இனவெறி என்பது
பிற இனத்தவரை தாழ்மையாக கருதுவதும்..
பிற இனத்தவரின் உரிமைகளை மறுப்பதும்..
பிற இனத்தவரை அடிமை போல நடத்துவதும்..
பிற இனத்தவரிடம் பாகுபாடு காட்டுவது ...
தமிழர்கள் இது வரை யாருடைய உரிமைகளையாவது மறுத்திருக்கிறார்கள் ??? எந்த இனத்தவரையாவது அடிமைபோல நடத்தி அவர்களை பாகுபாடுடன் நடத்தியிருக்கிறார்களா ? தமிழர்களின் உரிமையை ஏன் மற்றவர்கள் மறுக்கின்றனர் ?? இதற்கு தங்கள் பதில் இருந்தால் நன்றாக இருக்கும்..
மராட்டியத்தில் கூலி வேலை செய்த தமிழர்களை அடித்து விரட்டினர் சிவசேனைய மராட்டிய படைகள்.. அதற்கு அவர்கள் சொன்ன பதில் 'மும்பை நகரம் மராட்டியர்க்கே' ஏன் அவ்வாறு கூறி விரட்டினர் ????
ஆசியாவிலேயே அதிகம் குடிசை மக்கள் வசிக்கும் பகுதி மும்பை தாராவி பகுதி.. அங்கு யார் வசிக்கிறார்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளவும்..
இங்கு தமிழகத்தில் எத்தனை மார்வாடிகள் கால் மேல் கால் போட்டுக் கொண்டு வட்டித் தொழிலில் தமிழர்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கினறனர் என்hதை பார்க்கவும்...
கேரளாவிலிருந்து தமிழகத்தில் வந்த மலையாளிகள் 3 லட்சம் தேனீர் கடைகள் வைத்துள்ளனர்.. அதற்கான நன்றியை கூட முல்லை பெரியாறு பிரச்சனையில் காட்ட மறுக்கின்றனர்.. கடலில் கலக்கும் வீணாகும் நீரில் சில டி.எம்.சியைக் கூட மறுக்கின்றனர்.. ஏன் ??????
ஒரு மலையாளி (அந்தோணி) ராணுவ அமைச்சராக இருக்கும் ஒரே காரணத்திற்காக முல்லை பெரியாற்று அணைக்கு சம்பந்தமே இல்லாத கப்பற் படை ஏன் வந்தது ? யார் உத்தரவிட்டார் ? மலையாள இன உணர்வு தானே காரணம் ?
கேரளாவிற்கு தினமும் அரிசி, பருப்பு, இறைச்சி என எவ்வளவோ செல்கிறது ... ஏன் அவர்களுக்கு நம் மீது மட்டும் இப்படியொரு தாழ்மையான எண்ணம்... 96 சதவீதம் தமிழர்கள் வசித்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் ஏன் கேரளத்தோடு இணைக்கப்பட்டது,..? யார் இணைத்தது ??? ஏன் இணைத்தனர் ???
ஆந்திரர்கள் பாலாற்றில் அணை கட்டுவதற்கு தைரியமூட்டியது யார் ? அது தவறா ??? சரியா ???
உலகில் எங்குமே அனுமதிக்கப்படாத ரசியாவின் அணுமின் நிலையத்தை தமிழகத்தை தவிர இந்தியாவில் எந்த மாநிலமும் பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை.. அதனால் மத்திய அரசு தமிழகத்தில் அதை அமைக்க தீவிரம் காட்டியது ஏன் ??? புதிய அறிவியல் சோதனைகளுக்கு பயன்படும் எலி போன்ற சிறு உயிரினங்களை போல ஏன் மத்திய அரசு தமிழர்களை கருதுகிறது ??
ரயில்வே துறைத் தேர்வுக்கு ஏன் பிஹாரில் மட்டும் விளம்பரம் செய்து இந்தியா முழுக்க நடப்பதாக சொல்லப்பட்டது ?? அம்மாநிலத்திற்கு மட்டுமான தேர்வு எனில் அதை எழுத பிஹாரிகள் சென்னைக்கு ஏன் வரவேண்டும் ?? ஏன் அத்தேர்வு மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்டடபோதும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படவில்லை ஏன் ??? யார் அதை செய்தது ? ரயில்வே துறை அமைச்சருக்கு இன உணர்வு ஏன் ?
இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியனுக்கு பிரதமர் பதவி... தன்னையும் கற்பழித்து தன் அண்ணன் மார்களை கண் முன்னேயே கொன்ற இந்திய அமைதிப் படையினரை எதிர்த்து அதை அனுப்பிய ராசீவ் காந்தியை அழித்த சுபா என்கிற தமிழச்சியைக் காட்டி ஒர் இனத்தின் விடுதலையையே தடுப்பது ஏன் ?? தமிழர்களிடம் மட்டும் ஏன் இந்த பாகுபாடு ??
