Monday, June 30, 2008

காகிதக் கத்திகள் - முழுநிலவன்

காகிதக் கத்திகள்
முழுநிலவன்

 
அடர்ந்த காட்டுக்குள்
அகோர சத்தத்துடன்
தொடர்வண்டிகள்
வண்டிச் சக்கரங்களில்
வன விலங்குகள்

அணைக்கட்டுகளுக்காய்
அழிக்கப்பட்ட காடுகளின்
தேன் ருசித்த குரங்கு
பாடப்புத்தகத்தின்
ஏழாம் பக்கத்தில்
தூக்கிட்டு தொங்க
கதறி அழுகின்றன

குழந்தைகள்
நிலம் முழுதும் உழுதும்
மீன் பிடிக்கக் கூட
மண்புழுக்கள் இல்லை
புல், பூண்டுகளற்ற பூமியில்

ஆடு மாடு வளர்க்க
அம்மாவால் முடியவில்லை
பெட்டை ஆட்டையும்
குட்டியையும் கூட
அறுப்புக்காரனிடம் விற்ற காசை
சேர்க்கவும் இல்லை
செலவழிக்கவும் இல்லை

மூன்றாவது வெள்ளிக் கிழமை
முனியன் கோயில் உண்டியலிடம்
எதுவுமற்ற காட்டில்
என்ன தந்திரத்தை நரி செய்ய?
ஊரைப் பார்த்து
ஊளையிடுவது தவிர
அல்லது
தெற்கு வாய்க்காலில்
உயிர்விடுவது தவிர

காடழித்து வீடுகளாக்கிவிட்டு
வீடேறும் பாம்புகளை
வேலிக்கம்பால் கொன்ற பின்
வயல்களிலும்
வைக்கோல் போரிலும்
ஏகத்துக்கும் பெருகிவிட்டன
எலிகளின் எண்ணிக்கை

விதை நெல்லுக்கான செலவை விட
எலி மருந்துக்கான செலவு அதிகம்
படித்தவர்கள் பெருக பெருக
பல்லுயிர்கள் குறைந்து போக
தாவரங்கள், விலங்கினங்களால்
தட்பவெப்பம் வகுபட
ஈவாய், மீதியாய் வந்து நிற்கிறது
எல்லோர் வீட்டுக்கும்
புயல், வெள்ளம், பூகம்பம்

-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்