Monday, July 07, 2008

கச்சா எண்ணெய் உயர்வும் தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும் - க.அருணபாரதி

கச்சா எண்ணெய் உயர்வும்
தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும்

க.அருணபாரதி

'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு "இனிப்பு" வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு "அணுசக்தி" ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் பேனாவை புடுங்கிக் கொண்டு எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு "மார்க்சிஸ்ட்" மாவீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

கச்சா எண்ணெயின் விலையை பெருமுதலாளிகள் தலைமயிலான நாடுகள் திட்டமிட்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உயர்த்தியுள்ளன. இதனால் அதனைத் தயாரிக்கும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த விலைஉயர்வு மட்டுமின்றி "இந்தி"ய அரசு விதிக்கும் வரிகளின் சுமையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதற்கிடையே இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்ட டீசல் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்க டீசல் மற்றும் பெட்ரோல் விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளன. இதனைக் கண்டித்து லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இவ்வேலை நிறுத்தத்தினால் உணவுப் போக்குவரத்து பாதிக்கப்படும். ஏற்கெனவே பலமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ள விலைவாசி இன்னும் அதிகரிக்கும். இதற்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைப் பற்றி சிந்திப்பதா அல்லது விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திப்பதா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்திய அரசு.

மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான "ஏழைகள்" ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம் ஒதுக்கக் கூட காசில்லை என் கபட நாடகமும் ஆடுகிறது.

"மிகச்சிறந்த பொருளாதார நிபுண" "ராம்" மன்மோகன் சிங், "புள்ளிவிவரப் புலி"யாம் ஏழைகளின் பசி அறியாத ப.சி(சிதம்பரம்), "சிறந்த நிர்வாகி"யாம் மான்டேக் சிங் அலுவாலியா... இவர்கள் தாம் இந்நாட்டை முன்னேற்றப் போகின்றனர் என ஊடகங்களால் ஊளையிடப்பட்டு அறிவிக்கப்பட்ட "அமெரிக்க" அறிவு ஜீவிகள். இப்பொழுது அதே ஊடகங்களுக்கு பயந்து நெளிந்து கொண்டு அங்குமிங்கும் இவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்காவே ஆடிப்போயிருப்பதால் இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.

அமெரிக்கா சொன்னதை தான் அப்படியேச் செய்தார்கள். சட்டம் போட்டார்கள். சலுகைக் கொடுக்கப்பட வேண்டிய ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா உள்ளிட்ட "மாபெரும்" "ஏழைகளுக்கு" சலுகைகள் அளித்தார்கள். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சுமையை சுமக்கத் தான் "மக்கள்" இருக்கிறார்களே என்ற தைரியத்தில் அச்சுமையை "மக்கள்" தலையில் இறக்கி வைத்துவிட்டு, அதே எண்ணெயை அதிகவிலைக்கு சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்து கொழுத்து சம்பாதிக்க ரிலைன்ஸ் - எஸ்ஸார் போன்ற "ஏழை" நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி அவர்கள் லாபம் சம்பாதிக்க அரசை நடத்தினார்கள்.

'நாங்கள் தான் "புரட்சிகரப் போராளிகள்", அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் பாருங்கள்" என "மார்க்சிஸ்ட்" நடிகர்கள் ஒருபுறம் நடித்துக் கொண்டே மேற்கு வங்கத்தில், "தொழிலில் மிகவும் பின்தங்கிய எழையான" ரத்தன் டாட்டாவிற்கு "சோஷலிச" சமுதயாம் மலர்ந்திட தொழிற்பரட்சியில் ஈடுபடவேண்டுமெனக் கூறி ரூ 300 கோடியை கடன் உதவி செய்தார்கள். பாவம் ரத்தன் டாட்டா. எவ்வளவு "மிகச்சிறிய எழை"? எப்படி அவரால் இந்தத் தொகையை கொடுக்க இயலும்? பரவாயில்லை. கடந்த ஆண்டில் 800க்கும் குறைந்த "பணக்கார ஏழைகள்" வாங்கிய சுமார் 44,000 கோடி ரூபாயை வாராக் கடனாக அறிவித்து அந்த "பணக்கார கடங்கார ஏழை"களை சுதந்திரமாக திரியவிட்டதை போல ரத்தன் டாட்டாவையும் விட்டுவிடலாம். இந்த கடனையெல்லாம் சுமக்கத் தான் எப்பொழுதும் "விவசாயிகள் + நடுத்தரவர்க்கத்தினர் + வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள்" என்ற கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே... அவர்கள் தலைமையில் இறக்கி வைப்போம் என இறக்கி வைத்தார்கள். இறக்கி வைத்துக் கொண்டிரும் இருக்கிறார்கள்.

"இவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே காவிக் கூட்டம் இரத்த வெறியுடன் சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. இவற்றுக் கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைத்த அவர்களே இவ்வாறு சொல்கிறார்கள் என்றால் "விரைவில் தேர்தல்" வருகிறது என்று அர்த்தம். அவர்கள் அலைவதைப் பார்த்தால் விரைவில் அயோத்திக்குச் சென்று இராமரையும் தேர்தலுக்காக அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு பிரச்சனை "பெட்ரோல் விலை உயர்வைத் தடுப்பதோ" - "பணக்கார ஏழைகளுக்கு சலுகை அளிக்கக் கூடாது" என்பதோ அல்ல. தனக்கு தரவேண்டிய தேர்தல் நிதியை அந்த "பணக்கார ஏழை"களிடமிருந்து மற்றவர்களை விட அதிகம் பெற்றிடவே இந்த காவி கோஷ்டியினர் அங்கலாய்கின்றனர்.

அமெரிக்க ஆண்டை சொல்வதைத் தான் இந்த "இந்தி"யத் தேசிய அடிமை அரசியல்வாதிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதனை வெட்கமற்று நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் "இந்தி"ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையேயே "இறக்குமதி" வரியை விதித்துக் கொள்ளையடிக்கும். இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்து "தேர்தல்" அரசியல் கட்சிகள் "கச்சா" எண்ணெயை பற்றி கதையளந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல்கட்சிகள் ஆளாளுக்கு ஆர்ப்பாட்டம் வைத்துக் கொண்டு கண்ணேதிரேக் கொள்ளையடிக்கும் தில்லி அரசைத் தட்டிக் கேட்க நாதியற்று "கச்சா" எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை கண்டித்து உள்ளுர் "கேபிள்"டீவியில் அறிக்கை விடுகிறார்கள்.

தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் "முத்தமிழ் விற்றவர்" முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி "மிகவும் கவலையுற்று" ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தை பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துள்ளியமாகக் கண்டிறிந்து "அறிக்கை" மட்டுமெ விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த "இந்தி"ய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம். இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த "அரசியல் நகைச்சுவையாளர்" வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ""சீட்" கொடுத்தால் அடங்கிப் போ" என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, "அகில இந்திய" சமத்துவக் கட்சி" என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் "நாட்டாண்மை" சரத்குமார், "2011-ல் தமிழக முதல்வராகப்போகும்" "லட்சிய" தி.மு.க. டி.ஆர்.இராசேந்தர், தீடீர் கட்சியான "அகில இந்திய" நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள்.

அமெரிக்க அடிவருடியாகவும், உலகமயத்தின் ஊதுகுழலாகவும் "இந்தி"யா தொடர்ந்து இப்படித்தான் செயல்படும். அந்த "இந்தி"யாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

பெட்ரோல் விலை உயர்வும் விலைவாசி உயர்வும் தற்பொழுதுள்ள அரசியல்கட்சியினர் யாருக்கானவர்கள் என்பதை நமக்கு சொல்லித் தருகின்றன. பணக்காரர்களுக்கான அரசை பாதுகாக்கவும் அதில் பங்குபெறவுமே இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சியனரும் செயல்படுகின்றனர். தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்துத் தேர்தல் அரசியல் கட்சிகளும் உலகமயத்தின் பாதந்தாங்கிகள் தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. என்ன தான் இதற்குத் தீர்வு?

