Saturday, May 26, 2007

இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்

இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்
(சில ஆதாரங்களுடன்)
க.அருணபாரதி
 
            தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்பட வைக்க பல ஆண்டுகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு  ஒரு வழியாக தற்பொழுது தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது அத்திட்டத்தை செயல்படுத்தினால் இராமர் பல லட்ச வருடங்களுக்கு முன்பு கட்டியதாக மதவாதிகளால் சொல்லும் இராமர் பாலம் இடிபடும் என்று கூறி மதவாத சக்திகள் பூச்சாண்டிகள் காட்டி வருகின்றன.
 
                கடந்த 2002ம் ஆண்டு, இலங்கைக்கும் தமிழகத்திற்கும் நடுவே இயற்கையாகவே உருவான சில தொடர்ச்சியானதும் விட்டுவிட்டுமாய் இருக்கக்கூடிய மணல் திட்டுகளை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் புகைப்படமெடுத்து வெளியிட்டது. பழைமைவாத கருத்துக்களில் ஊறிய மத கும்பல்கள் 'அது நிச்சயம் இராமர் கட்டிய பாலம் தான்.. அதே தான்..' என புல்லரித்து கிளம்பின. வைஷ்ணவா நெட்வொர்க் மற்றும் இந்தோ லிங்க் ஆகிய இணையங்கள் தாம் முதன் முதலில் அதனை இராமர் பாலம் என நாசா ஒத்துக்கொண்டுவிட்டதாக கூறி பொய்களை அவிழ்த்துவிட்டது. (வைஷ்ணவ நெட்வொர்க் தளத்தின் செய்தி:  http://www.vnn.org/world/WD0210/WD07-7592.html ). 
 
            தற்பொழுது சேது சமுத்திரதிட்டத்தை செயல்படுத்தப்படும் பொழுது இச்சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. சங்கராச்சாரியார்கள் நால்வர் பெங்களூரில் இராமர் பாலம் குறித்து விவாதித்தனர். இது குறித்த துவாரகா பீட சங்கராச்சாரியார் வரூபானந்த ஜி மகராஜ் கூறியுள்ள கருத்து `தினமணி'யில் வெளிவந்தது (சென்னை, 24.5.2007, பக்கம் 5) அச்செய்தி வருமாறு:

``இக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமர் கட்டிய பாலத்தை காக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுபற்றி விசாரிக்கும்படி டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாலு அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பாலத்தை இடித்து சேது கால்வாய் அமைக்கவே அவர் தீவிரம் காட்டி வருகிறார். இப்பிரச்சினையில் அரசியல் கலப்படமில்லை.
 
பாலத்தை இடிப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும். அப்படியிருந்தும் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். இதுபோல் நான்கு சங்கர மடத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தீர்மானித்துள்ளோம்.
 
பாலத்தை இடிக்காமல், வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபணை இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம்.
 
இந்தப் பாலத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புகைப்படம் எடுத்துள்ளது. ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
 
இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல.
மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும்.
விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.
 
இந்திய  செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களிலும் இந்தப் பாலம் இன்னும் வலுவுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.
 
கடலுக்கு அடியில் 6 அடி கீழே இது கட்டப்பட்டுள்ளது. அதிக குளிர்ச்சி நீரையும், அதிக வெப்ப நீரையும் தாங்கக் கூடியது இந்தப் பாலம்.
 
இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பாலத்தை இடிக்கும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் நாட்டுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறார் மத்திய அமைச்சர் பாலு.''
இவ்வாறு கூறியிருக்கிறார் துவாரகா பீடாதிபதி. (பார்க்க:
http://viduthalai.com/20070525/news04.htm)
 
மேலுள்ள காரணங்களுக்காகத் தான் சேது சமுத்திரத் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக ஆராய்வோம்.
 
ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
 
முதலில் அறிவியல் படித்தவர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு எத்தனை வருடங்களாக மனிதன் இருக்கிறான் என்பதற்கு விடை தெரிந்தால் இந்த கூற்று பொய்யென சுளீரென மண்டையில் உரைக்கும். அதையும் மறுத்து 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இருந்தார்கள் என்று இன்னும் நம்புபவர்கள், இதற்கு எதையேனும் ஆதாரமாக காட்டினால் உலகத்திற்கே அது பெரும் பரிசாக அமையும். உலகமே அவர்களை பாராட்டும். எவரேனும் செய்வார்களா என தெரியவில்லை... வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நல்ல திட்டத்தை எதிர்க்கும் மதவாதிகளுக்கு அறிவியல் தெரிந்திருந்தும் இவ்வாறு கற்பனைகளைக் கூறுவது மத உணர்வுகளை தூண்டி ஆதாயமடைவதுவே அன்றி வேறில்லை...
 
இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.
 
இதற்கு நான் விளக்கமளிப்பதை விட அந்த புகைப்படத்தை எடுத்த நாசா விண்வெளி நிலைய அதிகாரி ஹெஸ் சொல்வதைக் கேட்போம்.
 
NASA said the mysterious bridge was nothing more than a 30 km long, naturally-occuring chain of sandbanks called Adam's bridge. Hess said his agency had been taking pictures of these shoals for years.
 
அவை வெறும் இயற்கையாகவே உருவான மணல்திட்டுகள் தாம் என நாசாவே சொன்ன பிறகும் அதை நம்பிக் கொண்டிருப்பது, "தான் பிடித்த முயலுக்கு மூணே கால்" என்று வாதிடும் சிறுபிள்ளைத்தன வாதமாகும். ஒருவேளை இதனையும் மறுப்போர் எனது முதல் கேள்விக்கான பதிலை பூர்த்தி செய்துவிட்டு இவற்றை திரும்ப படிக்கவும்.
 
There is no evidence of a human presence in the subcontinent, he says, before roughly 250,000 to 300,000 years ago. It is generally believed man's hominid ancestors did not leave their African home until about two million years ago
Communication experts say that false, suspect news finds much greater circulation than normal because of the internet.
 
அந்த தகவல் எப்படி வெளியானது எப்படி அதனை வைஷ்ணவ நெட்வொர்க் - இந்தோ லிங்க் போன்ற பார்ப்பன பாசிச  சக்திகள் வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் வெளியிட்டனர் என்பது குறித்தும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த செய்தி பணம் சம்பாதிக்க உதவியது என்பதையும்  மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க.  அந்த புகைப்படத்தை எடுத்த நாசாவே  அதனை இயற்கையாகவே உருவான பாலம் என்று சொல்கிறது.  ஆனால், அதனை நம்ப மறுத்து அதனை சாட்சாத் " விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது" என்று சிலர் சொல்லும் பொழுது,  நாசாவில் உள்ளவர்களின் கருத்துக்களை விட அறிவியல் தெரிந்த ''அதிமேதாவிகள்'' இந்தியாவில் உள்ளதை காண முடிகிறது.
 
இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
"ஒழுங்கா சாமியை கும்பிடு.. இல்லைனா சாமி கண்ணை குத்திடும்" என்று சிறுபிள்ளைகளை மிரட்டும் பூச்சாண்டி வகை சார்ந்த இந்த வாதத்தை எந்த வகையில், எந்த அடிப்படையில் அவர் குறிப்பிட்டார் என்பது அவருக்கே வெளிச்சம். கடலோரம் வசிக்கும் பாமர மக்கள் பயங்கொள்ளும் வகையில் இக்கருத்தை தெரிவித்து அதன் மூலம் மக்கள் மனதில் மத உணர்வுகளை தூண்டிவிட்டு, பாபர் மசூதி, குஜராத் போல மதவெறிக் கலவரத்தை நடத்த திட்டமிடும் இந்து மத வெறியர்களை என்ன சொல்லி திருத்துவது?
 
மேலும் இது குறித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் புகைப்படத்தை கீழே காண்க.
அதில் தொடர்ச்சியாகவா மணல் திட்டுகள் உள்ளன? என்று தங்கள் கண்களை உற்று நோக்கிக் கண்டு தெளிவு பெறுக.
 
    கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந் ஜெயலலிதாவின் அறிக்கை இது.
 
Jaya ridicules MDMK leader's claim on Sethusamudram projectChennai, Sep 8 (UNI) Dismissing as ''pathetic, comical and absurd''
Minister J Jayalalithaa today asserted that if anyone could claim credit for bringing the project to fruition it was only her and no one else
 
      இத்திட்டத்தை கொண்டு வந்தது "நான் தான்! நான் தான்! நானே தான்"  என்று மார்தட்டி அறிக்கை விட்டு வைகோ, டி.ஆர் பாலு என அனைவரிடமும் சண்டை போட்ட ஜெயலலிதாவின் இன்றைய காலகட்ட அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு...
 
