சிறையில் உடைத்த செந்தமிழ் |
மொழிப்போர் நாளில் சிறையில் எழுதிய கவிதை |
கவிஞர் கவிபாஸ்கர் என் இனத்தின் சொத்து;தமிழுக்கு சேதம் விளைவிக்கிறது இந்தி, ஆங்கிலம் நாங்கள் பொதுச்சொத்தை சேதம் செய்ததாய் எங்களை பொய்வழக்கு அழைக்கிறது... இரவு பண்ணிரென்டு மணி இரும்புக் கதவு இருமாப்பாய் நின்று கொண்டு சிறைக் கொட்டடிக்கு வரவேற்றது... ஆடையை கழட்டி அடையாளம் கேட்டன காக்கிச் சட்டைகள் அணிந்த ஆடையை கழட்ட மறுத்தோம் சாதியை கேட்டதும் சொல்ல மறுத்தோம் வரிசையாய் நிற்க வைத்து கருப்பு இருட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள் கம்பிகளால் கட்டப்பட்ட வேறோரு தேசம் - சிறை... தள்ளினார்கள் தடுமாறி உள்ளே புகுந்தோம் நிற்பதற்கே இடமில்லை குற்றங்கள் செய்த மனிதக் கும்பல் கும்பகரணத் தூக்கத்தில் குறட்டை விட்டன... தூங்க இடமின்றி தூங்கினோம்... பீடிப்புகை நுரையீரலில் ஆணி அடித்தது கஞ்சா நெடி மூளையின் முகவரி கேட்டது கழிவறை நாற்றம் மூக்குத் துளையில் ஊசிப்போட்டது இருமல் சத்தம் காதுகளைத் திருகி காயம் செய்தது.. விடியவே இல்லை தட்டி எழுப்பினார்கள் உட்கார வைத்து கணக்கு பார்த்தனர் குற்றங்கள் செய்த கூட்டத்திற்கு நடுவில் நாங்களும் நிரம்பினோம் சாப்பிடுவதற்கு தட்டுயில்லை குடிப்பதற்கு குளிப்பதற்கு குவளையில்லை... 'போராட்டம்' செய்து உள்ளே வந்தோம் உள்ளே சென்று போராடினோம் உணவை மறுத்து... தேநீர் நிறமிழந்த தேநீரை சாப்பிடும் தட்டில் குடித்தோம் குடிக்கும் குவளையில் குழம்பும் குளிக்கும் குவளையில் சோறுமாய் - துருபிடித்த உணவை கூடி உண்டோம் தூக்கத்தை யாரிடமாவது கடனாய் வாங்கி தூங்கலாம் போலிருந்தது கொசுக்களுக்கு இரத்தம் கொடுத்தோம் ஆயுள் கைதிகளுக்கு ஆறுதல் சொன்னோம் செய்யாத தவறுக்கு செத்து வாழும் மனிதருக்கு - நம்பிக்கை உயிர் கொடுத்தோம் இருந்த நாளில் இதயம் மலர மனிதம் வளர்த்தோம் கொலை, திருட்டு கற்பழிப்பு, சாராயம் 'நிபந்தனையின்றி' வரிசையாய் - உள்ளே வலம் வருகின்றன இந்தியை, ஆங்கிலத்தை தார்பூசி அழித்த என் செம்மைத் தமிழ் பூட்டியக் கதவை உடைத்துக் கொண்டு 'நிபந்தனையில்' வெளியே போராட வருகிறது ---------------------------------------------------------------- மொழிப்போர் நாளில் தஞ்சை அஞ்சல் மற்றும் தந்தி தலைமை அலுவலகத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி மற்றும் ஆங்கில எழுத்துகளை தார்பூசி அழித்த போராட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி நடுவண் சிறையிலடைக்கப்பட்ட போது எழுதிய கவிதை (25-02-2008). நன்றி : தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2008 மாத இதழ் |
Sunday, February 24, 2008
Friday, February 22, 2008
சென்னை உண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம்
அராஜகம் செய்த காவல் ஆய்வாளரைப் பாதுகாக்க
மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோதச் செயல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
தமிழக அரசின் ஆங்கில ஆதரவு – தமிழ்ப் புறக்கணிப்புப் போக்கைக் கண்டிக்கும் வகையில், முறைப்படி விளம்பரம் செய்து, அறிக்கை கொடுத்து அறிவித்துவிட்டு 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.,.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ, பயணிகளுக்கு ,டையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு ,டதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையினர்; மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ,துவரை நடவடிக்கை ,ல்லை.
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை ,டைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடைத்துவதற்கு அனுமதி கோரும் மனு 4-02-2008 அன்று கொடுக்கப்பட்டது. அவ்வுண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து மாநகரக் காவல்துறை ஆணையர் திரு. நாஞ்சில் குமரன் அவர்கள் 21-02-2008 அன்று பிற்பகல் கடிதம் கொடுத்துள்ளார்.
மாநகரக் காவல் ஆணையரின் இம்மறுப்பு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. முதலில் நாங்கள் 19-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் கொடுத்தோம். அதற்கு மாநகர ஒற்றுப்பிரிவு உயர் அதிகாரி திரு. ,ளங்கோ அவர்கள் 22-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் வைத்துக் கொள்ளுமாறு வாய்மொழி ஒப்புதல் கொடுத்து, தேதி மாற்றி மனு கொடுக்க சொன்னார். அதே போல தேதி மாற்றி மனு கொடுத்தோம். அவரை அவ்வப்போது அணுகி உண்ணாப் போராட்டத்திற்கான அனுமதிக் கடிதம் கேட்ட போது விரைவில் தருவோம் என்று கூறிவந்தார்.
