Wednesday, February 28, 2007

தமிழன் மலமள்ள ரசிக்கும் திராவிட கட்சிகள்

தமிழன் மலமள்ள ரசிக்கும் திராவிட கட்சிகள்

 
இந்தியாவை 50 ஆண்டுகாலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியும், அதனோடு மாற்றி மாற்றி 40 ஆண்டுகாலமாக கூட்டணி வைத்திருந்த திராவிட கட்சிகளும் மக்களை நரகப்படுகுழியில் தள்ளி தூக்கு போட்டுக் கொண்டு சாகும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளன.

சமீபத்தில் தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வுதரத்தை ஆராய்ந்த லயோலா கல்லூரி திமுக ஆட்சியில் விலைவாசிகள் விண்ணை முட்டிவிட்டதாக சொல்லியிருக்கிறது. இதற்கு முழுக்க, முழுக்க மத்திய அரசும் அதை தாங்கி நிற்கும் திமுகவுமே காரணம் என்கிறார் இடதுசாரி அரசியல் விமர்சகர் சோலை.அடிப்படை பொருட்களின் விலைவாசி உயர்வு பற்றி லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு பின்வரும் அபாய அறிவிப்பை செய்கிறது.

"அரிசியைத் தவிர, இதர எண்ணெய், பருப்பு வகைகள், சமையல் பொருள்களின் விலைகள் கிராமங்களில் வானத்தில் ஏறிக் கூத்தாடுகின்றன என்று, கருத்துக் கணிப்பு சிவப்பு விளக்குக் காட்டியிருக்கிறது.

இதனை நாமே கிராமங்களில் நேரடியாக உணர முடிந்தது. என்ன இது? அரிசி விலையைக் குறைச்சுட்டு எண்ணெய், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு விலைகளைக் கலைஞர் உயர்த்திவிட்டாரே என்று பாமரத்தனமாக மக்கள் கேட்டனர். என்ன பதில் சொல்வதென்று மௌனமானோம். .."

விலைவாசி உயர்விற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசின் கொள்கைகளால்தான் விலைவாசியை விண்ணில் ஏற்றி விளையாடுகின்றன என்று பதில் சொல்லலாம். ஆனால், டெல்லியிலும் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமர்ந்திருக்கிறதே என்று அவர்கள் எதிர்க் கேள்வி கேட்பார்கள்.

விலைவாசி விண்முட்ட காரனம் என்ன?திமுக,பாமக காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகள் தான் காரனம் என்கிறார் சோலை. கடும் வார்த்தைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சாடுகிறார் சோலை

"வணிகத்தில் யூக வியாபாரத்தை மத்திய அரசு அனுமதித்தது. கூண்டிற்குள் பசியெடுத்துப் படுத்திருந்த பெரிய வணிகர்களைத் திறந்துவிட்டது. எந்த உணவுப் பொருளை வேண்டுமானாலும் நீங்களே கொள்முதல் செய்யலாம் என்று அனுமதித்தது. அவ்வளவுதான். கொள்முதல் செய்து அவர்கள் பதுக்கி வைத்துவிட்டார்கள். யூக வணிகம் விலைவாசியை உயர்த்திக் கொண்டே போகிறது. இந்த லட்சணத்தில், 'விலைவாசியைக் கட்டுப்படுத்தப் போகிறோம்' என்று நிதி அமைச்சர் வேறு தமாஷ் செய்கிறார்.

எந்த அளவிற்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதனை தீபாவளியின்போது சாதாரண மக்களும் உணர்ந்து கொள்வார்கள். அந்த ஆதங்கத்தை இப்போதே அவர்கள் கருத்துக்கணிப்பாளர்களிடம் கவலையோடு தெரிவித்திருக்கிறார்கள்"

தரிசு நிலத்தை விவசாயிகளுக்கு வினியோகிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நேர்ந்துள்ளன என்கிறது லய்யோலா கல்லூரியின் கருத்துகணிப்பு.பல ஆண்டுகளாக தரிசு நிலங்களில் விவசாயம் செய்து வந்தவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கி கழக கண்மணிகளுக்கு தாரை வார்த்துள்ளதாம் திமுக அரசு. இதனால் அடித்தட்டு மக்களிடையே கடும்கோபமும், கொந்தளிப்பும் நிலவுகிறதாம். இதை கடுமையாக கண்டிக்கும் சோலை "அரசு தரிசு நிலங்களை ஏற்கெனவே நிலம் உள்ளவர்கள், வசதியானவர்கள் ஆக்கிரமித்திருந்தால், அதனைக் கைப்பற்றுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தரிசு நிலம்தான் ஒரு விவசாயியின் உடைமை என்றால், அதற்குப் பரிகாரம் காணவேண்டும். அந்தத் தரிசு நிலத்தைப் பண்படுத்த அந்த விவசாயி இரவு பகலாக எந்த அளவிற்கு ரத்தமும் வியர்வையும் சிந்தியிருப்பான்? இப்படி ஒரு சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால், அடிபட்டு வீழ்ந்து மூச்சுக் காற்றில் முனகிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தத் தவறுகளே ஊன்று கோல்களாகிவிடும்." என்கிறார்.

