கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும்
"இந்தி"யத் தேசிய ஒருமைப்பாடு
க.அருணபாரதி
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்."
"இந்தி"ய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் "இந்தி"ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்தியப் பொதுக் கூட்டத்தில், பிரிவினையைத் தூண்டிப் பேசியதாக இயக்குநர்கள் சீமான, அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழகக் காவல்துறை இவர்கள் மீது ("இந்தி"ய) தேசத் துரோகக் குற்றத்தின் மிகப்பிரபலமான 123(பி) பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த பிரிவில் இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற திட்டத்துடன் சட்டவிரோ செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Act -1967) சிலப் பிரிவுகளின் படியும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இவர்கள் செய்த குற்றம் தான் என்ன? எவ்வகையில் இவர்கள் பிரிவினைக்குத் தூண்டினார்கள்? இவர்களைப் பிரிவினைக்குத் தூண்டியது எது? கைது செய்யப்பட்டவர்கள் தனிநபர்கள் அல்ல. தமிழ்த் தேசிய இன மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் தலைவர்கள், கலைஞர்கள். குற்றங்களை செய்தவர்களை விட அதனைச் செய்யத் தூண்டுபவர்களுக்குத் தான் அதிக தண்டனையாம். சட்டம் கூறுகிறது. அப்படியெனில் இவர்களை "இக்குற்றச் செயலுக்கு" தூண்டியது எது என்று ஆராய்வோம்.
இந்தியா ஒரு தேசமல்ல. தனக்கென தனிப்பண்பாடு, மொழி, பொருளியல் என பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைக் கண்டமே ஆகும். இப்படி வாழ்ந்த பல்வேறு நாடுகள் அடக்குமுறையாலும் மக்களின் அனுமதியின்றும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட துணைக்கண்டங்களில் ஒற்றையாட்சி (Unitary) எனப்படும் அரசியலமைப்பு, தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி சில தேசிய இனங்கள் கொழுக்கவும் சில தேசிய இனங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் செல்லவும் வழிவகுக்கும்.
இதற்கு மாற்றாக கூட்டாட்சியையும் சிலர் முன்மொழிவர். அந்த கூட்டாட்சியும் ஒவ்வொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டுமே தவிர ஒரு தேசிய இனத்தின் ஒற்றைச் சார்பு தலைமையில் அமையக்கூடாது. இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் கட்டமைக்கப்பட்டது தான் "இந்தி"ய அரசியலமைப்புச் சட்டம்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பல்வேறு தேசிய இனங்களின் மீதும் "இந்தி" மொழி ஆதிக்கம் செலுத்தவும், "இந்தி" பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் மற்ற அயல் தேசிய இனங்கள் மீது அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுத்திருக்கிறது. அப்படி தான் செயல்படுத்தப்பட்டும் வருகின்றது.
1965-ல் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற "இந்தி"ய அரசை எதிர்த்துப் போராடி மறத்தமிழர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை "இந்தி"ய தேசிய இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்தத் தமிழனால் மறக்க இயலும்?
இப்படிப்பட்ட இந்திய அரசக் கட்டமைப்பில் சிக்குண்ட பல தேசிய இனங்கள் ஒன்றோடு ஒன்றோடு மோதும் போது அவற்றிற்கு நடுவராக இருந்து தீர்க்க வேண்டிய இந்திய அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது? வேடிக்கைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டதைத் தவிர? இதற்குக் காரணம் அதன் ஒற்றைச் சார்புத் தன்மை தான் என்பதை எவரால் மறுக்க இயலும்?
காவிரிச் சிக்கலில் கர்நாடகம் தமிழக நீர் உரிமையை மறுத்து இந்திய அரசின் உச்சநீதிமன்றத்தையும் மதிக்கத் தவறியது. தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டார்கள். இந்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக பிரச்சினையைத் தீர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அது நடக்கவில்லை. வேடிக்கைப் பார்த்தது "இந்தி"யா. இதே நிலை தான் மற்றப் பிரச்சினைகளிலும் தொடாகின்றது.