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான பெரு முதலாளிகளின் லாபவெறிக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும். ஆன்லைன் பங்குச்சந்தை வாத்தகச் சூதாட்டத்தை தடைவிதிக்க வேண்டும். முதலாளிகளின் லாபவெறிக்கு எதிராக தடைவிதிக்க இங்குள்ள இந்திய அரசோ தமிழக அரசோ நிச்சயம் முன்வராது. ஏனெனில் அரசு இங்குள்ள அரசுகளே அவர்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இவ்வரசை மாற்ற முடியுமா என்றால் முடியாது.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும். இது நடக்கும் செயலா? ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா.? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..? அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்த போது அதனை தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது "இந்தி" யா தானே..?
இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையை பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் "இந்தி"யனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே ததிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் "இந்தி"யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும். உலகமயத்தை எதிர்க்க நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானேத் தவிர பெரு முதலாளிகள் தலைமையிலான "இந்தி"யத் தேசியத்தை அல்ல. தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் புரட்சி பற்றிய விழிப்புணர்வே இவர்களை மிரள வைக்கும் சக்தியாகும். அந்த புரட்சிகான முன்னேற்பாடுகளை வரலாறு நமக்கு செய்து தரும். அதனை வேகப்படுத்த வேண்டியதே நமது கடமை என செயல்பட வேண்டும்.


நன்றி : கீற்று இணையம்


-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Friday, July 04, 2008

தில்லைப் போராட்டம் - புதிய ஜனநாயகத்தின் அவதூறு

தில்லைப் போராட்டம்
புதிய ஜனநாயகத்தின் அவதூறு
கி.வெங்கட்ராமன்
 
அடிப்படையற்ற அவதூறு மற்றும் வசைபாடல்களோடு வழக்கம்போல் 'புதிய ஜனநாயகம்' ஏடு (மே,2008) ஒரு விமர்சனக் கட்டுணிμ வெளியிட்டிருக்கிறது. தில்லைப்பேணிμணிட்டம் குறித்து 'தமிழர் கண்ணோட்டம்' ஏப்μஅ 2008 இதழில் நாம் எழுதியிருந்த செய்திக் கட்டுணிμக்கு எதிர்வினையாக இது வெளியாகி  யிருக்கிறது. தில்லைப் பேணிμணிட்டத்திஅ ம.க.இ.க. அணியின் பங்கு பணியைக் குறைத்தோ, மறைத்தோ நான் எதுவும் எழுதவில்லை என்பதை 'தமிழர்  கண்ணோட்டம்' கட்டுணிμணியப் படித்த நடுநிலை வாசகர்கள் அறிவார்கள். எனவே மீண்டும் அதுபற்றி இப்போது விவாதிக்கப்போவதில்லை. ஆயினும் புதிய ஜனநாயகத்தின் "தெரட்டி்'' கூறியுள்ள சிலவற்றுக்கு மட்டும் உண்மைத் தகவல்களைப் பதிலாகத் தரவேண்டியுள்ளது.
 
1. சிற்றம்பல மேடையேறி பாடி வழிபடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி தீட்சிதர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு ஒன்று கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. வழக்கறிஞர் நடராசன் என்பவர் அதை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கும், நமக்கும் நேμடி அறிமுகம் கிடையாது. ஆயினும் இப்பிரச்சினையில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை ஆறுமுகசாமி மூலம் அவர் அறிந்திருக்கிறார். வழக்கு தொடர்பாக பேசவேண்டியிருப்பதால் வழக்கு நடக்கும் நாளில் நேரில் கடலூர் வருமாறு ஆறுமுகசாமி மூலம் அழைத்தார். நானும் சென்றேன். அன்று சாட்சிகள் குறுக்கு விசணிμணிண முடிந்திருந்தது. வழக்கின் நிலைமைகளை விளக்கிய அவர் "இதனை மனித உரிமை வழக்காக உயர்நீதிமன்றத்தில் நடத்த வேண்டியது அவசியம்' என்றார். அப்போது அவர் கையில் விருத்தாச்சலத்தில் தோழர் μணிச்த தலைமையில் நடக்கவிருந்த பொடா எதிர்ப்புக் கருத்தμங்க அழைப்பு இருந்தது. அதனை என்னிடம் காட்டி, "அஇக்குணிμஞர் μணிச்த மூலம் இப்பிμச்சினையை எடுத்துச்  செல்லலாம் எனக் கருதுகிறேன் அஅணிμப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்கள் வழியில் வேறு நல்ல  வழக்கறிஞர்களை வைத்தாலும் சரியே. எப்படி யிருந்தாலும் வழக்கை உறுதியாக நடத்த வேண்டும்" என்றார். "μணிச்த எனக்கு நெருக்கமானவர் தான். அவர் மூலமே நடத்தலாம். பொடா எதிர்ப்புக் கூட்டத்திற்கு பார்வையராக நானும் வருவேன். அங்கு பேசி முடித்துவிடலாம்" என்று நான் கூறினேன். அன்று விருத்தாசலம் வருமாறு ஆறுமுகசாமியிடமும் கூறிவிட்டு வந்தேன். விருத்தாச்சலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் பொடா எதிர்ப்புக் கருத்தμங்கம் தொடங்குவதற்கு முன்பாக அμங்கத்தில் நாங்கள் சந்தித்தோம். ஆறுமுகசாமியை μணிச்தஅக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சுருக்கமாக வழக்கு குறித்துப் பேசினோம். μணிச்த இளைஞர் என்பதால் ஆறுமுகசாமிக்குத் தொடக்கத்தில் சிறு தயக்கம் இருந்தது. அப்போது இவர்களது அமைப்பு பற்றியெல்லாம் ஆறுமுகசாமிக்கு எதுவும் தெரியாது. "உங்களுக்கு அரசு வைத்துத் தரும் இலவச வழக்குரைஞர்களை விட இவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள்தாம்" என்று சொல்லி, அஅμது தயக்கத்தைப் போக்கினேன்.

2. இதற்கு சில நாள்கள் சென்று μணிச்தஅம் அஅμது ச €கணிதμரும் சிதம்பμத்திஅ என்னைச் சந்தித்தார்கள். த.தே.பொ.க. தோழரின் உழுவை பராமரிப்பகத்தில் அந்த சந்திப்பு நடந்தது. "அமைப்பில் பேசி விட்டேன். வழக்கையும் இதுகுறித்த இயக்கங்களையும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். நாம் கூட்டாக இதன் மீதான இயக்கங்களை நடத்தலாமா?" என தோழர் ராஜீ கேட்டார். "ம.க.இ.க.வுடன் த.தே.பொ.க. கூட்டு இயக்கம் நடத்துவது சாத்தியமில்லை. ஏனெனில் ம.க.இ.க. நடைமுறையில் ஒரு சீர்குலைவு அமைப்பு; மறைமுகமான பார்ப்பனிய அமைப்பு என்பது த.தே.பொ.க.வின் மதிப்பீடு. எனவே கூட்டியக்கமோ, ம.க.இ.க.வுக்கு  துணையாக செயல்படுவதோ சாத்திய மில்லை. நீங்களே உங்கள் வழியில்  நடத்துங்கள்" என நான் தெளிவுபடக் கூறிவிட்டேன். ஆயினும் அதற்குப் பிறகு 2004, 2005, 2006ஆம் ஆண்டுகளில் இப்பிμச்சினை குறித்து நாம் தனியே நடத்திய உண்ணா நிலைப் பேணிμணிட்டங்கள், தெருமுனைப் பரப்புரை இயக்கங்கள், பொதுக் கூட்டம் ஆகியவற்றை சிதம்பரத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும், செய்திகளை ஊன்றி கவனிக்கிற நோக்கர்களும் அறிவார்கள்.
 
