Monday, April 30, 2007

உலகத் தொழிலாளர் தினம்

உலகத் தொழிலாளர் தினம்      8 மணி நேர வேலைக்காக  சிக்காகோவின் வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தின் நினைவாக கொண்டாடப்படும் உலகத் தொழிலாளர்கள் தினம் மே 1 அன்று புரட்சிகர தலைவர்களின் பாதையில் தமிழ்த் தேசிய விடுதலைக் காண அணிதிரள்வோம்.. உலகத் தொழிலாளர்களுக்கு மேதின...

Tuesday, April 24, 2007

தமிழனைக் கொல்ல சிங்களனுக்கு உதவும் இந்தியா

தமிழனைக் கொல்ல சிங்களனுக்கு உதவும் இந்தியா க.அருணபாரதி       இந்தியா இலங்கைக்கு தற்பொழுது புதுப்புது நவீன ஆயுதங்களைக் கொடுத்து உதவியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன.  ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் உச்சத்தில் வீற்றிருக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கைகளைக் கண்டு உள்ளம் பூரித்து போன 'இந்தி்'ய அரசின் இந்த செயல் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை...

மீண்டும் சீறீய தமிழரின் வான்படை

பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல் செவ்வாய்க்கிழமை 24 ஏப்ரல் 2007 04:33 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ (புதினம்.காம்) யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில் தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின்...

Friday, April 13, 2007

நாளை அம்பேத்கார் பிறந்தநாள்

டாக்டர் அம்பேத்கர் தெ.மதுசூதனன் அம்பேத்கர் பெரிய அறிஞர். இந்தியாவுக்கு அரசியல் சட்டம் வகுத்தளித்த மேதை. முதன்முதலில் வெளிநாடு சென்று டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞர். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது புக்கர் வாஷிங்டனின் கருத்துக்களால் கவரப்பட்டுத் தனது வாழ்நாளைத் தாழ்த்தப்பட்டவர்களின்...

தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா?

  தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா?   "இப்பொழுதெல்லாம் புத்தாண்டென்றால் ஆங்கிலப் புத்தாண்டு என்றாகிவிட்டது...." என சுப்பு சொல்கிறார். அது புத்தாண்டு பற்றிய அவரது மனத்தடங்கலைக் காட்டுவதாக உள்ளது.   என்ன செய்வது? எப்படி செய்திப் பரிமாற்றத் துறையில் ஆங்கில மொழி உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே போல் ஆங்கிலப் புத்தாண்டும் இனம், பண்பாடு ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எல்லோருக்கும்...

தமிழ் புத்தாண்டுத் தினமா ?????

 தைப்பொங்கல் தினமே தமிழ் புத்தாண்டுத் தினமாகும்! சபேசன், அவுஸ்திரேலியா   தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், 'பண்டைய காலக்கணக்கு முறை' வழியாகவும் முன்வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட...

Wednesday, April 11, 2007

சோதிடம், மந்திரம் என்பவையெலாம் மோசடியே!

சோதிடம், மந்திரம்என்பவையெலாம் மோசடியே! `மந்திரத்தால் மாங்காய் விழுமா?' என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. இதன் பொருள் அவ்வாறெல்லாம் நடக்காது என்பதுதான். ஆனாலும் நடைமுறையில் மக்களிடம் இருக்கும் பேராசையும், பயமும் இவற்றை யெல்லாம் நம்பும்படிச் செய்கின்றன. ஒரே ஒரு நிமிடம் இந்த நம்பிக்கையாளர்கள் சிந்தித் தாலே மாந்திரீகத்தின் பித்தலாட்டம் தோலுரிந்து போய்விடும்.மாந்திரிகம் செய்கிறேன் என்று சொல்லி மார்தட்டும்...

Monday, April 09, 2007

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்! செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள அத்தியூரைச் சேர்ந்த பழங்குடி இருளர் பெண் விஜயாவை, ஒரு திருட்டு வழக்கில் அவரது பெரியப்பா மகன் வெள்ளையனைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறுபேர் கடந்த 29-7-1993 அன்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர். பல்வேறு போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது....

Friday, April 06, 2007

தலித் அடிமைகள்... தலையிடாத அரசு!

கொளத்தூர் ஒன்றியத்தில் அதிர்ச்சி சர்வே...அந்தக் கிணற்றருகில் விளையாடிய சின்னக் குழந்தை. திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. அருகில் இருந்த பெண்களின் அலறல் கேட்டு, பக்கத்துத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டி ருந்த ஒரு பெரிய பையன், கிணற்றுக்கு ஓடி வந்திருக்கிறான். கிணற்றுக்குள் குதித்துக் குழந்தையைக் காப்பாற்ற அவன் தயாரான போது, அவனைத் தடுத்து நிறுத்திவிட்டனர் அந்தப் பெண்கள். எல்லோர் கண் எதிரிலும்...

Wednesday, April 04, 2007

நாம் யார் ? தமிழனா இந்தியனா ?

நாம் யார் ? தமிழனா இந்தியனா ? க.அருணபாரதி   ''தமிழ்'' என்பது ஒரு மொழி மட்டும் என்று யார் சொன்னது ?   இனம் என்பது மானுடவியல்(Anthropology) கூற்றுப்படி மொழி, இடம், பண்பாடு, கலாச்சாரத்தின் படி இயற்கை வழிப்பட்ட ஒர் மக்கள் கூட்டமே இனமாகும்...   (இது ஓர் அறிவியல்.. யாரம் 'இனப்பிரிவினை''இனப்பாகுபாடு''இனபேதம்'' என்று கொதிக்கவேண்டாம்..)   தமிழருக்கு ஒரு பண்பாடு (தமிழ்ப் பண்பாடு),...

குறிப்பிடத்தக்க பதிவுகள்