Monday, April 30, 2007

உலகத் தொழிலாளர் தினம்


உலகத் தொழிலாளர் தினம்
 
 
 8 மணி நேர வேலைக்காக  சிக்காகோவின் வீதிகளில்
தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தின் நினைவாக
கொண்டாடப்படும்
உலகத் தொழிலாளர்கள் தினம் மே 1
அன்று
புரட்சிகர தலைவர்களின் பாதையில்
தமிழ்த் தேசிய விடுதலைக் காண அணிதிரள்வோம்..

உலகத் தொழிலாளர்களுக்கு மேதின வாழ்த்துக்கள் !

--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, April 24, 2007

தமிழனைக் கொல்ல சிங்களனுக்கு உதவும் இந்தியா

தமிழனைக் கொல்ல சிங்களனுக்கு
உதவும் இந்தியா
க.அருணபாரதி
 
    இந்தியா இலங்கைக்கு தற்பொழுது புதுப்புது நவீன ஆயுதங்களைக் கொடுத்து உதவியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன.  ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் உச்சத்தில் வீற்றிருக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கைகளைக் கண்டு உள்ளம் பூரித்து போன 'இந்தி்'ய அரசின் இந்த செயல் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
    பாகிஸ்தான், சீனம் உள்ளிட்ட நாடுகளால் இந்தியாவிற்கு எல்லையில் அச்சுறுத்தல் இருப்பது  போல இலங்கைக்கு பக்கத்து நாடுகளுடன் எந்தவொரு சண்டையும் இல்லை. இலங்கையில் உள்நாட்டு போர் தான் நடக்கிறதாம். அதற்கு இவ்வளவு ஆயுதங்கள் கொடுத்து உதவும் மனிதாபிமானமுள்ள மானங்கெட்ட  அரசுகள் சொல்கின்றன. இருந்த போதும், இலங்கைக்கு 'பெரியண்ணன்' அமெரிக்கா, 'சின்ன அண்னண்' இந்தியா, 'பங்காளி' பாகிஸ்தான் என பலநாடுகள் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவது வெட்ட வெளிச்சம். பெரியண்னண் அமெரிக்காவை பொறுத்தவரை ஆயுதங்களை பின்லேடன் காசு கொடுத்தால் கூட கொடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு பணம் மற்றும் லாபவெறி அவர்களிடம் ஊறிப் போயுள்ளதை சின்னக் குழந்தையும் சொல்லும் என்பது ஊரறிந்த சேதி.
   
    இலங்கையிடம் போதிய ஆயுதங்கள் இல்லையெனில் பிறர் ஓடி வந்து பிடித்துக் கொள்ளும் நிலைமையும் அங்கில்லை. விடுதலைப்புலிகளும் இலங்கை முழுமையும் எங்களுக்கு கொடு என சொன்னதும் இல்லை. சொல்லப்போவதும் இல்லை. சொல்லவும் மாட்டார்கள். அப்படியிருக்க பெரும் ஆயதங்களை குவிக்க வேண்டிய அவசியமென்ன என்பதனை ''இந்தி''யா சிந்திக்காது. ஏனெனில் அதன் அதிகார பீடங்களில் அமர்ந்து ஆட்சி செய்பவர்களுக்கு ஈழத்தமிழர்கள் இன எதிரிகளாக தென்படுகின்றனர். ஈழத் தமிழரின் நலன் பற்றி மனிதாபிமான அக்கறையுடன் பேசினால் கூட 'ராசீவ் காந்தி.. ராசீவ் காந்தி.. ராசீவ் காந்தி்'' என்று ஒப்பாரி வைக்கும் போலி தேசியவாதிகளான கதர்சட்டை முகாமிற்கு பல்லக்குத் தூக்கி தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தக்கூடிய திராவிட தேசிய கட்சிகளின் போலி முகங்களை தமிழக மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
 
    தான் ஒருத்தர் தான் தமிழன மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாகக் கருதிக் கொண்டு திண்டிவனத்தார் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை கண்டித்து அறிக்கை விடுத்தார். அவரது கண்டனத்தால் சிறு துரும்பும் அசையப் போவதில்லை. அசையாது. ஏனெனில அவரது மகனுக்கு கொடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவிக்கு விசுவாசமாக இருக்க வேண்டாமா? அப்புறம் எதற்கு கண்டன அறிக்கை..,? அதெல்லாம் இங்குள்ள தமிழின உணர்வாளர்களின் ஒட்டை பெற்றிடவே. மத்திய 'இந்தி'ய அரசின் படுபாதக செயலான இச்செயலைக் கண்டு உண்மையிலேயே ஈழத்தமிழர்களின் மீது அக்கறை பிறந்திருக்குமானால், திண்டிவனத்தார் அவரது மகனை பதவிவிலகச் சொல்லி மன்மோகன் சிங் அரசை ஆட்டம் காணச் செய்திருக்க வேண்டும். ஆனால் அவரது பதவி பாசம் அதனை செய்ய சொல்லாது. ''நீங்க திட்டுங்க.. அறிக்கை விடுங்க.. எங்கையாவது போய் போராட்டம் கூட பண்ணுங்க.. நாங்க ஆயுதம் கொடுத்துண்டு தான் இருப்போம்" என்று செயல்படும் மத்திய அரசிடம் தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் பதவி அரசியல் செய்து ஈழத்தமிழர்களை ஒழிக்க நினைக்கும் சிங்கள அரசுக்கு மறைமுகமாக துணை போகின்றன.
 
    அங்கு சிந்தப்படுவது தமிழனின் குருதி என்பதை இவர்கள் என்று உணரப்போகிறார்களோ தெரியவில்லை. இங்கிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தை தடுக்க யோக்கியதை இல்லாத மத்திய கப்பற்படையும் தமிழக அரசும் வாய்ச்சவடால் பேசியே காலம் ஓட்டுவதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிடும் என எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக அரசியல் டீலர்கள் அந்த கடிதத்தால் என்ன நடந்தது என்று எண்ணிப் பார்த்ததுண்டா?
   
    உகாண்டா நாட்டில் சர்க்கரை ஆலை ஒன்றை கட்டுவதற்கு குசராத்தை சார்ந்தவர்கள் முயன்ற போது, சொந்த நாட்டின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு பொங்கியெழுந்த உகாண்டா மக்கள் ஒரு குசராத் சேட்டை கொன்றனர். என்ன நடந்தது? பா.ச.க அத்வானி ஓடிச் சென்று நேரடியாக வெளியுறவு அமைச்சகத்துக்கே சென்று இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உகாண்டாவின் இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக மீனவர்கள் இங்கு சிங்கள் வெறியநாய்களின் வேட்டைக்கு ஆளாகி செத்துக் கொண்டிருக்கும் ''தமிழின''த் தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஈழத்தமிழர்கள் மீது பதவிக்காக பாசம் செலுத்த மறுத்தது "நியாயம்"(?!)  "தர்மம்"(?!). ஆனால் இங்கு அவருக்கு ஓட்டுப்போட்டு மகுடம் சூட்டிய தமிழக மீனவர்கள் மீது அக்கறை செலுத்தாமல் கடிதம் மட்டும் எழுதி பிழைப்பு நடத்துவது நியாமா? தர்மமா?
 
    தனக்கு வேண்டப்பட்ட பதவி அளிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காகவும், மக்களுக்கு அந்த குறிப்பிட்ட பதிவியை வைத்து சேவை செய்ய முடியவில்லையே என்ற மன''வருத்த''த்தாலும் பதவியேற்க மறுத்த போது இருந்த ''வே(ட)கம், (ந)துடிப்பு'', தன் சொந்த மக்களை எந்த நாட்டுக் காரனோ சுட்டுக் கொல்லும் பொழுது ஏனில்லை? தடுப்பது எது?
 
    இவ்வளவு நடந்த பின்னரும் தமிழக மீனவர்கள்  மீண்டும் அவருக்கோ அல்லது செயலற்ற அறிக்கை விடும் செயலலிதாவுக்கோ தான் ஓட்டுப்போட்டு தனது விசுவாசத்தை காட்டி வெற்றி பெற வைக்கப்போவது உறுதி. மக்களுக்கு இல்லாத ரோசம் தலைவர்களுக்கு மட்டும் வந்துவிடுமா என்ன? காலம் பதில் சொல்லும் என நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.... தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் தாம் தமிழினத்தின் சாபமும் சோகமும்.. மக்கள் இதனை புரிந்து கொள்ளாதவரை தமிழனை கடலில் மட்டுமல்ல கரையில் வந்து கூட சுட்டுவிட்டு போவான் சிங்களன்.. ஏனெனில் தமிழினத்தை விற்று பதவி அரசியலில் திளைக்கும் தலைவர்கள் இங்கு ஒரு வார்த்தையை மட்டும் தவறாமல் உபயோகிப்பார்கள் - "கூட்டணி தர்மம்".