இந்தியா என்ற கட்டமைப்பை மறுத்து கர்நாடகம் செய்த அராஜகங்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கும். ஆனால் தமிழன் செய்தால் அவன் மீது தேச விரோத முத்திரைக் குத்தும். ஒவ்வொருத்தருக்கும் ஒருவகைப்பட்ட நீதி. இது தானே பார்ப்பனியம். இப்படித் தானே இந்திய அரசு செயல்பட்டது. செயல்பட்டுக் கொண்டு்ம் இருக்கிறது.
மலையாளிகள் முல்லைப் பெரியாறுப் பிரச்சினையிலும் கன்னடாகள் காவிரி நீர் சிக்கலிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மறுத்தும் இந்திய அரசின் உச்சபட்டச நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தை எதிர்த்தும் பேசலாம். செயல்படலாம். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இந்திய தேசியம் கட்சிகளும், இந்தியத் தேசிய வாதிகளுக்கும் அதைத் தடுக்க வக்கில்லை. பேசுவதற்குத் துப்பில்லை. ஆனால் தமிழகம் தனது நீண்ட காலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் தடுக்கப்படுவதைக் கண்டித்து பந்த் நடத்தினால் மட்டு்ம் இந்திய அரசின் உச்சிகுடுமி மன்றம் ஞாயிற்றுக் கிழமை விடுப்பு என்றாலும் அவசர அவசரமாகக் கூடிக் கண்டிக்கும். இது தான் இந்திய தேசியமா..?
இவற்றிக்கு எல்லாம் மேலாக "இந்தி"ய அரசு ஈழப்பிரச்சினைத் தொடர்பில் என்ன செய்து கொண்டிருக்கிறது? "இந்தி"ய அரசு தனது ஆரிய இனவெறித் தன்மையுடன் சிங்கள அரசிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் இராணுவ உதவிகளையும் இன்ன பிற உதவிகளையும் திட்டமிட்டு பல வருடங்களாக செய்து வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இதனைப் பல்வேறு சமயங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் வெளிப்படுத்தியும் அதனை தமிழக அரசோ "இந்தி"ய அரசோக் கண்டுகொள்ளாமல் இருந்தன. அண்மையில் தான் இவ்வுதவிகள் அம்பலப்படுத்தப்பட்டதோடு அதனை இந்த நிமிடம் வரை "இந்தி"ய அரசு மறுக்கவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
"இந்தி"ய அரசு சிங்களனுக்கு உதவ வேண்டிய அவசியம் என்ன? அவனுக்கு உதவினால் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் தான் என்ன? பாகிஸ்தான், சீனம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிங்களனுக்கு ஆயுதங்களை வெளிப்படையாகக் கொடுப்பது உலகில் அனைவருக்கும் தெரியும். இது இந்திய அரசுக்கும் அதன் பாதுகாப்புத் துறைக்கும் தெரியாதா? தெரியும். இருந்த போதும் அவாகள் அமைதி காத்தார்கள். தம் இன எதிரிகளான தமிழர்கள் தானே அழிகிறார்கள் என்பதால் அமைதி காத்தார்கள். ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது சில புன்முறுவல்களையும் தமிழக மீனவர்கள் கொல்ப்பட்ட போது வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பார்கள், இந்த "இந்தி"யத் தேசிய வாதிகள்.
அண்டை நாடு ஆயதங்கள் வாங்கிக் குவிப்பதால் நம் நாட்டிற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணம் "இந்தி"ய பாதுகாப்புத் துறைக்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் தமது அடிமையான தமிழக மீனவனை சிங்களப் படைகள் சுட்டுக் கொன்ற போது கூட அவன் மீதும் "இந்தி"யன் என்ற முத்திரைக் குத்தியுள்ளோமே என்ற எண்ணம் கூட அவர்களுக்கில்லை. உயிரைப் பணயம் வைத்து தமிழக மீனவாகள் பிடித்து வரும் மீன்களுக்கு அந்நிய செலாவணி வரி கேட்டு பிச்சை எடுக்க மட்டும் வந்துவிடுவார்கள் இந்த "இந்தி"ய வரிப் பொறுக்கிகள். இதுவே பாகிஸ்தான் தனது படைகளை எல்லையில் குவித்தாலோ சீனா படைகளை குவித்தாலோ இந்தியத அமைதியாக இருந்திருக்குமா? அப்படியெனில் சிங்களன் ஆயதங்கள் குவித்த போது இந்திய அரசு அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தானும் ஆயுதங்களை வழங்கியது எதற்காக?
