Friday, March 30, 2007

எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: தமிழீழ விடுதலை புலிகள்

எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை:
 எமது இலக்கு சாதாரண பொதுமக்கள் அல்ல.
சிறிலங்கா இரணுவத்தின் இயங்கு தளங்களும் பேரினவாத செயற்பாட்டு மையங்களுமே
சு.ப.தமிழ்ச்செல்வன்
 

எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப.தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்:

ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்குஇ ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்இ "ஜனசக்தியிடம்" தெரிவித்தார்.

"புலிகளிடம் விமானப் படை இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்று இந்தியாவில் உள்ள சில ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இதே கவலை தங்களுக்கும் இருப்பதாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலரும் அரசியல் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்தார்கள்.

இது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பு என்ன கருதுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை 'ஜனசக்தி" தொடர்பு கொண்டது.

மின் அஞ்சல் ஊடாக சு.ப.தமிழ்ச்செல்வன்இ "ஜனசக்தி"க்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கேள்வி: விடுதலைப் புலிகள் சமீபத்தில் முதன்முறையாக விமானத்தாக்குதல் நடாத்தி இலங்கைப் படைகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் ஈழத்தமிழருக்கு ஏற்படும் சாதகஇ பாதகங்கள் என்னென்ன?

பதில்: சிறிலங்கா அரசும் சிங்களப் பேரினவாதமும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புஇ இன அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டமையால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் தீவிரமடைந்தது. இப்படிப் படிப்படியாக எமது ஆயுதப்போராட்டம் வளர்ச்சியடைந்து இன்று ஒரு நடைமுறை அரசை இயக்குகின்ற அளவுக்கு வலுப்பெற்றிருக்கின்றது. பெருமளவு நிலப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற அளவுக்கும் எமது மரபுவழிக் கட்டுமானங்களைக் கட்டியெழுப்பி எமது மக்களைப் பாதுகாப்பதற்கும்இ ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுப்பதற்கும் தக்கவாறான பாரியளவு வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.

இந்த வகையில் எமது படைக்கட்டுமானங்களினுடைய வளர்ச்சியும் அதன் தொடர்ச்சியுமே இன்று விமானப் படையின் தோற்றமாக மாறியிருக்கின்றது. எமது விமானப்படை இதுவரை பொறுமை காத்தது. இப்பொழுது சிறிலங்கா விமானப் படை எமது மண்மீது தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் அதன் மீது பதில் நடவடிக்கையொன்றை நடாத்தி அதனைச் செயலிழக்கச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. அதனால் தான் எமது விமானப்படையைப் பயன்படுத்தி இத்தாக்குதலை மேற்கொண்டிருந்தோம். எம்மைப் பொறுத்தவரையில் எமது சுதந்திரப் போராட்டத்தில் இதுவொரு மைல்கல்லாகவே இருக்குமென நான் கருதுகின்றேன். இது ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுடைய வலிமையை அதிகரித்திருக்கிறது. இது விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு உந்துசக்தியாக அமையுமென்றே எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: விமானப்படைத் தாக்குதலுக்கு இது சரியான தருணம் என நினைக்கின்றீர்களா?

பதில்: சிறிலங்கா விமானப்படையினர் அண்மைக்காலத்தில் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசி பல நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டுஇ சகித்துக்கொண்டுஇ பொறுமை காத்து இருப்பதென்பது எமது மக்களை ஒரு மிகப்பெரும் பேரழிவுக்குள் இட்டுச்செல்லும் என்றே நான் நினைக்கின்றேன். இந்நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கும் எதிர்காலத்தில் இந்த இனவாத அரசின் விமானப் படையைச் செயலிழக்கச் செய்வதற்கும் நாம் எமது அனைத்து உத்திகளையும் கையாளுவோம். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும்மென்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: புலிகளின் படையிலிருப்பில் செக் விமானங்கள்இ ஐந்து விமானங்களுக்கு மேல் அவர்களிடம் விமானங்கள் இருக்க வாய்ப்பில்லைஇ இதனை ஒரு படையென்றெல்லாம் கூறமுடியாது என்பன போன்ற இலங்கை அரசின் கருத்துக்களுக்கு தங்கள் பதில் என்ன?

பதில்: விழுந்தாலும் தங்களுடைய மீசையில் மண்படவில்லை என்ற மாதிரியாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைகின்றன. நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைகளை வெளிப்படுத்தி வருவது சிறிலங்கா அரசின் வழமையாகும். எமது தாக்குதல்களும் அவற்றின் அழிவுகளுக்குப் பின்னாலுமே அவர்கள் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்கின்ற சூழல் உருவாகும்.இதற்கான பதில்களை எமது நடவடிக்கைகள் ஊடாக வெளிப்படுத்தவே நாம் விரும்புகின்றோம்.

கேள்வி: இலங்கைப் படையினர் இந்த விமானப்படைத் தாக்குதலால் கொந்தளித்திருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் மீது இது திருப்பிவிடப்படலாம். இந்நிலையில் சாதாரண சிங்கள மக்களைக் காப்பாற்ற இந்தத் தாக்குதல் உதவுமா?

பதில்: சிங்கள விமானப்படையினர் எமது மண்ணில் பொதுமக்களினுடைய இலக்குகளைத் தாக்கி அவர்களைக் கொல்வதையே வழமையாக்கிக் கொண்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களினுடைய விமானப் படை வளர்ச்சியடைந்து அவர்களுடைய பாதுகாப்பு மையத்திற்குள்ளேயே புகுந்து வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு திரும்பி வந்திருக்கிறது.

இந்நிகழ்வு சிங்கள தேசத்தவருக்கும் இனவாதத் தலைவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றேன். எமது இலக்கு சாதாரண பொதுமக்கள் அல்ல. சிறிலங்கா இரணுவத்தின் இயங்கு தளங்களும் பேரினவாத செயற்பாட்டு மையங்களுமே எமது இலக்குகளாக இருக்கும். சாதாரண சிங்கள மக்களை நாம் எப்போதுமே இலக்கு வைக்கப்போவதில்லை. 

கேள்வி: 2005 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு வந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அப்போதே தங்களிடம் விமானத்தளம் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது அது மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது நீங்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றீர்களே?

பதில்: ஒருபோதும் நாம் எமது விமானப் படைத்தளம்இ விமானங்கள் உள்ளதென்பதை மறுக்கவில்லை. எப்பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம். 1998 ஆம் ஆண்டிலிருந்தே எமது விமானப் படையின் வளர்ச்சி ஆரம்பித்து விட்டது. இன்று ஒரு நல்ல நிலையில் அது இருக்கின்றது.

கேள்வி: தங்கள் விமானப்படையால் இந்தியப் பாதுகாப்பிற்கு ஆபத்து வரலாம். தென்னிந்தியாவிற்கு ஆபத்து வரலாம் என்றெல்லாம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இக்கருத்துக்கள் மிகவும் தவறானவை. எமது படைக் கட்டுமானங்கள் எப்பொழுதும் எமது மக்களைப் பாதுகாப்பதற்கும் எமது தாயகப் பிரதேசத்தை விடுவிப்பதற்குமாகவே கட்டியெழுப்பப்பட்டவையாகும். ஆகவே எமது மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு எதிராகவே அவை செயற்படுமேயன்றி ஒருபோதும் அவை இந்தியாவுக்கோ ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களினுடைய சுதந்திரம் என்பதும் அவர்களின் விடுதலை என்பதும் இந்திய தேசத்திற்கும் மிகுந்த நன்மையையும் நல்லுறவையுமே ஏற்படுத்தும். ஒருபோதும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எதிரான ஒரு போக்கை ஈழ விடுதலைப் போராட்டமோ தமிழீழ விடுதலைப் புலிகளோ கடைப்பிடிக்கமாட்டார்கள். தமிழர்களுடைய படைபலம் பெருகுவதையிட்டு எந்த அரசுமே கவலைகொள்ளத் தேவையில்லை. பதிலாக எமது படைபலம் பெருக்கி  அதனூடாக சுதந்திரமடைந்தால் அதுவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பூரண அமைதியைக் கொண்டுவரும் என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: அதிகாரபூர்வ போர்நிறுத்தம் என்ற நிலையில் விமானப்படைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கின்றதா? அல்லது சமரசப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு நெருக்கடி உத்தியென இதை எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: போர் நிறுத்தம் அமுலில் இருக்கின்ற போதே சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான விமானத் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்களினுடைய பெறுமதியான உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்ட போது நாம் பலமுறை இவற்றை நிறுத்தக் கோரினோம். ஆயினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை மதிக்காமல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு யுத்தத்தை தொடர்ந்து வரும் சூழலில் நாம் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கமுடியாத நிலையில் தான் இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். பேச்சுவார்த்தை என்பது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி ஆக்கிரமிப்புக்களை அகற்றி நேர்மையான வகையில் சிறிலங்கா அரசாங்கம் அணுகுகின்ற போதே சிந்திக்கக்கூடிய விடயமே தவிர இத்தகைய இராணுவ முனைப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற சூழலில் அது சாத்தியமற்றதொன்றே.

கேள்வி: தோள்மீது வைத்துப்பயன்படுத்தக்கூடிய ஏவுகணையின் மூலம் கூட இலங்கை விமானங்களை வீழ்த்தமுடியும். சாதாரண தமிழ் மக்களை அதன்மூலம் காப்பாற்றமுடியும். ஆனால் மக்களைக் காப்பாற்றும் அந்த தடுப்பு நடவடிக்கையினை விடுத்து தற்போது தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளதற்கான நோக்கம் என்ன?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விமானப் படை விளைவிக்கின்ற மனிதப் பேரவலங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அதனால் தான் அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் படைத்தளக் கோட்டைக்குள் புகுந்து விமானப் படையின் தாளத்தில் வைத்தே அவற்றை அழித்திருப்பது எதிர்காலத்தில் அங்கிருந்து தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதென்பதைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. இன்னும் பாரிய இழப்புக்களை சிங்கள தேசத்திற்கு ஏற்படுத்த முடியும் என்பதை இத்தாக்குதல்கள் உணர்த்தி நிற்கும் என்றே நான் நினைக்கின்றேன். ஏனைய எமது மக்களை பாதுகாக்கின்ற உத்திகள் தந்திரோபாயங்கள் தொடர்பாக நான் இப்பொழுது கருத்துக்கள் கூற விரும்பவில்லை. நடைமுறைக்கு வரும் போது நீங்கள் அறிவது பொருத்தமாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

கேள்வி: இலங்கையிலுள்ள ஈழத்தமிழர் வாழும் பகுதிகளின் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடிகளைக் குறைக்க செஞ்சிலுவைச் சங்கத்தின்மூலம் பொருட்கள் அனுப்ப இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விமானப்படைத் தாக்குதல் அதனைத் தடுத்து நிறுத்த வழி வகுக்காதா?

பதில்: எமது தாக்குதல்கள் என்பது சிறிலங்காப் படைகளுக்கு எதிரானதே.  எந்தவிதமான சர்வதேச சமூகத்தையோ இந்தியாவையோ உதவியமைப்புக்களையோ குறிவைப்பதாக எமது தாக்குதல்கள் இருக்கப்போவதில்லை. எமது தாக்குதல்கள் எமது மக்களை பாரிய இன அழிப்புக்கு ஆளாக்குகின்ற சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரானதாகவே அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.தமிழ் மக்களுக்கு உதவவிரும்புபவர்கள்இ மனிதாபிமான உதவிகள் செய்ய முன்வருபவர்களுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி அதற்கான வழிவகைகளை செய்யத் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி என்ற கருத்தினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டீர்கள். பின்னர் அது கைவிடப்பட்டதாகத் தெரிகின்றது. எதிர்காலத்தில் மீண்டும் இந்த அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: ஈழத்தமிழ் மக்கள் அவர்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய முழுமையான ஒரு தீர்வையே விரும்புகிறார்கள். அது எந்த வகையில் அமையவேண்டும் என்பது பற்றி தீர்வை முன்வைக்கின்ற போதுதான் எம்மால் விமர்சனங்களை கூறக்கூடியதாக இருக்கும். எங்களைப் பொறுத்தவரையில் எமது மக்கள் தங்களினுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான தீர்வை எட்டுவதற்கே எப்பொழுதும் தங்களது கோரிக்கையை முன்வைத்து வந்திருக்கிறார்கள். அந்த அபிலாசைக்கேற்ற வகையிலேயே எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே எத்தகைய தீர்வை முன்வைக்கப் போகிறார்கள் என்பதை அறியாது நான் கருத்துக்கூறுவது பொருத்தமில்லை என்றே நினைக்கிறேன்.

