Friday, September 12, 2008

இந்திய அரசின் படை உதவிக்கு த.தே.பொ.க. கண்டனம்

புலிகள் தாக்குதலில் இலங்கையில் இந்திய அதிகாரிகள் காயம்
இந்திய அரசின் படை உதவிக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தாக்குதலில் கடந்த 09.09.08 அன்று இரவு வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் கூறுகிறது. சிந்தாமணி ரவுத், ஏ.கே. தாக்கூர் ஆகிய அவ்விருவரும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் பொறியாளர்கள் ஆவர்.

இந்திய அரசு தரும் படைவகை உதவியோடு, நேரடியான படையாட்கள் துணைக் கொண்;டு தான் சிறீலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துகிறது என்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் சிறீலங்கா அரசு நடத்துவது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலைப் போராகும். சிங்களப் படை தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாக புலம் பெயர்ந்து உணவும், மருந்தும் இன்றி மரத்தடி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை ஐ.நா. மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட மனித நேய அமைப்புகள் பலவும் கண்டித்து வருகின்றன.

இந்த உள்நாட்டு போரில் தாம் தலையிடவில்லை என்று சொல்லிக்கொண்டே இந்திய அரசு இலங்கைக்குப் போர்ப் படகுகளையும், ரேடார், எக்ஸ்ரே பைனாகுலர் உள்ளிட்ட கருவிகளையும் அளித்து வருகிறது. ஆயினும் நேரடி இராணுவத் தலையீடு செய்யவில்லை என்பதாகவே இந்திய பிரதமரும் உயர்மட்ட அதிகாரிகளும் கூறி வந்தனர்.

ஆனால் இது உண்மைக்கு மாறான தகவல் என்பதை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் காயம்பட்டுள்ள செய்தி தெளிவாக்குகிறது.

இந்தியாவின் இவ்வாறான படை வகை உதவிகளைக் கொண்டு தான் ஈழத் தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் அன்றாடம் சிங்களப் படை கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய அரசு தமது இராணுவத் துறை வல்லுநர்களையும் ஆட்களையும் அனுப்பி, ஆயுத உதவிகள் வழங்கி தமிழினப் படுகொலைக்குத் துணை போவதைத் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியப் படையாட்களைத் திரும்ப அழைத்து கொள்ளுமாறும், கருவி உதவிகளை நிறுத்துமாறும் வலியுறுத்துகிறேன்

இப்படிக்கு.
கி.வெங்கட்ராமன்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்

நாள் : 10.9.08
இடம் : சிதம்பரம்

3 கருத்துகள்:

தாமிரபரணி said...