ஏற்கெனவே நீர்சிக்கல்களால் அயல் தேசிய இன மாநிலங்கள் "இந்தி"ய கட்டமைப்பை மதிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னடா "இந்தி"யத் தேசியம் என்று பல முணுமுணுப்புகள் தமிழகத்தில் எழந்திருந்ததை எவராலும் மறுக்க முடியாது. மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட நம் தமிழ் மண்ணில் உள்ள நெய்வேலி மண்ணிலிருந்து மின்சாரத்தைப் பிடுங்கி இந்த நீர்தரமாட்டோம் என்று அடம்பிடிக்கும் அடாவடி அயல் தேசிய இனத்தவருக்கு பகிர்ந்தளிக்கிறது "இந்தி"ய அரசு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாடு என்று நாம் "இந்தி"யாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் தலைமையோ நம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்க ஆய்தங்கள் வழங்கி உதவிப்புரிகிறதே என்ற வலி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையா இல்லையா? இந்த உண்மையை எவ்வளவு நாள் நாம் பொத்திப் பொதத்தி வைக்க இயலும்?
பிரிவினைக்குத் தூண்டியது கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களை அவ்வாறு பேச வைத்த அயல் தேசிய இனங்களும் அதைக் கண்டு கொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கும் "இந்தி"ய அரசுமே ஆகும். இதனை முதலில் "இந்தி"யத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல, விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று பார்ப்பன இந்தியத் தேசியக் கும்பல் வெறிக்கூச்சல் போடுகின்றது. அப்படியெனில் முதலில் ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பிலும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பான்மை தமிழக மக்களை சிறையில் தள்ளுவார்களா இந்த "இந்தி"யத் தேசியவாதிகள்? இப்படிச் செய்தால் தமிழ் மக்களின் கோப நெருப்பே உங்களைப் சுட்டுப் பொசுக்கிவிடும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக போராடுவதை திசைத்திருப்பும் விதமாக செயல்படும் இப்போக்கைக் கண்டித்து மக்கள் அணி திரள வேண்டும். ஏனெனில், கைது செய்யப்படுவது மனிதர்கள் தானேத் தவிர மக்கள் மனிதில் உள்ள கருத்துக்கள் அல்ல!
--
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------
8 கருத்துகள்:
நல்ல பதிவு...
துயரம், துயரம்!
//இந்தியா ஒரு தேசமல்ல. தனக்கென தனிப்பண்பாடு, மொழி, பொருளியல் என பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைக் கண்டமே ஆகும். இப்படி வாழ்ந்த பல்வேறு நாடுகள் அடக்குமுறையாலும் மக்களின் அனுமதியின்றும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட துணைக்கண்டங்களில் ஒற்றையாட்சி (Unitary) எனப்படும் அரசியலமைப்பு, தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி சில தேசிய இனங்கள் கொழுக்கவும் சில//
இந்திய சுதந்திரத்துக்கு தமிழ் தேசியவாதிகள் என்ன போராடி கிழுத்தார்கள்?? அனுமதியின்று கட்டமைக்கபட்டதாக நீங்கள் நினைத்து கொண்டால் பாவம் கனவுலகில் வாழும் அப்பாவி என்று தான் உங்களை கருத முடியும்.
//1965-ல் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற "இந்தி"ய அரசை எதிர்த்துப் போராடி மறத்தமிழர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை "இந்தி"ய தேசிய இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்தத் தமிழனால் மறக்க இயலும்//
300 பேர் என்பதற்க்கு ஆதாரம் தர முடியுமா? முற்றிலும் தவறான மிகைபடுத்தபட்ட தகவல், மேலும் சுட்டது தமிழ்நாடு காவல்துறையே.