உப்புத் தொழிலில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது தமிழகம்.. குஜராத் இரண்டாம் இடம்.. திடீரென அயோடீன் குறைவு என ஏன் தமிழகத் தொழிலை மட்டும் தடை செய்து குஜராத்தை முதலிடத்திற்கு போனது எப்படி ? நம்மை விட குறைந்த அயோடின் சக்தி கொண்ட குஜராத் உப்புத் தொழிலை ஏன் காங்கிரஸே தடை செய்யவில்லை ?????
நம்முடைய தமிழ் நிலமான கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக வழங்கியது யார் ???
நாகப்பட்டினம் மீனவர்களை தினமும் சுட்டு அட்டுழியம் செய்யும் இலங்கை அரசை என்றாவது இந்திய அரசு கண்டித்ததா ? என்ன நடவடிக்கை எடுத்தனர் ?? குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் படையினர் சுட்டால் அதற்கு உலகையே கூப்பிட்டுக் காட்டும் மத்திய அரசு ஏன் தமிழர்களிடம் பாகுபாடு காட்டுகிறது ?? தமிழர்களும் இந்தியர்கள் தானே ??
தாங்கள் பழம் பெரும் நாடு என்னும் இந்திய நாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் ஏதேனும் உண்டா ??? தெரிந்து கொள்ள ஆசை.. கூறுங்களேன் தோழரே....
இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி திறமை கெட்டு போய் விடும் என்று கூறிவிட்டு சுமார் 75 வருடங்களாக இடஓதுக்கீடு அமல் படுத்தும் தமிழகத்திற்கு ஏன் வடநாட்டவர்கள் மருத்துவத்திற்கு தமிழகம் வருகிறார்களே ,,? இங்கு தான் தகுதியும் திறமையும் கெட்டுப் போய்யிருக்குமல்லவா ??? ஏன் அதை உச்சநீதி மன்றம் மறு ஆய்வு செய்ய சொன்னது ???
குடியரசுத் தலைவர் கலாம்.. ஒரு தமிழனாய். இலங்கை பிரச்சனைக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ?? ஒரு குடியரசுத் தலைவராய் நாட்டிற்று புதிதாக ஏதேனும் செய்திருக்கிறாரா ? அவர் தன்னிச்சையாக மக்களுக்காக எடுத்த ஏதாவது ஒரு திட்டத்தினை சொல்லவும்..
முதன் முதலில் 1805 வேலூரில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் ஏன் மறக்கடிக்கப்பட்டு 1857 கலகம் மட்டும் பாட புத்தகங்களில் முதலிடம் பெற்றது ??
'இந்தியாவில் அனைவரும் சமம் '- நியாயப்படுத்துக...
ஏன் நாகாவை மட்டும் தனித் தேசிய இனமாக இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 371(ஏ) பிரிவு அங்கீகரிக்கிறது ? மற்ற இனங்களான தமிழ், மலையாளம், பிஹாரிகள், மராட்டியர்கள், கன்னடர்கள் ஆகியவற்றை ஏன் மறுக்கிறது ???
மகாராட்ரம், காசுமீர், அசாம், மெகாலயா, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மற்ற மாநிலத்தவர் ஏன் நிலம் வாங்கக்கூடாது ? அதை ஏன் அரசியலமைப்பு சட்டம் 351 முதல் 355 வரை உள்ளிட்ட பிரிவுகள் ஏன் மறுக்கின்றன ? அது இந்தியா தானே ?? ஏன் இந்த பாகுபாடு ? மகாராட்டிரம் முன்னேறாத மாநிலமா ?
மேலே என் அறிவுக்கு எட்டிய வற்றுக்கும் எனக்கு தெரிந்தவற்றுக்கும் தான் கேள்வி கேட்டுள்ளேன்.. தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. இவற்றுக்கான பதிலை மற்றவர்களும் எழுதலாம்..
நான் தமிழ் இன வெறியன் இல்லை. உலகை ஆண்ட தமிழினம் வீழ்ந்து கிடப்பதை எண்ணி வேதனைப்படும் பலருள் ஒருவன். 5000 வருட தமிழன் என்கிற அடையாளம் மறந்து இந்தியன் என்கிற போலி அடையாளத்தை மறுப்பவன்..
இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது தமிழர்களாய் இருந்தும் 'இந்தி"ய அடையாளம் பேணுபவர்கள் தான்....
இதற்கு பதிலலித்து விட்டு என்னையும் இந்தியனாக மாற்றுங்கள்... என் தமிழ் அடையாளத்தை எப்படி தகர்ப்பது என யோசியுங்கள்...
ஒரு மனிதன் சாதி இல்லாமலும், மதம் இல்லாமலும் வாழ முடியும்..
மொழி இல்லாமல் வாழ்ந்த மனிதப்பிறவி இதுவரை இல்லை..
ஏனெனில் மொழியும் இனமும் இயற்றை அளித்தது.. அதை பாதுகாப்பது நம் கடமை.. அதை பிறர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்ப்பது மடமை...
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழோடு....
தோழமையுடன்
க.அருணபாரதி
0 கருத்துகள்:
Post a Comment