Monday, June 30, 2008

காகிதக் கத்திகள் - முழுநிலவன்

காகிதக் கத்திகள்
முழுநிலவன்

 
அடர்ந்த காட்டுக்குள்
அகோர சத்தத்துடன்
தொடர்வண்டிகள்
வண்டிச் சக்கரங்களில்
வன விலங்குகள்

அணைக்கட்டுகளுக்காய்
அழிக்கப்பட்ட காடுகளின்
தேன் ருசித்த குரங்கு
பாடப்புத்தகத்தின்
ஏழாம் பக்கத்தில்
தூக்கிட்டு தொங்க
கதறி அழுகின்றன

குழந்தைகள்
நிலம் முழுதும் உழுதும்
மீன் பிடிக்கக் கூட
மண்புழுக்கள் இல்லை
புல், பூண்டுகளற்ற பூமியில்

ஆடு மாடு வளர்க்க
அம்மாவால் முடியவில்லை
பெட்டை ஆட்டையும்
குட்டியையும் கூட
அறுப்புக்காரனிடம் விற்ற காசை
சேர்க்கவும் இல்லை
செலவழிக்கவும் இல்லை

மூன்றாவது வெள்ளிக் கிழமை
முனியன் கோயில் உண்டியலிடம்
எதுவுமற்ற காட்டில்
என்ன தந்திரத்தை நரி செய்ய?
ஊரைப் பார்த்து
ஊளையிடுவது தவிர
அல்லது
தெற்கு வாய்க்காலில்
உயிர்விடுவது தவிர

காடழித்து வீடுகளாக்கிவிட்டு
வீடேறும் பாம்புகளை
வேலிக்கம்பால் கொன்ற பின்
வயல்களிலும்
வைக்கோல் போரிலும்
ஏகத்துக்கும் பெருகிவிட்டன
எலிகளின் எண்ணிக்கை

விதை நெல்லுக்கான செலவை விட
எலி மருந்துக்கான செலவு அதிகம்
படித்தவர்கள் பெருக பெருக
பல்லுயிர்கள் குறைந்து போக
தாவரங்கள், விலங்கினங்களால்
தட்பவெப்பம் வகுபட
ஈவாய், மீதியாய் வந்து நிற்கிறது
எல்லோர் வீட்டுக்கும்
புயல், வெள்ளம், பூகம்பம்

-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Wednesday, June 18, 2008

திருச்சியில் ஒரு புரட்சி

காடு வரை பாடை தூக்கிச்சென்று நீத்தார்க்கு பெண்களேஇறுதிச் சடங்கு நடத்திய புதுமைநிகழ்வு திருச்சியில் நடந்தது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மக்கள் திரள் அமைப்பான தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத்தலைவர் தோழர் கவித்துவன்.இவரது தாயார் திருமதி மூக்காயிஅம்மாள் கடந்த 16-05-2008பிற்பகல் திருச்சியில் காலமானார்.அவரது இறுதிச்சடங்குகள் மே 17-இல் நடைபெற்றன.மூக்காயி அம்மாளின்உடலை எடுத்துச்செல்ல பாடைக்கட்டுவதிலிருந்து பாடைத்தூக்குவதிலிருந்து சுடுகாட்டில்இறுதி நிகழ்ச்சிகளை நடத்துவதுவரை அனைத்தையும் பெண்களேசெய்து முடித்தனர்.நீத்தார் உடலோடுபெண்கள் வீதித்தாண்டி வரக்கூடாதுஎன்ற பிற்போக்கு சம்பிரதாயத்தைஅப்பெண்கள் உடைத்தெறிந்தனர்.