ஜெயலலிதா அறிக்கை
 
அவரது அறிக்கையிலிருந்து....
ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.
இந்த எந்த அளவிற்கு பொய் என்பதனை மேலேயே விரிவாக் கண்டு விட்டோம்..
 
             இது போன்ற பொய்களையும் புரட்டுகளையும் அறிக்கையாக வெளியிடும் ஜெயலலிதாவிற்கு அன்று சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வந்தது நான் தான் என்று சொல்லும் பொழுது ''ராமர் பாலம்" கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது சேது சமுத்திரத் திட்டம் பற்றி எதுவுமே தெரியாத தமிழக முதல்வராக அவர் இருந்துள்ளாரா? என்பவற்றுக்கான பதிலை தங்களிடமே விட்டுவிடுகிறோம்...
'ஆரிய மாயை' எழுதி ஆரியர்களைப் பற்றி புட்டுபுட்டு வைத்த அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அம்மையார், அண்ணா வழியில் தான் நடந்ததாக உதாரணம் சொல்ல ஒரு நிகழ்வு கூட காட்டமுடியாது என்பது அவருக்கே தெரியும்.  தான் ஒரு பாப்பாத்தி தான் என்று ஆரியத் திமிரோடு தனது சாதியை சட்டப்பேரவையிலேயே பேசிய இந்த திராவிடக் கட்சித் தலைவர்,  இராமர் பெயரால் இத்திட்டத்தை தடுப்பது ஒன்றும் வியப்பில்லை. பா.ச.க, விஷ்வ ஹிந்து பரிசித், சிவசேனை, சங்பர்வார் போன்ற மதவாத பாசிச கும்பல்களுடன் தானும் உண்டு என்பதை இது போன்ற நிகழ்வுகளின் மூலம் ஜெயலலிதா அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.
   
            பெரியாரின் சமூகநீதி பகுத்தறிவு சிந்தனையால் சிவந்த நம் தமிழ் மண்ணில் மதவாத கும்பல்களின் ஒப்பாரியை அடக்கி வைக்க வேண்டியது நம் கடமையாகும்.
 
மேலும் சில செய்திகள்:

-
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Thursday, May 24, 2007

"கைநிறைய சம்பளம்.. மனம் நிறைய வெறுப்பு...."

"கைநிறைய சம்பளம்.. மனம் நிறைய வெறுப்பு...."

தகவல் தொழிற்நுட்ப உலகின் புதிய நெருக்கடி

க.அருணபாரதி

தகவல் தொழிற்நட்பத் துறை மீது சவாரி செய்யும் உலகமயமாக்கலின் வளர்ச்சி உளவியல், வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மேற்கத்திய கலாசாரத்தை புகுத்துவதிலும், தனித்தன்மை வாய்ந்த இம்மண்ணின் கலாசாரங்களை அழிப்பதிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருவது கண்கூடு. தமிழகத்தில் ஆங்கிலம் பேசி தான் வாழ முடியும் என்கிற போலித்தனமான நிலைமையை பெற்றெடுத்திருப்பது இதற்கொரு முன்னுதாரணமாகும். தற்பொழுது அதன் தாக்கங்கள் பல்வேறு வடிவங்களில் மக்களை தாக்குகின்றன.

தகவல் தொழிற்நுட்பத்துறையில் பணிபுரிவோர்க்கு வேலைப் பளு அதிகமாக கொடுக்கப்பட்டு சம்பளமும் தாராளமாக வழங்கப்படுகிறது. சம்பளம் அதிகமாக கொடுக்கப்படுவதால் உழைப்புச் சுரண்டல் இங்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. சாதாரண மென்பொறியாளர் சுமார் 14 மணி நேரம் உழைப்பதை நிறைய இடங்களில் பார்க்க முடியும். வெளிப்பணியேற்ற மையங்கள் எனப்படும் 'பி.பி.ஒ' நிறுவனங்களில் பணிபுரிவோர் இதை விடக் கடுமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகினறனர். காப்பீடு, மருத்துவம், அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பணிகளை இந்தியத் துணைக் கண்டத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து செய்திட முடியும். அதனை செய்பவர்கள் தாம் பி.பி.ஓ நிறுவனங்கள். வெளிநாட்டவருக்கு இணையான ஆங்கில அறிவு, காப்பீடு உள்ளிட்ட சில துறைகளில் பொருட்களை தொலைபேசியில் பேசி விற்க செய்யும் திறமை உள்ளிட்ட பல திறன்களை பெற்றவர் தாம் இதில் பணியாற்ற முடியும். 8 மணி நேர வேலை கோட்பாடு இங்கு பெயரளவில் கூட இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை பெற்றேத் தீர வேண்டும் அல்லது பொருட்களை விற்றுத் தீர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுவதும் உண்டு. அதற்காக மிகவும் சிரத்தையுடன் அந்த இலக்கை அடைவதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு வாடிக்கையாளர்களை இவர்களால் அடைய முடியாவிட்டால் அவர்களை பணி நீக்கம் செய்திடவும் அந்நிறுவனங்களால் முடியும். ஏனெனில் அவர்கள் நிரந்தர பணியாளர்கள் முறையில் பணியமர்த்தப்படுவது இல்லை. இது போன்ற நடவடிக்கைகளாலும், வேலை நிரந்தரமின்மை, பயம், மனஉளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பல கூறுகளாலும் பணியாளர்கள் பெரிதும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். 'இன்றைய பி.பி.ஒ நிறுவன பணியாளர்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டு சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அல்லது ரோமானிய கப்பல்களில் அடைத்து வைக்கப்பட்டு கடின வேலைகள் செய்த அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அந்த அடிமைகளுக்கு சாப்பாடு தவிர வேறு எதுவும் கிடையாது. வெளி உலகத்தைப் பார்க்கக் கூட அனுமதி கிடையாது. கப்பலின் அடித்தளத்தில் அடைந்து கிடக்க வேண்டும். அதே போல இந்திய தொழிலாளர்களையும் பணத்தை மட்டுமே காட்டி சக்கையாகப் பிழிந்து விடுகிறார்கள்", இதை சொல்வது நாமல்ல. இந்தியாவின் தகவல் தொழிற்நுட்பத் தலைநகரம் எனப்படும் பெங்களுரில் உள்ள வி.வி.கிரி நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் லேபர் ( VV Giri Institute of Labour, Bangalore) என்கிற மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற நிறுவனம். சுமார் இருநூறு பேரிடம் ஆய்வு நடத்தி இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார்கள். (பார்க்க: சூனியர் விகடன், 1.1.06 )

கடந்த மார்ச் மாதம் புனேவில் நடைபெற்ற போதை விருந்து ஒன்று நடைபெற்றது. அதற்கான ஏற்பாடுகளை கணிணி நிறுவனங்களே செய்ததும் அம்பலமானது. அதில் கலந்து கொண்ட தகவல் தொழிற்நுட்பத்துறை ஊழியர்கள் உட்பட சுமார் 280 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்ற விருந்துகள் சென்னையிலும் நடந்திருப்பதாகவும் அதில் 25 ஆண்களை கைது செய்து, காவல்துறையினர் விடுவித்ததும் தெரியவந்துள்ளது (தினமலர் 06-03-2007). கடந்த 2001 ஆம் ஆண்டு (29-10-2001) அன்று, அமெரிக்காவில் பணிபுரிந்து விட்டு இந்தியாவிற்கு திரும்பிய 24 வயதே ஆன கணிணி மென்பொறியாளர் புதுதில்லியில் கேசவபுரத்தில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அவர் தன் வேலையில் மனநிறைவில்லாததையும், வேலைக் காரணமாக தன் வீட்டையும் குடும்பத்தினரையும் மகிழ்ச்சி படுத்த முடியாமைக்கும் வருந்தியுள்ளார் (செய்தி: IANS). கடந்த 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் சப்பான் நாட்டைச் சேர்ந்த கணிணி மென்பொறியாளர் அதிக வேலை பளுக் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அந்த ஊழியரின் குடும்பம் அந்நிறுவனத்திடம் நிவாரணம் கோரிய போது அதனை அந்நிறுவனம் ஏற்காமல் தள்ளுபடி செய்தது. இதனால் கொதித்துப் போன அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்நிறுவனத்திடம் நிவாரணம் பெற போராடி வெற்றியும் பெற்றனர். உலகில் தற்கொலை செய்து கொள்வோர் அதிகமுள்ள நாடு சப்பான் என்பதும் குறிப்பிடத் தக்கது. வேலை பளுக் காரணமாக சுமார் 652 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தேசிய காவல் நிறுவனம்(செய்தி: NPயு) தெரிவிக்கிறது. தற்பொழுது இது போன்ற தற்கொலைகள் இந்தியத் துணைக் கண்டத்திலும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப்படும் பெங்களுரில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. கடந்த சில வருடங்களாக பெங்களுரின் தற்கொலைகள் மிகவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர்(பார்க்க இந்து:26-11-2006).

