டு வரும் உள்ளாட்சி டில்லி அரசுக்கு அன்னியமான ஒன்று. இந்திய அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு அளித்திருக்கும் அதிகணிரங்களுள் ஒன்றான உள்ளாட்சியை ஓசைப்படாமல் மத்திய அரசின் அதிகணிரப் பட்டியலுக்கு மாற்றிவிடும் நோக்கில் உள்ளாட்சித் தலைவர்களின் கோரிக்கை என்ற பெயரில் பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் தயாரித்திருந்தது. இந்த  அணிரஅ அறிக்கையில் 'உள்ளாட்சி அரசாங்கம்' என்ற பொருள் மாநில அரசின் பட்டியலிலிருந்து மையப் பட்டியலுக்கோ (க்ணடிணிண ஃடிண்t) அல்லது பொதுப்பட்டியலுக்கோ (இணிணஞிதணூணூஞுணt ஃடிண்t) மாற்றப்பட வேண்டும்' என்பது அதாவது மாநிலத்திடமிருந்து இந்த அதிகணிரம் பிடுங்கப்பட வேண்டும் என்பது இந்த அணிரஅ அறிக்கையின் முக்கியக் கூறு. இந்தக் கோளாறான  கோரிக்கையை, அதாவது மைய அரசின் கீழ் மாவட்டம்  ணிர ‹லான உள்ளாட்சி நிர்வாகத்தை மாற்றக் கோரும் கோரிக்கையை பஞ்சாயத்து தலைவர்கள் பெயரிலேயே அளித்திருக்கிறார்கள். இந்தப் பகுதியைத்தான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 'சிக்கலுக்குரிய பகுதி' என்று குறிப்பிட்டு நீக்கப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 68 பேரணிஐர்கள் அடங்கிய பட்டியல் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதமே புதுடில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த அணிரஅ அறிக்கை, உள்ளாட்சியை மேம்படுத்தும் சிறந்த வழிகளாக அதை மாநிலத்திடமிருந்து பிடுங்கிக் கொள்ளுவதும், ஊரணிட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளைக் குறைப்பதும்தான் என ஒரு கண்டு பிடிப்பை  நிகழ்த்தியிருந்தது.

 

கலைஞர் கருணாநிதியின் 'நிரணிகரிப்பு உத்தி' பலனைத் தந்திருக்கிறது. 'மாநில அரசின் அதிகணிர அரம்பிற்குட்பட்ட ஊரணிட்சிகள்' என்ற பொருளை மைய அரசுப்பட்டிலுக்கோ பொதுப் பட்டியலுக்கோ மாற்றவேண்டும் என்ற பரிந்துணிரணிய அணிரஅ அறிக்கையில் சேர்க்க வேண்டாம் என்று பஞ்சாயத்து ரணிச் அமைச்சகத்துக்கு அOஅணிர வழங்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். (தமிழ்ஓசை, 23 ஏப்ரஅ 2008) மேலும், எதிர்ப்புக்குரிய பிற பரிந்துணிரகணிஐப் பெணிOத்தஅணிர ‹ல், அவை மாநாட்டில்  பரிந்துணிரக்கப் பட்டாலும் அவைகளை ஏற்றுக் கொள்வது என்பது தேசிய வளர்ச்சி மன்றம் (Nச்tடிணிணச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt இணிதணஞிடிடூ) போன்ற 'தகுந்த அமைப்பில்' மாநில அரசுகளுடன் கலந்துபேசி இறுதி செய்வதன் அடிப் படையிலேயே முடிவு செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.


