விடுதலைப் பொரில் தமிழ்களம்
வடக்கே
வந்தேமாதரம்
ஜெய்ஹிந்த்
இரட்டை சொற்றொடர்கள்
விடுதலை வேண்டி
உருண்டு புரண்டது
தெற்கே சிவகங்கை
சிங்கங்கள்
கர்ஜித்த கீதங்கள்
ஒருமித்த குரலாய்
பிறந்து எழுந்தது
இரட்டைக் கிளவியை
பிரித்தால் பொருள்
வராது
இலக்கண வாய்பாட்டில்..
இரட்டை சகோதரர்கள்
மருதிருவரை மறந்தால்
மறுத்தால் வீரம்
விளையாது
தமிழக வரலாற்றில்..
சிவகங்கை சீமை
இது
ஓட்டிப் பிறந்த
இரட்டை வீரர்கள்
முட்டி முளைத்த
இடம்
வேல் கம்பு
வீச்சருவாளிடம்
வெள்ளைக்கார பீரங்கி
மண்டியிட்ட மண்
ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்தாலும்
சாவு நிச்சயம்
போராட வா
என்று காற்று கிழிய
காதுகளின் ஓசை
ஒலித்த இடம்
தேச விடுதலை
துலைநிமிர
ஐநூறு தலைகள்
கயிறில் தலைகுனிந்து
தொங்கிய இடம்
வீரம் விளைந்த
நிலம்
அடிமை விலங்கு
அறுந்த இடம்
அந்நியரை விரட்ட
அணிதிரண்ட
விடுதலைப் போரின்
முதற்களம்
எங்கள் தமிழ்நிலம்
ஆம்.
முண்ணுக்காக
போராடிய அந்த
மருது சகோதரர்களின்
குரலோசை இன்று
செவிப்பறையில்
வந்து மோதுகிறது
வீரத்தால் சிந்திய
ரத்தம் இன்று
தேசத்;தின் அழுக்கை
துடைக்கிறது
தூக்குக் கயிறுக்கு
மட்டுமே
தலைகுனிந்த
மருது சகோதரர்களை
நாங்கள் தலைநிமிர்ந்து
வணங்குகிறோம்.
அவர்கள் வீரமரபு
வழியில்
நாங்கள் வாளேந்தி
செல்கிறோம்