கேள்வி: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றார்கள். ஆனால் புலிகள் தாக்கியதாக பழியை உங்கள்மீது போடுகின்றார்கள். இத்தாக்குதலைத் தடுக்க இந்தியஇ இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபடலாம் என்ற ஒரு திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்கின்றது. அது பயனளிக்குமா?

பதில்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழ் மக்களும் எப்பொழுதும் தொப்புள்கொடி உறவுகளாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.

இவ் உறவை சீர்கெடுக்கும் நோக்கோடு சிறிலங்காப் படைகள் தாங்களே தமிழக உறவுகளை சுட்டுக்கொன்றுவிட்டு அந்தப் பழியை எம்மீது சுமத்தி ஈழத்தமிழ் மக்களுடனான தமிழக மக்களின் உறவை இல்லாமல் செய்ய முனைகிறது.

இந்தச் சதிச்செயலை தமிழக உறவுகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சிறிலங்காப் படைகளினுடைய இத்தகைய அட்டூழியங்களுக்கு இதுவரையும் ஈழத்தமிழ் மக்கள் முகங்கொடுத்துவந்தார்கள். தற்போது தமிழக மக்களை நோக்கியும் தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருக்கிறார்கள். இதனைத் தமிழகத் தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்பிரச்சார உத்தியை எவருமே நம்பப்போவதில்லை. அத்துடன் இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஒரு கூட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறிக்கொண்டு எமக்கும் இந்திய படைக்கும் இடையில் மோதல் நிலையை உருவாக்கி இந்திய அரசோடு முரண்பாட்டை உருவாக்கிவிட்டு அதனால் நன்மையடைய சிறிலங்கா அரசாங்கம் ஒரு சதியைச் செய்கின்றது.

நிச்சயமாக இந்தச் சதிக்குள் இந்திய அரசு விழுந்துவிடாதென்றே நாம் நம்புகின்றோம். தமிழ் மக்களின் நலன் கருதி தமிழகத் தலைவர்களும் தமிழக மக்களும் கூட இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

நன்றி:: புதினம், சனசக்தி நாளிதழ்
 
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

இட ஒதுக்கீடு - ஒரு பார்வை

 இட ஒதுக்கீடு - ஒரு பார்வை
க.அருணபாரதி
 
(இங்கு நான் சொல்வதெல்லாம் மானுடவியலின் கூறுகள் அன்றி பிரிவினைவாதமல்ல.. இதில் சொல்லவிருக்கும் சில உண்மைகள் சிலருக்கு வருத்தமாக இருக்கலாம்.. அதற்காக வருந்துகிறேன்.. ஆனால் சொல்லாமலிருக்க முடியாது...)
 
இடஓதுக்கீடு பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொண்ட பிறகு தான் அதை எதிர்க்கவோ ஆதரிக்கவோ வேண்டும்... அது பற்றி எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.. வாதங்கள் வரவேற்கப்படும்..
 
இடஒதுக்கீடு பிரச்சனைக்கு ஆணிவேர் சாதி. முதலில் அதை பற்றி காண்போம்..
 
சாதி வகைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.. தமிழ் சாதி முறை, ஆரிய சாதி முறை...
 
ஆரியர்கள் எனப்படும் மக்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து வந்த மக்கள் கூட்டம். அவர்கள் ஈரான், ஈராக் பகுதி வழியாக, கைபர் போலன் கனவாய் வழியில் சிந்து நதிக்கரையோரம் இருந்த திராவிட நாகரிகத்தை அழித்துவிட்டு அங்கு தனது இருப்பை பதிவு செய்தனர். அவர்கள் வெள்ளையாக இருந்த காரணத்தால்  இங்கிருந்த மக்கள் அவர்களை பெரிய கடவுளாக நினைத்து தன் அறியாமையால் வழிபட ஆரம்பித்துவிட்டனர்... பல திராவிட மன்னர்களுக்கு விருந்தாக பல ஆரிய பெண்கள் கொடுக்கப் பட்டனர்.. பெண்கள் மோகத்தில் வீழுந்த மன்னர்களை ஆட்டிப் படைக்க அவர்கள் முடீவு செய்தனர்.. அதன் வினைவாக  அரசின் முக்கிய பதவியின் ஆலோசகனாக ஒரு சோதிடர் சேர்க்கப்பட்டார்..
 
நாள்-நட்சத்திரம்-திதி-யோகம்-நேரம்  -- இந்த ஐந்தை தான் பஞ்சாங்கம் என்பர்.. இதனை பார்ப்பவன் தான் 'பார்ப்பான்' ஆனான்.. அது தான் பார்ப்பனர் பெயர் வரலாறு...
 
இப்படி அரசு சபையில் முதலில்  இடம் பெற்ற பார்ப்பனர்கள் பிறகு பல யோசனைகளை கூறி மன்னர்களிடம் ஆரிய கலாச்சாரத்தை பரப்பினர்...
 
ஒரு மன்னன் பொரில் வெற்றி பெற்றதும், அதன் நினைவாக கோயில் கட்ட வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொன்னார்கள். அதில் பார்ப்பனர்கள் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டார்கள்..
 
கோ - மன்னன், இல்- வீடு ---> கோ + இல் -- கோயில்
 
இப்படி தான் கோயில் வந்தது... பார்ப்பனர்களின் வரவிற்கு முன்னர் இருந்த கோயில்கள் அழிக்கப்பட்டன.. பார்ப்பனர்கள் தமக்கு அடையாளமாக பூணூல் அணிந்தனர்..  வேதங்கள் இயற்றினர்...அந்த வேதங்கள் கடவுள் சொன்னது என்றும் மன்னர்களுக்கும், மன்னர் தான் கடவுள் என நம்பிக் கொண்டிருந்த மக்களிடமும் பரப்பினர்... அந்த வேதங்களில் உள்ள சில பகுதிகள்...
 
அத்வைதம்-அத், சுலோகம்-சுலோ

அத் 1 சுலோ31:-பிரம்மா,உலக வளர்ச்சியின் பொருட்டுத் தன்னுடைய முகம்,தோள்,தொடை,கால் ஆகியவ்ற்றினின்றும் பிராம்மணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன் ஆகியவர்களை முறையே உண்டு பண்ணினார்.

அத்1சுலொ100:- பிராமணன் முதற் பிறவி.அத்தகதியினால் பிராம்மணன் பிரம்மாவின் படைப்புலகில் காணப்படும் அனைத்துச் செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ளத் தக்க உரிமை படைத்தவனாகிறான்.

அட்1சுலொ101:-பிராம்மணன் மற்ற மூவரிடமிருந்தும் பெறுகிற உணவு,உடை பொருள் மற்றெதுவானாலும்,அவன் தன்னுடையதைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறான்.ஏனெனில் அம்மூவரும் பிராம்மணனின் உடைமையை வைத்துத்தான் வாழ்ந்து வருபவர்களாவார்கள்.

அத்2சுலோ31:-பிராம்மணனுக்கு மங்களம்,சத்ரியனுக்கு பலம்,வைசியனுக்கு செல்வம்,சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களையே சூட்ட வேண்டும்.(அதனால்தான் சர்மன்,வர்மன்,பூபதி என்றும் தாசன்,கேசவன்,அமாவாசை பெயர்களும்).

அத்2சுலோ91:-மற்றவர்கட்கு உழைப்பதற்கென்றே சூத்திரன் படைக்கப்பட்டுள்ளான். மற்ற மூன்று வருணத்தார்க்கும் பொறாமையின்றிப் பணிவிடை செய்வதைச் சூத்திரனுக்கு முக்கிய அறமாகப் பிரம்மா ஏற்படுத்தியுள்ளார்.

அத்1சுலொ99:-பிராம்மணன் சாத்திர நூலைப் படிக்கலாம்; அவன் மற்ற வருணத்தார்க்குச் சொல்லித் தரக்கூடாது.

அத்8சுலோ270:-பிராம்மணர்களின் பெயர் கூறி இகழ்ச்சியாய்த் திட்டுகிற சூத்திரன் வாயில் பத்தங்குல நீலமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க.

அத்8சுலோ279:-பிராம்மணனைச் சூத்திரன் கையாலேனும் கருவியாலேனும் தாக்கினால் எந்தெந்த இடத்தில் அடித்தானோ அடித்தவனின் அந்தந்த உறுப்பை அறுத்திடுக.

அத்9சுலோ265:-பிராம்மணன் மீது காறியுமிழ்பவனின் உதடுகளை அறுத்திடுக; மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு; மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்துவிடு.

அத்8சுலோ380:-பிராம்மணன் எப்பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல்,காயமின்றி,அவன் பொறுளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டியது.

அத்8சுலோ381:-பிரம்மஹத்தியை விட(பார்ப்பானைக் கொல்வது)அதிகமான பாவம் உலகத்திற் கிடையாது.ஆதலால் பிராமம்மணனைக் கொல்ல வேண்டும் என்று அரசன் மனத்தினாலும் நினைக்கக் கூடாது.ஆனால் சூத்திரன் நிலை என்ன?

அத்9 சுலோ248:-பிராம்மணனுடைய பொருளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துத் துன்புறுத்துகின்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக.

இதெல்லாம் கதைகள் என்று பல மன்னர்களும் மடையர்களும் சொல்வார்கள். அதனால் தான் சோழ மன்னர்கள் பல மங்கலங்கள்(நல்ல நஞ்சை நில கிராமங்கள்). சதுர்வேதி மங்கலங்கள்,பார்ப்பனர்களுக்காகவே கல்வி மானியங்கள் நன்கொடை செய்தனர்.

இதெல்லாம் வெறும் பேச்சு என்று சொல்லும் வீணர்களுக்காகத்தான் வடமொழி அறிந்த சுந்தரனார் சொன்னார்"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவர நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி".

பாரதியார் சொல்கிறார்,"சூத்திரனுக்கொரு நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,சாத்திரம் சொல்லிடு மாயின்அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்".

இது இன்று இல்லை என்று சொல்லும் அறிவுக் கொளுந்துகளே, உங்களுக்காகவேத்தான் உச்ச நீதி மன்றம் காஞ்சி சுப்பிரமணிக்குத் தனிநீதித் தர அனைத்து விதத்திலும் கடுமையாக உழைக்கிறது.

பெண்ணடிமை பற்றி நீங்களே படியுங்கள். பார்ப்பனர்களின் ஏமாற்றிற்கும் சில தமிழர்கள் என்ற படித்தாகச் சொல்லிக் கொள்ளும் அறிவில்லா ஜீவிகளுக்கும் சேர்ந்துதான் மனுநீதியை பாபா சாகேப் அம்பேத்கர் கொளுத்தினார். திருவள்ளுவர் முதல் பெரியார் வரை திட்டித் தீர்த்தார்கள். ஆம் இன்று நீங்கள் பொட்டுக் கட்டி வாழ நினைத்தாலும் உங்களுக்கும், உங்கள் பெண்களுக்கும் சேர்த்துத்தான் பெண்ணுரிமைக்காகப் போராடிப் "பெரியாரா"க்கப் பட்டார். மூடி மறைக்காதீர்கள். உடைகளை மாற்றியதைப் போல் உள்ளங்களை மாற்றிக் கொண்டு மனிதர்களாகுங்கள். உங்களை வரவேற்போம்,மனிதர்களாக.

வேதா விற்பன்னர்கள் நிறைய பேசுகிறார்களே, இந்த சுலோகம் பற்றிச் சொல்வார்களா?