 'உள்ளாட்சி' என்ற பொருளை  பட்டியல் மாற்றவேண்டும் என்ற  பரிந்துணிரணிய 'அணிரஅ  றிக்கையில்' சேர்க்கவேண்டாம் என்று பஞ்சாயத்துரணிச் அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்தியதிலிருந்து,  உண்மையில் அதை உள்ளாட்சித் தலைவர்கள் தயாரித்தார்களா  அல்லது அவர்களுடைய பெயரில் பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் தயாரித்ததா என்பதை எளிதாகப்  புரிந்து கொள்ளலாம். இந்தச் சதிகணிர அணிரஅ அறிக்கையை உருவாக்கிய டில்லி அரசு தனது சர்அணிதிகணிர முகத்தை சனநாயக முகமூடியில் மறைத்துக் கொண்டு வருகின்றது. அதாவது, இதுஅணிர மாநில உரிமைகளை மைய அர €ச பறித்துக் கொண்டது போலன்றி, உள்ளாட்சியை பஞ்சாயத்துத் தலைவர்களே விரும்பி தட்டில் வைத்து டில்லியை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவதாகக் காட்டப்பட்டது. மேலிருந்து டில்லி பிரித்தெடுப்பது என்ற நடைமுறைக்கு மாறாக, உள்ளாட்சி நிர்வாகத்தை மையப்பட்டியலில் சேர்த்துக் கொள்ள கோரிக்கை கீழிருந்து வருவதாகக் காட்டப்பட்டது. முழுமையான ஒற்றையாட்சி நோக்கி 1950இல் செயல்பாட்டுக்கு வந்த இந்திய அரசியலமைப்பு முன்னமே ஓர் ஒற்றையாட்சி அமைப்புதான்.  கூட்டாட்சி (ஊஞுஞீஞுணூச்tடிணிண) என்ற சொல்கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. மாநிலங்கள் இருந்தாலும் கூட்டாட்சிக்குரிய இலக்கணப் படி அதிகணிரங்கள்  பங்கிட்டு அளிக்கப்படவில்லை. அதனால்தான் அரசியல் அறிவியலாளர் ஓ.இ.வியர், "இந்திய ஒன்றியம் குறைவான ஒற்றை யாட்சிப் பண்புகளுடைய கூட்டாட்சி நாடு என்று கூறுவதை விட குறைவானக் கூட்டாட்சிப் பண்புகளுடைய ஓர் ஒற்றையாட்சி  நாடு என்று கூறலாம்." என்றார்.
அதிகாரப் பங்கீட்டில் மைய அரசுப் பட்டியலில் 97 அதிகணிரங்கள், மாநிலப் பட்டியலில் 66 (உண்மையில் 14) பொதுப் பட்டியலில் 47 (உண்மையில் 52) எஞ்சிய அதிகணிரங்கள் (கீஞுண்டிஞீதச்ணூதூ ணீணிதீஞுணூண்) அனைத்தும் மைய அரசுக்கே  சொந்தம். நடைமுறையில் மாநில உரிமைகள் மேலும்  மொட்டை யடிக்கப்பட்டிருக்கின்றன. மாநிலப் பட்டியலில் உள்ள அதிகணிரங்களில் கூட மாநில அரசுக்ளுக்கு முஉஅதிகணிரம் இல்லை. 'நாட்டு நலன் கருதி' மாநிலப் பட்டியலை மத்திய  அரசு தானே எடுத்துக் கொள்ள முடியும். அரசியல் சட்டப்பிரிவு 249இன்படி மாநிலங்கள் அவையில்,  மொத்த உறுப்பினர்கள், மூன்றில் இரண்டு பகுதியினர் வாக்களித்து ஒரு தீர்மானத்தை  நிறைவேற்றினால், நாட்டின் நலன் கருதி, மாநிலப் பட்டியலில் உள்ள எந்த பொருளைப் பற்றியும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். இதனால்தான் அசோக் சந்தா "மாநில அதிகணிரத்துக்கு இத்தகைய அவமதிப்பு வேறு எந்த கூட்டாட்சியிலும் கிடையாது. 1935ஆம் ஆண்டு சட்டத்திலும் கூட  இல்லை" என்றார். (கூடஞுணூஞு டிண் ணணி ண்தஞிட ஞூஞுஞீஞுணூச்டூ ஞிணிணண்tடிtதtடிணிண. Nணிt  ஞுதிஞுண டிண 1935 அஞிt....' - அண்டணிடு இடச்ணஞீச், ஊஞுஞீஞுணூச்tடிணிண டிண ஐணஞீடிச். அ ண்tதஞீதூ ணிஞூ க்ணடிணிண-குtச்tஞு கீஞுடூச்tடிணிணண், ஃணிணஞீணிண, 1965, ணீ 90) 'கல்வி' என்ற அதிகணிரம் மாநிலங்கள் பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநிலங்கள் விற்பனை வரியைத் தாங்களே நிர்ணயிக்க முடியாதபடி 'வாட்' வரிவிதிப்பு தடுத்துவிட்டது. மாநில உரிமைகளை மொட்டை அடிப்பதற்கென்றே 2007இல் பூஞ்சி ஆணையம் அமைக்கப்பட்டது. 2007 ஏப்ரஅ 27ஆம் தேதி, முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம்.பூஞ்சி (M.M.கதணஞிடடி) தலைமையில் மத்திய-மாநில உறவு குறித்து ஆரணிய டில்லி அரசு அமைத்த இந்த ஆணையம், இரண்டு ஆண்டுகளில் தனது அறிக்கையை அளிக்கும். பூஞ்சி அணையத்தின் ஆய்வுப் பொருளில் (கூஞுணூட்ண் ணிஞூ கீஞுஞூஞுணூஞுணஞிஞு), 'குறிப்பிட்ட காலத்திற்குள் பஞ்சாயத்து ரணிச் நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகணிரங்களைப் பங்கிட்டு அளிப்பது தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, பொறுப்பு, எல்லை அரம்பு; மாவட்ட அளவில் சுதந்திரமாகத் திட்டமிடல் மற்றும் அரஅ-செலவு திட்டமிடல் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, பொறுப்பு, அதிகணிர எல்லை ஆகியவற்றை அணிரயறுப்பது-' என்பவை உள்ளடங்கியுள்ளன. இந்த ஆய்வுப் பொருள்களாகச் சேர்க்கப்பட்டவை மாநில அதிகணிரத்திOகு உட்பட்டவை என்பதை நினைவு கொள்ள வேண்டும். பூஞ்சி ஆணைய ஆய்வுப் பொருளில் உள்ள பஞ்சாயத்து ரணிச் பற்றித்தான் புதுடில்லி மாநாட்டில் அணிரஅ அறிக்கை மூலமாகவும் சிந்திக்கப்பட்டது என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

.................

மேலும்.கட்டுரையை முழுமையாய் -படிக்க :: புதிய தமிழர் கண்ணோட்டம் , தமிழ்த் தேசிய மாத இதழ், சூன் 2008

--
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

குறிப்பிடத்தக்க பதிவுகள்