Tuesday, December 18, 2007

நினைவுகளின் சுமை (கவிதை)

நினைவுகளின் சுமை
க.அருணபாரதி
 
நினைவுகளின் சுமையால்
நகர்கிறது வாழ்க்கை..

நிலைக்காது எனத்தெரிந்தும்
அடங்காத வேட்கை..
 
இமைகளின்  துடிப்போடு
இயங்கிடும் நாட்கள்..
 
இனியவள் பிரிவாலே
வழியெங்கும் முட்கள்..
 
வனங்களில் திரிகின்ற
விலங்குகள் போல
 
மனம் அலைகிறதே
உன்நிழல் தேடி..
 
சினங்களை மறைத்தேன்
சிரித்தேன் திரிந்தேன்
 
கனவினில் உன்னோடு
கதை பேசியபடி..
 
துன்ப வெயிலில்
கால் சிவந்தபோது
 
தூரிகையாய் மனதை
வருடிய கனவே..
 
இன்பத் தமிழிலே
உனைபாடித் திரிவேன்
 
இருந்தாலும் இறந்தாலும்
இதுவென் உணவே...
 

1 கருத்துகள்:

S M Saravanan said...

இனிமையான கவிதை.
கற்பனையில் கொடி கட்டி பறக்கும்
அருணபாரதியின் கவிநயம்
ரசிக்கும்படி உள்ளது

சரவணன்

குறிப்பிடத்தக்க பதிவுகள்