ரிக்வேதம் பிரிவு62 சுலோகம்10:-

தேவாதீனம் ஜகத்சர்வம்
மந்த்ராதீனம் துதேவதா
தன்மந்தரம் பிராமணாதீனம்
பிராமணா மம் தேவதா.

இதன் பொருள்:-

உலகம் கடவுளுக்குக் கட்டுப் பட்டது
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை
எனவே பிராமணர்களே நமது கடவுள்!
 
நன்றி : விடாது கருப்பு

 
மனுஸ்மிருதி - சாதி என்ற வார்த்தை இந்த சமுதாயத்தில் வந்ததற்கு இந்நூால் தான் காரணம்... இதில் தான் கடவுள் சாதியை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது....
 
பார்ப்பனர்கள் தாம் தெய்வப் பிறவிகள் என்றும் மற்றவர்கள் தேவர்களின் அடியவர்களின் என்றும் அவர்கள் தான் முதன் முதலில் சாதியைக் குறிப்பிட்டு முதல் பிரிவினையை வழி வகுத்தனர்...
 
சூத்திரர்கள் எனப்பட்ட ஒரு பிரிவினரை கற்பித்து அவர்கள் கோயிலுக்குள் வர தடைபோட்டனர்... அதற்காக அவர்கள் வெளியிலிருந்து கடவுனை தரிசிப்பதற்காக ராஜகோபுரம் ஏற்படுத்தப்பட்டது...
 
சூத்திரர்கள் தவறு செய்தால் பெருங் குற்றம்.. அதே தவறை பார்ப்பனர்கள் செய்தால் அது குற்றமாகாது என்றும் அந்நூல் கூறியது..
 
சூத்திரர்கள் கல்வி கற்றக தடை செய்யபட்டனர். வேதம் கற்க தடைசெய்யப்பட்டனர். அவர்களது வீட்டு மனைவிமார்கள் மட்டும் கொயிலுக்கு சென்று அங்கிருக்கும் அர்ச்சக பார்ப்பனருக்கு உடற்சேவை செய்து பாவத்தை தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்...
 
மலத்தை தொட்டவன் அதை தொட்டதற்கு வருத்தப்பட்டு குளிப்பதில்லை.. ஆனால் ஒரு சூத்திரனை தெரியாமல் தொட்டு விட்டால் கூட அது மாபெரும் குற்றம், தீட்டு என்று கற்ப்பிக்கப்பட்டு அவர்கள் குளி்த்து விட்டு தான் வீட்டிற்குள் நுழைவர்...
 
இப்படியெல்லாம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் 2000 வருடஙகளாக அடிமைப்பட்டிருந்தது.. அதனை தட்டிக் கேட்டவர்கள் தெய்வக் குற்றம் என்று தண்டிக்கப்படடனர்..
சிலர் தான் அதைத் தட்டிக் கேட்டு நிலைத்து நின்றனர்.. அவர்களுள் குறி்ப்பிடப்பட்டவர்கள்... அயோத்தி தாசப் பண்டிதர், பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள்....
 
இது தான் ஆரிய சாதிகளின் வரலாறு...
 
தமிழ்ச் சாதி முறையை பார்ப்போம்..
 
தமிழ்ச் சாதி முறை என்பது தொழில் வகையால் பிரிக்கப்பட்டது. இதில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அனைவரும் சமம் என்று அவரவர்கள் தம் தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டதே ஒழிய பிரிப்பின்படி பிரிக்கப்படவில்லை..... தீட்டு என்று யாரும் விலக்கி வைக்கப்பட வில்லை.. அனைவரும் சம அளவில் பாவிக்கப்பட்டனர்...
 
இந்த ஆரியசாதி மரபு, நமது தமிழ்ச் சாதி மரபில் புகுந்ததால் ஏற்பட்ட கோளாறுகளே இன்றுள்ள சாதி வேற்றுமையுள்ள சமூகத்தின் அடித்தளம்...
 
மக்கள் கடவுளை ஏற்றனர்.. அதன் பிறகு கடவுளுக்காக மதத்தை ஏற்றனர். மதத்திற்காக சாதியை ஏற்றனர்.. அதனால் தான் கடவுள் நம்பிக்கை தான் சாதி வேற்றுமையின் அடி நாதம் என அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் பெரியார்... ஆனால் அவர் சாதி எதிர்ப்பாளர் என்று சொல்லப்படாமல், நாத்திகர், கடவுள் மறுப்பாளர் என்று கூறப்படுவது தான் சாதி வெறியர்களின் வெற்றி......
 
2000 வருடங்களாக சாதியின் பெயரால் தாழ்த்தி வைக்கப்பட்ட சமூகம்,
2000 வருடங்களாக கல்வி மறுக்கப்பட்ட சமூகம்,
2000 வருடங்களாக சமஉரிமையற்றவர்கள் என கூறப்பட்ட சமூகம்,
2000 வருடங்களாக அடித்தட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்த சமூகம்,
2000 வருடங்களாக கோயிலுக்கு செல்லக் கூட அனுமதி மறுக்கப்ப்ட்ட அந்த சமூகத்தை எப்படி முன்னேற்றுவது ????????????
 
சாதி முறை இன்று இல்லை என்று நினைப்பவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கயலார்லாஞ்சியில் நடந்த கொடுமையை நினைவு கொள்ளவும்...
 
சாதி முறையால் தாழ்த்தி வைக்கப்பட்ட சமூகத்திற்கு, 2000 வருடங்கள் அவர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததந்கு நிவாரணமாக எதை கொடுப்பது ???????
 
அது தான் இடஒதுக்கீடு..........
 
ஒருவன் அடிபட்டுவிட்டான் எனில் அவன் மருத்துவனிடம் அடிபட்ட இடத்தை காட்ட வேண்டும்.. பிறகு அவர் மரந்து போடுவார்...
 
இதே போல தான் அவர்கள் அடிபட்டது சாதியால், அதனால் தான் சாதியைக் காட்டி(Community Certificate) அதற்கு மருந்து(இட ஒதுக்கீடு) மூலம் நிவாரணம் பெறுகின்றனர்...
 
நாம் அனைவரும் சமம் என்று இன்று சொல்பவர்கள் நம்முடைய மூதாதையர் தவற்றுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் ????
 
2000 வருடங்களாக கல்வி மறுக்கப்ட்ட சமூகத்திலிருந்து தற்பொழுது தான் 200 வருடங்களாக பள்ளியை எட்டிப் பார்க்கும் சமூகத்தை சேர்ந்தவனும்,
2000 வருடங்களாக பிறரை அடிமை படுத்தி சகல செளகர்யத்துடன் அரச பதவிகளிலும் வீற்றிருக்கும் தாய், தந்தை, வீட்டில் இன்டர்நெட், கோச்சிங் சென்டர், தாயும் தந்தையும் பாடமெடுக்கக் கூடிய வசதி பெற்ற மேல் தட்டு வர்க்க மாணவனும் ஒன்றா ????????????????
 
இந்த இடஒதுக்கிட்டை அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக பயன்படுத்தவே சாதி இன்றும் இருப்பதாக உணர்வுகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது........
 
'இடஒதுக்கீடால் தகுதி திறமை இல்லாமல் போய்விடும்'
இது வரை இதற்கு எவருமே ஆதாரம் காட்டியதில்லை.. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பல வருடங்களுக்கு இருப்பதால் இங்கு தகுதியும் திறமையும் குறைந்து போய் விட்டதாக எவரேனும் கூறமுடியுமா ???
 
ஆசியாவிலேயே முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பலதரப்பட்ட மருத்துவ அதிசயங்களை சென்னையில் தான் நிகழ்த்தியிருக்கிறார்கள்... ஏன் வடநாட்டிலிருப்பவர்கள் சென்னைக்கு படையெடுக்கிறார்கள் ? இங்கு தான் தகுதி திறமை குறைந்திருக்குமே என்றிருக்க முடீயுமா ????
 
இந்தியாவில் எங்குமே இல்லாத வனையில் தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கிறது.. இது தான் வடநாட்டு பார்ப்பன இந்து 'இந்தி'ய தேசியவாதிகளின் கண்ணுக்கு உருத்தலாக இருந்துவருகிறது.. அதனை தகர்க்கவே இந்த உச்சநீதிமன்றத்தீர்ப்பு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது....
 
மேலும் இது குறித்த செய்திகள் ::
 
மனித உரிமை ஆர்வலரும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளருமான புதுச்சேரி சுகுமாரனின் இடஒதுக்கீடு தொடர்பான முந்தைய கட்டுரை
 
உலகநாடுகளில் இட ஒதுக்கீடு (விக்கிப்பீடியாவிலிருந்து...)

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : இங்கு 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிப் பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம்.

தென்னாப்பிரிக்க குடியரசில் 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை ஆப்பிரிக்கானர் இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

இந்தியா: இந்தியாவில் மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல சாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது.

மலேசியாவில் : இங்கே பெரும்பான்மையினரான மலாய இனத்தினர், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிருத்த கடந்த 50 ஆண்டுகளாக ' பூமிபுத்திரர்' கொள்கையின் படி தங்களுக்கு பரவலாக இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.

இலங்கை: மொழி, மாவட்ட, இன வாரியாக இட ஒதுக்கீடு உண்டு.

பாஸ்னியா: பெண்களுக்கு போலீஸ் இலகாவில் 29% ஒதுக்கீடு.

பிரேசில்: சில பல்கலைகழகங்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கும், பழங்குடிகளுக்கும்

 


-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

புது தில்லி, மார்ச் 30: மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.), இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்.) போன்ற உயர் கல்விக் கூடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இடங்களை ஒதுக்குவது என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதே சமயம் இதர வகுப்பினரின் வாய்ப்புகள் குறையக்கூடாது என்பதற்காக, மொத்த இடங்களை அதிகப்படுத்திவிட்டு இந்த ஒதுக்கீட்டை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

ஆனால் முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் இந்த சட்டத்தை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக அவை பல வாதங்களை எடுத்துவைத்தன. 1931-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, அந்த அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சலுகை அளவு நிர்ணயிக்கப்பட்டது என்பது அதில் முக்கியமானது. அடுத்ததாக, பின்தங்கிய நிலைமை என்பதற்கு உரிய சட்டபூர்வமான விளக்கத்தைத் தருமாறும் எதிர் தரப்பு கோரியிருந்தது.

75 ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உள்ள அம்சங்களே அரசின் புதிய கொள்கை முடிவுக்கு ஆதார அடிப்படையாக இருந்துவிட முடியாது என்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ். பான்டா அடங்கிய "பெஞ்ச்' கருத்து தெரிவித்தது.

பின் தங்கிய நிலையில் உள்ளவர்களை முன்னேற்ற சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை அரசுக்கு இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகள், தேவையில்லாமல் சிலரை பாதித்துவிடக்கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு இப்போது அமலில் உள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரலாம் என்று நீதிபதிகள் அனுமதித்தனர்.

இப்போதுள்ள மக்கள் தொகையில் முற்பட்டவர்கள் எத்தனை பேர், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் எத்தனை பேர் என்று சரியான கணக்கெடுப்பு இன்றி, இட ஒதுக்கீட்டு அளவை எப்படி நிர்ணயிக்க முடியும் என்று நீதிபதிகள் கேட்டனர்.

மத்திய அரசு பதில்: இந்த இட ஒதுக்கீட்டால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 27% இடங்களை ஒதுக்குவதால், இப்போதுள்ள இடங்களை அதற்குப் பொருத்தமாக அதிகரித்த பிறகே அமல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு நேர அவசியமே இல்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

 
இத்தீர்ப்பு சமூக நீதி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எழை மாணவர்கள் மற்றும் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தையை கேள்விக்குறியாக்கியுள்ள இத்தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் பந்த் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வந்துள்ளன. பா.மக. டில்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தித் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறது...
--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

சிங்கள வெறியர்களின் இனவெறியாட்டம்

சிங்கள வெறிநாய்களின் இனவெறியாட்டம்::
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி


 

Tamilwin.com சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

மீன்பிடித் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதி சிறிலங்கா கடல் எல்லைக்கு உட்பட்டது என்றும், இருப்பினும் எச்சரிக்கை வழங்காது துப்பாக்கிச் சூட்டினை சிறிலங்காப் படையினர் நடத்தியது தவறு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கன்னியாகுமரிப் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சிங்கள கடற்படையினலின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மீனவரை காப்பாற்றத் தவறிய இந்திய கப்பற்படைக்கும், டில்லி ஏகாதிபத்தியத்திறகும் எமது கடுமையான கண்டனங்கள்...