தமிழகத்தில் கொள்ளை நோய்கள் தாண்டவமாடுகின்றன. இந்தியா முழுக்க டெங்கு, சிக்குன் குனியா என விஷநோய்கள் மக்களை கொன்று குவிக்கின்றன. உண்மையான புள்ளிவிவரங்களை கூட வெளியிட மறுக்கும் தமிழக அரசு சிக்குன் குனியாவில் இதுவரை ஒருவர் கூட சாகவில்லை என புளுகு மூட்டையை அள்ளி தெளித்து கோயபல்ஸ் பாணியில் விளம்பரங்களை அள்ளி தெளிக்கிறது. இந்த விளம்பரங்களுக்கு செலவு செய்யும் காசை சிக்குன்குனியாவில் சாகிறவர்களுக்கு செலவு செய்தாலாவது பயன்பாடாக் இருக்கும் இல்லையா?

ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் மக்கள் நோய்வந்து சாக சினிமா காரர்களுக்கு காசை அள்ளிதெளித்து அவர்களிடமிருந்து மலர்கிரீடமும், தங்கபேனாவும் வாங்கி விழா கொண்டாடிக் கொள்கிறார் கலைஞர்.


மத்தியில் உள்ள சுகாதார துறை அமைச்சர் அன்புமணி என்ன கிழிக்கிறார் என்றே தெரியவில்லை. நோய் இருக்கிறது என ஒத்துகொள்வதை விட நோயே இல்லை என சாதிக்கும் போக்கு தான் மத்திய சுகாதார அமைச்சரகத்திடம் காணப்படுகிறது. இதை பற்றி குறிப்பிடும் பதிவர் சிவபாலன் பல அதிர்ச்சி தகவல்கலை தெரிவிக்கிறார். "டெல்லியில் தலைகாட்டிய டெங்கு நோய் இன்று 18 மாநிலங்களில் பரவி 56 உயிர்களை பலிவாங்கியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3500 பேர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். கொள்ளை நோய் என அறிவிக்காவிட்டாலும் நிலைமை மோசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 3500க்கும் அதிகமானோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மட்டும் புதிதாக 28 பேர் டெங்கு நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இம் மருத்துவமனையில் 6 ஆயிரம் பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நிலைமை மோசமானவர்கள் மட்டுமே மருத்துவமனையில் வைத்து கவனிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்."

இதை விட கேவலம் என்னவென்றால் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், 40 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளும் , ஆறாண்டு காலம் ஆட்சி செய்த பா.ஜ.கவும், இன்னும் தம் மக்களை மலம் அள்ள வைக்கும் நிலையில் தான் வைத்திருக்கின்றன என்பதுதான். இந்தியாவில் மலம் அள்ளும் தொழிலை இன்னும் 6.76 லட்சம் பேர் செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கோவையில் 40 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு பிறகும் தமிழன் மலம் அள்ளும் நிலைமையை பாருங்கள்.
இந்த மாதிரி மனித மலத்தை மனிதன் அள்ளும் கேவலத்துக்கு முழு பொறுப்பும் மாநில அரசுகளும் மத்திய சுகாதார துறையும் தான் என தெரிவிக்கிறது பிரண்ட்லைன் பத்திரிக்கை. 40 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் இதற்கு என்ன பதில் சொல்ல போகின்றன?மத்திய சுகாதார துறை அமைச்சகம் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

தமிழனை இன்னும் மலம் அள்ள வைத்து, அவர்களின் பிரதிநிதி நான் என மார்தட்டிக்கொண்டு, புரட்சி தலைவி, தமிழன தலைவர் என பட்டங்களை சுமந்துகொண்டு அடிப்படை மக்களின் பயன்பாட்டுக்கு உள்ள பொருட்களின் விலையை விண்முட்ட ஏற்றிவிட்டு, சினிமாகாரர்களுக்கு ஒட்டுமொத்தமாக வரிவிலக்கு அளித்து கோடீஸ்வர கோமான்கள் வீட்டில் ஏசி ஓடவும், இவர்களுக்கு ஒட்டு போட்ட மக்கள் பீ அள்ளவும் வைத்த திராவிட கட்சிகள் இனி மேலும் நாட்டை ஆண்டால் தமிழ ்நாடு சுடுகாடாகிவிடும்.


--
செல்வன்
தனிமடல் தொடர்புக்கு: holyape@gmail.com


நன்றி செல்வன்

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்