செவ்வணக்கம் தோழர்களே..
உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் முக்கியக் காரணியாக விளங்கும் தமிழ் மொழியை, சிதைக்கும் நோக்கிலேயே இந்த எழுத்து மாற்றம் அறிவிக்கப்பட உள்ளதோ என்ற கேள்வி தான், எழுத்து மாற்றம் குறித்து முதன் முதலில் அறிந்த போது ஏற்பட்டது.
எழுத்து மாற்றும் குறித்து அறிந்த போது, தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், மொழியை சிதைக்கும் நோக்கில் செயல்படும் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும என்றும் உணர்ந்தேன்.
இந்த தருணத்தில் தான், தமிழ் எழுத்துகளை சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்க நினைக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள தமிழ் எழுத்து சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புதுச்சேரியில், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் 16.05.2010 அன்று 'தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு” மாநாடு ஏற்பாடாகியுள்ளது.
இந்த மாநாடு தொடர்பான புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தொடக்க நிலை ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். மாநாட்டு ஏற்பாடுகளிலும் பங்கு வகிக்க நினைத்திருந்தேன். ஆனால், நான் சார்ந்துள்ள இளந்தமிழர் இயக்கம் சார்பில் தஞ்சையில் மாவீரன் முத்துக்குமார; சிலை திறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டதால், மாநாட்டில் பங்கு பெற இயலாமல் போனதற்கு மிகவம் வருந்துகிறேன்.
எனினும், மாநாடு வெற்றி பெறவும், மாநாட்டில் உரையாற்றும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்க்கணினி ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இந்த முயற்சி பெரு வெற்றி பெற்று, தமிழ் எழுத்து சீர்திருத்த எதிர்ப்பிற்கு மேலும் உதவும் என்று மனதார நம்புகிறேன்.
வாய்ப்புள்ள நண்பர்கள், பதிவர்கள், இம்மாநாட்டில் நிச்சயம் பங்கு பெற வேண்டும். எழுத்து சீர்திருத்தம் தொடர்பான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து நாம் உறுதுணையாக நிற்கவும் உறுதியேற்க வேண்டும்.
தோழமையுடன்,
க.அருணபாரதி

"தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு” மாநாடு" - 16.05.2010
நாள்; 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை
பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்
- புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
- திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர், உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,
- பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர் லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)
- திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
- திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,
- முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
- பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி
- பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
- திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)
- தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை
- திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
- புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,
- திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி
- திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
- பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி
- திரு.விருபா. குமரேசன் சென்னை
- திரு,எழில் இளங்கோ விழுப்புரம்,
அனைவரையும் வருக என வரவேற்கும்,
1 கருத்துகள்:
நன்றி
Post a Comment