--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Thursday, March 29, 2007

இலங்கை மீது படையெடுங்கள் - தமிழக மீனவர்கள


The image
-
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, March 27, 2007

டில்லியின் தமிழர் விரோத போக்கு

டில்லியின் தமிழர் விரோத போக்கு
10-மார்ச்-2005 :: சிங்களப் படையினருக்கு இந்தியா பயிற்சி
http://www.lankanewspapers.com/news/2005/3/1019.html

4-சூன்-2005 :: இலங்கைக்கு உதவ இந்தியா முடிவு
4- சூன்-2005 :: மாதம் வைகோ அவர்கள் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கக் கூடாதென பிரதமருக்கு கடிதம் எழுதியதை கீழே காண்க...

http://www.hindu.com/2005/06/12/stories/2005061204681000.htm

28-டிசம்பர்-2005 ::வேண்டுகோளை புறக்கணித்து விட்டு டிசம்பர் மாதம் ரேடார் வழங்கிய இந்திய அரசின் தமிழர் விரோத போக்கு .......
http://www.hindu.com/2005/12/28/stories/2005122804511300.htm


30-டிசம்பர்-2005 ::இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து மத்திய அரசின் அங்கம் வகிக்கும் தலைவர்கள் முறையீடல் .......
http://www.hindu.com/2005/12/30/stories/2005123019881700.htm

இந்த முறையீடலுக்கு பின்னாவது இந்தியா உதவுவதை நிறுத்தியதா ???

12-அக்டோபர்-2006 :: இலங்கைக்கு இந்தியா ஆயுதம் அளிக்கும்:: இந்திய கப்பற்படைத் தலைவர் ஒப்புதல்
http://www.weerawila.com/Security/183.html

நவம்பர் 2006 :: சிங்களர்க்கு இந்தியா அளித்த பயிற்சியை
படத்துடன் வெளியிட்ட சண்டே டைம்ஸ்..
http://lakdiva.org/suntimes/050724/columns/sitrep.html

26 பிப்ரவரி 2007:: இந்தியா மற்றுமொரு போர்க்கப்பல் வழங்குவது குறித்த செய்தி http://www.sibernews.com/news/sri-lanka/-200702267549/


வைகோவும், ராமதாசும், 12 அமைச்சர்களுடன் திமுகவும் மத்திய கூட்டணியில் (டில்லியில் தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனராம்) அங்கம் விகிக்கும் போது தான் இது நடைபெற்றது என்பது சம்பவங்களின் திகதிகளை பார்த்தே முடிவு செய்து கொள்லாம்..

என்ன தான் சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும் இந்த விடயத்தில் சில அரசியல்வாதிகளின் நிலை சரி தான்.. ஆனால் இந்திய அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்கள் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல.. ஒரு தமிழனே குடியரசுத் தலைவராக இருக்கும் காலத்திலே இப்படி ஒரு நிலை.. மற்ற நேரங்களில் எப்படியோ...?!

குஜராத் மீனவர்களுக்காக பாகிஸ்தானிடம் பேச்சு நடத்துகிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்...
http://timesofindia.indiatimes.com/articleshow/1112575.cms

தமிழக மீனவர் படுகொலையைக் கண்டித்து வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன செய்தார் ??? அதை ஏன் ராணுவத் துறை அமைச்சர் அந்தோணி கவனித்தார் ??? இது குறித்து ''தமிழ் நான் கேள்வி எழுப்பவில்லை டைம்ஸ் ஆப் இந்தியா கேள்வி எழுப்பியிருக்கிறது... பார்க்க.. http://timesofindia.indiatimes.com/No_concerns_when_the_fishermen_from_Tamil_Nadu_died/articleshow/1811862.cms

இப்படி பல விடயங்களில் தமிழர் விரோத போக்கை மத்திய அரசு ஏன் எடுக்க வேண்டும் ???? தமிழர்கள் அப்படி என்ன தவறு செய்து விட்டனர் ???

அதனால் தான் இந்தியாவும் இலங்கையும் மறைமுக கூட்டு வைத்து தமிழர்களை அழிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன என்று நாங்கள் கூறிவருகிறோம்... வழக்கம் போல நாங்கள் '''பிரிவினைவாதி-தேசத்துரோகி'' பட்டத்தையே சுமக்க வேண்டியிருக்கிறது.....

-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Monday, March 26, 2007

அகதிகள் நகராகும் மட்டுநகர்!

அகதிகள் நகராகும் மட்டு நகர்!
* அகதிகளாக ஒன்றரை இலட்சம் பேர் 88 தற்காலிக முகாம்களில் தஞ்சம்

மக்களை காப்பாற்றுவதற்கான போர் என்று உலக நாடுகளுக்கு கங்கணம் கட்டிக் கொண்டு வடக்கு-கிழக்கு தமிழர் குடியிருப்புகளில் எறிகணை மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களை நடாத்தி தமிழ் மக்களையும், தமிழ் மக்களது பொருளாதாரத்தையும் அழித்து நாடகம் நடாத்துவதையே பேரினவாத அரசாங்கம் காலம் காலமாக மேற்கொண்டு வருகிறது.

இதில் ஒரு கட்டமே மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இப்போது நடைபெறும் நிகழ்வுகள். படுவான்கரைப் பகுதியில் இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் புலிகளை இலக்கு வைத்து என வெளிப்படையாகக் கூறினாலும் மறைமுகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் கல்வியையும் இலக்கு வைத்துத்தான் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

அரசு மேற்கொண்டு வரும் தாக்குதல்களினால் ஒரு சில தினங்களில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உடுத்த உடைகளுடன் வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சமடைந்தனர்.

இந்த மக்கள் வாழைச்சேனை முதல் மட்டக்களப்பு கல்லாறுவரை 88 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்காலிக கூடாரங்களிலும் திறந்த பாடசாலைக்கட்டடங்களிலும்,மர நிழல்களிலும், உறவினர் வீடுகளிலும் சொல்லொணாத் துன்பத்தின் மத்தியில் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலிலும், இரவில் கடும் பனிக்குளிரிலும் உண்பதற்கு உணவின்றி, குழப்பதற்கு நீரின்றி, கழிப்பதற்கு கழிவறை இன்றி தொற்றுநோய் பரவிவரும் நிலையில் சாப்பாடின்றி தவிக்கும் குழந்தைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் அழுது புலம்புவது பலரையும் கண்ணீர் வடிக்கச் செய்கின்றது.

தமிழர் கேட்டுவந்த வரமோ அகதி வாழ்க்கை தெரியாது. இந்த அகதி வாழ்க்கைக்கு எப்போது முற்றுப் புள்ளி வைக்கப்படும். ஏனைய சமூகத்தவரைப்போன்று எப்போது நிம்மதியாக வாழக்கிடைக்கும் எனும் ஏக்கத்துடன் முகாம்களில் கஷ்டப்படும் மக்கள், வேதனையுடன் புலம்புவது வேதனையை ஊட்டுகிறது.

காலம் காலமாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை நடாத்தி அகதிகளாக்கி, திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளவே முயற்சித்து வருகின்றது. அதன் தொடர்ச்சியே மகிந்த சிந்தனையிலும் எல்லைக் கிராம அபிவிருத்தி என்ற திட்டத்தின் கீழ் தமிழ் மக்களை இடம்பெயரச் செய்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்கின்றது. இதனை அண்மையில் போருக்கு எதிரான முன்னணி நடாத்திய செய்தியாளர் மகாநாட்டில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணா தெளிவுபடுத்தி குற்றம் சாட்டினார். கிழக்கில் தமிழ் மக்களை இடம்பெயரச் செய்வது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கே எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வரும் அக்டோபர் முதல் படுவான்கரைப் பகுதி குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக மோட்டார் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஜனவரி முதல் உக்கிரமடைந்தது. இதனால் நூற்றுக் கணக்கான மக்கள் காயப்பட்டும் 10 பேர் வரை இறந்தும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமாகிய நிலையிலேயே மக்கள் தங்களது உயிரை காப்பாற்ற அரசகட்டுப்பாட்டுப் பகுதியை நாடினர்.

பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வேளாண்மை அறுவடை செய்யப்படாமலும் அறுவடை செய்தது கட்டப்படாமலும் சூடு வைக்கப்பட்ட நிலையிலும் விட்டு விட்டு வெளியேறினர். ஷெல் வீழ்ந்து எரியுண்டதுடன் கால் நடைகளை அநாதரவாக விட்டு வெளியேறியதனால் ஆடு,மாடு அழிப்பதுடன் காட்டு யானைகளும் அழித்து விட்டன. பல நூற்றுக்கணக்கான ஆடுமாடுகளும் சேதமாகியுள்ளன.

கையில் உள்ள பணத்தினையும் கழுத்து , காதில் கிடந்த நகைகளையும் அடமானம் வைத்து விவசாயத்தை மேற்கொண்ட மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கதியாகியுள்ளனர். இவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகின்றது. மாவிலாறு நீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இது விடயத்தில் மௌனம் சாதிக்கும் அரசாங்கம் அனைத்தையும் இழந்து வந்த மக்களை பட்டினியில் போட்டுள்ளது.

மகிந்த சிந்தனையின் மறைமுக சிந்தனையாகத் தெற்கு அபிவிருத்தியும் வடக்கு, கிழக்கு பொருளாதார அழிப்புமாகவே செயற்படுத்தப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் எனவும் ஜனவரி, பெப்ரவரி காலப்பகுதியிலேயே அறுவடை செய்யப்படும் எனவும் சிறு போகத்துக்கான ஆயத்தங்கள் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்பதும் அரசாங்கத்துக்கு நன்கு தெரியும் இக் காலப்பகுதியில் தாக்குதல் நடத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தை பூண்டோடு அழிக்க முடியும் எனும் நோக்கிலேயே திட்டமிட்டு அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலினால் விவசாயிகள் தங்களது வேளாண்மையினை அறுவடை செய்ய முடியாது உள்ளது எனவும் அதனை அறுவடை செய்ய சிறிது காலம் தாக்குதலை நிறுத்துமாறும் அரச அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களினூடாகவும் நேரடியாக விவசாயிகள் குழுவும் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ சிவில் இணைப்பதிகாரி பேட்டி பெரேராவிடம் பல தடவை கேட்ட நிலையிலேயே அனைத்து மக்களும் வெளியேறும் அளவிற்கு தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இதனூடாக தெட்டத் தெளிவாக தெரிவது பொருளாதார அழிப்பு என்பதாகும். புலிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்த முடியாத நிலையில் திட்டமிட்டபடி பொருளாதார அழிப்பில் வெற்றி கண்டுள்ளது. கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 110 பாடசாலைகள் இன்று மூடப்பட்டு மாணவர்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

தற்காலிக கூடாரங்களில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கூடாரங்களில் வாழும் மக்கள் மர நிழல் தேடி ஓடுகின்றனர்.

அரசு வெளியேறும் மக்களினை குடியேற்ற எந்த திட்டத்தினையும் மேற்கொள்ளாத நிலையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடனேயே அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் செய்வதறியாமல் நிதி இன்றி கைவிரிக்கும் நிலையில் உள்ளது.

தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருவது பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில் குழந்தைகளுக்கு பால்மா இன்றியும் கர்ப்பிணித் தாய்மாருக்கு நிறை உணவின்றியும் கஷ்டப்படுகின்றனர். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் சில முகாம்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் மண்ணெண்ணெய் லாம்பையும் வழங்கியுள்ளது. கையில் எதுவும் இல்லாத மக்கள் விறகு வாங்கவோ மண்ணெண்ணெய் வாங்கவோ பணத்திற்கு எங்கு செல்வது. இதனால் இருளிலும் சமைத்து வருகின்றனர். சில முகாம்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுகின்றது. இந்த அவியாத அரிசிச் சோற்றையே குழந்தைகளுக்கும் வழங்கும் பரிதாபம் முகாம்களில் நிலவுகின்றது.