1012 ராஜராஜசோழன் தமிழ் தெசியத்தை கட்டமைத்தார் என்று ஏதாச்சும் எழுத வேண்டியது தானே
கர்த்துகளை மட்டுறத்தல் செய்யும் போதே தெரிகிறது, உங்கள் ஆட்களின் கருத்து சுதந்திரம் தேசியம்
அதிக நாளகவே எனது மனதில் தோன்றிய கேள்வி, இந்தியாவில் கருத்து சுகந்திரம் என்று ஒண்றுமே இல்லையா?
good comments,as an Eelam Tamil I appreciate your support for us,I also congratulate all the people of Tamil nadu for their support.I am really sad that seeman,Amir ,viokko and kannappan are arrested.It is particularly sad that Seeman and Amir who are not even politicians are arrested just to intimidate other people's voice in the future.people say that India is the largest democracy in the world,but people do not have freedom of speech or freedom of expression in that 'democratic country'.it looks that India should become a true federal state and change it's constitution to suit all it's people not just the Hindi speakers.unless all the ethnic nations of the country feel they are treated equally ,there is going to be agitation which might develop into a bigger thing in the future.Why do all the bramins in Tamil nadu have anti tamil agenda.they speak tamil,they live in tamil land, yet they don't love or have affinity towards tamil language ,tamil people or tamil land .I am not saying all the non brahmins are supporters of tamil nationalism.however in their instincts they have a natural support for tamil nadu and people what I noticed is although lot of brahmins are good writers good creaters and has good grasp of tamil literature and language they don't have a natural feeling towards the tamil language for them ,it is just an other language just like english or french .while ago
I read some comments by tamil bramins against making tamil as a classical language. I was astonished to read it.In fact some Kannadas put comments asking for kannada to be a classical language,but whether kannada has the linguistic credentials or not it understandable that they are only arguing for their own language. even the kannadiga wasn't saying that tamil shouldn't be.but I couldn't understand was the animosity of the tamil brahmins.can some one explain the reason?
by the way, in Eelam situation is different .lot of bramins there are supporters of tmail freedom struggle in eelam.some of the bramin boys even died fighting sinhala army.
அயல் தேசிய இன மக்களின் அடாவடியை கண்டு இந்திய அரசு கள்ள மவுனம் சாதித்து வருவதற்கு இனஉணர்வு இல்லாத எருமை மாடுகளை காங்கிரஸ் காரர்கள் என்ற போர்வையில் தமிழகத்தில் உலவ நாம் அனுமதித்ததும், வாழும் இடத்தின் வரலாறு தெரியாத ஒரு சொம்பையை அதிமுக தலைமை பீடத்தில் வைத்ததும், பொதுப்பிரச்சினையில் ஒன்று கூடும் திராணி இல்லாத சுயநலமிகள் எல்லா கட்சியிலும் விரவி இருப்பதுமே காரணம்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதி ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்ட "Uprooting Hindutva" (By Thirumaavalavan, Meena Kandasamy, பார்க்க : Page No. 125 ) புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் சுமார் 500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழ்க்கண்ட இணைய இணைப்பும் இவ்வாறு கூறுகிறது.
பார்க்க : http://www.geocities.com/tamiltribune/03/0101.html
All the sacrifices Tamils made during the agitation (some 500 killed, couple of thousand maimed and many more wounded) did not buy anything but those empty promises. Hindi imposition continued and continues to this day
இவற்றை தங்கள் மேலான சிந்தனைக்கு உட்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வந்தேறிகளின் ஆட்டம் வரவர தமிழ்நாட்டில் எல்லை மீறி போய்கொண்டுள்ளது..இவ்வளவு நடந்தும் ஏதோ என்னமோ செய்கிறார்கள் தனக்கு ஒன்றுமில்லை என வேடிக்கை பார்கிறான் தமிழன் என்ன காரணம்? ஒரு தமிழின மரபியல் ரீதியான ஆய்வு
இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழி பேசி பல்வேறு இனங்களாக வாழ்ந்து வரும் மாந்த இனம் தொடக்கத்தில் ஒரே இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என மாந்தவியலர் கூறுகின்றனர். ஒரே இடத்தில் வாழ்ந்தபொழுது ஒரு மொழியையே அவர்கள் பேசியிருக்க வேண்டும். பின்பு தான் அவர்கள் பல்கிப் பெருகிப் படிப்படியாக உலகின் பல்வேறிடங்கட்கும் பரவியிருத்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்த பிறகு, இக்கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிழந்து தாங்கள் பேசிவந்த முதல் மொழியின் திரிபுகளிலிருந்தும் சிதைவுகளிலிருந்தும் பல்வேறு மொழிகளை உருவாக்கிக் கொண்டிருத்தல் வேண்டும்.