தமிழ் மினவர்களை இலங்கை கடல்துறையினர் கொத்து கொத்தாக சுட்டு கொன்றாலும், இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக சுட்டு கொன்றாலும் இந்திய அரசு ஒருநாளும் கவலைபட்டதில்லை
இந்தியாவில் உள்ள எல்லோர்கும் ரத்தம் கொதிப்பதில்லை, நம் தமிழர்களூக்கு மட்டும்தான் கொதிக்கும்
இலங்கையில் மட்டும் அல்ல எங்கு தமிழர்களூக்கு எதிராக வன்முறை நடந்தாலும், தமிழக அரசோ, இல்லை தமிழக அரசியல் தலைவர்களோ இல்லை தமிழக மக்களோதான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், தமிழ் நாட்டை பொருத்தவரை நடுவன அரசு ஒரு மண்தான், நாம் இந்தியாவுடன் இருப்பதால் பலவற்றை இழந்தோம் எ-டு மொழியின் தனித்துவத்தை இழந்தோம், தமிழன் என்ற அடையாளத்தை இழந்தோம், நம் அன்றாட வாழ்கையில் இந்தியை திணித்து/திணித்தும் கொண்டிருக்கிறார்கள்
நேபாளம், இலங்கை போன்றவை தனிநாடாக இருப்பதால் அவர்கள் தங்கள் மொழியையும், பண்பாட்டையும் பாதுகாக்க முடியும், மேலும் நாணயங்களில் ரூபாய் தாள்களில், அஞ்சலகத் துறையில், பேன் கார்டில், பாஸ்போர்டில், விமானநிலையங்களில்/அறிவிப்புகளில், ஏ டி எம்மில் என எதிலும் அவர்களின் மொழி நிறைந்து இருக்கும்,
இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அத்தனையும் இந்தி பெயர்கள் தாங்கியே வருகின்றன. அவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து செயல்படுத்தினால் நிதி உதவி நிறுத்தப்படும் என்கிறது நடுவண் அரசு.
தமிழர்களாகிய நமக்கு வரலாற்றில் ஒன்றுகூட எஞ்சியிருக்க போவதில்லை இப்படி ஒருமொழிக்கு முன்னுரிமை அளிப்பதால் பல மாநிலங்களில் பல பிரச்சனை எழுகின்றன எ-டு அசாமில் ஹிந்திக்கு எதிரான கொலைகள், மகாராஷ்டராவில்,கர்நாடகாவில் ஹிந்திக்கு எதிரான வன்முறை ...
அந்த அந்த மாநிலங்களில் அந்த அந்த மொழியில் ஹிந்தி தலையிடு இல்லாமல் இருப்பதே சிறந்தது ஆகும், மற்ற மாநிலங்களை பற்றி நமக்கு தேவயில்லை, அவர்கள் ஏற்றுகொண்டாலும் கொள்ளாமல் இருப்பதும் அவர்களின் பாடு
ஆனால் எங்கள் மொழிமீது திணித்து எங்கள் மொழியை அழிக்க வேண்டாம், கோடி பணத்தில் நுறு ரூபாய் எடுத்தால் பெரிய தவறா என்கிறமாதிரி எடுத்தால் கடைசியில் காலனாகூட மிஞ்சாது
அதுபோலத்தான் மொழியும், எல்லோரும் இந்தி படிக்கனும்
ஆனா இந்திகாரனுங்க மட்டும் அவன் தாய்மொழி இந்தி தவிர ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன்னு படிச்சி நல்லா வளமா வாழுவாரு நாங்க மட்டும் ஒரு பைசாக்கும் உதவாத இந்திய படிச்சி இவன்களுக்கு கொத்அடிமையா இருக்கனும். இந்தியாவில் அனைவரும் ஆங்கிலம் படிக்கிறார்கள் அதையே இனைப்பு மொழியாக வைக்கலாம் அதைவிட்டு-டு
இந்திய படி, என் தொந்திய புடினா ஒக்காளி அடிதான்

துரை said...

இந்திய அரசு நேரடியாகவும மறைமுகமாகவும் தமிழர்களையும்/தமிழையும் புறக்கணிக்கிறது என்பதை நான் தெரிந்துகொண்டதில் இருந்து சுதந்திரம் கொண்டாடியதில்லை(சுதந்திரம் எல்லாம் வடநாட்டானுக்குதான்)
ஏனோ இந்திய கொடியை பார்த்தால் கோபம்தான் வருகிறது
நான் இன்று கைநிறைய சம்பாதிக்கிறேன் என்பதற்காக இந்தியாவுக்கு வக்காளத்து வாங்க முடியாது, தினமும் தமிழக மீனவர்கள் செத்துமடிகிறார்கள், இலங்கையில் நம் உடன்பிறப்புகள் செத்துமடிகிறார்கள், தமிழ்நாட்டுத் விவசாயிகளுக்கு கர்நாடகமும் கேரளமும் தண்ணீர் தராமல் வஞ்சிக்கின்றன, மலேசியாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை இப்படி எதைபற்றியும் இந்த இந்திய அரசுக்கு கவலையில்லை மேலும் இலங்கை, மலேசியா, சிங் கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது. ஆனால் இதுவரை ஒரு தமிழன் கூட நியமிக்கப்படவில்லை. இப்படி தமிழர்களுக்கான புறக்கணிப்பை அடிக்கிகொண்டே போகலாம்

யூர்கன் க்ருகியர் said...

இந்திய குடிமகன் என்ற முறையில் நானும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்

குறிப்பிடத்தக்க பதிவுகள்