அகதிகளின் நகரமாகிவிட்ட மட்டக்களப்பு நகர் ஒரு சோமாலியாவாகவும் மாறி வருகின்றது. இன்னும் சில தினங்களிலோ, வாரங்களிலோ சோமாலியாவில் பட்டினியால் வாடி இறந்த சம்பவம் நடைபெறும் . குழந்தைகள் சோமாலியா குழந்தைகள் போல் மாறி வருகின்றனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் இது வரை கிடைக்காவிட்டால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து இருப்பார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சத்துருக் கொண்டான் முகாமில் சாப்பாடு இன்றியும் கவலையிலும் இருந்த ஒரு முதியவர் திடீரென இறந்த சம்பவமும் சில தினங்களுக்கு முன் நிகழ்ந்தது.

அனர்த்த நிவாரண அமைச்சு ஏனைய அமைச்சர்களோ வேறு சமூகத்திற்கு இவ்வாறான நிலை ஏற்பட்டு இருந்தால் அவர்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து இருக்கும். இவர்களது மனச்சாட்சி எங்கு உள்ளது. என மக்கள் வினவுகின்றனர்.

அனர்த்த நிவாரண அமைச்சு ஏனைய சமூகத்தவருக்கு மாத்திரமா நிறுவப்பட்டது எனும் கேள்வியும் எழுகிறது.

தமிழ் மக்களை அழிக்க அரசு மேற்கொண்டுள்ள திட்டத்தில் ஒன்றே பட்டினியால் கொன்றொழிப்பது. இதனை ஏன் சர்வதேச சமூகம் பாராமுகமாக உள்ளது என்பது தமிழர்களை அவர்களும் ஓரம் கட்டுவதாகவேயுள்ளது.

இன்று தாங்கள் விட்டு வந்த ஆவணங்களை எடுத்துவர மக்கள் தவிக்கின்றனர். அதிலே பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதாகவும் கூறிப் புலம்புகின்றனர். 1990 இல் அழிந்த ஆவணங்களை பெற முடியாமல் இன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மக்கள் பற்றி பேரினவாத அரசு எதுவும் செய்யப் போவதுமில்லை. அமைச்சுப் பதவிக்காக அரசுக்கு முண்டு கொடுத்து அடிவருடிகளாக இருக்கும் எம்மவர்களும் பேசப்போவதும் இல்லை .

அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று அமைச்சர்கள், இவர்கள் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்தார்களா? சிந்திப்பார்களா? இவர்களது சமூகத்தவருக்கு இவ்வாறு ஒன்று நிகழ்ந்திருந்தால் என்ன செய்து இருப்பார்கள். அனைவரும் மனிதர்கள் என்ற மனித நேயத்துடன் சிந்திக்கத் தவறுவது ஏன்?

இந்த மக்கள் விரைவில் பட்டினியால் சோமாலியாவில் இறந்தது போன்று இறக்க நேரிடும். மரணச் செலவுக்கு மணல் கொடுக்கச் செய்யாது அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை இப்போதே எடுங்கள்.

உடனடியாக இந்த மக்களுக்கு தேவைப்படுவது பால் மா, குழந்தைகளுக்கான உணவு, கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவு, மருந்துப் பொருட்கள், வயோதிபர்களுக்கான குளிருக்கான போர்வை, பட்டினியால் வாடும் மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக அனுப்பி வையுங்கள். வழங்க முன் வாருங்கள், இல்லையேல் இந்த மக்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கக் கூடியவாறு வீடுகளுக்குச் செல்ல தாக்குதலை நிறுத்துங்கள்.

பட்டினியால் தவிக்கும் போது கொழும்பில் ஆடம்பரமாக வாழும் அமைச்சர்கள் வாகரை மக்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்த நடவடிக்கை எடுப்பது ஏன்? தற்போது படுவான்கரை மக்களுக்கு உதவாத எந்தவொரு அமைச்சரும் அதிகாரிகளும் இந்த மக்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க முன்வரும் சந்தர்ப்பத்தில் பட்டினியில் இறந்து மிஞ்சி இருப்பவர்களிடம் போட்ட செருப்பு இல்லாவிட்டாலும் கையில் கிடைப்பதால் அடி வாங்கி திரும்ப வேண்டி ஏற்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இந்த மக்களுக்காக எதனையும் செய்யப்போவது இல்லை ஏனைய சமூகமாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேயத்துடன் உதவ வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது.

நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள், இந்த மக்களின் அவலத்தை தீர்க்க முன்வாருங்கள். இந்த மக்களுக்காக வீதியில் இறங்குங்கள் பட்டினியால் தவிக்கும் மக்களை காப்பாற்றுங்கள்.-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, March 20, 2007

HELP :: Only ur mouse click needed

வணக்கம் தோழர்களே....

 
தங்கள் ஒரு கிளிக் மூலம் பலருக்கு நாம் இணையதளத்திலேயே உதவ முடியும்.. இத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் அதை செய்யலாம்.
 
எப்படி இது சாத்தியம் ?
நீங்கள் சொடுக்கும் ஒவ்வொரு நாளும் அதன் பார்வையாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப விளம்பரதாரர்கள் வழங்கும் நிதியைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ முடியம். இதனை பல்வேறு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்பணியில் சத்தியம் மக்கள் சேவை மையம் தன்னை இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது.

நண்பர்களே உதவிடுங்கள்
இப்பணியில் தம்மையும் இணைத்திட விரும்பும் நண்பர்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ள சோர்ஸ் கோட்டை தங்கள் இணையதளம் மற்றும் பிளாக்கில் சமர்பித்து இத்தளத்தை பரப்பும் பணியில் ஈடுபடுங்கள்.
இது பணம் சம்பாதிக்கும் நோக்கமின்ற செயல்படும் சேவை தளமே ஆகும். இதன் மூலம் சத்தியம் மக்கள் சேவை மையம் யாதொரு நிதியும் பெறாது  என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
 
தோழமையுடன்
க.அருணபாரதி
தலைவர், சத்தியம் மக்கள் சேவை மையம்.
 
About Sathiyam..
Sathiyam Makkal Sevai Maiyam is an Youth association of Puducherry Youths started by Mr.D.Sathiyamoorthy and Mr.K.Arunabharathi in 2003. This is a registered society with reference no:596/2003. This association involves in works related to Poverty, Hunger and other problems faced by the society by young talented youths. This Page contains sites of Non Governmenatal Organizations which helps in promoting the poors of the World.

How does the website work?
When you enter the websites, you are invited to click on the 'donate' button. This is completely FREE to the user, however a simple click means that sponsors will donate some amounts of money in loan credit to those in need. Every day, by simply clicking on this button and entering the site you can make a difference for someone in need.

What happens when I click on the "Donate" button? Does the donation cost me anything?
There is absolutely no charge to you for the donation; it is fully paid for by the sponsors.
When you click on the "Donate" button, the computer adds your donation to the day's totals and shows you the banners of the companies sponsoring your donation.
 
Help needed friends
For those who really want to involve in this work can just promote this site and popularise it for increasing the counts of the below websites. You can copy and paste the following source code in your websites and blogs for this purpose.
 
This is a service oriented page and this does not involve in money transaction with Sathiyam Makkal Sevai Maiyam. The Corresponding Websites will own for this.
 
With thanks and regards,
K.ARUNABHARATHI
President, Sathiyam Makkal Sevai Maiyam
 
:: Log on to ::

-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Monday, March 19, 2007

ஈழ மக்களுக்காக உதவி

பட்டினியில் வாடும் ஈழ மக்களுக்காக உதவிய
நல்லுணர்வு கொண்ட தமிழ் நெஞ்சஞ்களுக்கு நன்றி !


             பேரன்பு கொண்ட தோழர்களுக்கு செவ்வணக்கம். ஈழ தேசத்தில் வாழும் நம்மின மக்கள் பட்டினியில் கிடப்பதை உணர்ந்து தாங்கள் அவர்களுக்காக உணவு மற்றும் மருந்து பொருட்களை சேகரிக்கமாறு சென்னையில் கூடிய தமிழீழ விடுதலை ஒருங்கிணைப்புக் குழு முடிவடுத்தது. அதன் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அது தொடர்பாக விடுத்த வேண்டுகோளை ஏற்று அப்பணியில் பல தமிழ்த் தேசிய அமைப்புகள் ஈடுபட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொருட்களை சேகரித்தனர். சத்தியம் மக்கள் சேவை மையம் தானும் அப்பணியில் ஈடுபட முடீவு செய்து பொருட்கள் திரட்டப்பட்டன.
 
பொருள் அளவு
                                           ரொக்க பணம்                  ரூ. 2750 
                                           அரிசி                                  22 கிலோ
                                           எண்ணெய்                         2½ லிட்டர்
                                           மாத்திரைகள்                    600
 
(புகைப்படத்தில்:: இடமிருந்து வலம்- நிறுவனர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சந்தோஷ், செயற்குழு உறுப்பினர் மூ.சங்கர், தலைவர் க.அருணபாரதி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், அய்யா பழ.நெடுமாறன்)

 மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் 4-03-2006 அன்று புதுச்சேரி பெரியார் திடலில் பொதுவுடைமைப் புரட்சியாளர் சிங்காரவேலர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழவின் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் நமது மன்றத்தின் நிறுவனர் தே. சத்தியமூர்த்தி, தலைவர் க.அருணபாரதி, பொருளாளர் தே.சந்தோஸ், பாலா, சங்கர், ராமு உள்ளிட்ட தோழர்கள் கையளித்தனர்.  கையளிக்கப்பட்ட பொருட்கள் விரைவில் அவை சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் மூலம் ஈழம் கொண்டு செல்லப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இப்பணியில் ஈடுபட்டோர்க்கு வாழ்த்துக்களையும், நம் தமிழ் மக்களுக்கான சேவை என்றும் தொடரவும் அன்புடன் வாழ்த்துகிறோம்..
 
நன்றி !!!. நன்றி !!!. நன்றி !!!.

தோழர் க.அருணபாரதி
தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்
 
மேலும் விபரங்களுக்கு பார்க்க: www.sathiyam.tk
 

ரயில் மறியல் செய்ய முயற்சி :: 105 மீனவர்கள்கைது

 தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும்
இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து
ரயில் மறியல் செய்ய முயற்சி :: 105

புதுச்சேரி, மார்ச் 18: தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.
அமைப்பாளர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குப்புராசு, துணைப் பொதுச் செயலாளர் கோதண்டபாணி, செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சிங்காரவேலர் சிலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை அமைப்பு செயலாளர் விசுவநாதன் துவக்கி வைத்தார்.
இவர்கள் கடலூர் சாலையில் ஏ.எப்.டி மில் அருகே பாய்மரத்துடன் கூடிய கட்டுமரத்தை ரயில் பாதையில் போட்டு மறியல் செய்தனர். மறியல் போராட்டத்தின் போது தமிழக மீனவர்களை கொலை செய்யும் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்யக்கூடாது. கச்சத்தீவை மீட்க வேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் வீராம்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் காங்கேயன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், பெரியார் திக லோகு ஐயப்பன், செந்தமிழ் இயக்கம் தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, சத்தியம் மக்கள் சேவை மையம் தலைவர் க.அருணபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் காரண மாக 10.40க்கு வர வேண்டிய ரயில் புது வைக்கு தாமதாக வந்தது. 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வணக்கம் தோழர்களே...