தென்பெருங் கடலுள் மூழ்கிப்போன குமரிக் கண்டமே மனிதனின் பிறப்பிடமாக இருத்தல் வேண்டும் என மாந்தரியல், மண்ணியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அக் குமரிக்கண்டமே தமிழனின் பிறந்தகம் என்பதைத் தமிழிலக்கியச் சான்றுகள் செவிவழிச் சான்றுகள் கொண்டும் வரலாற்றுச் சான்றுகள் கொண்டும் அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இனி அம்மாந்தர் பேசிய உலக முதன்மொழி தமிழே என்பதும் மொழியியல் அடிப்படையில் மொழி அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது. ஆயினும் தமிழன் நாகரிகமுற்ற முதல் மாந்தனாகக் கருதப்படல் கூடாது என்பது சிலரின் உட்கிடக்கையாக இருப்பதால், அத்தகையோர் மேற்கூறியவற்றுக்கெல்லாம் போதிய சான்றுகள் இல்லை என அவற்றை மறுப்பர்..
உலகிலேயே பிற இனத்தினர் மீது சிறிதும் வெறுப்போ பகைமை உணர்வோ இல்லாத இனம் தமிழினம் ஒன்றே. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது தனிப்பட்ட யாரோ ஒரு தமிழ்ப்புலவரின் உள்ளத்தின் விரிவை மட்டும் காட்டுவதன்று. அது தமிழனின் குருதியிலேயே ஊறிப்போன உணர்வு. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களைக் கூர்ந்து கவனிப்போர் அவர்கள்பால் பிறஇனத்தினரிடம் காணப்படாத இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் காணலாம்.ஒன்று, தங்களிடையே வாழவந்து தங்களையே கீழே தள்ளி மிதக்கும் பிற இனத்தினரின் சூழ்ச்சிகள், சுரண்டல்களினின்றும், கயமைகள் கரவுகளினின்றும், ஏன், வெளிப்படையான சிறுமைகள் அடாவடித்தனங்கள் மேலாண்மைகளின்றும் கூடத் தங்களையும் தங்கள் உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி கடுகளவும் இல்லாமல் இருப்பதாகும். இரண்டு, பிற இனங்களின் மீது கடுகளவும் இனவெறுப்பின்மை. மீண்டும் சொல்வேன் உலகிலேயே பிற இனங்களின் மீது இனவெறுப்பற்ற இனம் தமிழினம் ஒன்றே. மீண்டும் மீண்டும் சொல்வேன், பிற இனத்தவரை வெறுக்காத இனம், பிற இனத்தவரின் சுரண்டல்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி அற்ற இனம் தமிழினம்.
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியாகத் தமிழன் இருந்தமையால், தொடக்க வழிகளில் அவனை எதிர்க்க வேறு எந்த இனமும் இருந்ததில்லை. அதனால் யாரிடமிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை.பல்வேறு தாக்கங்களால் அவற்றின் இனப்பண்பு மாறிப் போனாலும் சொந்த மண்ணிலேயே தொடர்ந்து பன்னூறு ஊழிக்காலம் வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினம் பிறரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வையோ, பிறரைத் தன் எதிரியாகக் கருதி வெறுப்புக் கொள்ளும் இனவேறுபாட்டுணர்வையோ உருவாக்கிக் கொள்ளாமலேயே போய்விட்டது.