மீண்டும் சீறீய தமிழரின் வான்படை

பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்
செவ்வாய்க்கிழமை 24 ஏப்ரல் 2007 04:33 ஈழம்
வவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ (புதினம்.காம்)

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில் தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன.

பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது துணிகரமாக குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திய தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.

இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காப் படைகளின் கட்டளை மையமாக உள்ள பலாலித்தளத்திற்குள் குண்டுகளை தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளமையானது சிறிலங்காப் படைத்துறையினருக்கும்இ அரசாங்கத்துக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளத்திற்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்த நிலையில் என்ன தாக்குதல் நடக்கின்றது என்று தெரியாத அளவுக்கு பலாலி படைத்துறை மையம் திகைப்படைந்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற வேளையில் பலாலிப் படைத்தள மையத்தில் பெரும் குண்டுவெடிப்பு ஒலிகள் கேட்டதனையும்இ தீப்பிழம்புகள் எழுந்துள்ளதனையும் நேரில் பார்த்த சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழீழ வான்படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தின் மின் வழங்கல் உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன்இ பலாலி மையத்தில் இருந்து இருந்து இயங்கும் செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி படைத்துறையின் தலைமையக மையத்தில் ஆயுதக்களஞ்சியம்இ முதன்மை இராணுவ மருத்துவமனைஇ கவசப்படைப்பிரிவு மையம்இ உள்ளிட்டவையும் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானுர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன்இ சிறிலங்கா வான்படையினரின் வான் பொறியியல் பிரிவு ஒன்றும் இங்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

 பலாலி வானூர்தி நிலையம் வான் வழியான சிறிலங்கா படைத்துறையின் முதன்மை வழங்கல் மையமாகவும் இருந்து வருகின்றது. படைத்துறையினர் காயமடையும் போது அவர்களை மேலதிக சிகிச்சைக்காக பலாலியிலிருந்தே வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழமையாகும்.

கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் வான்புலிகளின் தளங்கள்இ வான்புலிகளின் இலக்குகள்இ விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக்கூறிக்கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது வலிமையை நிரூபித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழீழ வான்படையினரால் பலாலி படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சிறிலங்கா படைத்தரப்பு மூடி மறைக்கின்றது.

கடந்த 1994 ஆம் ஆண்டு பலாலி படைத்தளம் ஓடுபாதைக்குள் கரும்புலிகள் அணி ஒன்று ஊடுருவி தாக்குதல் நடத்தி உலங்குவானூர்தி ஒன்றை அழித்திருந்தனர்.

இதன் பின்னர் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வானூர்தி ஓடுபாதையை சேதமாக்கியிருந்தனர்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காப் படையினர் நடத்திய வலிந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையின் போதுஇ பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில்  தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு போக்குவரத்து உலங்குவானூர்தியும் சேதமடைந்திருந்தன.

இன்று தமிழீழ வான்படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை மற்றும் பலாலி வான்படையினரின் ராடார்களின் இயக்கத்துக்கு மத்தியில் வெற்றிகரமாக சென்று அடர்ந்த இருள்வேளையில் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருக்கின்றனர்.

தமிழீழ வான்படையினரின் இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காப் படையினர்இ தமது முன்னரங்க நிலைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

Friday, April 13, 2007

நாளை அம்பேத்கார் பிறந்தநாள்


டாக்டர் அம்பேத்கர்
தெ.மதுசூதனன்

அம்பேத்கர் பெரிய அறிஞர். இந்தியாவுக்கு அரசியல் சட்டம் வகுத்தளித்த மேதை. முதன்முதலில் வெளிநாடு சென்று டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞர். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது புக்கர் வாஷிங்டனின் கருத்துக்களால் கவரப்பட்டுத் தனது வாழ்நாளைத் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட அண்ணல். தனது பார்ப்பன ஆசிரியரின் பெயரைத் தன் பெயராக வைத்துக் கொண்ட நன்றி மறவாப் பெருந்தகையர். இப்போதெல்லாம் இப்படி அம்பேத்கரைக் கெளரவப்படுத்தி அறிமுகம் செய்யும் போக்கு பரவலாக உள்ளது.

இன்னொருபுறம் தலித் மக்களின் கலங்கரை விளக்காகக் கருதுவதும் அந்த விளக்கின் ஒளியில் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும் போக்கும் சில மட்டங்களில் உண்டு. அத்துடன் அம்பேத்கரை ஒரு மீட்பராக, தெய்வாம்சம் பொருந்தியவராக நிறுத்தப்படும் போக்கும் உண்டு.

எவ்வாறாயினும் அம்பேத்கர் குறித்த அக்கறை அவரது சிந்தனை வழியில் இயக்கமாக அணிதிரளும் போக்கு அவரது நூல்கள் கட்டுரைகள் யாவும் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டித் தமிழ்ச் சூழலில் அதிகம் கவனிப்புப் பெற்றது. இதுவரையான தமிழர்களின் செயற்பாட்டில் புதிய திசை திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்திய விடுதலைக்குப் பின் சமூக அரசியல், கருத்தியல் சக்திகளால் உருவாக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் படிமம் தமிழ்ச் சூழலில் தற்போது இல்லை. மாறாகத் தலித் மக்களுடைய குரலாக, தலித் சிந்தனையாளராக, கலக அரசியலாளராக எனப் பன்முக அடையாளப்படுத்தலின் புதிய பரிமாணமாக, மறு கண்டுபிடிப்பாகவே அம்பேத்கர் உள்ளார்.

இந் நிலையில் அம்பேத்கரிடம் இருந்த பல்வேறு தன்மைகளையும் செயல்பாடுகளையும், அவரது கொள்கைச் செயற்பாட்டில் ஏற்பட்ட சிதைவுகளையும், இவற்றுக்கான பின்புலங்களையும் சக்திகளையும் எனப் பன்முகப்பட்ட ரீதியில் புரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அம்பேத்கரை வெறும் மீட்பராக, தெய்வமாக மட்டும் நோக்காமல் அவரது கருத்து நிலைத் தொடர்ச்சியின் இன்றைய பொருத்தப்பாடு என்ற பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். சம காலச் சமூக அரசியல், கருத்தியல் வரலாற்றினை அம்பேத்கர் வழியே புரிந்துகொள்வதுடன் மேலும் அவரது கருத்தியலை வளர்த்துச் செல்ல வேண்டும்.

இந்த அடிப்படையில் அம்பேத்கரின் சமூகக் கலகக் குரலின் பிரதான அம்சங்களாகச் சிலவற்றை நாம் அடையாளப்படுத்த முடியும். −ட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலைகளிலும், அதிகாரங்களிலும் பங்கு கோருதலும் அதன் மூலமாகத் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலையை ஓரளவு சாத்தியப்படுத்தலும்.

இந்துமத எதிர்ப்பு
பொருளியல் சிந்தனை
தாராள சனநாயகத்தில் ஈடுபாடும் பயிற்சியும்
சீர்திருத்தவாத முற்போக்குச் சிந்தனை
ஆன்மிக ஈடுபாடு
மக்கள் நலனுக்கான செயற்பாடு

அம்பேத்கரின் பன்முக ஆளுமைகள் அவரது காலத்தின் பார்வையிலும் பணிகளிலும் தலித் மக்களின் விடுதலைக்கான சிந்தனைச் செயல்பாட்டுத் தளத்தை வலிமையாக்கி உள்ளது.

அம்பேத்கர் வலியுறுத்திய 'இடஒதுக்கீடு' தொடர்பாக மட்டும் தற்போது நாம் கவனத்தைக் குவித்துக் கொள்வோம்.