இது போன்ற தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாயிருக்கும் வேலைபளுவும் மனஅழுத்தமும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியாமலிருக்க பல நிறுவனங்கள் பணம் உள்ளிட்ட சலுகைகள் அளித்தும், நடன விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தியும் அவர்களை மகிழ்ச்சிபடுத்துகின்றன. சில நிறுவனங்கள் இதற்கென நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மது உள்ளிட்ட பல போதை பொருட்களும் கூட கிடைக்க வழிசெய்வது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அதிக பணவரவாலும், மன அழுத்தம் காரணமாகவும் இளைஞர்கள் தவறான காரியங்களில் ஈடுபட வழிகள் அதிகமாகின்றன. மது, மங்கை என வாழ்வை அனுபவிக்கத் தொடங்கி கலாச்சாரத்தையும் சீரழிக்க முற்படுகின்றனர். சில பன்னாட்டு நிறுவனங்கள் பணியாளர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும் அதற்கென நிதியும் ஒதுக்கி அதிர்ச்சியடைய செய்துள்ளன. அதனை டேட்டிங் அலவன்ஸ் என்பர். இந்தியாவில் விப்ரோ நிறுவனம் அது போன்ற அலவன்ஸ் கொடுத்ததால், தன் கணவர் வேறொரு பெண்ணுடன் சென்று விட்டார் என்று அவர் மனைவி கான்பூர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். பின்னர் அது போன்ற அலவன்ஸ் தங்கள் நிறுவனத்தில் இல்லையென அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. கடந்த மாதம், நாடு முழுதும் உள்ள 3000 தகவல் தொழிற்நுட்பத்துறை ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் பல தகவல்கள் வெளிப்பட்டன. தகவல் தொழிற்நுட்பத் துறை ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் இல்லற வாழ்வில் நாட்டமின்றி இருக்கின்றனர் என்றும் அவர்களது குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது (தினகரன் 28-04-2007).


மனஅழுத்தத்தை போக்க யோகா, மனப்பயிற்சி உள்ளிட்ட பல வழிகள் இருக்கிற போதும் பல நிறுவனங்கள் மேற்கத்திய பாணியில் 'டிஸ்கொத்தே', நடன விருந்து என்று தன் ஊழியர்களிடம் அயல்நாட்டு கலாச்சாரத்தை புகுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பினால் தகவல் தொழிற்பத்துறையினர் மற்ற துறையினரைவிட அதிக சம்பளம் பெறுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் மனக்குறைவு தான் இக்குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் காரணம் என சாக்கு சொல்லுகின்றனர். ஆனால் இவற்றால் பாதிக்கப்படப்போவது நமது பிற்கால சந்ததியினரே என்பதை உணர மறுக்கின்றனர். ஒருபுறம், காடுகள் அழிக்கப்படுதல் மற்றும் வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் உலகம் அச்சுறுத்தல் பெற்றிருக்கும் போதே, உலகமயம் விவசாய நிலங்களை பறிக்க திட்டமிடுகிறது. மறுபுறம், வேலை பளு அதிகம் கொடுத்து உழைப்பு சுரண்டலை தீவிரப் படுத்தி பணியாளர்களை மனஅழுத்தத்தில் ஆரம்பித்து தற்கொலை வரை கொண்டு செல்கிறது. மனிதகுலத்திற்கு எதிரான உலகமயத்தின் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

குறிப்பு: இக்கட்டுரை 'சற்றுமுன்' கட்டுரைப் போட்டியின் 'சமூகம்' பிரிவிற்காக எழுதப்பட்டது...

--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Monday, May 21, 2007

மீனவர்கள் கடத்தல் உளவுத்துறை சதியா? - செய்தி அலசல்


புதினம் செய்தி ஆய்வு
முடிவுக்கு வந்தது இந்திய உளவுத்துறையின் "மீனவர்" கடத்தல் நாடகம்


தமிழக மீனவர்கள் கடத்தல்- சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மீனவர் கடத்தல் தொடர்பான ஒரு செய்தி ஆய்வு:

4 மார்ச்  2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம்

29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

(தினமணி மார்ச் 30: சிறிலங்கா கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி

களியக்காவிளை, மார்ச் 30: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மீனவர்கள் உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் அருகேயுள்ள சின்னத்துறை மீனவக் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கா. சதீஷ் (26), கா.ஜஸ்டின் (24), தோ.தீஸஸ் தாஸ் (37), மரிய ஜான் (50), லினீஸ் (52) அருள் லாம் தூஸ் (31), நீரோடி கிராமத்தைச் சேர்ந்த ஜெரின் (17), மரிய ஜான் லூயிஸ் (32), ஈஸ்டர்பாய் (30) ஆகிய 9 மீனவர்கள் கடந்த 23 ஆம் நாள் விசைப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 45 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல், திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. இதில் சதீஸ், ஜஸ்டின், மரிய ஜான், லினீஷ் ஆகிய 4 மீனவர்கள் பலியானார்கள். மேலும் துப்பாக்கிச் சூட்டில் தீசஸ் தாஸ் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

31 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை: சிறிலங்கா அரசு- இந்திய கடற்படை மறுப்பு

(Hindu Mar 31, 2007)

Navy Chief won't rule out LTTE role in firing on Indian fishermen

Sandeep Dikshit
`Sri Lankan Navy has asked to exercise restraint'
`State Government not warning fishermen enough' 
 
NEW DELHI: The Chief of the Naval Staff, Admiral Sureesh Mehta, did not rule out the involvement of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the recent incidents of firing on Indian fishermen in order to create a misunderstanding between the two countries.

Basing his views on assurances given by the Sri Lankan Naval chief, Admiral Mehta said the purpose could be to create a rift between the two nations.

"I had personally spoken to the Chief of the Sri Lankan Navy five days back [following another incident of firing on Indian fishermen] and he assured me that his men had no intention of harassing fishermen in this manner. The Sri Lankan Navy has also issued strict instructions asking its personnel not to open fire on Indian fishermen who had strayed into Lankan waters," he told newspersons on Friday.

In a recent meeting between top officers from the Sri Lankan security establishment and the Indian High Commission in Colombo, the Sri Lankan navy chief had shown maps to prove that his ships were nowhere in the vicinity when incidents of firing on Indian fishermen took place.

"It could be a tactic by the LTTE to create a rift," he observed.

The navy chief also regretted that the State Government was not doing enough to warn fishermen about the perils of entering Sri Lankan waters at a time when conflict was raging in and around the Island nation. "There are some systems that should have been put in place."

With about 3,000 boats crossing over into the international waters everyday, Admiral Mehta wanted the boats to carry some kind of locational indication instrument so that the Indian authorities were aware of their whereabouts and could alert the forces of the other side in case they inadvertently crossed over in the waters controlled by Sri Lanka

1 ஏப்ரல் 2007: கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலை: புலிகள் மீது பழிபோட இந்திய உளவுத்துறை சதி
 
1 ஏப்ரல் 2007: கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம்: இளந்திரையன் கடும் கண்டனம்

தாயகத் தமிழ் உறவுகளும் ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளுடன் இப்படுகொலைகளை மூடிமறைக்க வேண்டும் என்று கருதுகிற சிறிலங்கா அரசும் இணைந்து இச்சம்பவத்தில் எங்களை தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

தாய்த் தமிழக உறவுகளும் ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே இரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும், நாடு இன பேதமின்றி தமிழ் மக்களை குறிவைத்துப் படுகொலை  செய்கின்ற சிறிலங்கா அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் இளந்திரையன்.

12 ஏப்ரல் 2007: தூத்துக்குடி அருகே 6 சிங்களர்கள் கைது: குமரி மீனவர்களை சுட்டுக்கொன்றவர்களா?

தூத்துக்குடி அருகே இந்தியக் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களர்களை கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

12 ஏப்ரல் 2007:

URL: http://www.thehindu.com/2007/03/12/stories/2007031205801200.htm

 

Sri Lanka refutes allegations

 

The Sri Lanka Government said on Sunday that reports of the death of an Indian fisherman in firing by its Navy were "instigated by the LTTE with a vested interest." It reiterated the proposal for joint monitoring of the International Maritime Boundary Line (IMBL) by the Indian and Sri Lanka Navies.