3. திருச்சிற்றம்பல மேடையில்  பக்தர்கள் பாடி வழிபட ம.க.இ.க. போராட்டம் நடத்தியதால் ம.க.இ.க. மறைமுக பார்ப்பனிய அமைப்பு என்ற நமது மதிப்பீடு பொய்யாகி விடாது. ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் நிதி பெறும் சில 'தன்னார்வ' அமைப்புகள் கூட உலகமயத்தை எதிர்த்து சில பேணிμணிட்டங்கள் நடத்துவதைப் பார்க்கிறோம். ம.க.இ.க.வும் அதனை வழிநடத்துகிற இ.க.க (மா-லெ) மாநில அமைப்புக்குழுவும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. பார்ப்பனியப் புனைவான இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன. மார்வாடி எதிர்ப்பு கூடாது என்கின்றன. சோ - ராம் குரலிலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கின்றன. எனவே இந்த அமைப்புகளை மறைமுகப் பார்ப்பனிய அமைப்புகள்; இந்திய ஆளும் சக்திகளுக்கு மறைமுகமாக சேவை செய்யும் சீர்குலைவு அமைப்புகள் என த.தே.பொ.க. மதிப்பிடுகிறது. இண்Oஅணிμ ம.க.இ.க. வின் இந்த அடிப்படை நிலைபாடுகளில் மாறுதல் இல்லை. எனவே நமது அதே மதிப்பீடும் தொடர்கிறது.

 4. வ.சுப. மாணிக்கனார் தலைமையில் தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் பேராடுவதற்கு அதற்கு முன்னால் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதை தீட்சிதர்கள் மறுத்தே வந்தனர். அவர்களது போராட்டத்திற்குகு பிறகே, 1987 முதல் தீட்சிதரில் ஒருவர் பாடுவது என்ற வகையில் €தஅணிμம் ஒலித்தது. இது முதல்கட்ட வெற்றி என்றோம். காலை பூசை முடிவில் ஒருவர் ஒரு பாடல்பாடி அந்த 'சடங்கை' தீட்சிதர்கள் முடிக்கிறார்கள். அதை முனைவர் த.செயராமன் குறிப் பிட்டிருந்தார். இரண்டுமே உண்மைதான். இதில் முμண்பாடு இருப்பது போல் 'தொரட்டி' குதிக்கிறார்.
 
5. மார்ச் 2 (2008) மாலை காவல்துறை தடியடிக்குப் பிறகு ஆறுமுகசாமி 'அனாதையாக' அமர்ந்திருந்தார் என்று பு.ஜ. த.தே.பொ.க. மீது பாய்கிறது. கைதானது 34 பேர். ம.க.இ.க. பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மீதமுள்ள பலரும் அங்கேதான் இருந்தார்கள். இந்நிலையில் அவரை அனாதையாக விட்டு விட்டதாக நம்மீது தோழர் 'தொரட்டி' பாய்வது வியப்பாக இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன?  காவல்துறை ஆறுமுகசாமியைக் கைது செய்யவில்லை. கைதானோர் பட்டியலில் அவரையும் சேர்த்துவிட வேண்டும் என்று ம.க.இ.க.வினர் முயன்று கொண்டிருந்தனர். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள நடைமேடையில் அவரை அமர  வைத்திருந்தனர். அருகே சென்னையிலிருந்து ம.க.இ.க. சார்பில் வந்திருந்த வழக்கறஙிஞர் இருந்தார். ஆறுமுகசாமியைக் கைது செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

த.தே.பொ.க. சிதம்பர நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிராகாசமும் நானும் இரவு நீண்ட நேரம் அவர்கள் அருகிலேயே இருந்து சிறு சிறு உதவிகளைச் செய்து
கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத் தினார்கள். அதன் பிறகு ஆறுமுகசாமியும் கைது செய்யப்பட்டார்.

5. அதன் பிறகு மார்ச் 12 தொடங்கி நாளதுவரை சிவ நெறியார்கள் தமிழகமெங்கிருந்து த.தே.பொ.க.- தமிழ்க் காப்பணியைத் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட
நாள்தோறும் வருகிறார்கள். திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி மனமுருகி வழிபடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் காலை
நேரத்திலேயே வந்து வழிபடவே விரும்புகிறார்கள். தங்கவைப்பது, ஒய்வு நேரத்தில் இரண்டு ஊர்களிலிருந்து வந்து மனநிறைவாக வழிபட முடியாமல் திரும்புவதைத் தவிர்க்க நேரத்தை ஒழுங்கு செய்வது, தீட்சிதர்களோடு அவ்வப்போது எழும் உரசல்களை எதிர்கொண்டு நெறிப்படுத்துவது.... போன்ற பணிகளில் த.தே.பொ.க., தமிழ்க் காப்பணி தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிக்கென்று தமிழ்க் காப்பணி சார்பில் 'தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்குழு' அமைக்கப்பட்டுள்ளது. இதன்
நெறியளாராக தோழர் சிவப்பிரகாசம் இருந்தாலும், வழமையாகக் கோயிலுக்குச் சென்று வழிபடும் இளைஞர்களைக் கொண்டே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் தேசிய இயக்கத்தின் வை.இரா.பாலசுப்பிரமணியன் இக்குழுவின் அமைப்பாளராக உள்ளார். தமிழகமெங்குமிருந்து பல சிவனடியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இக்குழுவைத் தொடர்புகொண்டு பாடி வழிபடுவது தொடர்கிறது.

பெரும்பாலோர் காலையில் வழிபட்டுச் சென்று விடுகிறார்கள். ஆம்பூர், திருநெல்வேலி, வடலூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் காலை8, காலை 10 மணி, மாலை என
வெவ்வேறு நேரங்களில் பாடி வழிபட்டதும் உண்டு. தொடக்கத்தில் பதட்டம் இருந்த சூழலில் மேடையில் பாட விரும்பு கிறவர்கள் காவல்துறையை அணுக வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பாளர் அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் அமைதிக் கூட்டம் நடந்து எழுத்துப்பூர்வமாக செய்து கொள்ளப் பட்டதுதான் நான் குறிப்பிட்ட
உடன்பாடு. காலை வேளையைத் தவிர பிற  காலங்களில் பாடமாட்டோம் என்பது அதன் பொருளல்ல என எல்லோருக்கும் புரியும். 'தொரட்டி'க்கு மட்டும் அது
புரியவில்லை.
 
அரசாணைக்கு மாறாக உள்ளூர் காவல்நிலையத்தில் எழுதிக் கொள்ள முடியாது. நாம் அவ்வாறு செய்யவுமில்லை. உண்மை இவ்வாறிருக்க, ஏதோ ம.க.இ.க. பெற்றுத்தந்த ஆறுகால வழிபாட்டு உரிமையை ஒரு காலமாக வெட்டிக் குறுக்கிவிட்டதாக த.தே.பொ.க. மீது 'புதிய ஜனநாயகம்' அவதூறு அள்ளி வீசுகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மீதும், வ.சுப.மாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள் மீதும் ம.க.இ.க. வசைமாரி பொழிந்தாலும் தில்லைப் பிரச்சினையில்  ம.க.இ.க.வின் பணியை நாம் குறைத்துக் கூறியதே இல்லை. அதேநேரம் "ம.க.இ.க.வின் அரசியலானது சாரத்தில் இந்திய  ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது. இந்துமதம், இடஒதுக்கீடு குறித்த அதன் பார்வை பார்ப்பனியத் திற்குச் சேவை செய்கிறது" என்ற நமது திறனாய்விலும் மாற்றமில்லை.


மேலும் கட்டுரைகளுக்கு பார்க்க : புதிய தமிழர் கண்ணோட்டம், சூன் இதழ் 2008.

