புதுச்சேரியின் மிகப்பழமையான பிரஞ்சு உயர்நிலைப்பள்ளியான சொசியத்தே புரோகிரசிஸ்த்தே பள்ளியில் சிறுவயது முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.

ஆறாம் வகுப்பின் போது பள்ளியில் இயங்கிய பாரத சாரண இயக்கத்தில் சேர்ந்தேன்(1996). அதில் நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு முதலுதவி உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றேன்.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் மார்ச் பாஸ்ட்டில் தொடர்ந்து 3 வருடம் கலந்து கொண்டேன்.

எட்டாம் வகுப்பு பயிலும் போது சங்கரதாஸ் நாடக சபா நடத்திய வினாடிவினாப் போட்டியில் முதற்பரிசு பெற்றேன். (21-09-1997)
வகுப்பின் போது மதுரைத் தமிழ் சங்கம் நடத்திய தமிழ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.
0 கருத்துகள்:
Post a Comment