 

The statement said that it was reasonable to assume that the reports were being instigated by the LTTE in an attempt to damage the strong bilateral relationship between India and Sri Lanka.

13 ஏப்ரல் 2007: கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களுக்கு 5 மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் தொடர்பு இல்லை (தினமணி)

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இந்திய கடலோர காவல் படையினர் புதன்கிழமை காலையில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கே 28 கடல் மைல் தொலைவில் இரண்டு வள்ளங்களில் கன்னியாகுமரி மாவட்டம், மேல முட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இரண்டு வள்ளங்களிலும் தலா 6 பேர் வீதம் 12 பேர் இருந்தனர். இந்த வள்ளங்களுக்கு அருகே ஒரு விசைப்படகு கேட்பாரின்றி நின்றது. அந்தப் படகு இலங்கையைச் சேர்ந்தது. அதில் "மரியா' என பெயர் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து 12 பேரையும் கடலோரக் காவல் படையினர் சிறை பிடித்தனர். பின்னர், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணை: கடந்த 29 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரை சுட்டுகொன்ற நபர்கள் வந்த படகில் மரியா என எழுதப்பட்டிருந்ததாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. தற்போது இலங்கை மீனவர்கள் வந்த படகிலும் மரியா என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கடந்த 29 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், நீரோடிதுறையைச் சேர்ந்த கி. ஜெரின் (18), ரீ.அருளாந்ததூஸ் (31), மரியஜான் லூயிஸ் (41) ஆகியோரை காவல்துறையினர் தூத்துக்குடிக்கு இரவோடு இரவாக அழைத்து வந்தனர். பிடிபட்ட இலங்கை படகு "மரியா' மற்றும் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அவர்களிடம் காட்டினர். இந்த விசாரணையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளதாக எஸ்.பி.ஜான் நிக்கல்சன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விபரம்:

இலங்கை யாழ்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த அந்தோனி பிள்ளை மகன் அருள்ஞானதாசன் (20), மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த கிறிஸ்டி மகன் ராபின் (23), வன்னி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுப்பையா செல்வராசா மகன் செல்வகுமார் (19), யாழ்ப்பானம் குறுநகர் முதலாம் குறுக்கு தெருவைச் சேர்ந்த மரியான்பிள்ளை மகன் பொனிபாஸ் (28), மன்னார் முள்ளிக்குளத்தை சேர்ந்த தவராசா மகன் அருண் (19), முத்தையா மகன் ரவிக்குமார் என்ற ரவி (24) ஆகிய 6 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை தமிழ் மீனவர்கள் ஆவர்.

இவர்கள் கடந்த மாதம் 14 ஆம் நாள் தேதி மன்னார் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க வந்துள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பும் வேளையில் 5 ஆம் நாள் படகு இயந்திரத்தில் கோளாறாகி நின்று விட்டதாம்.

கன்னியாகுமரி மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் தான் இலங்கை மீனவர்களுக்கு உதவியுள்ளனர். எனவே இரண்டு வள்ளங்களிலும் சென்ற மேல முட்டத்தைச் சேர்ந்த செ.சகாயவின்ஸ் (25), தீ.நெல்சன் (34), ம.அந்தோனி (38), ஆ.முத்தப்பன் (36), ஜெ.சபின் சுதாகர் (18), அ.ஸ்டார்லின் (25) ஆகிய 6 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புள்ளது என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியாகக் குற்றம்சாட்டிய நாளில்தான் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் சிங்களவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.

சிறிலங்காவின் அறிக்கையும் சிறிலங்காவில் மட்டும் வெளிவரவில்லை. தமிழகத்தில் உள்ள இந்து நாளேட்டிலும் வெளிவந்துள்ளது.

ஓரு பதற்றமான நிலையில் இப்படி ஒரு செய்தி வந்திருக்கும் சூழலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரித்தவர் பொறுப்புள்ள காவல்துறை அதிகாரியான தூத்துக்குடி கண்காணிப்பாளர் நிக்கல்சன்.

அவர் நடத்திய விசாரணையில்தான் கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து.

17 ஏப்ரல் (தினமணி) "மீனவர் சுடப்பட்டதில் சிறிலங்கா கடற்படைக்கு தொடர்பில்லை. அண்மையில் கடலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் மறுத்துள்ளது.

தினமணியில் (15.4.2007) வெளியான "சிறிலங்கா கடற்படை சுட்டதில் பலியான 5 மீனவர்கள் குடும்பத்தாருக்கு அரசுப் பணி நியமன உத்தரவு" என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு துணைத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான கன்னியாகுமரி மீனவர்கள் சிறிலங்கா கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில்தான் மரணம் அடைந்தனர் என்ற தொனியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ள வேளையில் அக்கடற்படை மீது குற்றம் சுமத்தியிருப்பது உகந்ததல்ல என அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றது யார் என்று தெரியாத நிலையிலேயே "நிரூபிக்கப்பட்டு விட்டதாக"க் கூறுவது என்பது கண்ணை மூடிக்கொண்டு அல்லது ஒரு திட்டமிட்ட பொய் கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்பட்டிருப்பது அல்லாமல் வேறு எதுவுமே இல்லை.

ஏப்ரல் 17 ஆம் நாளுக்குப் பின்னர் ஏப்ரல் 28 ஆம் நாள்தான் தமிழக காவல்துறைத் தலவைர் முகர்ஜியின் அறிக்கை வெளியாகிறது.

அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியாகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எனப்படுவோரின் வாக்குமூலம் ஒன்றும் வெளியாகிறது.

27 ஏப்ரல் 2007 : விடுதலைப் புலிகள்தான் சுட்டனர்: தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி அறிக்கை

அந்த அறிக்கையில்

- கைது செய்யப்பட்ட மீனவர்களை காவல்துறையினர் கஸ்டடி எடுத்த நாள்: ஏப்ரல் 20

- கியூ பிரிவுக்கு மாற்றப்பட்ட நாள்: ஏப்ரல் 23

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், இந்து நாளேடு போன்ற தமிழின எதிரிகளும் சம்பவம் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தியக் கடற்படைத் தளபதியோ சம்பவம் நடந்த மறுநாளே பகிரங்கமாக தமிழ்நாடு அரசு மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுகிறார்.

தமிழக அரசும் வாய்மூடி மௌனமாகக் கிடக்கிறது.

சிறிலங்கா கடற்படையும் அதே போன்ற அறிக்கை விடுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டனர். அவர்கள் விசாரிக்கப்பட்ட சூழலும் பதற்றமான ஒரு காலட்டத்தில்தான். விசாரித்ததும் தமிழகக் காவல்துறையின் பொறுப்புள்ள அதிகாரிதான்.

பிறகு ஏன் தமிழகக் காவல்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும்?

300-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறிவிட்டதே என்பதற்காகவா?

அல்லது

இந்தியத் தளபதி கூறிவிட்டாரே என்பதற்காகவா?(May 31 Hindu)

அல்லது

விடுதலைப் புலிகளை எப்படியும் தமிழகத்தின் உறவிலிருந்து பிரித்தே ஆக வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கம - இந்திய உளவுத்துறையினர் கூட்டுச்சதியினை நிறைவேற்றவா?

அல்லது

சிறிலங்காவில் இந்தியாவும் கடலில் கூட்டு சுற்றுக்காவல் மேற்கொள்ள வேண்டும் என்று கனவு காணும் இந்த சகுனிகளின் சதித்திட்டத்தை நிறைவேற்றவா?

சரி

வாக்குமூலம் கொடுத்தவர் கடல் புலிகள் எனில்

ஏன் நாங்கள் கடல்புலிகள்தான் என்பதற்கான ஆதாரங்களைச் சொல்லவில்லை. அவர்களுக்கென அடையாள அட்டை இருக்குமே? அதனைத்தான் கடலில் தூக்கி எறிந்திருந்தாலும் தங்களுக்கான இயக்கப் பெயர், எண்கள் இருக்குமே? அதனையும் "கஸ்டடியில்" மறந்து விட்டார்களா? சொல்லிக் கொடுத்த வாத்திமார் மறந்துவிட்டாரா?

சரி

ஏப்ரல் 12 ஆம் நாள் வாக்குமூலம் கொடுத்தோர் கைது செய்யப்பட்ட செய்தி தமிழக ஏடுகளில் வெளிவருகிறது

ஏப்ரல் 13 ஆம் நாள் அவர்கள் தமிழர்கள் என்றும் மீனவர்கள் என்றும் புகைப்படங்களுடன் வெளிவருகிறது.