                          இப்போராட்டத்தில் சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக நானும் கலந்து கொண்டேன். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் அவர்களுடன் நான் சென்றிருந்தேன். இப்போராட்டத்தின் முக்கிய அதிரடி அம்சமாக மறியல் நிகழ்வின் போது போலீசார் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு ஒன்று நடந்தது. மறியல் நடக்குமிடத்திறகு வந்த ஒரு லாரியிலிருந்து கட்டுமரப்படகு ஒன்று கொண்டு வரப்பட்டு தண்டவாளத்தில் போடப்பட்டது. பிறகு பாய்மரமும் விரிக்கப்பட்டது. போலீசார் பரபரப்பாகி அதை எடுக்க முயற்சித்தும் நாங்கள் கூக்குரலிட்டு அதை தடுத்தோம். பெண்களும் ஆர்வத்துடன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Wednesday, March 14, 2007

காரல் மார்க்ஸ் நினைவு நாள்

காரல் மார்க்ஸ் நினைவு நாள்
டாலர் செல்வன்

தத்துவ மேதைகள் இதுவரை உலகை வர்ணனை தான் செய்திருக்கிறார்கள்.நாம் இனி
அந்த உலகை மாற்ற வேண்டும்"–காரல் மார்க்ஸ் "இதுவரை பூசாரிகளும்
மதத்தலைவர்களும் உங்களுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் சொர்க்கத்தை
காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான் காட்டும் வழி உங்களை பூமியிலேயே
பொன்னுலகம் அடைய வைக்கும்…..வாழ்க்கை என்பது அறிவால் நிர்ணயிக்கபடுவது
அல்ல..உங்கள் அறிவு நீங்கள் வாழும் வாழ்க்கையால் தான்
நிர்ணயிக்கப்படுகிறது" (மார்க்ஸ் 1861)

போராட்ட வரலாறு: மார்க்ஸ் (1818 - 83) 1842′ல் ரைன்லான்ட் கஜட் என்னும்
பத்திரிக்கையின் ஆசிரியராக தனது பொது வாழ்வை துவக்கினார். ஒரெ வருடத்தில்
அரசு அந்த பத்திரிக்கையை தடை செய்து அவரையும் ஆசிரியர் பதவியில் இருந்து
தூக்கியது. மார்க்ஸ் பாரிசுக்கு குடிபெயர்ந்து பிரென்சு மண்ணில் இருந்து
ப்ருஷ்ய தொழிலாளிகளுக்காக குரல் கொடுத்தார். 1845′ல் பிரென்சு அரசு அவரை
நாடு கடத்தியது. புருஸ்செல்ஸ்ல் இருந்து தனது முதல் பொருளாதார அறிக்கையயை
வெளியிட்டார். (வறுமையின் தத்துவம்).

1847′ல் கம்யுனிஸ்ட் பிரகடனம் என்னும் வரலாற்று சிறப்பு வாய்ந்த
பிரகடனத்தை என்கெல்ஸுடன் சேர்ந்து வெளியிட்டார்.உடனடியாக அவர்
பெல்ஜ்யத்திலிருந்து வெளியெற்றப்பட்டார்.பிரன்சு அரசும் அவரை ஆயுத
புரட்சியில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தி அவரை நாடு
கடததியது.அவருக்கு எந்த நாடும் இடம் தர முன்வரவில்லை. "நாடற்ற நபர்"
என்று அவர் அறிவிக்கபட்டார்.ரத்தச்சிவப்பு வண்ணத்தில் தனது
பத்திரிக்கையில் அதன் கடைசி இதழை வெளியிட்டு விட்டு குடும்பம்
குட்டியோடு(1843′ல் திருமணம் செய்து கொண்டார்) நாடோடியாக நாடு நாடாக
சுற்றினார்.எந்த நாடும் அடைக்கலம் தரவில்லை.1849′ல் பிரிட்டன் மட்டுமே
அடைகலம் தந்தது. சாகும் வரை பிரிட்டனில் வாழ்ந்தார். வறுமையிலும்,
வியாதிகளிலும் பிடிக்கபட்டார். அவரின் பல குழந்தைகள் பசியால் செததன.மனைவி
நரம்பு வ்யாதியால் பாதிக்கபட்டார்.

எங்கெல்ஸ் கஷ்டப்பட்டு செய்த பண உதவி மட்டுமே அவர் பசியை அவ்வப்போது
ஆற்ற்யது ஆனால் இந்த 35 ஆண்டுகளில் அவர் மாபெரும் எழுத்து புரட்சியை
செய்தார்.நரம்பு வியாதி வந்த போதும் பிரிட்டிஷ் மியுசியத்துக்கு சென்று
தனிஅறையில் அமர்ந்து எழுதினார். டாஸ் காபிடல் என்னும் புரட்சியாளர்களின்
வேதநூலை அவர் 1867′ல் வெளியிட்டார்.வறுமையிலும் வியாதியிலும் 1883′ல்
அவர் இறந்தார். அவரது கல்லறையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் எஙெல்ஸ்
கண்ணீர் உரை ஆற்றினார்.அனைத்து போராளிகளின் தந்தை என்று மார்க்ஸை அவர்
குறிப்பிட்டார். "போரட்ட உணர்வு மார்க்ஸின் இணைபிரிக்கமுடியாத குணம்"
என்றார் எங்கெல்ஸ். "அவர் போராட்டத்தை நேசிக்கவில்லை காதலித்தார்."
என்றார் எங்கெல்ஸ்

இருக்கும் உலகை வைத்து மார்க்ஸ் திருப்தி அடையவில்லை.ஒரு புது உலகை அவர்
அமைக்க விரும்பினார்.பெண்ணியம் முதல் போராடும் அனைத்து துறைகளுக்கும்
தலைவரும், தந்தையும் காரல் மார்க்ஸ் தான்.பின்னவீனத்துவ தத்துவ மேதைகள்
படைத்த அற்புத துறைகளுக்கு தாயாய் இருப்பது மார்க்சியமே மார்க்ஸ் தனது இள
வயதில் கெகல்( G.W.F. Hegel) என்ற தத்துவ அறிஞரின் சிஷ்யனாக
இருந்தார்.ஆனால் பின்னாளில் கேகலின் தத்துவங்களை நடைமுறைக்கு ஒத்துவராதவை
என்று கடுமையாக சாடினார்."கெகல் சொன்னது சிந்தனைக்கு மட்டுமே
விருந்து.நடைமுறைக்கு அல்ல" என்று கிண்டலும் அடித்தார் மார்க்ஸ் மதங்களை
வெறுத்ததும் இதனால் தான்.அவற்றால் எந்த நடைமுறை பயனையும் அவர் காணவில்லை.
இப்பொதைய பசிக்கு அவை எதுவும் செய்வதில்லை, அவை காட்டும் மோட்சம்
இறந்தபிறகே அடையகூடியது என்பதை உணர்ந்ததும் அவர் வருத்தம்
அடைந்தார்.ஆனால் மதங்கள் மனிதனின் தற்போதய வாழ்வை இறந்தபின் வரும்
சொர்க்கதிற்க்காக தியாகம் செய்ய சொல்வதை உணர்ந்ததும் அவர் கடும் கோபம்
அடைந்து 'மதம் மனிதனின் எதிரி' என்று சாடும் அளவுக்கு அவர் சென்றார்.

நடைமுறை வாழ்வில் பயனளிக்காத எந்த ஒரு தத்துவத்தயும் எதிர்த்தவர்
மார்க்ஸ். கெகலை அவர் சாடியதும் அதன் அடிப்படையில் தான். ஆனால் கெகலின்
அடிப்படை சித்தாந்தமான "சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுய
தேடலின் உருவாக்கம்" என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.மார்க்ஸியம் என்பதை
'அந்த சுயதேடல் இன்னும் முடிவடையவில்லை' என்ற தத்துவத்தை அடிப்படையாக
கொண்டு உருவாக்கினார். மனிதன் உருவாக்கிய சமூக அமைப்புகளை அவர்
வலியோனுக்கும் மெலியோனுக்கும் இடையே நடைபெற்ற யுத்த களமாக
பார்த்தார்.ஆண்டாண்டு காலமாக வலியோனே வெற்றி பெற்று தனக்கு சாதகமான
சமூகத்தை,அரசை,சட்டத்தை உருவாக்கினான்.நாளடைவில்
அச்சட்டம்,சமூகம்,சமுதாயம்,அரசு இவை அனைத்தும் வலியோனை மேலும் மேலும்
வலியோனாக்கியது. கானகத்தில் உருவான "வல்லவன் வாழ்வான்" என்ற விதி 19ம்
நுற்றாண்டு ஐரொப்பிய சமுகத்திலும் நிலவியதை அவர் கணடார். இந்த விதியே
இதுவரை உருவான அனைத்து சமுகங்களயும் படைத்தது என்பதையும் அவர் கண்டார்.

வலியோனுக்கும் மெலியோனுக்கும் நடைபெறும் யுத்ததை அவர் "வர்க்க போராட்டம்"
என்று வர்ணித்தார்.அவர்கள் இருவரும் ஒருங்கினைந்து வாழ முடியும் என்பதை
அவர் நம்பவில்லை. புலியும், புள்ளிமானும் எங்காவது கூடி வாழ முடியுமா?
மெலியோன் என ஒருவன் இருப்பதால் தான் வலியோன் என ஒருவன் இருக்கிறான்.
மெலியோனை சுரண்டி தான் வலியோன் வாழ முடியும். வலியோன் வாழ்வான் என்ற
விதியை மார்க்ஸ் மறுக்கவில்லை. மெலியோன் தனது விதியை போராட்டம் மூலம்
மாற்றி அமைக்க முடியும் என அவர் நம்பினார்.மெலியோன் வலியொனாவதெ அவன்
முன்னேற வழி என அவர் நினைத்தார்.

ஐரொப்பிய சமூகம் முன்னெறியது என்பதை மார்க்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை.
ரோமானியா காலத்து அடிமைகளையும் தற்போது உள்ள பஞ்சாலை தொழிளாலிகளையும்
ஒப்பிட்டு பார்த்தால் பெரிதாக எந்த வித்யாசமும் இல்லை என்று அவர்
சொன்னார்.

அனுப்பியவர்:  தியாகு seewtypie2000@gmail.com

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்
    Courtesy: தினக்குரல்

  
 

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோரின் துயர நிலை

அரச படையினரின் மிகக் கொடூரமான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணவு, இருப்பிட வசதி எதுவுமின்ரபெரும் இடர்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர்.

நடக்க முடியாத வயோதிபர்கள், நோயாளர்கள் வீதியோர மரநிழல்களில் பெரும் அவலத்துக்கு மத்தியில் அமர்ந்திருப்பதுடன் சிறு குழந்தைகள் பசியால் வாய்விட்டு அழும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

அரச நிவாரண உதவிகள் எதுவும் இதுவரை வழங்கப்படாத நிலையில் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களை பராமரிக்க முடியாத நிலையில் மாவட்ட செயலக அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஏறாவூர்பற்று, கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் பேரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கும் பணிகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் இம்மக்களின் தற்காலிக குடியமர்விற்கு எந்தவித ஏற்பாடுகளும் செய்யாத நிலையில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஒரு வாரமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுக்காத நிலை காணப்படுகின்றது. மூன்று, நான்கு குடும்பங்களை இணைத்து ஒரு கூடாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவுகளை வழங்கும் அதேவேளை, சில அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களையும் சில முகாம்களுக்கு வழங்கியுள்ளன.

பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அரசாங்கம் கைவிட்டுள்ள நிலையில் அரச அதிகாரிகளின் முயற்சியினாலேயே அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சில ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நண்பர், உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் மக்கள் தாங்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருவதை தாங்கள் தங்கியிருக்கும் கிராம சேவகர் பிரிவில் பதியச் செல்லும் போது தங்களுடைய கிராம சேவகரிடம் இருந்து கடிதம் பெற்று வரும்படி திருப்பி அனுப்பும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இடம் பெயர்ந்த தங்களது கிராம சேவகரை சந்திக்க முடியாத நிலையில் பலர் பதிவு செய்யாமலும் உள்ளனர்.

முகாம்களில் உள்ள மக்கள், சிறு குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் பெரும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

முகாங்களில் கூடாரம் கிடைக்காத மக்கள் மர நிழல்களில் சமைத்துச் சாப்பிட்டு தங்களது வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இந்த மக்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கச்சேரி ஊடாக இம் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி: தினக்குரல், March 12, 2007


Visit ::: www.marumalarchi.tk
--
Posted By மறுமலர்ச்சி-செய்தியாளர் to முக்கிய நிகழ்வுகள் at 3/13/2007 08:59:00 PM


--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்
    Courtesy: தினக்குரல்

  
 

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோரின் துயர நிலை

அரச படையினரின் மிகக் கொடூரமான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணவு, இருப்பிட வசதி எதுவுமின்ரபெரும் இடர்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர்.