Thursday, July 03, 2008

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள் - முனைவர் த.செயராமன்


யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள்

முனைவர் த.செயராமன்

 

முன்பு எப்போதையும் விட தேசிய இன அடையாளங்கள் மீது கடும் தாக்குதல் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. தேசிய இன உரிமைகளை இந்திய ஒற்றையாட்சி அரசியல் சட்டத்தின் மூலம் முன்னமே பறித்துவிட்ட நிலையில், மாநில அரசுகளின் எஞ்சியிருக்கக் கூடிய உரிமை களையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட புதிய உத்திகளை வகுக்கிறது டில்லி வல்லாதிக்க அரசு.


கடந்த ஏப்ரஅ மாதம் 22-24 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் உள்ளாட்சித் தலைவர்கள் மாநாட்டை மைய பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் நடத்தியது. இம்மாநாட்டிற்கு, தமிழகத்திலிருந்து மாவட்ட மற்றும் ஒன்றிய உள்ளாட்சித் தலைவர்களை அனுப்பிவைக்க மறுத்து, அம்மாநாட்டில் பேசப்பட இருக்கும் அணிரஅ அறிக்கையிலுள்ள சிக்கலான பகுதிகள் நீக்கப்பட வேண்டுமென்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருநதார். அதன்படி சிக்கலுக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு விட்டதாக மன்மோகன்சிங் பதில் அனுப்பியிருந்தார்; ஆனாலும் பேரணிஐர்களை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம் இல்லாமற் போனமையால் தமிழ் நாட்டிலிருந்து ஊரணிட்சித் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரணிஅ ‹ல் அறிவித்தார்.


ஏப்ரஅ மாதம் புதுடில்லியில் நடைபெற்ற இந்த அனைத்திந்திய மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் ஊரணிட்சி ஒன்றியத் தலைவர்கள் கூடி உள்ளாட்சியை வலுப் படுத்துவது என்பது பற்றிய முன்னமே தயாரிக்கப்பட்டிருந்த அணிரஅ அறிக்கையை விவாதித்து, எடுக்கப்படட முடிவுகளுடன் சேர்த்து அந்த அறிக்கையை பிரதமரிடம் ஒப்படைப்பது என்பது திட்டம்.


இதை உள்ளாட்சியை வலுப்படுத்தும் நோக்கம்தானே என்று எளிதில் ஒதுக்கிவிட முடியாது. படிப்படியாக மாநில அரசுகளை அலங்கணிர அமைப்பாக ஆக்கிவிட்டு மாவட்ட உள்ளாட்சிகள் அணிர டில்லியின் நேரடி ஆட்சியைக் கொண்டுவரும் நாசகணிர அரசியல் திட்டம் ஒரு அணிரஅ  அறிக்கையாகத் தயணிரணிகி இருந்தது.


15 ஆண்டு நிறைவு விழா என்ற பெயரில் புதிய உத்தி புதிய பஞ்சாயத்து ரணிச் முறையைக் கொண்டுவந்த 73ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செய்யப் பட்டு 15 ஆண்டுகள் ஆவதை யொட்டிய நிகழ்ச்சியாக ஊரக, உள்ளாட்சி, மாவட்ட, ஒன்றியத் தலைவர்கள் மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற இம்மாநாட்டில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. 'உள்ளாட்சித் துறையை வ ல ப் ப டு த் து வ த ற் க õ ன நடைமுறைகள் குறித்து ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை புதுடில்லியில் மீண்டும் ஒரு மாநாட்டில் விவாதித்து, அவ்வறிக்கையையும், முடிவுகளையும் பிரதமரிடம் அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படியே ஒரு குழு அமைக்கப்பட்டு, மார்ச் 14-15 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் மீண்டும் விவாதித்து ஓர் அறிக்கையைத் தயாரித்திருந்தார்கள். இந்த அறிக்கையுடன் உள்ளாட்சித் துறைக்கான மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், ஒரு கடிதத்தை இணைத்திருந்தார். அந்த அறிக்கையை சிற்றூர் பஞ்சாயத்து முதல் மாவட்ட பஞ்சாயத்து அணிர வைத்து விவாதித்து பரிந்துணிர களுடன் பிரதமர்  மன்மோகன் சிங்கிடம் அளிக்கலாம் என்று கூறியிருந்தார்.

 

இந்திய அரசியலமைப்பு வலிமையான மைய அரசு, அதிகணிரங்கள் இல்லாத மாநில அரசுகள் என்ற ஓர் ஒற்றையாட்சி முறையையே இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. தொன்றுதொட்டு செயல்பட்டு வரும் உள்ளாட்சி டில்லி அரசுக்கு அன்னியமான ஒன்று. இந்திய அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு அளித்திருக்கும் அதிகணிரங்களுள் ஒன்றான உள்ளாட்சியை ஓசைப்படாமல் மத்திய அரசின் அதிகணிரப் பட்டியலுக்கு மாற்றிவிடும் நோக்கில் உள்ளாட்சித் தலைவர்களின் கோரிக்கை என்ற பெயரில் பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் தயாரித்திருந்தது. இந்த  அணிரஅ அறிக்கையில் 'உள்ளாட்சி அரசாங்கம்' என்ற பொருள் மாநில அரசின் பட்டியலிலிருந்து மையப் பட்டியலுக்கோ (க்ணடிணிண ஃடிண்t) அல்லது பொதுப்பட்டியலுக்கோ (இணிணஞிதணூணூஞுணt ஃடிண்t) மாற்றப்பட வேண்டும்' என்பது அதாவது மாநிலத்திடமிருந்து இந்த அதிகணிரம் பிடுங்கப்பட வேண்டும் என்பது இந்த அணிரஅ அறிக்கையின் முக்கியக் கூறு. இந்தக் கோளாறான  கோரிக்கையை, அதாவது மைய அரசின் கீழ் மாவட்டம்  ணிர ‹லான உள்ளாட்சி நிர்வாகத்தை மாற்றக் கோரும் கோரிக்கையை பஞ்சாயத்து தலைவர்கள் பெயரிலேயே அளித்திருக்கிறார்கள். இந்தப் பகுதியைத்தான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 'சிக்கலுக்குரிய பகுதி' என்று குறிப்பிட்டு நீக்கப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 68 பேரணிஐர்கள் அடங்கிய பட்டியல் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதமே புதுடில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த அணிரஅ அறிக்கை, உள்ளாட்சியை மேம்படுத்தும் சிறந்த வழிகளாக அதை மாநிலத்திடமிருந்து பிடுங்கிக் கொள்ளுவதும், ஊரணிட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளைக் குறைப்பதும்தான் என ஒரு கண்டு பிடிப்பை  நிகழ்த்தியிருந்தது.

 

கலைஞர் கருணாநிதியின் 'நிரணிகரிப்பு உத்தி' பலனைத் தந்திருக்கிறது. 'மாநில அரசின் அதிகணிர அரம்பிற்குட்பட்ட ஊரணிட்சிகள்' என்ற பொருளை மைய அரசுப்பட்டிலுக்கோ பொதுப் பட்டியலுக்கோ மாற்றவேண்டும் என்ற பரிந்துணிரணிய அணிரஅ அறிக்கையில் சேர்க்க வேண்டாம் என்று பஞ்சாயத்து ரணிச் அமைச்சகத்துக்கு அOஅணிர வழங்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். (தமிழ்ஓசை, 23 ஏப்ரஅ 2008) மேலும், எதிர்ப்புக்குரிய பிற பரிந்துணிரகணிஐப் பெணிOத்தஅணிர ‹ல், அவை மாநாட்டில்  பரிந்துணிரக்கப் பட்டாலும் அவைகளை ஏற்றுக் கொள்வது என்பது தேசிய வளர்ச்சி மன்றம் (Nச்tடிணிணச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt இணிதணஞிடிடூ) போன்ற 'தகுந்த அமைப்பில்' மாநில அரசுகளுடன் கலந்துபேசி இறுதி செய்வதன் அடிப் படையிலேயே முடிவு செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.