இவர்கள் விடுதலைப் புலிகள் எனில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இது தெரியாமல் இருக்குமா?

அல்லது

இவர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதனைத் தெரிந்து கொண்டும்

ஆமாம், கடத்தப்பட்ட மீனவர்கள் எங்களது கஸ்டடியில்தான் இருக்கிறார்கள் என்று "போன் மூலம்" தமிழக காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா? கஸ்டடியில் இருந்தவர் போன்மூலம்தான் முகாமில் இருந்தோரைத் தொடர்பு கொண்டதாக தமிழகக் காவல்துறை தலைவர் முகர்ஜியின் அறிக்கைதான் கூறுகிறது.

தற்போது திரும்பி வந்துள்ள மீனவர்கள் கூறுகிறார்கள், தாங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில்- சாப்பாடு கூட எடுத்து வர முடியாத ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தோம் என்றும் சிறை போன்ற முகாம் என்றும் வீடு போன்ற பகுதி என்றும் கூறுகின்றனர்.

தமிழகக் காவல்துறை வலுவான நெட்வேர்க்கில்தான் உள்ளது போல்....

இப்படியான இடங்களுக்கு சிறிலங்கா அரசாங்கமும் தொலைபேசி வசதி செய்தி கொடுக்கிறது போல்-

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

சிங்களக் கைதிகள் சொல்லாத ஒரு அபாண்டத்தை தமிழக மீனவர்கள் மூலம் காவல்துறை சொல்ல வைத்திருக்கிறது.

புலிகளின் பிடியில் சிக்கிக் கொண்ட கைதிகள் எவரேனும் ஒருவராவது புலிகள் மீது குற்றம் சுமத்தியது உண்டா?

தங்களை நடத்திய விதம் குறித்து குறை கூறியது உண்டா?

பிரிந்து செல்லும்போது கொடுத்த பேட்டிகள் எத்தனை எத்தனையோ வெளியாகி உள்ளன. ஒன்றிலாவது ஒரு குறையாவது சொல்லப்பட்டது உண்டா?

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாக கூறி சென்றார்."

என்னது கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனர்.

கேரள கடற்கரை பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல- வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கடலில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலை தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்கு சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கடலில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா- இந்தியா- பிரித்தானியா- சிறிலங்காவின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய றோதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது. தமிழக அரசும் அதற்கேற்ப ஈழத் தமிழர் ஆதரவு நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மத்திய ஆளும் அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல்- காவல்துறை நாடகம்தான் இது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்து புலிகள் தொடர்பான பிரச்சனையில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருப்பதையும் அதனை தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளுக்கும் ஊடகத்தாருக்கும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்- சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

(ஞானசேகரனுக்கு நெருங்கிய நண்பர் யார் தெரியுமா? இராமநாதபுரம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹசன் அலி. ஹசன் அலியைப் பற்றி நக்கீரன் வாரமிருமுறை இதழ் வெளியிட்ட விவரம் என்னவெனில் "மகிந்தவுக்கு நெருக்கமானவர்- ஈழத்  தமிழ் அகதிகளை மிகக் கேவலமாக நடத்தியவர் என்பதுதான்)

இந்திய உளவுத்துறைக்கு பணிந்தாக வேண்டிய தமிழகக் காவல்துறையும் வாக்குமூல வசனங்களை விட்டுக் கொண்டிருக்கிறது.

எத்தனை பொய்யை அவிழ்த்து

எத்தனை அவதூறுகளை அள்ளி வீசினாலும்

"தானாடாவிட்டாலும் தசையாடும்" எங்களின் தொப்புள் கொடி உறவைத் துண்டிக்க எந்த வல்லூறாலும் முடியவே முடியாது.
 
நன்றி: புதினம்
 
மேலும் ஒரு ஆதாரம்...
 
பார்க்க ::  கடத்தியது சிறீலங்காகடற்படைதான் - கடத்தப்பட்ட மீனவச்சிறுவன்.

http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=295f8076b1c5722a46aa
 
 
 

Tuesday, May 15, 2007

மேதா பட்கர் புதுச்சேரி வருகை


சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர்
புதுச்சேரி வருகை


சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார்.

இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் கட்டுவதால் பழங்குடியினர் வாழும் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிவதை எதிர்த்து தொடர்ந்துப் போராடி வருபவர். அதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் நிற்கும் களப்பணியாளர்.

தமிழகத்தில் கடந்த 15-02-2007 அன்று கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் கட்டப்படுவதால் ஏற்படும் ஆபத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டு, அதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தார். போராடும் மக்களுக்கு ஆதரவளித்தார்.

இது போன்று மக்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரிக்கு வருகிறார்.

புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வருகிறது. சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கு பெரும் கேடு விளைவிக்கும், மீனவ கிராமங்களை அழிக்கும், ஒட்டுமொத்த புதுச்சேரிக்கே எதிரான இத்திட்டத்தை எதிர்த்து தேங்காய்த்திட்டு மக்களும்,ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களும் போராடி வருகின்றனர். துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

ஆனால், புதுச்சேரி அரசு இத்திட்டத்தைக் கைவிட மறுத்து வருகிறது. முதல்வர் ந.ரங்கசாமியை பலமுறை சந்தித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை. துறைமுகம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி ஒரு உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள்படி முடிவு எடுப்போம் என முதல்வர் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால், இதுநாள் வரை வல்லுநர் குழு கூட அமைக்கப்படவில்லை. இதனால், போராடும் மக்கள் அரசு மீது நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

எனவே, போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், புதுச்சேரி அளவில் நடைபெறும் இப்போராட்டத்தை அகில இந்திய அளவில் விரிபடுத்தவும், போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கரை புதுச்சேரிக்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. போராடும் மக்களின் அழைப்பை ஏற்று, அவர் மக்கள் போராட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார்.

வரும் மே 17 வியாழனன்று காலையில் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், மதியம் புதுச்சேரி வந்து சேருகிறார். போராட்டம் நடத்தி வரும் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்திக்கிறார். கடந்த 13-04-2007 அன்று சவப்பாடை ஊர்வலம் நடத்தி துறைமுகத் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தி்ன் போது போலீஸ் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

புதிதாக துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள இடங்களைப் பார்வையிடுகிறார். ஏற்கனவே கட்டப்பட்ட அரியாங்குப்பம் துறைமுகத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நேரிடையாக பார்க்கிறார். மேலும், இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படும் மீனவர் கிராமங்களை பார்வையிடுவதோடு, மீனவ மக்களையும் சந்திக்கிறார். பிறகு நடக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில், புதுச்சேரியின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய இயக்கத் தலைவர்கள், மனித உரிமை அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் வருகை துறைமுக விரிவாக்கத் திட்டப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
செய்திக்கு நன்றி: கோ.சுகுமாரன்
www.kosukumaran.blogspot.com
 

Friday, May 11, 2007

ஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி

ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை
விடுதலை செய்யக்கோரி
புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி
 
புகைப்படம்: தினகரன்
நன்றி : தினமலர்
------------------------------------------------------------------------------------------------------------------------

ஈழதமிழர் கைது பிரெஞ்சு தூதரகம் நோக்கி கண்டன பேரணி

புதுச்சேரி, மே 11: பிரான்சு நாட்டில் 17 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன பேரணி நடத்தி யது.

சிங்காரவேலர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் பாமக துணை பொதுச்செயலாளர் அனந்த ராமன் எம்.எல்.ஏ., அம்பேத் கர் தொண்டர் படை மூர்த்தி, மீனவர் விடுதலை வேங்கை கள் மங்கயர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், விடுதலை சிறுத்தைகள் பாவாணன், வணங்காமுடி, பெரியார் திராவிடர் கழகம் லோகு.அய்யப்பன், மதிமுக சந்திர சேகரன், பகுஜன்சமாஜ் தங்க,கலைமாறன், ராஷ்டிரிய ஜனதாதளம் சஞ்சீவி, கவுன்சிலர் சக்திவேல் உள் பட பல்வேறு சமுக அமைப் புகளை சேர்ந்த வர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  பேரணி பழைய பஸ் நிலையம், அண்ணாசாலை வழியாக பிரெஞ்ச் தூதரகம் நோக்கி சென்றது. பேரணியில் பிரெஞ்சு அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட் டது.
அம்பலத்டையார் மடம் வீதி, மிஷன்வீதி சந் திப்பில் போலீசார் பேரணி யில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரெஞ்சு தூத ரகத்திற்கு சென்று பிரெஞ்சு தூதரிடம் மனு கொடுத்த னர்.  
 நன்றி: தினகரன்
------------------------------------------------------------------------------------------------------------------------
பிரான்ஸில் ஈழத் தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரியில் கண்டனப் பேரணி

புதுச்சேரி, மே 11: பிரான்ஸில் கைது செய்யப்பட்ட 17 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பிரெஞ்ச் தூதரக அலுவலகம் நோக்கி பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்தின.