படிக்காத, எழுத்தறிவில்லாத ஒரு பொதுநிலையான (சராசரி) கன்னடனை, ஆந்திரனைக், கேரளத்தானை எடுத்துக் கொள்ளுங்கள். தன் இனம், மொழி என்று வரும் பொழுது கொப்புளித்துப் பொங்கி எழுகின்றானே. ஆனால் பொதுநிலையான ஒரு தமிழனை எடுத்துக் கொள்ளுங்கள். இனத்தளவில் தன்னைக் காத்துக் கொள்ளக் கடுகளவு சூடும் சுரணையின்றி இருக்கின்றானே. பொதுநிலைத்தமிழன் என்ன? படித்துப் பதவி பெற்று வயிறு வளர்க்கும் பெரும்பான்மைத் தமிழனுக்குக் கூட மொழி பற்றிய அக்கறை கடுகளவும் இல்லையே. தன் இனம் இப்படித் தாழ்ந்து கிடக்கின்றதே என்ற சூடு சுரணை இல்லாமல்தானே அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றான்!—-நன்றி (பேரா. ம.லெ. தங்கப்பா )
மரபு வழியான இனப்பண்பு அல்லது தற்காப்புணர்ச்சி அவன் குருதியில் இல்லை என்பதைத் தவிரத் தமிழன் இப்படி இனவுணர்ச்சி இல்லாதிருப்பதற்கு வேறென்ன அடிப்படைக் காரணம் சொல்ல முடியும்?இவ்வாறு வந்தவர்களை எல்லாம் தனது சகோதர்களாக பார்த்மையால் இன்று தமிழனுக்கு நிகழ்காலத்தில் நேர்ந்துள்ள அவலம் விவரிக்க முடியாதுள்ளது..
ஒரு கன்னடத்து வந்தேறி காந்கிரசு கட்சியின் சார்பில் சொல்கிறது ஈழத்துக்காக போராடுபவர்கள் அங்கு சென்று போராட வேண்டுமாம் தமிழனுடைய தாய் பூமியான தமிழ் நாட்டில் போராடமல் அண்டார்டிக்காவில் சென்றா போராடுவார்கள்?
அதே கட்சியை சேர்ந்த இன்னோரு தெலுங்கு வந்தேறி சொல்கிறது ஈழ போராளிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் தமிழினவிரோதிகளாம்.. வரவர யார் தமிழர்கள் என்ற குழப்பமே மேலிடுகிறது..இன்னும் இந்த ஆரிய வந்தேறிகளை பற்றி நாம் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை சோ+சப்புற மணிசாமி+மணிஆட்டும் ஐயர்+கன்னடத்து பாப்பாத்தி+மவுண்ரோடு மகாவிஷ்ணு பொந்து ராம்+தினமலம் என இவர்கள் பட்டியல் நீளுகிற்து..
வந்தவரை எல்லாம் வாழ வைத்த, தமிழனின் உழைப்பில் தின்று தமிழ் மண்ணின் சோறை தின்று ஆட்சி அதிகாரம் உடையவர்களாக ஆக்கிய தமிழனின் முகத்திலேயே கழியும் இவர்களின் செயலை என்னவென்று சொல்ல?நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது போகிற இடத்துக்கு தான் போகும்..வந்தேறிகளுக்கு தமிழ் ஒரு மொழி மளிகைசாமான் வாங்கவோ அல்லது பேரம் பேசவோ தமிழ்நாட்டில் அது பயன் படுகிறது..அவ்வளவுதான்!ஆனால் பச்சை தமிழனுக்கு அது உயிர் உணர்வு தன்மானம் சுய மரியாதை!வந்தேறிகளை தயவு செய்து தமிழ் படிப்பதை நிறுத்த சொல்லுங்கள் வந்தேறிகளிடம் தமிழரின் வீரம் வரலாறு,பெருமை என அவர்களை படிக்க சொல்வதால் அவர்களுக்கு தமிழ் இனம் என முகமூடியும் கிடைக்கிறது மேலும் தமிழரின் வரலாறு கண்டு பொறாமையும் உண்டாகிறது இவனிடம் போய் ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள் என்றால் சிரிக்கவே செய்வான்..அவன் ரத்தம் எவ்வாறு வேலை செய்யும்?
பேக்கரிகடை டீ கடை முதலாளி மலையாளி!–வாங்கி தின்பவன் தமிழன்
வட்டிக்கு விடுபவன் மார்வாடி–வட்டிகட்டுபவன் தமிழன்
மந்திரம் விடுபவன் ஆரியன் -தட்சணை கொடுப்பவன் தமிழன்
இவ்வாறான் நிலைமைகள் மாறி எமது தமிழ்மண்ணில் ஆள்பவனும் தமிழன் ஆளபடுவனும் தமிழன் என்ற நிலைமை என்று வருகிறதோ அன்றுதான் தமிழ் இனம் உருப்படும்
http://siruthai.wordpress.com/
Post a Comment