தோழர் கவித்துவன் மனைவியும்மகளிர் ஆயத்தின் செயல் வீராங்கனையுமான தோழர் சுகுணக்குமாரி,பெரியார் மகளிர் இயல் மையத்தைச் சார்ந்த தோழர்கள் புவனா,பெரிசியா மற்றும் தோழர் அனுராதா ஆகிய நான்கு பெண்களும்சோ;ந்து எல்லாப் பணிகளையும் செய்து முடித்தனர்.“தொடக்கத்தில் உறவினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும்நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு பிறகு அவர்களே தமது கருத்தை மாற்றிக்கொண்டு தொடர்ந்து இது போல செய்யுங்கள்” என்று கூறியதாகதோழர் கவித்துவன் தெரிவித்தார்.

நன்றி : புதிய தமிழர்ர் கண்ணோட்டம், சூன் மாத இதழ்

Monday, June 16, 2008

இணையத்தில் தமிழ் வளர்ச்சி குறித்து புதுச்சேரியில் இன்று கருத்தரங்கு




" இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்"
புதுச்சேரியில் இன்று கருத்தரங்கு
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஏற்பாடு



நாள் : 16-06-2008, திங்கள் (இன்று)
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : “ஓட்டல் லெ ஹெரிட்டேஜ் பாண்டிச்சேரி", 128 கந்தப்பா தெரு,
(அண்ணாத்திடல் பின்புறம்), புதுச்சேரி.

தலைமை :
திரு இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வரவேற்புரை :
திரு தூரிகா வெங்கடேஷ்
"திரட்டி" தமிழ் வலைப் பதிவுத்திரட்டி

முன்னிலை:
திரு க.அருணபாரதி, திரு இரா.இராசராசன்

தொடக்கவுரை :
திரு கோ.சுகுமாரன்

வாழ்த்துரை:
திரு மகரந்தன்
பொதுக்குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி

பேராசிரியர் நா.இளங்கோ
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்

திரு தமிழநம்பி
ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்

சிறப்புரை

"இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும்"
முனைவர் சொ.சங்கரபாண்டி
வாஷிங்டன், அமெரிக்கா.

"தமிழ்மணம் வலைத்திரட்டி - ஓர் அறிமுகம்"
திரு காசி.ஆறுமுகம்
கோவை.

"உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் வலைப்பதிவுகள்"

திரு தமிழ் சசி
நியூ ஜெர்சி, அமெரிக்கா.

நன்றியுரை

திரு ம.இளங்கோ




நிகழ்ச்சி ஏற்பாடு
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20, 4வது முதன்மைத் தெரு விரிவு, அன்னைத் தெரசா நகர்,
மூலக்குளம், புதுச்சேரி - 605010.
உலாப்பேசி : 9443105825
மின்னஞ்சல் :
rajasugumaran@gmail.com
இணையம் : http://pudhuvaitamilbloggers.org
http://puduvaibloggers.blogspot.com


அனைவரும் வருக!

Tuesday, June 03, 2008

வலி உணரு - கவிபாஸ்கர் கவிதை

வலி உணரு
கவிபாஸ்கர்

கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..

பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..

அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....

கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்

அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...

வலி உணரு - கவிஞர் கவிபாஸ்கர் கவிதை

வலி உணரு
கவிபாஸ்கர்

கடல் அலையில்
கால் நனைக்காதே
அது என் ஈழத்துத்
தோழர் தோழிகளின்
உப்புக் கண்ணீர்..

பக்கத்து ஊருக்கு
பரிசலில் போனவளே
பரிசலில் ஏறியதும்
மூக்கைப் பிடிக்காதே
அது மீன் கவுச்சி அல்ல...
ஈழ விடுதலைக்கு
சிந்திய இரத்தம்..

அடியே என்
அடி மனசில்
ஆணி அடித்தவளே..
பனை மரத்தில்
ஆணி அடிக்காதே
அது
ஈழப்போராளிகளின்
குகை வீடு....

கடல் ஆழத்தில்
மூழ்கு
வலம்புரி சங்கை எடு
தமிழீழ மக்களின்
அழுகுரல் கேள்

அடியே அழகி
இவையெல்லாம்
மனம் வலிக்க
வலி உணரு...
பிறகு என்னை
காதலி...

குறிப்பிடத்தக்க பதிவுகள்