ஈழத்தமிழர்கள் சிங்கள அரசின் நடவடிக்கைகளால் துயரம் அடைந்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்று அதனை ஈழத்தமிழர்களுக்கு அங்கிருந்த 17 ஈழத்தமிழர்கள் அனுப்பி வைத்தனர். இந் நிலையில் இலங்கை அரசின் பேச்சை நம்பி பிரான்ஸ் அரசு அந்த 17 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளது.

இந்த 17 ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் பிரெஞ்ச் தூதரக அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. இப் பேரணிக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். பாமக எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அனந்தராமன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இருதயராஜி, அம்பேத்கர் தொண்டர் படையைச் சேர்ந்த தி.மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஆ.பாவாணன், வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பைச் சேர்ந்த மங்கையர் செல்வன், வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், செந்தமிழர் இயக்கம் தமிழ்மணி, மதிமுக சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயங்கங்கள் பங்கேற்றன.

பின்னர் 10 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரி பிரெஞ்ச் தூதரக பெண் அதிகாரி ஜெல் ராயட்டை சந்தித்து ஈழத் தமிழர்கள் 17 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர்.
நன்றி : தினமணி
------------------------------------------------------------------------------------------------------------------------
புதுச்சேரியில்
ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம்
பிரெஞ்சு தூதரகத்தில் மனு கொடுக்கப்பட்டது

புதுச்சேரி, மே. 11-

புதுவையில் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம் நடந்தது. மேலும் பிரெஞ்சு தூதரகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது.

ஈழத்தமிழர்கள் கைது

பிரான்சு நாட்டில், புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களுக்கு அனுப்பி வைத்த 17ஈழத்தமிழர்களை சிங்கள அரசின் புகாரினை தொடர்ந்து பிரான்சு அரசு கைது செய்துள்ளது.

இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஊர்வலம்

புதுவையிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கைதான ஈழத்தமிழர்களை விடுவிக்கக்கோரி ஊர்வலம்-ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் நேற்றுகாலை சிங்காரவேலர் சிலையருகில் திரண்டனர்.

அங்கிருந்து கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அனந்தராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டம்

ஊர்வலத்தில் அம்பேத்கார் தொண்டர் படை மூர்த்தி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பாவாணன், வணங்காமுடி, ம.தி.மு.க. சந்திரசேகரன், பகுஜன்சமாஜ் கட்சி இருதயராஜ், செந்தமிழர் இயக்க தமிழ்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக அம்பலத்தடையார் மடத்துவீதியை அடைந்தது. அதற்குமேல் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்தவர்கள் அங்கேயே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் முக்கிய பிரமுகர்கள் பிரெஞ்சு தூதரகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
நன்றி : தினத்தந்தி 

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Wednesday, May 09, 2007

"சிங்கள அப்பாவி மக்கள் எங்களது இலக்கு அல்ல" - புலிகள்

''நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானதுதானே தவிர சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல''
 - சு.ப.தமிழ்ச்செல்வன்  -
 
தமிழக மீனவர் பிரச்சனை குறித்த உண்மை நிலவரம்
 
புதன்கிழமை 9 மே 2007 05:31 ஈழம் புதினம் நிருபர்
 
"எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது."

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

"குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல்இ தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள் விடுதலப் புலிகள் என்று ஆதாரத்துடன் தமிழக காவல்துறை இயக்குநர் முகர்ஜி கூறியிருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?"

"இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும்இ 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் இலங்கை கடற்படைதான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதான் எங்கள் விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல். புலிகள் மீது திட்டமிட்டு பழி சுமத்துவதற்காகவே இலங்கை கடற்படை இப்படியொரு காரியத்தை செய்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்ததுஇ நடக்கிறது என்பதெல்லாம் விரைவில் அப்பட்டமாக வெளிஉலகுக்கு வரும்போதுஇ புலிகள் மீது பொய்யை வாரி இறைத்திருப்பதை உலகம் உணரும். இலங்கைக் கடற்படையின் மோசமான எண்ணத்துக்கு ஈடுகொடுப்பது போல தமிழகக் காவல்துறையும் ஏன் இப்படியெல்லாம் அவதூறு சொல்கிறது என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை. தமிழக மக்கள் மீதும் மீனவர்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர்கள்தான் எமது போராளிகள். இதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. இலங்கைக் கடற்படையினர் மீனவர்களுக்கு எதிராக நடத்தும் பல்வேறு கொடுமைகளில் இருந்து மீனவர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அப்படி இருக்கும்போதுஇ காவல்துறைத் தலைவர் முகர்ஜி சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது!"

"கடத்தப்பட்டு உங்கள் முகாமில் இருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களை மீட்க தமிழக அரசு தரப்பிலிருந்துஇ உங்கள் தரப்பிடம் மூன்று நாட்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இறுதிவரையில் நீங்கள் அவர்களை விடுவிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு தகவல். அதுமட்டுமல்லஇ தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ஐந்து கடற்புலிகள் ஈழத்தில் அடைத்து வைத்திருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களுக்காக அங்கிருக்கும் புலி தளபதி ஒருவரிடம் தமிழகத்தில் இருந்து வாக்கி-டாக்கி மூலமாக பேசியதாக வரும் தகவல் குறித்தெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?"

"இதுவும்கூட தவறான தகவல்தான். இலங்கைக் கடற்படையாலும் அதனோடு சேர்ந்து இயங்கும் கூலிப்படையாலும் மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற நாடகமாகவேத்தான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம். இதில் எங்களுக்கு இன்னொரு பெருத்த சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக காவல்துறையோடும் உளவுத்துறையோடும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவர்கள்இ புலிகளின் பெயரால் இப்படியான உரையாடல்கள நடத்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏனென்றால்இ இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக தமிழகக் காவல்துறையோடு எமது அமைப்பின் உறுப்பினர்களோ தளபதிகளோ நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதில்லை. அப்படி இருக்கும்போதுஇ அவர்கள் எங்களோடு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றால் எப்படி? குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்இ மீனவர்களை நாங்கள் கடத்தி வைத்திருக்கவில்லை என்கிறபோதுஇ அவர்கள் ஏன் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? அப்படிப் பேசினால் அது அபத்தமாக இருக்காதா? தமிழக மக்களுக்கும் புலிகள் இயக்கத்துக்குமான அன்பைஇ பாசத்தைஇ உறவை கெடுக்கும் விதமாகவே இதெல்லாம் நடக்கிறது என்ற எங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது."

"எல்லாவற்றையும் நீங்கள் தெளிவாக மறுக்கிறீர்கள். ஆனால்இ உங்கள் 'மரியா' படகில் வந்த கடற்புலிகளோ மீனவர்களை சுட்டுக் கொன்றது புலிகள்தான் என்று தெளிவுபடச் சொல்கிறார்களே...?"

"ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரையில் 'மரியா' படகில் பிடிபட்டது கடற்புலிகள் என்று எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஒப்புக் கொண்டிருக்கிறார்களா? அப்படி இருக்கும்போதுஇ அவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்று சொல்லிஇ எதையாவது தமிழகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்குமானால்இ அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? அப்படியே அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகச் சொன்னாலும்இ அந்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை யார் சோதித்தறிவது? எமது அமைப்புக்கு எதிரானவர்கள் மூலமாக திட்டமிட்டு ஏன் இப்படியொரு நாடகம் நடத்தப்படக் கூடாது? கொஞ்சம் பொறுங்கள்... எல்லா உண்மைகளும் விரைவில் வெளியே வந்துவிடும்!"

"தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக புலிகள் தரப்பில் அறிக்கை ஒன்று விடப்பட்டிருக்கிறது. அதில்இ 'காணாமல் போன மீனவர்கள் பற்றி அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள் என்றும் மீனவர்கள் பற்றி தகவல்கள் கிடத்தால் அவர்களை மீட்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம்...' என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே?"

"ஆமாம்இ பாதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள். அவர்களுக்காக நாங்கள் உதவுவோம். இந்த விஷயத்தில் எமது தலைமை கரிசனத்தோடும் அக்கறையோடும் இருக்கிறது. மீனவர்கள் கடத்தல் நாடகத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்ல நாங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்."