நடக்க முடியாத வயோதிபர்கள், நோயாளர்கள் வீதியோர மரநிழல்களில் பெரும் அவலத்துக்கு மத்தியில் அமர்ந்திருப்பதுடன் சிறு குழந்தைகள் பசியால் வாய்விட்டு அழும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

அரச நிவாரண உதவிகள் எதுவும் இதுவரை வழங்கப்படாத நிலையில் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களை பராமரிக்க முடியாத நிலையில் மாவட்ட செயலக அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஏறாவூர்பற்று, கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் பேரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கும் பணிகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் இம்மக்களின் தற்காலிக குடியமர்விற்கு எந்தவித ஏற்பாடுகளும் செய்யாத நிலையில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஒரு வாரமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுக்காத நிலை காணப்படுகின்றது. மூன்று, நான்கு குடும்பங்களை இணைத்து ஒரு கூடாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவுகளை வழங்கும் அதேவேளை, சில அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களையும் சில முகாம்களுக்கு வழங்கியுள்ளன.

பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அரசாங்கம் கைவிட்டுள்ள நிலையில் அரச அதிகாரிகளின் முயற்சியினாலேயே அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சில ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நண்பர், உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் மக்கள் தாங்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருவதை தாங்கள் தங்கியிருக்கும் கிராம சேவகர் பிரிவில் பதியச் செல்லும் போது தங்களுடைய கிராம சேவகரிடம் இருந்து கடிதம் பெற்று வரும்படி திருப்பி அனுப்பும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இடம் பெயர்ந்த தங்களது கிராம சேவகரை சந்திக்க முடியாத நிலையில் பலர் பதிவு செய்யாமலும் உள்ளனர்.

முகாம்களில் உள்ள மக்கள், சிறு குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் பெரும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

முகாங்களில் கூடாரம் கிடைக்காத மக்கள் மர நிழல்களில் சமைத்துச் சாப்பிட்டு தங்களது வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இந்த மக்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கச்சேரி ஊடாக இம் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி: தினக்குரல், March 12, 2007

Tuesday, March 13, 2007

புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்

புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்
க. முகிலன்*


இந்தியாவின் வறுமைக்கும் நோய்களுக்கும் கல்லாமைக்கும், சமுக - பொருளியல் எற்றத்
தாழ்வுகளுக்கும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியே காரணம் என்று இந்தியத்
தேசியவாதிகள் 1947க்கும் முன் கூறி வந்தனர்.
சுதந்திர இந்தியாவில், சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேருவின் ஆட்சியில், ஒரு
சனநாயக அரசமைப்பில் அளிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் நமக்குத் தரப்படும்
என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடுத்து
ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி ''மன்னர் மானிய ஒழிப்பு'' பெரிய தனியார் வங்கிகளை
நாட்டுடைமையாக்கல்'' என்ற திட்டங்களைச் செயல்படுத்தினர். ''வறுமையே வெளியேறு''
என்று முழங்கினார். நேரு 19 ஆண்டுகளும் இந்திரா காந்தி 17 ஆண்டுகளும் முடிசூடா
மன்னர்களாக ஆட்சி செய்தனர். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம்
உண்டாகவில்லை.

நேருவின் பேரன் இராசிவ் காந்தி 1984இல் ஆட்சிப் பொறுப்பேற்றார். தன்னுடைய
அம்மாவைவிட பாட்டனை விட வேகமாகப் பேசினார். இந்தியா, அய்ரோப்பாவில் ஏற்பட்ட
தொழிற்புரட்சிக் காலத்தைத் தவறவிட்டு விட்டது. இப்போது தகவல் தொழிழ்நுட்ப
யுகம். இதை இந்தியா தவறவிடக் கூடாது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக
இருக்க வேண்டும் என்று கூறி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டினார்.
தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கின்ற புதிய பொருளாதாரக் கொள்கை
இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான வலிமையான அடித்தளம் அமைத்தவர் அவரே!

குப்பை மேட்டிலிருந்த ஒன்று கோபுரக் கலசமானதுபோல் 1991இல் இராசிவ்காந்தி
கொலையுண்டதால் நரசிம்மராவ் தலைமை அமைச்சரானார். உலக வங்கியிலும் பன்னாட்டு
நிதியத்திலும் பெரும் பதவிகள் வகித்த மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இவர்கள்
இருவரும் உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் அமெரிக்காவும் இடுகின்ற
கட்டளைகளைத் தலைமேல் ஏற்று இந்தியாவின் சந்தையை ஏகாதிபத்திய நாடுகளின்
பெருந்தொழில் வணிக நிதிக்குழுமங்களுக்கு முழுமையாகத் திறந்துவிட்டனர்.

1989 இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
அறைகூவலாகவும், உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும்
விளங்கிவந்த சோவியத் ஒன்றியம் 1990இல் வீழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
இந்தப் பின்னணியில் உலக மயத்திற்கு மாற்று இல்லை என்ற பரப்புரை வளர்முக
நாடுகளின் மக்களிடையே ஊடகங்களாலும், படித்த- பணக்கார ஆளும் வர்க்க
அறிவாளிகளாலும் செய்யப்பட்டது.

அதோபார்! மரத்தின் உச்சியில், கிளையில் தேன் கூடு இருக்கிறது; அதற்கு நேர்
கீழகாக நின்று கொள்; தேன் சொட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது
ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள். இப்பிறவியில் வருணாசிரம் உனக்கு விதித்துள்ள
கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்று இந்து ஆதிக்க வாதிகள் உழைக்கும்
கீழ்ச்சாதி மக்களுக்குச் சொன்னதையே சற்று மாற்றிச் சொல்கிறார் இன்றைய
''சனநாயக'' அரசியல்வாதிகள்.

இற்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி (2007-2012) 8 விழுக்காட்டை
எட்டிவிட்டது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டக்காலத்திற்குள் இது 10 விழுக்காடு
என்ற நிலையை எய்திவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையின்
குறியீட்டு எண் 7000 என்ற நிலையிலிருந்து 15000 என்று உயர்ந்துள்ளது. இந்தியப்
பொருளாதாரம் உறுதிப் பாடான வளர்முக நிலையில் இருப்பதன் அடையாளம் இது.
வெளிநாட்டு மூலதனம் குவிதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணிக்
கையிருப்பு தேவைக்கு மேல் உள்ளது. மொத்த விற்பனை விலை உயர்வு என்பது 5
விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அணு ஆயுத
வல்லரசாகிவிட்டது. 2020 இல் மாபெரும் வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்பன போன்ற
செய்திகள் நாள்தோறும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் ஏழை எளிய
மக்களாக இருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் கிடைத்துள்ளது என்பதே
நம் கேள்வி!

வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி

புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும்
வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புதிய வேலைவாய்ப்பை
உருவாக்கவில்லை என்பதே கண்கூடான உண்மையாக இருக்கிறது. எனவே இது வேலைவாய்ப்பு
இல்லா வளர்ச்சி (Jobless Growth) என்று கூறப்படும் குற்றச் சாட்டை
உலகமயமாக்கலின் தீவிர ஆதரவாளர்களால் கூட மறுக்க முடியவில்லை. மேலும் இது
இருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில்
கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது இலக்கத்திற்கு மேற்பட்டவர்கள் தம் வேலையை
இழந்துள்ளனர். அதிக மூலதனமும் உயர் தொழில் நுட்பமும் கொண்டதாக உற்பத்தி முறை
மாற்றப்படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பொருள்களின்
உற்பத்தி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு சேவைப்பிரிவு முதன்மை நிலையைப்
பெற்றுவிட்டது. இதனால் தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கமும் தன் செல்வாக்கை
இழந்து வருகின்றன.

மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் விழுக்காடு

1978 2000
பிரிட்டன் 39.1 25.5
அமெரிக்கா 31.1 22.9
சப்பான் 35.1 31.4
கொரியா 29.1 28.4
žனா 17.5 22.0
இந்தியா 13.0 16.0

1950-70 காலத்தில் மின்னணுவியல் தொழில்நுட்பம் முதன்மையானதாக இருந்தது.
அதன்பின், தகவல் தொழில்நுட்பமே (Information Technology-IT) உலகப்
பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் மேல்
தட்டினராக, பணம் படைத்தோராக உள்ளவர்களின் துய்ப்பிற்காக பொருள்கள் உற்பத்திச்
செய்யப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இரு சக்கர
வாகனங்கள், கார்கள், தொலைபேசி, கைபேசி கணிணி, மற்ற ஆடம்பரப்பொருள்கள் முதலானவை
உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி
செய்யப்படுகின்றன. உலகச் சந்தை முதல் நிலையில் உள்ள 200 பன்னாட்டு
நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 200இல் 83 அமெரிக்காவின் பன்னாட்டு
நிறுவனங்கள்.

முதலாளிய உற்பத்தி முறையுடன் உருவான தொழிலாளர் வர்க்கம் 1800க்குப்பின்
தொடர்ந்து கடுமையாகப்போராடிப் பெற்ற 8மணிநேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை,
வேலை நிறுத்த உரிமை, நிலையான வேலை, குறிப்பிட்ட அளவு ஊதியம், ஊதிய உயர்வு,
போனசு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, வைப்பு நிதி முதலானவை புதிய பொருளாதாரக்
கொள்கையால் பறிக்கப்படுகின்றன. சேவைப்பிரிவுகளில் சங்கம் அமைக்கும் உரிமை
மறுக்கப்படுகின்றது. அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சப்பான் பன்னாட்டு
நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்கும்
தொழிற்சாலையில் 2005 சூலை மாதம் சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்களை அரியானா
காவல்துறை கடுமையாகத் தாக்கியது. தங்கள் சங்கத்தை ஹோண்டா நிர்வாகம் அங்கீகரிக்க
வேண்டும். வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று
மட்டுமே தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். 63 தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.
400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களின் மனைவியரும் அன்னையரும்
காவல் துறையுடன் மோதிடத் துணிந்து நின்றனர். இதைப் பற்றியெல்லாம் மய்ய அரசு
வருந்தவில்லை. சப்பான் நாட்டின் மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள்
கிளர்ச்சி செய்தால் அந்நிய நாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வருவது தடைப்படுமே
என்று நாடாளுமன்றத்தில் தன் கவலையைத் தெரிவித்தது. தகவல் தொழில்
நுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று
கூறுகிறார் மேற்கு வங்க முதுலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா!

100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை
வேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன்
அனுமதியைப்பெற வேண்டும் என்று தொழிற்தகராறு சட்டத்தில் உள்ள பிரிவை (V(b))
நீக்கிவிட மத்திய அரசு முயன்று வருகிறது. 100 தொழிலாளர்கள் என்ற வரம்பை 1000
தொழிலாளர்கள் என்று உயர்த்த வேண்டும் என்று 2001-02 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு
திட்டத்தை நாடாளுமன்றத்தின் முன்வைத்து ஆற்றிய உரையின் போது அன்றைய நிதி
அமைச்சர் யசுவன் சின்கா கூறினார். இப்படிச் செய்தால் 90 விழுக்காடு
தொழிற்சாலைகள் தொழிற்தகராறுச் சட்டத்திலிருந்து விடுபட்டுவிடும். 300
தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற் சாலைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. இது 60 விழுக்காடு தொழிற்சாலைகளுக்கு விலக்கு
அளித்துவிடும். தொழிற்சங்க இயக்கம் அடியோடு முடங்கிவிட்டது. மே நாள் ஊர்வலங்கள்
கூட நடத்தப்படுவதில்லை. மக்கள் திரள் போராட்டங்களில் முன்னிலை வகித்த நாட்டின்
சனநாயகக் கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய தொழிலாளர் இயக்கம் நலிந்து
கிடக்கிறது.