 'உள்ளாட்சி' என்ற பொருளை  பட்டியல் மாற்றவேண்டும் என்ற  பரிந்துணிரணிய 'அணிரஅ  றிக்கையில்' சேர்க்கவேண்டாம் என்று பஞ்சாயத்துரணிச் அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்தியதிலிருந்து,  உண்மையில் அதை உள்ளாட்சித் தலைவர்கள் தயாரித்தார்களா  அல்லது அவர்களுடைய பெயரில் பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் தயாரித்ததா என்பதை எளிதாகப்  புரிந்து கொள்ளலாம். இந்தச் சதிகணிர அணிரஅ அறிக்கையை உருவாக்கிய டில்லி அரசு தனது சர்அணிதிகணிர முகத்தை சனநாயக முகமூடியில் மறைத்துக் கொண்டு வருகின்றது. அதாவது, இதுஅணிர மாநில உரிமைகளை மைய அர €ச பறித்துக் கொண்டது போலன்றி, உள்ளாட்சியை பஞ்சாயத்துத் தலைவர்களே விரும்பி தட்டில் வைத்து டில்லியை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவதாகக் காட்டப்பட்டது. மேலிருந்து டில்லி பிரித்தெடுப்பது என்ற நடைமுறைக்கு மாறாக, உள்ளாட்சி நிர்வாகத்தை மையப்பட்டியலில் சேர்த்துக் கொள்ள கோரிக்கை கீழிருந்து வருவதாகக் காட்டப்பட்டது. முழுமையான ஒற்றையாட்சி நோக்கி 1950இல் செயல்பாட்டுக்கு வந்த இந்திய அரசியலமைப்பு முன்னமே ஓர் ஒற்றையாட்சி அமைப்புதான்.  கூட்டாட்சி (ஊஞுஞீஞுணூச்tடிணிண) என்ற சொல்கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. மாநிலங்கள் இருந்தாலும் கூட்டாட்சிக்குரிய இலக்கணப் படி அதிகணிரங்கள்  பங்கிட்டு அளிக்கப்படவில்லை. அதனால்தான் அரசியல் அறிவியலாளர் ஓ.இ.வியர், "இந்திய ஒன்றியம் குறைவான ஒற்றை யாட்சிப் பண்புகளுடைய கூட்டாட்சி நாடு என்று கூறுவதை விட குறைவானக் கூட்டாட்சிப் பண்புகளுடைய ஓர் ஒற்றையாட்சி  நாடு என்று கூறலாம்." என்றார்.
அதிகாரப் பங்கீட்டில் மைய அரசுப் பட்டியலில் 97 அதிகணிரங்கள், மாநிலப் பட்டியலில் 66 (உண்மையில் 14) பொதுப் பட்டியலில் 47 (உண்மையில் 52) எஞ்சிய அதிகணிரங்கள் (கீஞுண்டிஞீதச்ணூதூ ணீணிதீஞுணூண்) அனைத்தும் மைய அரசுக்கே  சொந்தம். நடைமுறையில் மாநில உரிமைகள் மேலும்  மொட்டை யடிக்கப்பட்டிருக்கின்றன. மாநிலப் பட்டியலில் உள்ள அதிகணிரங்களில் கூட மாநில அரசுக்ளுக்கு முஉஅதிகணிரம் இல்லை. 'நாட்டு நலன் கருதி' மாநிலப் பட்டியலை மத்திய  அரசு தானே எடுத்துக் கொள்ள முடியும். அரசியல் சட்டப்பிரிவு 249இன்படி மாநிலங்கள் அவையில்,  மொத்த உறுப்பினர்கள், மூன்றில் இரண்டு பகுதியினர் வாக்களித்து ஒரு தீர்மானத்தை  நிறைவேற்றினால், நாட்டின் நலன் கருதி, மாநிலப் பட்டியலில் உள்ள எந்த பொருளைப் பற்றியும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். இதனால்தான் அசோக் சந்தா "மாநில அதிகணிரத்துக்கு இத்தகைய அவமதிப்பு வேறு எந்த கூட்டாட்சியிலும் கிடையாது. 1935ஆம் ஆண்டு சட்டத்திலும் கூட  இல்லை" என்றார். (கூடஞுணூஞு டிண் ணணி ண்தஞிட ஞூஞுஞீஞுணூச்டூ ஞிணிணண்tடிtதtடிணிண. Nணிt  ஞுதிஞுண டிண 1935 அஞிt....' - அண்டணிடு இடச்ணஞீச், ஊஞுஞீஞுணூச்tடிணிண டிண ஐணஞீடிச். அ ண்tதஞீதூ ணிஞூ க்ணடிணிண-குtச்tஞு கீஞுடூச்tடிணிணண், ஃணிணஞீணிண, 1965, ணீ 90) 'கல்வி' என்ற அதிகணிரம் மாநிலங்கள் பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநிலங்கள் விற்பனை வரியைத் தாங்களே நிர்ணயிக்க முடியாதபடி 'வாட்' வரிவிதிப்பு தடுத்துவிட்டது. மாநில உரிமைகளை மொட்டை அடிப்பதற்கென்றே 2007இல் பூஞ்சி ஆணையம் அமைக்கப்பட்டது. 2007 ஏப்ரஅ 27ஆம் தேதி, முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம்.பூஞ்சி (M.M.கதணஞிடடி) தலைமையில் மத்திய-மாநில உறவு குறித்து ஆரணிய டில்லி அரசு அமைத்த இந்த ஆணையம், இரண்டு ஆண்டுகளில் தனது அறிக்கையை அளிக்கும். பூஞ்சி அணையத்தின் ஆய்வுப் பொருளில் (கூஞுணூட்ண் ணிஞூ கீஞுஞூஞுணூஞுணஞிஞு), 'குறிப்பிட்ட காலத்திற்குள் பஞ்சாயத்து ரணிச் நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகணிரங்களைப் பங்கிட்டு அளிப்பது தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, பொறுப்பு, எல்லை அரம்பு; மாவட்ட அளவில் சுதந்திரமாகத் திட்டமிடல் மற்றும் அரஅ-செலவு திட்டமிடல் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, பொறுப்பு, அதிகணிர எல்லை ஆகியவற்றை அணிரயறுப்பது-' என்பவை உள்ளடங்கியுள்ளன. இந்த ஆய்வுப் பொருள்களாகச் சேர்க்கப்பட்டவை மாநில அதிகணிரத்திOகு உட்பட்டவை என்பதை நினைவு கொள்ள வேண்டும். பூஞ்சி ஆணைய ஆய்வுப் பொருளில் உள்ள பஞ்சாயத்து ரணிச் பற்றித்தான் புதுடில்லி மாநாட்டில் அணிரஅ அறிக்கை மூலமாகவும் சிந்திக்கப்பட்டது என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

.................

மேலும்.கட்டுரையை முழுமையாய் -படிக்க :: புதிய தமிழர் கண்ணோட்டம் , தமிழ்த் தேசிய மாத இதழ், சூன் 2008

--
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Wednesday, July 02, 2008

மோசடி நிறுவனங்களும் உலகமய நுகர்வியமும் - க.அருணபாரதி

மோசடி நிறுவனங்களும் உலகமய நுகர்வியமும்
க.அருணபாரதி
 
நுகர்வுப் பண்பாடு உலகமயம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, தானே வளர்த்து வரும் செல்லப்பிராணியான 'நுகர்வியம்' (Consumersim), உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களின்  உழைப்பையும் உடைமைகளையும் சுரண்டுவதற்கு துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வையும் பண்பாட்டையும் ஏகாதிபத்திய நாடுகளின் சீரழிந்த கலாச்சாரமாக மாற்றிக் கட்டமைத்து நாசாமாக்குகிறது. கிராமப்புறங்களை காலி செய்து விட்டு உழைக்கும் மக்களை நகரத்தை நோக்கி படையெடுக்கச் செய்த உலகமயம், "நகரங்களை" முக்கிய சந்தைக் களங்களாகவே பார்க்கின்றன. இந்தியாவின் சென்னை, மும்பை, பெங்களுர், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நுகர்வுக் கலாச்சாரம் ஏற்படுத்தும் பாதிப்புகளால் மக்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைகளாக வாழ்வதையே விரும்புமாறு மாற்றப்பட்டுள்ளனர்.  மக்களை ஒருவகை மனநோயில் ஆழ்த்தி அவர்களின் உழைப்பை உடைமைகளை சுரண்டி கொழுத்திட இந்நுகர்வுக்  கலாச்சாரமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரிதும் பயன்படுகிறது.
 