'இந்தியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அரசு வேலை வாய்ப்பு முழுவதும் சூழ்நிலை காரணங்களால் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடன் தொடர்புடைய சாதிகளினருக்கும் உரிய சொத்தாகி விட்டது. இது ஆபத்தானது. பார்ப்பனரல்லாத மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் இசுலாமியர்கள் அனைவருக்கும் 'இந்தியா' என்ற அங்கீகாரம் அளிக்கப்படாமல் இந்த வாய்ப்புகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுப் பணிகளில் தங்களுக்குரிய பங்கைப் பெறுவதற்கெனத் தீவிரப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இப் போராட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படைக் காரணம் பொதுப்பணிகளில் அரசுக்குத் தேவைப்படுவது திறமை மட்டுமே. சாதிகளையும், குலங்களையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்பதுதான். கல்வித் திறமையே, திறமையின் அடிப்படையாகக் கொண்டு பொதுப்பணிகளுக்குப் போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என்கின்றனர். கல்வி பெறுவதற்கான அடிப்படைச் சூழ்நிலை இங்கு இல்லை என்பது தெளிவாக உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசுப் பணிகளுக்குத் தேர்வுப் போட்டிகள் மூலமே செல்ல வேண்டும் என்பது அவர்களை ஏமாற்றுவதாகும்'' இவ்வாறு அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இதனாலேயே கல்வியைப் பரப்புவது, அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் பெற்றுத் தருவது, கிராமப் புறங்களிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்நிலையை முன்னேற்றுவது ஆகியவற்றை வாழ்க்கையின் மூன்று குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுள்ளார். இதன் விளைவாக மத்திய அரசுப் பணிகளில் முதன் முதலாக 1943-இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 8.33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னால் 1947-இல் இது 12.5 சவீதமாக உயர்த்தப்பட்டது.

நாடாளுமன்ற அமைப்பிலும் குடியாட்சி மதிப்பீடுகளிலும் அசையாத நம்பிக்கை கொண்டு செயற்பட்டவர் அம்பேத்கர். −தனாலேயே அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் பெற முடிந்தது. −தனால் −ந்துப் பெரும்பான்மையினருக்கு எதிரான தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும் என நம்பினார்.

1947-இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ''−ந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் உள்ளனர். −ம் மக்களுக்கான வாய்ப்புகள் விகிதாசாரப்படி அளிக்கப்படா விட்டால், எஞ்சியுள்ள 70 சதவீத மக்கள் முழுமையாக முன்னேறினாலும் ஒட்டு மொத்த −ந்தியாவின் முன்னேற்றம் 50 சதவீதத்தைத் தாண்டாது. எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், −ட ஒதுக்கீட்டின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். −துவே, ஒட்டுமொத்த −ந்தியாவின் உயர்வுக்கு வழி வகுக்கும் எனக் குறிப்பிட்டார்.

சமூகத்தில் தீண்டாமை ஒழியும் வரை −டஒதுக்கீடு −ருக்க வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியல் சட்ட அவையில் தான் பங்கு கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

ஆனால், அன்று முதல் −ன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் விகிதாசாரப்படி −டஒதுக்கீடு கிடைக்கவில்லை. ஏறத்தாழ 17 ஆயிரம் −டங்கள் −ன்றளவும் நிரப்பப்படாமலே உள்ளது. தமிழகத்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெறுகிறது. திராவிட −யக்கத்தின் முதன்மையான கொள்கையில் ஒன்று −ட ஒதுக்கீடு. ஆனால், அவர்கள் அதைச் சரிவர −ன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆலய நுழைவு போன்றவற்றையெல்லாம் விட கல்வி மற்றும் சமூகத் தரத்தில் முன்னேற்றம் பெறச் செய்வதே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்கான சிறந்த வழி என்றும் கருதினார் அம்பேத்கர். சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிக அளவில் பங்கு பெறுவதும் −தற்குத் துணைபுரியும் என அவர் நம்பினார். பாராளுமன்றத் தொகுதிகள் என்பன அவரது முயற்சியின் விளைவே.

−ன்றுள்ளது போல் வெறும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளும், பிற சாதியினருடன் −ணைந்து வாக்களிக்கும் உரிமையும் மட்டும் அவர் கேட்கவில்லை. மாறாக சிறப்பு வாக்காளர் தொகுதி. −தன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் −ரு வாக்குரிமைகளைப் பெறுவர். பிற சாதியினருடன் −ணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வேட்பாளராக நிற்கும் தொகுதிக்கான வாக்குரிமை மற்றது.

தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை மட்டுமே நம்பி நின்று வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளருக்கு எந்த வகையிலும் ஆதிக்கச் சாதியினரை நம்பியிருக்கும் அவசியம் −ருக்காது. மாறாக −ரு சாராரும் வாக்களிக்கும் தொகுதியாக −ருந்தால் ஆதிக்கச் சாதியினரின் 'நம்பிக்கைக்குகந்த' தாழ்த்தப்பட்டவரே வெற்றி பெற முடியும். அம்பேத்கரின் முயற்சியின் விளைவாகவே அன்றைய ஆங்கிலேய அரசு −த்தகைய உரிமைகளை வகுப்புப் பிரதிநிதித்துவத் தீர்ப்பு (ஆகஸ்டு 1932) மூலம் தாழ்த்தப்பட்டோருக்கும் −தரச் சிறுபான்மையினருக்கும் அளிக்க நேர்ந்தது.

காந்தி, −சுலாமியருக்கும் சீக்கியர்களுக்கும் −த்தகைய உரிமைகள் வழங்கப்படுவதை ஏற்றுக் கொண்டார். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிறப்புத் தொகுதிகள் வழங்குவதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே காந்தி எரவாடா சிறையில் −ருந்தபடியே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். −தனால் சிறப்பு வாக்காளர் கோரிக்கையைக் கைவிடும்படி சகல தரப்புகளிலிருந்தும் அம்பேத்கருக்கு அழுத்தம் கொடுக்கப்படலாயிற்று.

காந்தியின் உண்ணாவிரதத்தை 'அரசியல் ஸ்டண்ட்' என அம்பேத்கர் எள்ளி நகையாடினார். அன்றைய உயர்சாதிகளின் பத்திரிகைகள் அம்பேத்கரைத் துரோகி எனச் சாடின. அன்றுள்ள நெருக்கடி அரசியல் சூழலில் சிறப்பு வாக்காளர் தொகுதி என்ற கோரிக்கையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. −தற்குப் பதிலாக −ன்றுள்ள வடிவிலான ஒதுக்கப்பட்ட தொகுதி என்கிற நிலைமை பூனா ஒப்பந்தத்தின் மூலம் (செப்.24,1932) ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

''என் முன்னால் −ரண்டு வெவ்வேறான பணிகள் கடமைகள் பிரச்சனைகள் −ருந்தன. மனிதத் தன்மையுடன் - மனிதப் பண்புடன் மரணத்திலிருந்து காந்தியைக் காப்பாற்றும் கடமை ஒரு புறம். பிரதமர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க முன் வந்துள்ள அரசியல் உரிமைகளை - அவர்களுக்குக் காப்பாற்றித் தரும் கடமை மற்றொருபுறம்.

−ந் நிலைமையில் மனித நேயத்தின் கட்டளையை அறைகூவலை ஏற்க முன் வந்தேன். திரு. காந்தி மன நிறைவு அடையும் வகையில் வகுப்புத் தீர்வு மாற்றப்படுவதற்கு −ணங்கினேன். −வ்வாறு உருவான உடன்பாடே பூனா ஒப்பந்தம் என்பதாகும்.''

மீண்டும் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு, சிறப்பு வாக்காளர் கோரிக்கையை முன் வைத்தது (செப். 23, 1944). ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குரிமையைப் பறித்த பூனா ஒப்பந்தம் ஒழிய வேண்டும் என்கிற குரலை −றுதி வரை அம்பேத்கர் ஒலித்து வந்தார். சிறப்பு வாக்காளர் தொகுதி என்ற கோரிக்கை −ன்றுவரை கைகூடவில்லை. மண்டல்குழு அறிக்கைக்கான எதிர்ப்புக் குரலோடு தாழ்த்தப்பட்டவர்களுக்கான −ட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டுமென்ற குரல்களும் ஆங்காங்கு வன்மையாக ஒலித்ததை நாம் மறந்து விடக் கூடாது.