"ஒருவேளை மீனவர்களை மீட்கும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவைப்பட்டுஇ நீங்கள் தமிழக அரசோடு பேச வேண்டியிருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?"

"மீனவர்களை மீட்பதற்கும் அவர்களின் பாதுகாப்பு நிலைமைகளை உறுதிப்படுத்வதற்கும் தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உறுதுணயாக இருப்போம். சிங்கள கடற்படையாலோ கூலிப்படையாலோ நிகழ்த்தப்பட்ட இந்தச் செயலை முடிவுக்குக் கொண்டு வந்துஇ தமிழக மீனவர்கள் சிறுபாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இது தொடர்பாக எத்தனைமுறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்ப்பளித்து விடக்கூடாது."

"அண்டை நாட்டுப் பிரச்சினைதான் என்றாலும் ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறீர்களா?"

"நடப்பது என்னவென்று தமிழக மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும் சூழ்நிலையில் அவர்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் பரிவும் பாசமும் எப்படிக் குறையும்? அதற்கு வாய்ப்பே இல்லை! இப்படி தமிழக மக்கள் மனங்களில் இருந்து எங்களை பிரித்தெடுக்க சிங்கள அரசு போடும் நரித் திட்டங்கள் பலிக்காது. எங்களுக்கு எதிராக இந்திய அரசையும் திருப்பிவிடும் முயற்சிகளையும் சிங்கள அரசு செய்து வருகிறது. எங்களைப் பொறுத்த வரையில் பொய்கள் வேகமாகத்தான் பரவும். ஆனால்இ இறுதியில் அதை பரப்புகிறவர்கள் மீதே அசிங்கத்தைப் பூசும். உண்மைக்கு சோதனை வந்தால்இ அதனை பொறுமையாக எதிர்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. அதைத்தான் புலிகள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்."
 
"சமீபத்தில் மூன்றாவது முறையாக நீங்கள் கொழும்பில் வான்வழித் தாக்குதல் நடத்தினீர்கள். அதில் இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் பலவும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகிறதே..."

"சமாதான காலத்தில் நாங்கள் யுத்த தர்மப்படி எவ்வித தாக்குதலிலும் ஈடுபடாமல் இருந்தபோதுஇ தொடர்ந்து தமிழ் மக்கள் மீது விமானத்தாக்குதல நடத்தியது சிங்கள விமானப்படை! பலமுறை எச்சரித்தோம்... உரியவர்களிடம் முறையிட்டோம். ஆனால்இ சிங்கள ராணுவம் வான்வழித் தாக்குதலை நிறுத்தவில்லை. அதன்பிறகுதான் புலிகள் தரப்பில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமானோம். சிங்கள ராணுவத்துகுத் தேவையான எரிபொருளைக் கொடுக்கும் கட்டுமானங்களை அழிப்பதுதான் எங்கள் விமானப்படையின் நோக்கம். வான் வழியாக நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானதுதானே தவிரஇ சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல. அப்படி இருக்கும் போதுஇ நாங்கள் நல்லுறவைப் பேண விரும்பும் இந்திய அரசுக்கு எதிராக எங்களின் விமானப்படையை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்!"

"கிட்டத்தட்ட சிங்கள அரசு-புலிகள் என இரண்டு தரப்பும் முழுமையான போரில் குதித்துவிட்ட இந்த சூழ்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கிறதா?"

"இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இன அழிப்புப் போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பல லட்சம் மக்களை அகதிகளாக்கி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறார்கள். நாங்கள் நடத்துவது எமது மக்களை காக்கும் தற்காப்புப் போர்தான். மீண்டும் ஒரு சமாதானச் சூழலைக் கொண்டு வர நார்வேஇ பிரிட்டன் போன்ற நாடுகள் முயன்று வருகின்றன. என்றாலும்இ சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பு போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்காக நார்வே மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த அமைதித் தூதுவர்கள் எம்மைச் சந்திக்க எடுத்த முயற்சிகளையும் இலங்கை அரசுதான் தடுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையெல்லாம் நடக்குமா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கும்போது எங்கள் மக்களை காக்க நாங்களும் ஆயுதப்போர் நடத்தத்தானே வேண்டும்?"
 
நன்றி: புதினம்
 

Thursday, May 03, 2007

‘தண்ணியெல்லாம் தர முடியாது என் ஒண்ணுக்க குடிடா’

'தண்ணியெல்லாம் தர முடியாது என் ஒண்ணுக்க குடிடா'
சமூக நீதியின் தலைநகரமாம் தமிழகத்தில் போலிசின் பயங்கரம்


யாழன் ஆதி
எடையாளம் கிராமத்திலிருந்து

மனித சமூகத்தின் மீது திணிக்கப்படும் வன்முறைகளில் மிகவும் மோசமானது அரச வன்முறை. நாகரீகம் முளைக்காத காலத்திலிருந்தே அது வரலாற்றின் 'வெள்ளைப் (ஆதிக்க) பக்கங்களாக'த்தான் இருக்கிறது. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை எத்தனையோ அறிவுறுத்தல்கள், ஆணைகள் வந்திருப்பினும், அரசின் கால்களாக செயல்படும் காவல் துறையின் வெறியாட்டம் கட்டுக்கடங்காத ஆழிப்பேரலைகளைப் போல உயர்ந்து, எளிய மக்களைச் சுட்டெரிக்கிறது. அப்சல் குருவின் உயிர்நிலையில் மின்சாரத்தைப் பாய்ச்சிய அதே கொடூரத்தின் இன்னொரு கைதான், எடையாளம் கிராமத்தின் ஒண்டுக்குடிசையில் வாழும் ஒரு தலித் இளைஞனின் தாகத்திற்கு 'சிறுநீரை' குடிக்க வைக்க, ஆண்குறியை வாயில் வைத்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தைக் கடந்து ஆறாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுங்கச்சாவடிக்கு முன்பு வலப்பக்கமாகத் திரும்பியவுடன் தொடங்குகிறது எடையாளம் கிராமம். உழைக்கும் மக்கள் நிறைந்த சேரிப்பகுதி. கிராமத்தின் நுழை வாயிலில், விடுதலைச் சிறுத்தைகளின் கொடி கம்பீரமாகப் பறக்கிறது. இக்கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான ஆண்கள், சென்னையிலுள்ள கோயம்பேடு காய்கறி அங்காடியில் வேலை செய்பவர்கள். எனவே, ஊருக்குள் பெண்கள்தான் இருப்பார்கள். ஆண்கள் விடுமுறைக் காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் வீடுகளுக்கு வருவார்கள். தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் வேலைபார்க்கும் ஆந்திராவைச் சேர்ந்த சில ஆண்கள், எடையாளம் சேரியிலுள்ள அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மணி என்பவரின் வீட்டில் தங்கியுள்ளனர். இவர்கள் அங்குள்ள பெண்களை சீண்டியும், தெலுங்கில் அவர்களைப் பற்றி அசிங்கமாகப் பேசியும் வந்துள்ளனர். எடையாளம் கிராம இளைஞர்கள் இத்தகையோரை எச்சரித்துள்ளனர்.

ஆனால், 3.3.2007 அன்று, மாசிமகம் திருவிழாவிற்குப் பல்வேறு ஊர்களிலிருந்து வேலைக்குச் சென்றிருந்தவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். ஆந்திராவிலிருந்து வந்திருந்து தங்கியிருப்பவர்கள், பெண்களைப் பற்றி இழிவாகத் தெலுங்கில் பேச, அதைப் புரிந்துகொண்ட இளைஞர் ஒருவர், பேசிய ஒருவரை அடித்திருக்கிறார். இதைக்கண்டு சுங்கச்சாவடியில் வேலை செய்பவர்களும் ஒன்றாய்க்கூட, கைகலப்பு நடந்திருக்கிறது. பிறகு, ஊரிலுள்ள பெரியவர்கள் பேசி, வாடகைக்குத் தங்கியிருப்பவர்களை காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பிறகு 5 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், ஒரு மாருதி காரிலும், இரு சக்கர வாகனத்திலும் வந்தவர்கள் மற்றும் சுங்கச்சாவடியில் வேலை செய்பவர்களும் ஒரு சேர வந்து எடையாளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு, சிவக்குமார், சுந்தர் ஆகியோரை ஓடஓட அடித்திருக்கின்றனர். இதைத் தன்வீட்டு திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த கோதண்டபாணி தற்செயலாகப் பார்க்க, அவருடைய தம்பி எடிசன் மற்றும் இன்னும் சில இளைஞர்கள் திரண்டு அவர்களை விரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியிலிருந்த காவல் துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