மய்ய அரசும், மாநில அரசும், நீதித்துறையும் தொழிற் சங்க இயக்கங்களை
ஒடுக்குகின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது முதலமைச்சராக
இருந்த செயலலிதா ஒன்றரை இலக்கம் அரசு ஊழியர்களை ஒரே சமத்தில் பணியிலிருந்து
தூக்கி எறிந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலமைச்சரின் சனநாயக
உரிமைப் பறிப்புப் போக்கைக் கண்டிப்பதற்குப் பதிலாக வேலை நிறுத்தம் செய்த அரசு
ஊழியர்களைச் சாடியது.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் இன்று 15 வயது முதல் 59 வயதில் 40கோடி பேர்கள் உள்ளனர். இவர்கள்
உழைக்கும் வயதினர் (Work force) எனப்படுகின்றனர். 0-15 வயதில் 20 கோடிக்
குழந்தைகளும் சிறுவர்களும் உள்ளனர். இவ்விருபிரிவினரும் சேர்ந்து 60கோடி.
எனவேதான் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன்
பேசப்படுகிறது. ஆனால் தற்போது அழைக்கும் வயதினராக இருப்பவர்களுக்கு
வேலைவாய்ப்பும் மற்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளனவா?
இளைஞர் பருவத்தை நெருங்கிக் கொண்டீருப்பவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும்
உறுதி செய்யப்படவுள்ளதா?

உழைக்கும் வயதினராக உள்ள 40கோடி மக்களுள் மய்ய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை
நிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் அமைப்புசார் தொழிலாளர்களாக உள்ளவர்கள்
3கோடி பேர்கள் உள்ளனர். தனியார் துறைகளில் முறையாக மாத ஊதியம் பெறுகின்ற ஆனால்
அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருப்பவர்கள் 3கோடி. இந்த 6 கோடிப் பேர்களும்
அவர்களின் குடும்பங்களும் தரமான அடிப்படை வசதிகளைப் பெறும் நிலையில் உள்ளனர்.

சுயதொழில் செய்வோராக 20 கோடிப்பேர்களும் அன்றாடம் கூலி வேலைசெய்து பிழைப்போராக
14 கோடி மக்களும் இருக்கின்றனர். கூலி வேலை செய்வோராக இருப்பவர்களில் 95
விழுக்காட்டினர் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினரே
ஆவார். சுயதொழில் செய்வோருள் வெரும்பான்மையினர் சிறு விவசாயிகளாகவும்,
குத்தகைக்குப் பயிரிடுவோராகவும் சிறிய அளவில் தொழில்கள், வணிகம் செய்வோராகவும்
உள்ளனர். 40 கோடிப்பேர்களில், 4 கோடிப்பேர்கள் இந்திய அளவில் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வேலைக்காக 54 இலக்கம் பேர்
பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 70 இலக்கம் பேர் வேலைக்காகப் பதிவு
செய்துள்ளனர்.

வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றதும் 10ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்திற்குள் 5
கோடி வேலைகளைப் புதியதாக உருவாக்கி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையே
ஒழித்துவிடப் போவதாக அறிவித்தார். வேளாண்மை போன்ற அடிப்படைத் தொழிழ்களில்
92.6இலக்கம், தொழிற் துறைகளில் 145 இலக்கம், சேவைப்பிரிவுகளில் 252
இலக்கம்
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று விரிவானதோர் பெரிய நூலை வாஜ்பாய் அரசு
வெளியிட்டது. ஆனால் வேலையில்லாதார் எண்ணிக்கைதான் பெருகிவருகிறது.

புதியதாக உருவாகின்ற வேலைவாய்ப்பு என்பது பெரிய மூலதனத்துடன் பன்னாட்டு
நிறுவனங்களால், இந்தியப் பெருமுதலாளிகளால் தொடங்கப்படும் சேவைப்பிரிவுகளிலும்,
தானியங்கிவகைத் தொழிழ்களில் மட்டுமே உருவாகிறது. சில ஆயிரம் இடங்களுக்கான
வேலையாக மட்டும் இவை உள்ளன. செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் நோக்கியா, ஹ"ரோ
ஹோண்டா, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில நூறு கோடிகள் முதலீட்டில்
தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்படும் காட்சிகள் ஊடகங்களில்
பெரிதாகக்காட்டப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இந்தோனேசியாவின் சலீம் பெருங்குழுமம் ரூ.44,000 கோடிக்கு
முதலீடு செய்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் 30,000 பேர்களுக்கு வேலை
கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5கோடி முதலீடு செய்தால் ஒருவருக்கு
வேலை என்பது எவ்வளவு கொடிய நிலை! சலீம் குழுமம் என்ன தொழிலில் முதலீடு
செய்யப்போகிறது? தொழில்நுட்பப் பூங்கா, அறிவுப்பூங்க, (Knowledge park) பெரிய
வணிகவளாகம், உடல்நலப்பூங்கா (Health park) போன்றவைகளைத் தொடங்க மேற்கு வங்க
அரசு 5400 ஏக்கர் நிலத்தை அளிக்கிறது. இவற்றால் மேற்கு வங்கத்தில் உள்ள
வெகுமக்களுக்கு என்ன பயன்? கொல்கத்தாவில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்?
கொல்கத்தாவில் உள்ள அரசுப் பொது மருத்துவ மனையில் மருத்துவம் செய்து கொள்ளக்
கொண்டு வரப்படும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. பெரிய செய்தியாக
இது வெளிவருகிறது. சலீம் குழுமம் தொடங்கும் நட்சத்திர மருத்துவமனைகளில் ஏழை
எளிய மக்களின் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்யப்படுமா?

வேளாண்மை

அமெரிக்காவில் 1950இல் 60இலக்கம் வேளாண் பண்ணைகள் இருந்தன. இவற்றைச் சார்ந்து
25 விழுக்காடு மக்கள் இருந்தனர். இப்பண்ணைகள் தமக்குள் இணைந்து 2000இல் 20
இலக்கம் பணைகளாகி விட்டன. 2 விழுக்காடு மக்களே இவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.
அமெரிக்காவில் வேளாண்மை, வணிக வேளாண்மை (Agro-bussiness) யாகிவிட்டது. இந்திய
நாட்டிலும் வணிக வேளாண்மையை உருவாக்கிடவே பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச்
சேர்ந்து கொண்டு மாநில அரசுகள் அதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றன. பன்னாட்டு
நிறுவனங்களை கார்க்கில், கான்டினன்டல் போன்றவை வணிக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளன.
உலக தானியச் சந்தையில் 3இல் 2 பங்கு இவ்விரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்
உள்ளது. பூச்சி மருந்துச் சந்தையில் 84% பத்து பன்னாட்டு நிறுவனங்களிடம்
உள்ளது. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 2
விழுக்காடு மட்டுமே! ஆனால் சேவைப்பிரிவின் பங்கு 72%.

இதேபோல் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு பிரான்சில் 2%
செருமனியில் 1%, பிரிட்டனில் 2% இந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்வோர்
எண்ணிக்கை முறையே 6%, 3%, 3% (உலக வங்கி அறிக்கை 2000) ஆகும். ஆனால்
அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் ஓராண்டில் 360 மில்லியன் டாலர் (ரூ.
15,20,000 கோடி) வேளாண் மானியம் தரப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற
இந்நாடுகளின் வேளாண்மையின் உயர் விளைச்சல் அதிக அளவில் இடுபொருள்கள்
சார்ந்ததாகவும், முழுவரும் இயந்திரமயமானதாகவும் ஆகிவிட்டது. இடுபொருள்களான
விதை, உரங்கள், பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, இயந்திரங்கள் ஆகியவற்றைத்
தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே பெரும்பகுதி வேளாண் மானியம் போய்ச்
சேருகிறது.

இந்தியாவிலும் முதலாளிய உற்பத்தியில் தயாரிக்கப்படும் இடுபொருள்கள் சார்ந்ததாக
வேளாண்மை ஆக்கப்பட்டுவிட்டது. 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட பசுமைப்பருட்சி
மூலம் மேலைநாட்டு வேளாண்மை முறைகள் இங்கே புகுத்தப்பட்டன. இதனால் புன்செய்
வேளாண்மை žர்குலைந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்குரிய, சூழலுக்கு ஏற்ற,
விதைகள் அழிந்து விட்டன. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் நஞ்சால் நிலமும்,
நீரும் சுற்றுச் சூழலும் பாழ்பட்டுவிட்டன. இயந்திர மய வேளாண்மை வேளாண்
தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்தது. விளைச்சலில் பெரும் தேக்கம்
ஏற்பட்டுவிட்டது. 1998 முதல் 2003 காலத்தில் 1,10,000 விவசாயிகள் தற்கொலை
செய்து க�
 

Thursday, March 08, 2007

மகளிர் தின வாழ்த்துக்கள்...

மகளிர் தின வாழ்த்துக்கள்...
எல்லோர் வீட்டிலும்
இறைவனின் பிரதிநிதியாய்
அன்னை..

எல்லோர் வாழ்விலும்
உள்ளன்பின் பிரதிநிதியாய்
தோழி..

எல்லோர் வீட்டிலும்
தனக்கே பிரதிநிதியாய்
மனைவி..

'எங்கெங்கு காணினும் சக்தியாடா'
பாடிய கவிஞனின் பாட்டின்
பிரதிநிதியாய்
வளர்ந்து வரும் 'பெண்ணியம்'...

வாழ்த்துவதோடு முடியாமல்
பெண்களை வாழவைப்பது பற்றி
சிந்திப்போம்..

பெண்களை போதையாய்
காட்டும் சினமா கயவர்களை
நிந்திப்போம்..

என் வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் விடாது
பற்றி கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும்
என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்...

 
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Wednesday, March 07, 2007

காவிரித் தீர்ப்பை எதிர்த்து மனிதச்சங்கிலி

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து 05-03-2007 அன்று மாலை தியாகராய நகர் பனாகல் பூங்காவிலிருந்து, நந்தனம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், ம.செ.தெய்வநாயகம், ம.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி உரிமை மீட்புக்கான தமிழ்க் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அமைப்பு இந்நிகழ்வை நடத்தியது. தமிழ்க் கலை இலக்கிய பேரவை செயலாளர் தோழர் நெய்வேலி பாலு, ஓருங்கிணைப்பாளர் தோழர் உதயன், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ் வெளியீட்டாளர் தோழர் அ.பத்மனாபன், ஓவியர் வீரசந்தானம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி செங்குன்றம் கிளைச் செயலாளர் தோழர் பாலமுரளி, கவிஞர் கவிபாஸ்கர், கவிஞர் தாமரை, கவிஞர் சினேகன் உள்ளிட்ட தமிழ் படைப்பாளிகளும் எண்ணற்ற மாணவ மாணவியரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

06-03-2007 அன்று டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில ஏட்டில் வெளிவந்த புகைப்படம்Monday, March 05, 2007

ஈழத்தமிழர்களுக்கு நிதி வழங்கல்

வணக்கம் தோழர்களே...

பொதுவுடைமை புரட்சியாளர் மா.சிங்காரவேலர் பிறந்த நாளை முன்னிட்டு
04-03-2007, ஞாயிறு அன்று புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக ரூ.2750
நிதியையும் உணவுப் பொட்களையும்
பட்டினியில் வாடும் ஈழ மக்களுக்காக
திரு.பழ.நெடுமாறன் அய்யாவிடம் கையளிக்கபட்டது.

நிகழ்ச்சியில் சத்தியம் மக்கள் சேவை மையம் நிறுவனர் சத்தியமூர்த்தி, தலைவர் அருணபாரதி, பொருளாளர் சந்தோஷ், மற்றும் தோழர்கள் ராமு, சங்கர், பாலா ஆகியோர் சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக கலந்து கொண்டனர்.
 
மேலும் பலர் ஈழத்தமிழர்களுக்காக நிதி, உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கினர்.
 
வழங்கப்பட்ட பொருட்களை அனைத்தும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிடம் அளிக்கபட்டு ஈழம் கொண்டு செல்லப்படும் என திரு.பழ.நெடுமாறன் அவர்கள் அறிவித்தார்.
 
நாள் : 05-03-2007
இடம் :புதுச்சேரி

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

குறிப்பிடத்தக்க பதிவுகள்