அம்பேத்கார் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் தாழ்த்தப்பட்ட மக்களை மேம்படுத்த இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் - கட்சிகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வியறிவு பெற்றவர்கள் 22 சதவீதத்தினர் தான். −ந்த மக்களில் 50 சதவீதத்தினர் கூலி விவசாயிகள். நாட்டிலுள்ள கொத்தடிமைகளில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 4% மட்டுமே உள்ளனர். நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 30% ஆக இருக்க, தாழ்த்தப்பட்டோரது மக்கள் தொகையில் இது 50% ஆக இருக்கிறது.இதுவே தற்போதைய நடைமுறை.

ஆக, தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இட ஒதுக்கீடு பயனுள்ளதாகவே இருக்கும்.இந்திய அரசியல் சட்டம் கூட இட ஒதுக்கீட்டை முழுமையாக அங்கீகரிக்கிறது. இருப்பினும் இட ஒதுக்கீடு சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. காலம் காலமாக வாய்ப்பு வசதிகள் பெற்று அதிகாரத்தில் இருந்து வரும் ஆதிக்கச் சாதியினர் தங்களின் அதிகாரத்தை வாய்ப்புகள் வசதிகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க மறுக்கின்றனர்.

ஆனாலும், தீண்டாமையும் சாதிக் கொடுமைகளும் இருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருந்தாக வேண்டும் என்கிற அம்பேத்கரின் சிந்தனை இன்றும் நினைவு கூரப்பட வேண்டும்.

"அமைச்சரவைக்குள் நடைபெறும் அதிகார அரசியலிலோ நிரப்பப்படாமல் உள்ள துறைகளைப் பறிப்பதற்கு நடைபெறுகின்ற போட்டிகளிலோ - நான் ஒருபோதும் பங்கு கொண்டதில்லை. நான் தொண்டு செய்வதில், அதிலும் அமைச்சரவையின் தலைமையை ஏற்றுள்ள பிரதமர், எனக்கு ஏற்ற அளவு எனக் கருதி அளித்த பதவியில் - பணி செய்வதிலேயே நம்பிக்கை கொண்டுள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை.

இந்த அரசின் மீது எனக்கு அதிருப்தி ஏற்படுத்திய மற்றொரு செய்தியை இப்பொழுது குறிப்பிடுகின்றேன். அது பிற்படுத்தப்பட்ட மற்றும் தீண்டத்தகாத மக்களை இவ்வரசு நடத்தும் முறையாகும். அரசியல் சட்டத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்பதற்காக நான் பெரிதும் வருந்துகின்றேன். இப் பணியை, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட குழு அளிக்கின்ற பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக விடப்பட்டதாகும். அரசியல் நிர்ணயச் சட்டம் நிறைவேற்றி ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இதற்கென குழு அமைப்பது குறித்து அரசு இதுவரை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

தீண்டத்தகாத மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், எனக்கு நிறைவளிப்பதாக இல்லை. இருப்பினும் அரசு அவற்றைச் செயல்படுத்துவதில் கண்டிப்பைக் காட்டும் என்கிற நம்பிக்கையிலும் - அவை பயன்படும் என்கிற எண்ணத்திலும் அவற்றை நான் எற்றுக் கொண்டேன். ஆனால், தீண்டத் தகாத மக்களின் இன்றைய நிலை என்ன? நான் பார்த்தவரையில் முன்பிருந்த நிலையே நீடிக்கின்றது. பழைமை வாய்ந்த அதே கொடுங்கோன்மை, பழமையான ஒடுக்குமுறை, பழமையான பாகுபாடுகள் முன்பும் இருந்தன.இப்பொழுதும் இருக்கின்றன.''

இவ்வாறு தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிய போது (11.10.1951) வெளியிட்ட அறிக்கையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்தக் கசப்பான அனுபவம் இன்றும் தொடர்கிறது. இதனையே குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் தனது குடியரசு தின உரையில், ''இந்தியச் சமுதாயத் தளத்தில் ஒரு வகையான எதிர்ப்புரட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. தலித்துகளுக்குக் கொடுக்கப்படுகின்ற சில சலுகைகள் அவர்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படுவதில்லை. மாறாக அது அவர்களது உரிமை என்னும் சமுதாய நீதியைக் காக்கும் ஒரு செயல்பாடாகவே உள்ளது என்பதை நாம் மறந்து விடுகிறோம்'' என்றார்.

ஆக, அம்பேத்கர் அன்றே வலியுறுத்திய தனித்துவச் சிந்தனை, குடியரசுத் தலைவர் உரையிலும் வெளிப்பட்டுள்ளது. 'இந்தியாவில் தீண்டத் தகாத மக்களின் நிலையினைப் போன்று உலகில் வேறு எங்கேனும் ஒர் இனத்தின் நிலை இருக்குமா?'' என்று அம்பேத்கார் அன்று கேட்டதையே இன்றும் நாம் கேட்க வேண்டியுள்ளது.

நாளை அம்பேத்கார் பிறந்தநாள்
 
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா?

 
தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா?
 
"இப்பொழுதெல்லாம் புத்தாண்டென்றால் ஆங்கிலப் புத்தாண்டு என்றாகிவிட்டது...." என சுப்பு சொல்கிறார். அது புத்தாண்டு பற்றிய அவரது மனத்தடங்கலைக் காட்டுவதாக உள்ளது.
 
என்ன செய்வது? எப்படி செய்திப் பரிமாற்றத் துறையில் ஆங்கில மொழி உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே போல் ஆங்கிலப் புத்தாண்டும் இனம், பண்பாடு ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உரித்தான ஒரு புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறித்தவத் தமிழர்களுக்கு சனவரி முதல் நாளே புத்தாண்டு என்பது மனங்கொள்ளத்தக்கது.
 
ஆங்கில மொழி ஆதிக்கத்தின் காரணமாக இந்த நூற்றாண்டு முடியுமுன்னர் தமிழ் உட்பட 100 மொழிகள் அழிந்தொழிந்து விடும் என அய்க்கிய நாடுகள் கல்வி, பண்பாடு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
 
ஆங்கில மொழி ஆதிகத்துக்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றை வரிசைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
 
1) ஆங்கிலேயர்கள் 18 – 20 ஆம் நூற்றாண்டு வரை பலநாடுகளைப் பிடித்து ஆண்டார்கள்.
 
2) ஆங்கிலேயர் நாடுகளைப் பிடித்து அங்கெல்லாம் புலம்பெயர்ந்த போது தங்களது மொழியை அந்தந்த நாடுகளில் ஆட்சிமொழியாக வைத்துக்கொண்டார்கள்.
 
3) ஆங்கிலேயர் அறிவியல், மருத்துவம், வரலாறு, வானியல் போன்ற துறைகளில் ஈட்டிய அளப்பரிய சாதனை.
 
ஆங்கில புத்தாண்டு புகழடைவதற்கு முக்கிய காரணம் உரோமர்கள் கண்டு பிடித்த நாள்காட்டியே ஆகும். முதலில் உரோம பேரரசர் யூலியஸ் சீசர் (கிமு 100 – கிமு 44) அவர்களே ஒரு புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். கிமு 46 ஆண்டின் நாள்களை 445 நாள்களாக அதிகரித்தார்.
 
இது சமய விழாக்களை உரிய காலத்தில் கொண்டாடும் முகமாகச் செய்யப்பட்டதாகும். சீசர் (Sosigenes) என்ற வானியலாளரின் அறிவுரைப்படி ஒரு ஆண்டின் நாள்களை 365 எனவும் நான்காண்டுக்கு ஒருமுறை பெப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு 1,000 ஆண்டு காலத்தில் 8 நாள்களை அதிகரிகச் செய்துவிட்டது.
 
கிபி 1563 யூலியன் நாள்காட்டி அடிப்படையில் வேனில் சமயிரவு (vernal equinox) மார்ச்சு 100 இல் இடம்பெற்றது. ஆனால் வேனில் சமயிரவு 21 க்கு முந்தி வரக்கூடாது என போப்பாண்டவர் கிறெகோறி முடிவு செய்தார். எனவே போப்பாண்டவர் 1582 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் பத்து நாள்களைக் குறுக்குமாறு ஆணை பிறப்பித்தார். அதனால் ஒக்தோபர் 4, 1582 (யூலியன்) அடுத்து ஒக்தோபர் 15 (வெள்ளிக்கிழமை) தொடர்ந்தது. மேலும் ஒரு ஆண்டு 00 முடிந்து அதனை 400 ஆல் பிரிக்க முடிந்தால் பெப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு நாளைக் கூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
 
இன்று உலகம் முழுதும் கிறெகோறி செம்மைப்படுத்திய நாள்காட்டியே பின்பற்றப்படுகிறது. அந்த நாள்காட்டியின் படி சனவரி முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகும்.
 