அந்தக் கிராமத்திலேயே படித்த குடும்பம் எடிசனுடையது. அவருடைய தந்தை ஓர் அரசு ஊழியர். எடிசன் துடிப்பான 26 வயது இளைஞர். ஆதிக்கத்தை தட்டிக் கேட்பவர்; காவல் துறையின் அத்துமீறல்களை எதிர்ப்பவர். அதனால் அவர் மீது மூன்று 'சிறு வழக்குகள்' (Petty case) உள்ளன. அச்சரப்பாக்கம் காவல் துறைக்கு இதனால் எடிசன் குடும்பத்தின் மீது எப்போதும் கோபம் இருந்திருக்கிறது. சிறிது காலத்திற்கு முன்பு நடந்த ஒரு சண்டையில் எடிசனின் தாய் மற்றும் கல்லூரியில் படிக்கும் அவருடைய தங்கை இருவரையும் பொய் வழக்குப் போட்டு, 15 நாள் சிறையில் வைத்திருக்கின்றனர். இதனால் அவருடைய தந்தை அப்போது அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக இருந்த சொக்கையன் மீது வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. எடிசன் சமூக அக்கறையுடன் அப்பகுதியில் பணியாற்றியுள்ளார் என்பதை, அப்பகுதி இளைஞர்கள் கூறுவதிலிருந்து நம்மால் உணர முடிந்தது. அச்சரப்பாக்கம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டரணி அமைப்பாளராக உள்ள எடிசனுக்கு, அப்பகுதியிலுள்ள அனைத்துச் சேரிப்பகுதிகளும் அத்துப்படி.

அனந்தமங்கலம் என்னும் ஊரில் வசிக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் அப்பகுதியின் 'நாட்டாமை' மாதிரி நடந்து கொள்வார். அவர் வந்தால்தான் கோயில்களில் பூசையே நடக்கும். இதை எல்லாம் எடிசன் எதிர்த்திருக்கிறார்.
அவரை அடிக்க இதுதான் சந்தர்ப்பம் என்று திட்டம் தீட்டி எடையாளம் கிராமத்திற்கு வந்திருக்கிறது, அச்சரப்பாக்கம் காவல்படை. 'மாருதி'யில் வந்தவர்களை அடித்துத் துரத்தியதற்காக, எடிசன் உள்ளிட்ட கிராம இளைஞர்களின் மீது வழக்குப் போட்டிருப்பதாகக் கூறி, எடிசனைத் தேடி அவர் வீட்டிற்கு மறுநாள் காலை வந்து எடிசனின் அண்ணன் கோதண்டபாணியிடம் விசாரித்திருக்கிறது காவல் துறை. இதை அறிந்த எடிசன் ஓடியிருக்கிறார். எடையாளம் கிராமத்திலிருக்கும் கடைத் தெருவில் உள்ள கழிப்பறையில் சென்று மறைய, காவல் துறையினர் அவரைப் பிடித்து அங்கேயே அவரின் உடைகளைக் கிழித்து முழு நிர்வாணமாக்கி தெருவில் இழுத்து வந்திருக்கின்றனர்.

கோபம், அவமானம், உக்கிரம் எல்லாம் சேர்ந்து எடிசன் வெறியுடன் கத்தி இருக்கிறார். அந்தக் கத்தலில் அதிர்ந்துபோன காவல் துறை, கிழிக்கப்பட்டு சுக்குநூறான லுங்கியை அவர் இடுப்பில் சுற்றி, ஊர் முழுக்க ஊர்வலமாய் அழைத்து வந்திருக்கிறது. வீரத்துடன் இதை எதிர்கொண்டார் எடிசன். அவருடைய அண்ணன் கோதண்டன் 'ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்க, வழக்கே இல்லாத அவரையும் காவல் துறை அடித்து, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், எடிசனையும் கோதண்டபாணியையும் ஒரே அறையில் வைத்து அடித்துத் துவைத்திருக்கின்றனர். இரண்டு மணிநேரம் அவர்கள் இருவரையும் நிர்வாணமாக நிற்க வைத்து அடித்திருக்கிறார்கள். எடிசனின் இரு கைகளிலும் கடப்பாறையைக் கட்டி வைத்துவிட்டு, எதிரிலுள்ள விறகு மண்டியில் விறகுக் கட்டைகளை வாங்கி வந்து கொடூரமான முறையில் தாக்கி இருக்கின்றனர் - செல்வராஜ் மற்றும் சண்முகம் என்ற காவல் மிருகங்கள். உதவி ஆய்வாளராக உள்ள சுதந்திர ராஜனின் மேற்பார்வையில்தான் இவ்வளவும் நடந்திருக்கிறது.

எடிசனை பலமாக அடிக்கவே மயங்கும் தருவாயில், தாகத்திற்கு தண்ணீர் கேட்டிருக்கிறார். 'ஏன் இப்படி அடிக்கிறீங்க?' என்று கேட்ட தண்டபாணியை, இரண்டு பேரும் பூட்ஸ் கால்களால் நெஞ்சின் மீது உதைத்திருக்கின்றனர். 'தண்ணி தண்ணி' என்று அரற்றிய எடிசனுக்கு தலை தொங்கியிருக்கிறது. தன் பேண்ட்டின் ஜிப்பைக் கழற்றி எடிசனின் அருகில் வந்து தொங்கியிருக்கிற அவருடைய தலையை கையால் நிமிர்த்தி தண்ணியெல்லாந் தர முடியாது, என் ஒண்ணுக்க குடிடா' என்று தன் பிறப்புறுப்பை எடிசனின் வாயில் திணித்திருக்கிறார் காவலர் செல்வராஜ்.

இந்தக் கொடுமையை நேரில் பார்த்த அவருடைய அண்ணன் இதைச் சொல்லும்போது, அந்தக் குடும்பமே கதறியழுதது நெஞ்சில் தீயை வைத்துச் சுட்டதைப் போல் இன்னும் வலிக்கிறது. இப்படி கடுமையாகத் தாக்கப்பட்ட எடிசனும் கோதண்டபாணியும் மறுநாள் மதுராந்தகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட, நீதிபதியிடம் தன் காயங்களையும் தனக்கு நேர்ந்த அவமானங்களையும் சொல்லியிருக்கிறார் எடிசன். நீதிபதி அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியும், காவல் துறை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வெளிநோயாளிப் பிரிவில் அவர்களைக் காட்டிவிட்டு, புழல் சிறையில் அடைத்துள்ளது.

பிணையில் வெளியே வந்துள்ள கோதண்டபாணியை சந்தித்துப் பேசினோம். "கைது செய்யப்பட்ட அன்றிரவே, இவனுங்கள சும்மா உடக்கூடாது என்கவுண்டரில் போட்டுத் தள்ளனும்' என்று போலிஸ் மிரட்டியிருக்கிறது. எடிசனைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடைபெற்றது என்கிறார் அவர். இந்த சம்பவம் நடைபெற்று, எடிசனும், கோதண்டனும் கைது செய்யப்பட்ட உடனே, எடிசனின் தாய் நாகம்மா, வெளியிலிருந்து தாக்கியவர்கள் மீது ஒரு புகாரை அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால், அப்புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, எடிசன் மீது 307 போன்ற பிரிவுகளில் வழக்குத் தொடுத்துள்ளனர். எடிசனால் தாக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிற யாரும் எந்த மருத்துவமனையிலும் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சைப் பெறவில்லை. ஆனால், எடிசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளே போட வேண்டும் என்னும் திட்டத்தில், 307 பிரிவில் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

"இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான சுதந்திரராஜன், சண்முகம் மற்றும் செல்வராஜ் ஆகியோர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு நியாயம் கிடைக்கும் வரை விடுதலைச் சிறுத்தைகள் போராடும்' என்று காஞ்சிபுர மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர் சூ.க. ஆதவன் ஆவேசத்துடன் கூறினார். காவல் துறையின் கொடூரமான வன்முறையால் ஒரு தலித் குடும்பமே அவமானப்பட்டிருக்கிறது. எடிசனுக்கு நேர்ந்திருக்கிற அவமானம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நேர்ந்துள்ள அவமானம். 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் வேண்டும்' என்று உயிரைக் கொடுத்துப் போராடுகிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காவல் துறை 'எதை'த் தருகிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் வகையில் நாம் உணர்த்த வேண்டும். தலித் தலைவர்கள் இதையும் வழக்கமான ஒரு வன்கொடுமையாகக் கருதி, தம் பேச்சுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வார்கள் என்றால், அரசியல் அதிகாரங்கள் எதற்கு?

நன்றி: தலித் முரசு, கீற்று இணையம்

குறிப்பிடத்தக்க பதிவுகள்