Monday, March 19, 2007

ரயில் மறியல் செய்ய முயற்சி :: 105 மீனவர்கள்கைது

 தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும்
இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து
ரயில் மறியல் செய்ய முயற்சி :: 105

புதுச்சேரி, மார்ச் 18: தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.
அமைப்பாளர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குப்புராசு, துணைப் பொதுச் செயலாளர் கோதண்டபாணி, செயலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சிங்காரவேலர் சிலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை அமைப்பு செயலாளர் விசுவநாதன் துவக்கி வைத்தார்.
இவர்கள் கடலூர் சாலையில் ஏ.எப்.டி மில் அருகே பாய்மரத்துடன் கூடிய கட்டுமரத்தை ரயில் பாதையில் போட்டு மறியல் செய்தனர். மறியல் போராட்டத்தின் போது தமிழக மீனவர்களை கொலை செய்யும் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்யக்கூடாது. கச்சத்தீவை மீட்க வேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் வீராம்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் காங்கேயன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், பெரியார் திக லோகு ஐயப்பன், செந்தமிழ் இயக்கம் தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, சத்தியம் மக்கள் சேவை மையம் தலைவர் க.அருணபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் காரண மாக 10.40க்கு வர வேண்டிய ரயில் புது வைக்கு தாமதாக வந்தது. 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வணக்கம் தோழர்களே...

                          இப்போராட்டத்தில் சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பாக நானும் கலந்து கொண்டேன். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் அவர்களுடன் நான் சென்றிருந்தேன். இப்போராட்டத்தின் முக்கிய அதிரடி அம்சமாக மறியல் நிகழ்வின் போது போலீசார் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு ஒன்று நடந்தது. மறியல் நடக்குமிடத்திறகு வந்த ஒரு லாரியிலிருந்து கட்டுமரப்படகு ஒன்று கொண்டு வரப்பட்டு தண்டவாளத்தில் போடப்பட்டது. பிறகு பாய்மரமும் விரிக்கப்பட்டது. போலீசார் பரபரப்பாகி அதை எடுக்க முயற்சித்தும் நாங்கள் கூக்குரலிட்டு அதை தடுத்தோம். பெண்களும் ஆர்வத்துடன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்