நுகர்வுப் பண்பாட்டின் ஊதுகுழலாய் ஊடகங்கள்
கடந்த ஆண்டு சென்னை வடபழனி பகுதியில் ஒரு சிறுவன் செல்பேசி வாங்குவதற்காகவும் இருசக்கர வாகனத்திற்காகவும் தன் சக நண்பனையேக் கொலை செய்தது நினைவிருக்கலாம். அதனை ஒரு குற்றவியல் சம்பவமாக மட்டும் கருதி விட முடியாது. ஒரு சிறுவனின் மனதில் நுகர்வுப் பண்பாடு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தான் அச்சிறுவனை அவ்வாறு செய்ய தூண்டியிருக்கிறது. திரைப்படங்கள், செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்கள், விளம்பரப்படங்கள், விளம்பர வெட்டுருக்கள், செல்லிடத்துப் பேசிகள், இணையதளங்கள் என அனைத்து ஊடக சாதனங்களும் உலகமயத்தின் ஊதுகுழலாக மாறி நுகர்வு வெறியை திட்டமிட்டு மக்களிடம் பரப்புகின்றன. அதிகரித்து வரும் மோசடிகள் பன்னாட்டு நிறுவனங்கள் மீதும் அவை விற்கும் பொருட்கள் மீதும் நுகர்வு பண்பாடு; "புனித"ச் சாயத்தை பூசி அவற்றை வாங்குவது தான் "மேட்டுக்குடிமைத்தனம்" என்றும் "கௌரவம்" என்றும் நடுத்தர மக்களுக்கு கூறுகிறது. இது போன்ற பிரச்சாரங்களால் மயங்கிக் கிடக்கும் மக்களை பன்னாட்டு நிறுவனத்தின் பொருள் என்று கூறி போலிப் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றும் மோசடிச்செயல்கள் அதிகரித்துவிட்டன. இது போன்ற மோசடிச் சம்பவங்கள் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களைக் குறிவைத்தும் நடுத்தர உழைக்கும் மக்களைக் குறிவைத்தும் தான் பெரும்பாலும் நடக்கின்றன. ஏற்கெனவே கடன் அட்டை மோசடிகள்(கிரெடிட் கார்டு மோசடி) போன்ற மோசடிகளைத் தொடர்ந்து மேலும் புதிது புதிதாக மோசடிகள் பெருகிவருகின்றன.
 
தங்கக் காசு மோசடி
மேலே குறிப்பிட்ட மோசடி வகையைச் சார்ந்த மோசடி தான் சென்னையில் தற்பொழுது நடந்துள்ள "தங்கக் காசு மோசடி" நிகழ்வு. 'கோல்ட் க்வெஸ்ட்' என்கிற இந்நிறுவனம் தன்னை பன்னாட்டு நிறுவனம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சென்னையில் ஐந்து  நட்சத்திர விடுதிகளில் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள், மேட்டுக்குடி குடும்பப் பெண்கள் என குறி வைத்து அழைத்து கூட்டங்கள் நடத்தி உறுப்பினர்களை சேர்த்து வந்தது. இந்நிறுவனம்  மோசடி செய்ய பயன்படுத்திய வித்தை தான் "மல்டி லெவல் மார்க்கெடிங்" எனப்படும் 'சங்கிலித் தொடர் வணிகம்'.
 
அமெரிக்க அரசின் தன்னாட்சி அமைப்பான  'கூட்டாட்சித் தொழில் ஆணையம்' ( Federal Trade commision) என்ற அமைப்பு வணிக நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றியும், அவை கடைபிடிக்கும் வணிக முறைகள் பற்றியும் ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து அளிக்கும். அவ்வாறான பட்டியலில் சங்கிலித் தொடர் நிறுவனங்களை இந்த ஆணையம் சேர்க்க மறுத்துவிட்டது. தொழில் வாய்ப்பு விதிகளின் கீழ் (Business rules and oppurtunities) சங்கிலித் தொடர் வணிகத்தை அங்கீகரிக்க முடியாது என மேற்கண்ட ஆணையம் கூறிவிட்டது. மார்ச் 2008-இல் இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சங்கிலித் தொடர் வணிகம் வாடிக்கையாளர்களை வணிகம் செய்யத் தூண்டுவதை விட மூளைச் சலவை செய்கிறது. மத நம்பிக்கையை போல விசுவாசத்தை பரப்புகிறது. இந்த வழிமுறையைத் தொழில் வழிமுறையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஆணையம் கூறியது. புகழ் பெற்ற அமெரிக்க சங்கிலித் தொடர் வணிக நிறுவனமான ஆம்வே(Amway) நிறுவனத்தை இந்த "மூளைச்சலவை" வழிமுறைக்கு எடுத்துக்காட்டாக ஆணையம் கூறியது. (பார்க்க: http://www.ftc.gov/opa/2008/03/busrule.shtm) அமெரிக்காவின் வணிக ஆணையத்தின் கண்டனத்திற் குள்ளான ஆம்வே சங்கிலித் தொடர் வணிக நிறுவனம் தமிழகத்தில் எந்த தடையும் இன்றி கொடிகட்டி பறக்கிறது. சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் வாங்குவோரிடம் பொருள் பற்றிய முழுத் தகவல்களை சொல்லாமல் திரித்துக் கூறி வணிகம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் அதனை ஞாயமான வணிகமாக அங்கீகரிக்க முடியவில்லை என்று அமெரிக்க ஆணையம் கூறுவது கவனிக்கத்தக்கது.

திறந்தப் பொருளாதாரமும் தனியார்மயமும் கோலோச்சுகிற அமெரிக்காவிலேயே சங்கிலித் தொடர் வணிகம் ஐயத்தோடு பார்க்கப்படும் போது இந்தியாவில் இந்த மோசடி வணிகத்திற்கு எந்தக் கண்காணிப்பும் இல்லை என்பது வெட்கக் கேடானது. 'கோல்ட் க்வெஸ்ட்'; நிறுவனத்தில் ஒருவர் ரூ 30,000 கொடுத்து உறுப்பினராவார். அந்நிறுவனம் அவருக்கு தங்கக் காசு ஒன்றைக் கொடுக்கும்.
அவ்வாறு சேர்ந்த பின்பு அவர் 3  பேரை உறுப்பினர்களாக இதே போல் சேர்க்க வேண்டும். சேர்த்து விடப்பட்ட மூவரும் அவரவர்கள் 3 பேரை உறுப்பினர்களை சேர்த்து விட்டுக் கொண்டே போவர். எத்தனை பேரை சேர்க்கின்றனரோ அதற்கு ஏற்றாற் போல் முதல் முதலில் சேர்ந்தவர் முதல் அவருக்கு பின் சேர்பவர்கள் அனைவருக்கும் தரகு பணம் கொடுக்கப்படும். இதன் மூலம் எளிதில் பணம் பார்த்துவிடலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரப் படுத்திய பல 'பிரபல'ங்களை யெல்லாம் பேசவிட்டு மூளைச்சலவை செய்து உறுப்பினர்களை சேர்த்து வந்தது இந்நிறுவனம். இப்படி இந்நிறுவனத்தில் சேர்பவர்கள்  அனைவரும் 3 பேரை சேர்த்து விட முடியாது. ஒரு சிலர் தான் சேர்ப்பர். எவரையும் சேர்க்க முடியாதவர்கள் அவர்கள் கொடுத்த பணத்தை இழந்திட வேண்டியது தான். அவர் கட்டிய பணத்தை நிறுவனம் அப்படியே எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு இந்நிறுவனம் சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித் துள்ளனா;. இந்நிறுவனத்தின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் காவல்
துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் ஏமாந்த பலரும் இந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனம் என சொன்னதால் தான் இதில் இணைந்தோம் என்று செய்தி ஊடகங்களுக்கு பேட்டியும் கூட அளித்தனர். பன்னாட்டு நிறுவனம் என்றால் அவ்வளர் கவர்ச்சி.
 
 'விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ்' - வேலை வாய்ப்பு மோசடி
'தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்த்தால் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். அப்பொழுது தான் சுகமான வாழ்க்கை அனுபவிக்க முடியும்' என்று உருவாக்கப்பட்ட மாயையில் வீழ்ந்துள்ள மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடிச் சம்பவம் இது. ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வேலை மோசடிகள் நடப்பது குறித்து நாம் தெரிவித்திருக்கிறோம். இதுவும்
அவ்வகை மோசடியே. 'விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ்' என பெயரிடப்பட்டு சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வந்து கொண்டிருந்த இந்நிறுவனம் 'பணம் கொடுத்தால் வேலை' என்று தகவல் தொழில்நுட்பத் துறையில் எப்படியும் வேலை பார்க்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த எண்ணற்ற வேலையில்லாத இளைஞர்களை அழைத்து பணம் வாங்கிக் கொண்டு பணி அளித்தது. ஒவ்வொருவரிடமும் வசதிகளை பார்த்து ரூ. 30,000 முதல் 2 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு இந்நிறுவனம் அவர்களை வேலைக்கு எடுத்துள்ளது. வேலையில் சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 சம்பளம் தரப்படும் என்றும் உறுதியளித்தது. இளைஞர்கள் பலர் இந்நிறுவனத்தில் சேர்ந்து விட்டு பிறகு இந்நிறுவனத்தில் கிடைக்கும் பணி அனுபவத்தை வைத்து பெரிய நிறுவனங்களுக்கு வேலையில் அமர்ந்து விடலாம் என்ற கனவில் தொகையைக் கட்டி சேர்ந்துள்ளனர். அதற்காக பலர் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் கூட சேர்ந்துள்ளனர். இப்படி சுமார் 3000 பேர் வரை சேர்த்த இந்நிறுவனம் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்தது. இப்பிரச்சினை எழுந்தவுடன் நுனி நாக்கு ஆங்கிலத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆந்திராவைச் சார்ந்த இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள்  நிறுவனத்தை திடீரென மூடிவிட்டு தலைமறைவாகினர். அவர்களை காவல்துறை தொடர்ந்து தேடி  வருகின்றது. இது போன்ற நிறுவனங்கள் சென்னையில் இன்னும் அதிகம் உள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில்  கிடைக்கும் அதிக ஊதியத்திற்காக இது போன்ற சிறு நிறுவனங்களில் சேர்ந்து வேலை செய்யாமலேயே பணம் கொடுத்து போலி பணி அனுபவச் சான்றிதழ்களை (Fake experience certificate) பெற்றிடத் துடிக்கும் இளைஞர்களைக் குறி  வைத்தும் பல மோசடி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இது போன்ற போலி சிறு  நிறுவனங்களைக் கண்டறிந்து அந்நிறுவனங்களின் பட்டியலைக் கூட தயார் செய்து வைத்திருக் கின்றன. 'விப்ரோ' போன்ற பெரிய  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அப்பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தான் நேர்முகத் தேர்வே நடத்துகின்றன.
தீர்வு தான் என்ன?
 
இந்திய அரசு அமெரிக் காவிற்கும் உலகமயத்திற்கும்  நிரந்தர அடிமையாகவே சேவை செய்யும் என்பது காலம் நமக்கு உணர்த்தி வரும் பாடம். தமிழ்த் தேசியமே உலகமயத்தை எதிர்க்கும் சரியான அடித்தளமாகும். ஏனெனில் நுகர்வுப் பண்பாட்டிலிருந்து மீள்வதற்கான மாற்றுப் பண்பாட்டு வழியாக மண்ணின் பண்பாடே விளங்கு கிறது. உலகமய நுகர்வியத்திற்கு எளிதில் இரையாகிறவர்கள் பண்பாட்டு வேரறுந்தவர்களே ஆவர். தமது மண்ணையும்,  மண்ணின் வரலாற்றையும், மண்ணின் அறிவியல் சார்ந்த - அறவியல் சார்ந்த விழுமியங் களையும் நிராகரிக்க வைப்பதின் மூலமே நுகர்வியம் நிலை பெறுகிறது. இந்த நுகர்வியம் உருவாக்குகின்ற தணியாத ஆசையே மோசடி நிறுவனங்களின் வாய்ப்பான முதலீடாகும். கண்மண் தெரியாத நுகர்வுவெறியிலிருந்து மீள்வது தான் இந்த மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல் இருக்க ஒரே வழியாகும். இந்த வழியை உருவாக்குவது அறிவியல் வழிப்பட்ட அந்தந்த மண்ணின் மரபுகளாகும். தமிழர்கள் நம்முடைய மரபிலுள்ள முற்போக்கான, அறவியல் சார்ந்த விழுமியங்களில் தோய்ந்தால் நூலறுந்த பட்டமெனத் திசையற்றுத் திரியும் நுகர்வியத்திலிருந்து மீளமுடியும். உலகமய மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
 
--

-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, July 01, 2008

துரோகியை புறந்தள்ளி முன்னேறும் கூர்கா இன மக்கள்

துரோகியை புறந்தள்ளி முன்னேறும் கூர்கா இன மக்கள்
செவ்வேள்
 
நேற்றைக்குப் போராளியாக இருந்தவர் இன்றும் அவ்வாறே நீடிப்பார் என்பதற்கு எந்த உத்தμஅணிதமும் இல்லை. அவர் தான் சார்ந்த அமைப்பின் உதவியோடு  போராளியாகத்  தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதவர் துருபிடித்துப் போய்விடுவார். முன்னேறும் அμலாறு இத்தகையஅணிμ ஒதுக்கித் தள்ளிவிட்டு ஓடிக் கொண்டே இருக்கும்.  கூர்கா தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் சுபாஷ்  கெய்சிங்குக்கு (குதஞச்ண்ட எஞுடிண்டிணஞ்ட) இதுதான் நிகழ்ந்துள்ளது. கூர்கா தேசிய  இனமக்களின் தன்னேரில்லாத தலைஅμணிக விளங்கியவர் சுபாஷ் கெய்சிங். 1980களில் அஅμது உரிமை உணர்ச்சியுள்ள பேச்சு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைகளில் ஓங்கி ஒலித்தது. கூர்கா மக்களை எழுச்சிகொள்ள வைத்தது. அஅμது தலைமையில் கூர்கா தேசிய விடுதலை முன்னணி, கூர்கா மக்களுக்குத் தனிமாநிலம் கோரி பேணிμணிடியது. ஆயினும் இடையில் சமμசம் ஆகி முடிந்தது. 1986இல் "டார்ஜிலிங் கூர்கா மலையக மன்றம்' என்ற அதிகாரம் கூடுதல் பெற்ற உள்ளாட்சி அமைப்பு நிறுவப்பட்டது. ""தனிமாநிலக் கோரிக்கை தள்ளி  வைக்கப்பட்டுள்ளதே தவிர கைவிடப்படவில்லை'' என்று அப்போது கெய்சிங் சொன்னார். மலையக மன்றத்தின் தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இருந்தார். முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால் கூர்கா மக்களிடையே அதிருப்தி தலைதூக்கியது. 1999இல் கூர்கா தேசிய விடுதலை முன்னணியில் வெளிப்படையாக இந்த மனக்குமுறல் வெடித்து, பலர் வெளியேறினர். மாற்றுத் தலைமை உருவாகாததால் அது வடிவம் பெறாமலேயே இருந்தது.

