Wednesday, January 30, 2013

புதுச்சேரியில் கணினி விழிப்புணர்வு முகாம் - ஆலோசனைகள் தேவை



புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து  தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சி நிரல் கீழ்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுக்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. 

நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு,  காலை 9.30 மணி முதல்... (காலை 9.15 மணிக்கு பதிவு தொடங்கப்படும்).

இடம் :மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம், 66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004. நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழா நிறுவனத்தின் குறுந்தகடு வெளியிடப்படும், இதனைத் தொடர்ந்து  தமிழ்க் கணினி தொடர்பாக கீழ்க்கண்டவைகள் பற்றிய  விளக்கம் அளிக்கப்படும்.
  1. தமிழில் இயங்குதளம்: விண்டோசு மற்றும் லினக்சு (Ubuntu),
  2. தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
  3. கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
  4. கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற..
  5. தமிழில்  இணைய உலவிகள் ( Web Browsers)
  6. ஒருங்குகுறி பற்றிய விளக்கம்,
  7. தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்,
  8. தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
  9. வலைப்பதிவு செய்தல்: பிளாக், மற்றும் வேர்டு பிரசு,
  10. திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி உள்ளிட்டவைகளில் இணைப்பு அதன் பயன்பாடு,
  11. சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தல்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
  12. தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்.
இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு தமிழ் மென்பொருட்கள்  அடங்கிய குறுந்தகடு, மற்றும் குறிபேடு, எழுதுகோல், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். காலை மற்றும் பிற்பகலில் தேநீர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எத்தனைபேர் வருவார்கள் திட்டமிட வசதியாக  இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இந்த  பதிவுப் படிவத்தினை கிளிக் செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக மாணவர்களுக்கு ரூ 50/- பணி செய்பவர்களுக்கு ரூ 100/- செலுத்த வேண்டும். இந்த பயிலரங்கில் பங்கேற்க இந்த படிவத்தின் பதிவு நிபந்தனைக்கு உட்டது.

பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் வருகை தரவேண்டும். 9.15 முதல் 9.30 வரை பதிவு நேரமாகும். பதிவு நேரத்திற்கு பின் வருபவர்களின் இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
இரா.சுகுமாரன் 9443105825,
எல்லை.சிவக்குமார்.  9843177943
என்ற  தொலை பேசியில் தொடர்பு கொள்க.

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்