ஆங்கில புத்தாண்டுபற்றி மனத்தடங்கலை வெளியிட்ட சுப்பு "சனவரி ஒன்றுக்கு முன் சித்திரை ஒன்று என்னவாயிற்று?" எனக் கேட்கிறார்.
 
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!
 
சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!
 
இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையா தலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)
 
60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)
 
மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழிஇ அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டுஇ வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.
 
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.
 
இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
 
இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், சமுதாயம், நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.
 
இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள்.
 
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
 
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.
 
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்" என்று விளக்கம் தந்தார்.
 
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.
 
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2007) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038.
 
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
 
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.
 
தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை இந்துக்களது புத்தாண்டாகக் கொண்டாடலாம்.
 
தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.
 
எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். .
 
தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
 
 
நன்றி: நக்கீரன்

--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

தமிழ் புத்தாண்டுத் தினமா ?????

 தைப்பொங்கல் தினமே
தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!
சபேசன், அவுஸ்திரேலியா
 

தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், 'பண்டைய காலக்கணக்கு முறை' வழியாகவும் முன்வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்.!

"பொங்கல்" என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?

பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.

'சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா'-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

இதனை சற்று ஆழமாகக் கவனிப்போம்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்.! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல் வாடை, ஆகியவை மாறிமாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக்காலச் சேர்வையைத் தமிழன் 'ஆண்டு' என்று அழைத்தான்.-என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.

தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை 'அறிவர், பணி, கணியன்' -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் 'அறிவர்கள்' குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் 'பெருங்கணிகள்' இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது.

தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் 'தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social History of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். 'வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்' என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு-அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள். என்பதே உண்மையுமாகும்.

தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான், என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்.!)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.!

பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களை தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.

பருப்புத் தவிடு பொங்க - பொங்க
அரிசித் தவிடு பொங்க - பொங்க
-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் 'பொங்க-பொங்க' என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் 'HONGA-HONGA' என்றே பாடுகிறார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

"சித்திரை வருடப்பிறப்பு" என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. . .(சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா?- தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!

"தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!!"

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்.! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட 'கதை' ஒன்று புனையப் பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்.! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்.! இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.!

தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரறாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

1935ம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

"பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டஸ் சொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி" - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.

"இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்"- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.

ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!

பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை 'போகி' (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி-போகியது- போகி) இத்தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)

தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகு படுத்தல, பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் தைப்பொங்கலின் மறுநாள் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் 'காணும் பொங்கல்' என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும் புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது.

 யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள் அரங்கேற்ற நிகழ்வுகள் புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டி தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில் எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாக சொல்லட்டும்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவர்கள். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும். என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்து சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு தமிழர் நாகரிகமும் பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும். சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

 

 

Wednesday, April 11, 2007

சோதிடம், மந்திரம் என்பவையெலாம் மோசடியே!

சோதிடம், மந்திரம்
என்பவையெலாம் மோசடியே!

`மந்திரத்தால் மாங்காய் விழுமா?' என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இதன் பொருள் அவ்வாறெல்லாம் நடக்காது என்பதுதான். ஆனாலும் நடைமுறையில் மக்களிடம் இருக்கும் பேராசையும், பயமும் இவற்றை யெல்லாம் நம்பும்படிச் செய்கின்றன.
ஒரே ஒரு நிமிடம் இந்த நம்பிக்கையாளர்கள் சிந்தித் தாலே மாந்திரீகத்தின் பித்தலாட்டம் தோலுரிந்து போய்விடும்.
மாந்திரிகம் செய்கிறேன் என்று சொல்லி மார்தட்டும் அந்தப் பேர்வழிகள் அதற்காக ஏராள பணம் கேட்பது ஏன்? அந்த மாந்திரிகத்தால் தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில்தானே பணம் கேட்கிறார்கள்?
ஆசை வெட்கம் அறியாது - அச்சம் அறிவைத் தேடாது என்கிற முறையில்தான் மக்கள் நடந்து கொள்கிறார்கள். இதில் படித்தவர்கள் பாமரர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது.
தங்கள் சரகத்தில் கொலைகள் அதிகம் நடக்கின்றன என்று சொல்லி காவல் நிலையத்திலேயே மந்திரவாதிகளை அழைத்து சடங்குகளைச் செய்யும் பரிதாபம் நிகழும்போது, பொதுமக்களைப் பற்றிச் சொல்வானேன்?
மதம் - அது விளைவித்த கேடுகள் ஒன்றல்ல இரண்டல்ல! பக்தி என்ற பெயரால் புத்தியை முதலாவதாக நாசப்படுத்துகிறது - காலத்தைக் கரியாக்குகிறது - பொருளை வீணடிக்கிறது. இந்த மூன்றும் மனிதனுக்கு எவ்வளவு அவசியமானவை? இவற்றைப் பறிமுதல் செய்கிறது சோதிடமும், மந்திரமும் என்றால், ஒரு மக்கள் நல அரசாங்கம் இதற்குக் காரணமானவர்களை என்ன செய்ய வேண்டும்? கொலைக் குற்றத்தினும் கொடிய குற்றமாகக் கருதி தண்டிக்க வேண்டாமா?
அரசமைப்புச் சட்டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று அடிப்படைக் கடமையாகச் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? இதற்கு மாறான நடவடிக்கைகளைத் தண்டிக்க வேண்டாமா?
நான்கு நாள்களாக ஒரு செய்தி அடிபடுகிறதே! நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியைச் சேர்ந்த பெண் மந்திரவாதியான பத்மினி என்பவர் மந்திரத்தின் மூலம் தொழில் வளம் பெறும், செல்வம் கொழிக்கும். கெட்டது அழியும் - இந்தந்த வகையில் காளி பூஜை செய்யவேண்டும் என்று கதைவிட்டு, ஏராளமான அளவுக்குச் சொத்துகள் குவித்தார் என்றும், வங்கிகளில் கோடிக் கோடியாக பணம் இருக்கிறது என்றும் பத்தி பத்தியாகச் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. நாடெங்கும் முகவர்களை ஏற்பாடு செய்து மந்திரம் என்பதை ஒரு தொழில் முறையாக நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்ற முறையிலே அந்தப் பெண் மந்திரவாதியின்மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
இதற்குமுன் மயிலாடுதுறையை அடுத்த வைத்தீ°வரன் கோயில் என்ற ஊரில் நாடி சோதிடம் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றமும், வீடுமாக அலைந்து கொண்டு இருக்கிறார். இவற்றிற்கெல்லாம் பிறகாவது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டாமா?
சோதிடமும், மாந்திரிகமும் உண்மையானால் இவர்கள் ஏன் சட்டத்திற்குள் சிக்குகிறார்கள். சிறைச் சாலைக்குள் ஏன் தள்ளப்படுகிறார்கள்?
சாயிபாபா கதையே நாறுகிறதே! மாயாஜாலம் பெயரில் பிரதமர் நரசிம்மராவுக்குக் கொடுத்த தங்க சங்கிலி, வீடியோவில் பதிவாகி, அதன் குட்டு அம்பலமாகி விடவில்லையா? அவரிடம் ஆசி பெற்றுச் சென்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர் டெண்டுல்கரின் இப்போதைய நிலை என்ன? உலகக் கோப்பைக்கான போட்டியில் முகம் வீங்கி வெளிறிப் போய் வெளியேறியதுதானே மிச்சம்?
பொது மக்கள் இத்தகு படிப்பினைகளுக்குப் பிறகாவது கொஞ்சம் சிந்திப்பார்களாக

 
நன்றி: விடுதலை தலையங்கம் 11-04-2007

-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Monday, April 09, 2007

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள அத்தியூரைச் சேர்ந்த பழங்குடி இருளர் பெண் விஜயாவை, ஒரு திருட்டு வழக்கில் அவரது பெரியப்பா மகன் வெள்ளையனைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறுபேர் கடந்த 29-7-1993 அன்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பல்வேறு போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-7-1997 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் புதுச்சேரி போலீசார்களான நல்லாம் கிருஷ்ணராய பாபு (உதவி ஆய்வாளர்), வி.ராஜாராம் (தலைமைக் காவலர்), ஜி.பத்மநாபன் (காவலர்), கே.முனுசாமி (காவலர்), ஜி.சுப்புராயன் (காவலர்), கே.சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்) ஆகியோர் விஜயாவை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட விஜயாவின் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் முன்னாள் - அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம். ரகுமான் ஷெரிப் அவர்கள் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது காவல்துறையினர் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.

அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.ரகுமான் ஷெரிப், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், புதுச்சேரி கோ.சுகுமாரன், பேராசிரியர் பா.கல்யாணி ஆகியோரின் ஒத்துழைப்பாலும், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆதரவோடும் 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் கடந்த 11-8-2006 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு. என். ரத்னராஜ் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். புதுச்சேரி போலீசார் ஆறுபேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 31,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் விஜயாவுக்கு 13 ஆண்டுகள் கழித்து நீதிகிடைத்தது அனைவருக்கும் ஆறுதல் அளித்தது.

இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் கடந்த 6-11-2006 மற்றும் 8-11-2006 ஆகிய நாளிட்ட உத்தரவின்பேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகம் ஆகியோர் பிணை வழங்கியுள்ளனர். தண்டனை வழங்கி மூன்று மாதத்திற்குள் பிணை வழங்கப்பட்டது என்பது விஜயாவுக்கு காலங்கடந்து கிடைத்த நீதியைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட நாள் வரை அதாவது 13 ஆண்டுகள் பணியில் இருந்து வந்தனர். மேலும், பலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 5-1-2007 அன்றுதான் ஆறு போலீசாரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை வேகப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புப் பெற குற்றவாளிப் போலீசார் முயற்சி செய் வருவதாக அறிகிறோம். வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அவர்களின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

இச்சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடர வேண்டியதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் மேற்கொண்டு வருகிறார். தில்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி இவ்வழக்கில் ஆஜராகி வழக்கை நடத்த உள்ளார். இதற்கான நடைமுறை செலவுத் தொகை குறைந்தபட்சம் ரூ.10,000/- தேவைப்படுகிறது. மேலும், 13 ஆண்டு காலமாக விஜயா வழக்கைப் பார்த்ததினால் பேராசிரியர் கல்யாணி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலவாகியுள்ளதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

அத்தியூர் விஜயாவிற்கு கிடைத்துள்ள நீதியை நிலைநாட்டவும், தொடர் சட்ட நடவடிக்கைகளுக்கும் தங்களிடம் பொருளுதவி எதிர்நோக்குகிறோம். அருள் கூர்ந்து தாங்கள் தங்களால் முடிந்தளவு நிதி அனுப்பி வைத்து விஜயாவுக்கு நீதி கிடைத்திட உதவ வேண்டுகிறோம்.


பேராசிரியர் பா.கல்யாணி
கோ.சுகுமாரன்


முகவரி: 15, முதல் மாடி,
 9-ஆவது குறுக்கு வடக்கு விரிவு,
ரெயின்போ நகர்,
புதுச்சேரி - 605 011.
பேச: 98940 54640

Friday, April 06, 2007

தலித் அடிமைகள்... தலையிடாத அரசு!

கொளத்தூர் ஒன்றியத்தில் அதிர்ச்சி சர்வே...

அந்தக் கிணற்றருகில் விளையாடிய சின்னக் குழந்தை. திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. அருகில் இருந்த பெண்களின் அலறல் கேட்டு, பக்கத்துத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டி ருந்த ஒரு பெரிய பையன், கிணற்றுக்கு ஓடி வந்திருக்கிறான். கிணற்றுக்குள் குதித்துக் குழந்தையைக் காப்பாற்ற அவன் தயாரான போது, அவனைத் தடுத்து நிறுத்திவிட்டனர் அந்தப் பெண்கள். எல்லோர் கண் எதிரிலும் அந்தக் குழந்தை உயிருக்குப் போராடி இறந்துவிட்டது...

இது கதையல்ல; நிஜம்! சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்துக்குள் வரும் கருங்கல்லூர் என்ற கிராமத்தில்தான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.

ஏன் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற விடாமல், பையனைத் தடுத்தனர்? ஏனென்றால், அவன் ஒரு தலித்! கீழ்சாதிக்காரன் தொட்டால் தீட்டு என்று அவனைத் தடுத்து விட்டார்களாம்!

மனதை சில்லிட வைக்கும் இந்த சம்பவத்தை நம்மிடம் சொன்னவர், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மேட்டூர் மற்றும் கொளத்தூர் ஒன்றியச் செயலாளரு மான மேவை.சண்முகராஜா. அவரைச் சந்தித்தோம்.

''தீண்டாமைங்குறதே இல்லைனு எல்லா அரசாங்கமும் சொல்றது எந்த அளவுக்கு உண்மைங்கறத பாக்குறதுக்காக இந்த சர்வேயை எடுத்தோம். ஒரு குழுவுக்கு ஆறு பேருன்னு மொத்தம் இருபத்தஞ்சி குழுக்களா சர்வே டீமை பிரிச்சோம். இந்தக் குழுவுல அரசு ஊழியர்கள், வக்கீல்கள், பட்டதாரி இளைஞர்கள்னு எல்லோரையும் கொண்டு வந்தோம். 35 கேள்விகள் கொண்ட கேள்வித்தாளை ரெடி பண்ணி, கொளத்தூர் ஒன்றியத்துல இருக்கிற 54 தலித் கிராமங்களுக்கு அவங்க போனாங்க. அதுல பத்தாயிரம் பேரை சந்திச்சாங்க.

பெரியதண்டா, நீதிபுரம், ஊர்நத்தம், ஒட்டன்காடு, கோவிந்தபாடி, சி.எஸ்.புரம் ஆகிய ஊர்களில் தலித் மக்களுக்கு சலூன் கடையில முடி வெட்டுறது இல்ல. என்ன காரணம்னு விசாரிச்சா தலித் மக்கள் உட்கார்ந்து முடி வெட்டிக்கிட்டுப் போனா அந்த நாற்காலியில மத்த சாதிக்காரங்க உட்கார மாட்டாங்களாம். அதனால இன்னைக்கு வரைக்குமே அந்தக் கட்டுப்பாடு இருந்துகிட்டேதான் இருக்கு. பா.ம.க. மாநிலத் தலைவரான ஜி.கே.மணியோட சொந்த ஊரான கோவிந்தபாடியிலும் இதே கொடுமைதான்.

இந்த ஒன்றியத்துல மொத்தம் 127 டீக்கடைகள் இருக்கு. அதுல 32 டீக்கடையில இன்னும் இரட்டை டம்ளர் முறை இருக்கு. சத்யா நகர் ஏரியாவுல ஹோட்டல்களில் தலித்கள் இன்னமும் கீழேதான் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்காங்க. இந்திரா நகர்ல உள்ள கடைகளில் கொட்டாங்குச்சியிலதான் அவங்களுக்கு டீ கொடுக்கிறாங்க.

ஊர்நத்தம்ங்குற கிராமத்துல வெளியூரைச் சேர்ந்த தலித் ஒருத்தரு தெரியாம அந்த ஊருல இருக்கிற பிள்ளையாருக்குத் தண்ணி ஊத்திட்டு சாமிக் கும்பிட்டிருக்காரு. இந்த விஷயம் தெரிஞ்சி, பஞ்சாயத்தைக் கூட்டி அவருக்கு நூறு ரூவா குத்தம் போட்டிருக்காங்க. ஏரிக்காடுங்குற கிராமத்துல மீனாங்குற பொண்ணு பொது பைப்ல தண்ணிப்பிடிக்க போயிருக்கு. அப்போ பைப்ல வச்சிருந்த குடத்துல தண்ணி ரொம்பி கீழே போயிட்டு இருந்திருக்கு. அந்தக் குடத்தை நகர்த்தி வச்சிட்டு, இந்தப் பொண்ணு தண்ணி பிடிச்சிருக்கு. மேல் சாதிக்காரங்க குடத்தை கீழ் சாதிக்காரப் பொண்ணு எப்படி தொடலாம்னு அந்தக் குடத்தைப் போட்டு உடைச்சி தீ வச்சதோடு இல்லாம, குடத்தைத் தொட்ட மீனாவுக்கு நூறு ரூவா தண்டமும் விதிச்சிருக்காங்க!