இந்நிலையில் 2007இல் பிமல் குருசிங் கூர்கா தேசிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறினார். குருங் தலைமையில் 2007, அக்டோபர் 7இல் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைக்கப்பட்டு, கூர்காக்களுக்குத் தனிமாநிலம் கோரி தீவிரமாக போராட தொடங்கியது.  புதிய தலைமைக்காகவே  காத்திருந்தததுபோல் கூர்கா இன இளைஞர்கள் அணி அணியாக கூர்கா ஜனமுக்தி மோர்ச்சாவில் இணைந்தனர். கூ.ஜ.மோ. நடத்தும் பேணிμணிட்டங்களில் கூர்கா இன மாணவர்களே முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றனர். டார்ஜிலிங் அரசு கல்லூரி, குர்சியாங் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலைய விடுதிகள் இவ்வமைப்பின் பாசறையாக விளங்குகின்றன. டார்ஜிலிங், தோர்ஸ், சிலிகுரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூர்கா தாயகம் தனிமாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என பிமல் குருங் வலியுறுத்துகிறார். இப்பகுதிகளில் வாழும் கூர்கா மட்டுமின்றி, வங்காளிகளும் பிற மலையக மக்களும் கூட தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்துத் திμண்டு வருகின்றனர். மேற்கு வங்க சி.பி.எம். அμசாங்கமும், சி.பி.எம். கட்சியினரும் கூ.ஜ.மோ. இளைஞர்களைத் தாக்குவது கடந்த ஓμணிண்டணிகத் தொடர் நிகழ்வாகி விட்டது.

இன்னொருபுறம் கூர்கா தனிமாநிலக் கோரிக்கையை சட்ட வழியில் தடுத்த நிறுத்த மேற்கு வங்க ஆட்சியும், சுபாஷ் கெய்சிங்கும் கூட்டுச் சதியில் இறங்கினர். டார்ஜிலிங் கூர்கா மலையக  மன்றத்தை இந்திய அμசமைப்புச்  சட்டத்தின் ஆறாவது அட்ட வணையில் சேர்த்துவிட முனைந்தனர். பட்டியலினப் பழங்குடி மக்களுக்கு கூடுதல் அதிகணிμம் உள்ள உள்ளாட்சி அமைப்பையும், பிமல் குருங் நே தனிமாவட்ட அமைப்பையும் நிறுவித்  தரும் பிரிவாகும் இது. இதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்டால் டார்ஜிலிங் உள்ளாட்சி அமைப்பை  μ 'தமாக்கிவிடலாம்  கூர்கா தனிமாநிலக் கோரிக்கைக்கு தடை ஏற்படுத்திவிடலாம்; டார்ஜிலிங் நிர்வாகம் தொடர்பாக இனி எது செய்வதாக இருந்தாலும் நாடாளு மன்றத்தில்தான் செய்யமுடியும் கூர்கா மக்களுக்கு அந்த வலு இருக்காது என்பதே மேற்கு வங்க ஆட்சியின் திட்டம். இதுதான் சுபாஷ் கெய்சிங் பதவி ஆசைக்கும் பொருத்தமானது. சி.பி.எம். முயற்சியால் 2007 நவம்பர் 3இல் நாடாளுமன்றத்தில் அμசமைப்புச் சட்ட ஆறாவது அட்டவணைக்குத் திருத்தம் முன்மொழிந்தது மன்மோகன் சிங் அμசு. பா.ஜ.க. இத்திருத்தத்தை எதிர்த்ததால் அது வாக்களிப்புக்கு விடப்படவில்லை. உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு இச்சிக்கல் குறித்து தனது அறிக்கையை 2008 பிப்μஅரி 28 அன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. ""கூர்கா மக்களிடையே இத்திருத்தம் பற்றி கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அம்மக்களிடையே கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது பற்றி புதிதாக மதிப்பீடு செய்து முடிவெடுக்க வேண்டும்'' என அவ்வறிக்கை பரிந்துணிμத்தது. இதற்கிடையில் சுபாஷ் கெய்சிங் தில்லியில் முகாமிட்டு இச்சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுமாறு பிμதமர் மன்மோகன் சிங்கையும், வேறுசில கட்சித் தலைவர்களையும்  வலியுறுத்தினார். தில்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு பிப்μஅரி 18இல் கொல்கத்தா திரும்பிய அவர், டார்ஜிலிங் திரும்ப முடியவில்லை. ஏனெனில் ""து €μணிகி கெய்சிங்கை கூர்கா தாயக மண்ணில் காலடி எடுத்து வைக்க விடமாட்டோம்'' என கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அறிவித்து விட்டது.

கூர்கா மலையகப் பகுதியில் பத்துநாட்கள் முழு அடைப்பு நடைபெற்றது. கூ.ஜ.மோ.வின் மகளிர் அணியினர் காலஅணிμயற்ற உண்ணாப் பேணிμணிட்டம் நடத்தினர். "ஆறாவது பட்டியல் திருத்தம் நிறைவேற்றப்படாது, சுபாஷ் கெய்சிங் மலையக மன்றத் தலைவர் பதவியிலிருந்து மார்ச் 10 அன்று  விலகுவார்' என்று அதிகணிμப்பூர்வ அறிவிப்பு வந்தபிறகே பேணிμணிட்டத்ணித கூ.ஜ.மோ. நிறுத்தியது. பிமல் குருங் தலைமையில் கூர்கா தனிமாநிலப் பேணிμணிட்டம் வீறுகொண்டு நடைபெற்று வருகிறது. இவ்வகையில் 2008, மே7 அன்று சிலிகுரியில் நடைபெற்றப் பேμணியில் இμண்டணிμ இலட்சம் மக்கள் பங்கேற்றது தனிமாநிலக் கோரிக்கை கூர்கா பகுதியில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை என்பதை பறைசாற்றியது. இப்பிμச்சினை குறித்து மேற்குவங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியாவுக்கும், கூ.ஜ.மோ. பிμதிநிதிகளுக்கும் இடையில் 2008 மே 22இல் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தனிமாநிலக் கோரிக்கையை ஏற்க முடியாது மேற்குவங்க மாநிலத் திற்குள் கூடுதல் அதிகணிμம் உள்ள உள்ளாட்சி என்பது குறித்துப் பேசலாம் என புத்ததேவ் கூறியதே முறிவிற்குக் கணிμணம். ""கூர்கா தனிமாநிலம் தஅμ
வேறு எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்'' என பிமல்குருங் உறுதியாகக் கூறிவிட்டார். பேணிμணிட்டம் தொடர்கிறது. ஒரு காலத்தில் பேணிμணிடிக்ணிர் என்பதற்காக, "கல்லானாலும் தலைவர்' என்று சுபாஷ் கெய்சிங் பின்னால் கூர்கா மக்கள் தேங்கிக் கிடக்கவில்லை. ஆயிμம் குறை இருந்தாலும், இருப்பதற்குள் இவர் தேவலாம் என எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியை பிடித்துக் கொள்கிற வேலையில் ஈடுபட்டு  கூர்கா மக்கள் செயலற்றுக் கிடக்கவில்லை. து €μணிகியாகிவிட்ட கெய்சிங்கை அடையாளம் கண்டு ஒதுக்கினர். போர்க்குணமுள்ள புதிய தலைமையை இனங்கண்டு அணி திμண்டக்ர். இதில் மாணவர்களும் இளைஞர்களும் முன்னணியில் நின்றனர். பேணிμணிட்டத்திஅ முன்னேறு கின்றனர். அசாமிலும், காசுமீரிலும் நாகாலாந்திலும் இதுதான் நடந்தது. அவர்கள்தான் தமது பிμச்சினை பற்றி உலகத்தைப் பேச வைத்திருக் கின்றனர். தமிழர்கள் இதிலிருந்து பாடம் பெற வேண்டும். புதிய அμலாறு படைக்க வேண்டும்.

மேலும் பல கட்டுரைகளுக்கு பார்க்க : புதிய தமிழர் கண்ணோட்டம் - தமிழ்த் தேதசிய மாத இதழ்  , சூன் 2008 
 
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

குறிப்பிடத்தக்க பதிவுகள்