அதை நம்பி உண்ணாப் போராட்டத்திற்கான விளம்;பரச் செலவுகள் உட்பட அனைத்துச் செலவுகளும் செய்து முடிக்கப்பட்டன. தமிழகமெங்கும் இருந்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு வாடகை வாகனங்களில் வர எமது இயக்கத் தோழர்கள் பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். ,ந்த நிலையில் உண்ணாப் போராட்டம் நடைபெற வேண்டிய நாளுக்கு முதல் நாள் பிற்பகல் அனுமதி மறுத்ததன் மூலம் எங்களுக்கு ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் உழைப்பும் விரையமாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி மறுப்புக்கு தடை வாங்கி உண்ணாப் போராட்டம் நடத்திட வாய்ப்பு தரக்கூடாது என்ற கெட்ட நோக்கத்துடன் மாநகரக் காவல் ஆணையர் 04-02-2008 அன்று கொடுக்கப்பட்ட அனுமதி கோரும் மனுவுக்கு 21-02-2008 அன்று மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார். அனுமதி மறுப்புக் கடிதத்தை, நிகழ்ச்சி நடக்க வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பதாகக் கொடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகும் ஆணையரின் இச்செயல்.
தன் கீழ் பணியாற்றும் கோயம்பேடு காவல் ஆய்வாளர் தேன்தமிழ்வளவனையும் மற்ற காவல்துறையினரையும் சட்டவிரோத வழிகளில் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையை அணுகி நிவராணம் தேடும் வாய்ப்பை வேண்டும் என்றே கெடுத்துள்ளார் மாநகரக் காவல் ஆணையர். இது பழிவாங்கும் செயலாகும். அமைதியான வழியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுத்துள்ள மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோத, சனநாயக விரோத செயலை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
Wednesday, February 20, 2008
சென்னையில் உண்ணாப் போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை
தோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்திய
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவல்துறையினரை
இடைநீக்கம் செய்யக் கோரி
சென்னையில் உண்ணாப் போராட்டம்
கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
தமிழக அரசு தனக்குள்ள அரசiமைப்புச் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்தாமல் ஆங்கிலத்திற்கு முன்னுரிமையும் மேலாதிக்கமும் தருகிறது.
தமிழக அரசின் ஆங்கில ஆதரவு-தமிழ்ப் புறக்கணிப்பு போக்கை; கண்டிக்கும் வகையில் 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.இ.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ பயணிகளுக்கு இடையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு இடதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை.
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடை பெறுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தோழர் தியாகு(பொதுச் செயலர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் இரா.பாவணன் (தலைவர், தமிழர் கழகம்), தோழர் நிலவன் (பொதுச் செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), கவிஞர் தமிழேந்தி (மார்க்சியப் பெரியாரியப் பொதுசுடைமைக் கட்சி) ஆகியோர் கண்டன உடையாற்றுகின்றனர். புலவர் கி.த.பச்சையப்பனார் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைக்கிறார்.
இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து அதே நாளில் தஞ்சையில் தலைமை அஞ்சலகத்தில் இந்தி எழுத்துகளை த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் அழித்த 23 பேர் கைது செய்யபட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், ஊழியர்களைக் கடமையாற்ற விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது. அவ்வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறு இவ்வுண்ணாப் போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் இவ்வுண்ணாப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Monday, February 04, 2008
தில்லியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இருந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை அடங்கிய மனுவை மத்திய அரசிடம் கையளிக்கின்றனர்.
இதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. தோழர்கள் அவ்வமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-2008 ஞாயிறன்று மதியம் 3.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் தில்லி செல்கின்றனர்.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் சு.பாவாணன், ப.அமுதவன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் வீ.பார்த்திபன், மக்கள் சிவில் உரிமைக் கழகப் பொறுப்பாளர் மு.முத்துக்கண்ணு, சமூக நீதிப் போராட்டக் குழு பாகூர் அ.மஞ்சினி, இரா.சுகுமாரன், தனித் தமிழ்க் கழகச் செயலாளர் சீனு.அரிமாப்பாண்டியன், அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா உட்பட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் கலந்துக் கொண்டு வழியனுப்பி வைத்தனர்.
தமிழகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போரட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ கூறினார்.
வழியனுப்பு விழாவின் முடிவில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Friday, February 01, 2008
நினைவுப்பூக்கள்(கவிதை) - க.அருணபாரதி
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
குறிப்பிடத்தக்க பதிவுகள்
-
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்! முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை’ என்ற திரைப்...
-
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, ...
-
தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...
-
தோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...
-
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...
-
இராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...
-
'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...
-
ஈழம் : இந்தியத்தின் நரித்தனம் தொடர்கிறது க.அருணபாரதி “ இந்தியா எந்த நேரத்திலும் நம்பக்கம் சார்பாகவே செயற்படும் ” – 4 நாள் சுற்று(லா)...
-
- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...
-
ஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...