இருபது கோயில்கள்ல தலித் மக்களை இப்பவும் உள்ளே விடுறது இல்ல. தலித் பையன்கூட வேற சாதி பொண்ணு லவ் பண்ணி ஓடி போயிடுச்சின்னு அந்தப் பொண்ணைப் பிடிச்சிக் கொண்டுவந்து, பொண்ணோட நாக்குல பிளஸ் குறி போல சூடு போட்டுத் தீட்டுக் கழிச்சிருக்காங்க. இது இன்னைக்கு வரைக்கும் வழக்கத்துல இருந்துகிட்டுதான் இருக்கு. தலித் மக்களைப் பண்ணை அடிமைகளாக வச்சிக்கிட்டு வேலை வாங்கிட்டு இருக்கிற பழக்கம் பல கிராமங்கள்ல இன்னும் இருக்கு. அவுங்களுக்கு வருசத்துக்கே சம்பளமா நாலாயிரம்தான் கொடுக்கிறாங்க. ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டா சம்பளத்துல நூறு ரூவா புடிச்சிக்குவாங்க. நாங்க இப்படி ஒரு சர்வே எடுக்கிற விஷயம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிஞ்சி போச்சி. உடனே ஒவ்வொரு கிராமத்துக்கா அதிகாரிகள் போய் எதையும் வெளியே சொல்லக்கூடாதுன்னு மிரட்டிட்டும் வந்திருக்காங்க.

தீண்டாமை இல்லைனு சொல்ற அதிகாரி யாரா இருந்தாலும் என்கூட நேரா வரச் சொல்லுங்க. நானே ஸ்பாட்டுக்குக் கூட் டிட்டுப் போறேன். இந்த சர்வேயோட மொத்த ரிப்போர்ட் டையும் தொகுத்து மாவட்ட ஆட்சியர் கிட்ட கொடுக்கப் போறோம். அவரு நடவடிக்கை எடுக்கலன்னா, அதுக்கு மேலதான் எங்க கச்சேரியே இருக்கு. நாங்க சொல்ற கிராமங்களில் உள்ள தலித் மக்கள் மீது நடக்கும் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கிற வரைக்கும் எங்க போராட்டம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கும்.

கொளத்தூர் ஒன்றியத்துல தொடங்கி இருக்கும் இந்த சர்வேயை, அடுத்த கட்டமா சேலம் மாவட்டம் முழுக்க பண்ண போறோம். எந்த ஊருல நாங்க சர்வே பண்ண போறோம்னு முன்கூட்டியே தெரிஞ்சிட்டா அதிகாரிகளும், மத்த சாதிக்காரங்களும் போய் தலித்களை மிரட்டி வச்சிடுறாங்க. அதனால நாங்க எங்கே சர்வே எடுக்கிறோம், எப்படி எடுக்கிறோம்ங்குறதை ரொம்பவும் ரகசியமா வச்சிக்குவோம்'' என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து முடித்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி இந்தக் கொடுமைகளை வெளியே சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியினர்.

சேலம் மாவட்ட கலெக்டர் மதிவாணனிடம் இது தொடர்பாகப் பேசினோம். நாம் சொன்ன விஷயங் களைக் கேட்டுத் திடுக்கிட்டவர், ''கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்னும் எனக்கு எந்த விவரமும் சொல்லலை. அப்படி அவுங்க ரிப்போர்ட் கொடுத்ததும் உடனடியா அவுங்க சொல்ற இடங்களுக்கெல்லாம் அதிகாரி களை அனுப்பி, விசாரிக்கச் சொல்றேன். தீண்டாமைக் கொடுமை இருந்தா கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்படும். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்றார்.

எத்தனை மகாத்மாக்கள் வந்தாலும் தீண்டாமைக்கு மட்டும் மரணமே இல்லை போலிருக்கிறது!

- கே.ராஜாதிருவேங்கடம்
ஜூ.வி - Issue Date: 08-04-07--
அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!

தொண்டன்,
கருப்பு சதீஷ்.
http://karuppupaiyan.blogspot.com

Wednesday, April 04, 2007

நாம் யார் ? தமிழனா இந்தியனா ?

நாம் யார் ? தமிழனா இந்தியனா ?
க.அருணபாரதி
 
''தமிழ்'' என்பது ஒரு மொழி மட்டும் என்று யார் சொன்னது ?
 
இனம் என்பது மானுடவியல்(Anthropology) கூற்றுப்படி
மொழி, இடம், பண்பாடு, கலாச்சாரத்தின் படி இயற்கை வழிப்பட்ட ஒர் மக்கள் கூட்டமே இனமாகும்...
 
(இது ஓர் அறிவியல்.. யாரம் 'இனப்பிரிவினை''இனப்பாகுபாடு''இனபேதம்'' என்று கொதிக்கவேண்டாம்..)
 
தமிழருக்கு
ஒரு பண்பாடு (தமிழ்ப் பண்பாடு),
ஒரு மொழி  (தமிழ்),
ஒரு வாழ்வியல் நெறி  (திருக்குறள்),
ஒரு நிலப்பகுதி  (குறி்ஞ்சி, மருதம் உள்ளிட்ட நிலங்கள்)..
 
இப்படி பல வகைகளில் தனித்து விளங்கும் தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒர் தேசிய இனம்... 
 
குமரிக்கண்டம் முதல் சங்கஇலக்கியங்கள் காலம்வரை அதற்கான ஆதாரங்கள் ஏராளம் இருக்கின்றன..
காண்க::
 
இதில் குமரிக் கண்ட வரலாறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது
 
இதில் ஏனைய மொழி வரலாறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது 
 
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணாரிடமிருந்து ஒரு வரியை பார்ப்போம்..
 
ஒரு கேள்விக்கான பதிலை மழுப்பாமல், தெளிவாக பதிலாக சொல்ல வேண்டும்.. இது ஓர் இலக்கண விதி.. இதனை இளம்பூரணார் எப்படி விளக்குகிறார் பார்ப்போமா ?
 
''நும் நாடு யாதேனில்
தமிழ்நா டென்று ரைக்க''
 
அதாவது இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பிருந்தே ''தமிழ்நாடு'' என்கிற நாடு இருந்ததற்கான ஆதாரணமாக இதனைக் கொள்ளலாம்....
 
அது மட்டுமல்லாமல் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே தமிழினம் ஒர் உலக வல்லரசாக வாழ்ந்து ஆண்டுகொண்டிருந்தது...
ஆனால் தமிழ் மன்னர்கள் எந்த வொரு நாட்டையும் அடிமைப்படுத்தி ஆளவில்லை.. அந்தந்த நாடுகளின் மீது படையெடுத்து வென்றதும் அங்கு ஒரு கல்வெட்டோ அல்லது தமிழர் கொடியையோ நடுவார்கள்.. பின் அந்த நாட்டை சார்ந்த ஒருவனை அரசனாக போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.. இப்படி தான் நடந்தது.
 
(அமெரிக்கா மற்ற நாடுகளில் அரசு அமைப்பது போல.. ஆனால் அமெரிக்கா போல தமிழக மன்னர்கள் மற்ற நாடுகளை கொள்ளையடிக்கவும் இல்லை அடிமை முறையில் நடத்தவும் இல்லை.. )
 
கனகவிசயன் என்ற தெலுங்கு மன்னர் ஒரு முறை கண்ணகியை தவறாக பேசிவிட்டார்.. அதனால் ஆத்திரம் கொண்ட சேர மன்னன் நெடுஞ்சேரலாதன், அவன் மீது படையெடுத்து இமயமலையிலிருந்து தமிழகம் வரை அவன் தலையில் கல்லெடுத்து வர வைத்து அந்தக் கல்லைக் கொண்டு கண்ணகிக்கு கோயில் எழுப்பியது வரலாறு... அந்த கோயில் இன்றும் சேரநாடான கேரளத்தில் இருக்கிறது...
 
இப்படி தமிழகம் ஒரு தனி நாடாகவும், தனித் தேசிய இனமாகவும் விளங்கியதற்கு நம்மிடம் பல வரலாற்று சிறப்புமிக்க ஆதாரங்கள் உள்ளன..
 
பின்னால் வந்த முகமதியர் படையெடுப்பாலும், பிற இனத்தவர் படையெடுப்பாலும் இங்கிருந்த தமிழகத்தின் நிலப்பகுதியும் ஆட்சிப்பகுதியும் சுருண்டன.. பின்னர் இந்நிலத்தை ஆண்டவர்கள் டில்லி ராஜ்யத்துடன் மக்களின் அனுமதி பெறாமலேயே இணைத்தனர்... அப்பொழுது கூட இந்தியா என்கிற நாடு உலகில் இல்லை...
 
சிந்து நதிக்கரையோரம், இந்தி மொழி பேசும் மக்கள், இந்து பண்பாட்டை பின்பற்றுவதால் இவை அனைத்தும் கலந்து ''இந்தியா'' என்கிற பெயர் ஏற்படுத்தப்பட்டது... அதனை நாங்கள் 'இந்தி'-'இந்து'-'இந்தியா' என்று சொல்லுவோம்..
 
வெள்ளையர் வந்த போது அவனை விரட்ட இந்த பரத கண்டம் எனப்பட்ட ''இந்தியத் துணைக் கண்டம்'''-{இப்பொழுதிருக்கும், இந்தியா, பாகிஸ்தான்,வங்காளதேசம் இவையணைத்தும் இந்தியத் துணைக் கண்டம்} ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தலைவர்கள் விரும்பினர்..
 
அதற்காக ''பாரத தேசம், பாரத நாடு, இந்தியா'' என்கிற செயற்கையான நாடும் பெயரும் தோற்றுவிக்கப்பட்டது.. இந்தியத் துணைக்கண்டம் விடுதலையடைய எல்லோரும் பாடுபட வேண்டும் என இணைக்கப்பட்ட பல நாடுகளின் கூட்டமைப்பு தான் இந்தியா..
 
அதாவது இந்தியா என்கிற வார்த்தையை 1700 பிற்பட்ட இலக்கியங்களிலும் ஆவணங்களிலும் மட்டுமே காண முடியும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை..
 
இவ்வாறு தான் இந்தியா என்கிற செயற்கையான நாடு உருவானது... இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் எங்காவது இந்தியா ஒரு தேசம் என்று கூறிப்பிடப்பட்டுள்ளதா என்றால் இல்லை .....
 
அனைவரும் காண்க :: இந்திய அரசியலமைப்பு சட்டம்::http://lawmin.nic.in/legislative/Art1-242%20(1-88).doc
 
இதில் எங்காவது India is a Nation, Indian is our Nationality என்று பொருள் படும் படி குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்..
 
(குறிப்பு:: கண்ட்ரோல் + எஃப் (Ctrl+F)  அழுத்தி தேடவும்  )
 
எங்கும் கிடைக்காது.. ஏனெனில் இந்தியா ஒர் துணைக்கண்டம் என்பதையும், இந்தியா ஒர் ஒன்றியம்(யூனியன்-Union) என்பதையும் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது..
 
அரசியலமைப்பு பிரிவு 1-ல் இவ்வரிகளை காணலாம்..

(1) India , that is Bharat, shall be a Union of States.

 
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America)  -- State என்னும் வரையறைக்கு நாடுகளின் மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது அங்கு.. அங்கு நிலவுவது பிடரல்(Federal) எனப்படும் கூட்டாட்சி அமைப்பு..
 
அதே போன்ற அமைப்பு தான் இங்கும் இந்தியாவிலும் நிறுவப்பட்டீருக்க வேண்டும்.. ஆனால் இந்தியா Quasi-fedral எனப்படும் பாதி கூட்டாட்சி அமைப்பின் படி உள்ளது.. இதன் படி மத்திய அரசே மாநிலங்களின் மேல் அதிகாரம் செலுத்தும்..
 
தமிழர்கள் தனி நாடாக, தனித் தேசிய இனமாக இருந்து பின்னர் இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.. அதற்கு காரணம் இந்திய விடுதலையின் போது ஏற்பட்ட ஒற்றுமையுணர்வும், வடஇந்தியத் தலைவர்கள் மீது நமது தமிழகத் தலைவர்கள் கொண்ட பாசமும் தான் காரணம்..
 
அவ்வாறு இந்திய ஒன்றியத்தில் இருப்பது ஒன்றும் தவறல்ல.. ஆனால், இந்திய ஒன்றியத்தில் நாம் இணைந்து விட்டதால் நமது தேசிய இன, மொழி மற்றும் நில வரையரை அடையாளங்களையும் உரிமைகளையும் பறிப்பதற்கு அவர்கள் திட்டமிடும் போது நாம் என்ன செய்வது ??????
 
2000 வருடங்களாக அரியணையிலிருந்த தமிழை அகற்றிவிட்டு, இந்தி ஆங்கில மொழிகள் இங்கு வளர யார் காரணம் ??
 
96 சதவீதம் தமிழர்களே வாழ்ந்த தமிழ்நிலங்களான தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை தமிழர்களை கேட்காமலேயே கேரளாவிற்கு அளிக்க யார் தைரியம் கொடுத்தது ????
 
நமது தமிழகத்திலிருந்து மின்சாரம், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டு நமக்கு நீர் கூட தர மறுக்கும் கர்நாடகத்திற்கு யார் தைரியம் அளித்தது ?
 
நெய்வேலியிலிருந்து மின்சாரம் யாரைக் கேட்டு தமிழகத்திற்கே விலை கொடுத்து விற்கிறது மத்திய அரசு ??
 
நமது மாநில எல்லைகளை நம்மைக் கேட்காமலேயே மத்திய அரசு மாற்றலாம் என்கிற அதிகாரம் அவர்களுக்கு எப்படி உள்ளது ??
காண்க:: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3
 
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அவரவர் தாய்மொழி உயர்நீதிமன்றத்திலிருக்கும் போது தமிழை மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு மறுப்பது ஏன் ?
 
இவ்வாறு பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.. இதற்கெல்லாம் பதில் அறிய விரும்பாமல் ''போனால் போகட்டும் போடா'' என்று இந்தியன் என்கிற போலி அடையாளத்தில் நான் தமிழக உரிமைகள் பறிபோவதை விரும்பவில்லை..
 
ஏனெனில் இந்தியன் என்பது காலத் தேவைக்கேற்ப உருவாக்கப்ட்ட  அரசியல் உருவக பெயர் தான்..
 
இந்தியாவிற்கு பொது மொழி இல்லை.. பொது பண்பாடு இல்லை.. பொது நிலவரையறை கூட இல்லை..அப்படியிருக்க இந்தியன் என்பது இனம் அல்ல.. அதனால் நமது தேசிய இனம் தமிழே...
இந்தியன் என்கிற இனம் இதுவரை இருந்ததில்லை..
 
நாம் பிறப்பாலும் மொழியலும் இனத்தாலும் தமிழரே...
நாம் இந்தியர் அல்ல..
இந்தியக் குடியுரிமை பெற்ற மக்கள் தாம்..
 
Our Nationlity    : Tamil
Our Citizenship :  Citizen of India
 
இந்த அரசியல் கருத்துக்களை மறைத்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க முயலும் வடஇந்திய பெரு முதலாளிகளும், அவர்களின் அரசியல் தரகர்களான 'இந்தி'ய தேசிய கட்சிகளும், அவர்களுக்கு ஊடகங்களான ஊடகங்களும் தான் இந்தியா ஒரு பழம்பெரும் தேசமாகவும், இந்துக்களின் தேசமாகவும் சித்தரித்து ஆதாயம் தேட முற்படுகின்றன..
அவர்களது போலி பிரச்சாரத்திற்கும் உண்மைக்கு புறம்பான பல தகவல்களையும் கொண்டு பரப்பபட்டு வரும் கோட்பாடுகள் தாம் இன்று வெகு மக்கள் கோட்பாடாகிவிட்டது.. அதனை மாற்றியமைக்க நாம் ஒற்றுமையுடன் நமது உரிமைக்காக போராட வேண்டும்..
 
ஞாபகம் இருக்கட்டும்.. நாம் கேட்பது யாசகம் அல்ல, ஆண்டாண்டு காலமாக நமக்கு இருக்கும் உரிமைகளை தான்...


--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

குறிப்பிடத்தக்க பதிவுகள்