
மிகுந்த ஆவலுடன் ஆரம்பித்த இந்த இயக்கத்தை இன்றுவரை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில் துணைத் தலைவராக இருந்த நான் 2004 ஆம் ஆண்டு முதல் தலைவராக செயல்பட்டு வருகிறேன். எமது நண்பர்கள் மூலம் எம்மாலியன்ற சிறுசிறு உதவிகளை செய்து வந்தோம். பலமுறை ஆதரவற்றோர் இல்லங்களில் குழந்தைகளுக்கு விருந்தளித்துள்ளோம்.

சென்ற வருடம் ஜுன் மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்தோம்.


அந்த விழாவில் இன்று புதுவை சட்டமன்ற உறுப்பினராக உள்ள திரு. ஓம் சக்தி சேகர் அவர்கள் கலந்து கொண்டார்.

நான் எழுதிய எங்களது இயக்கத்தின் கொள்கை விளக்க புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியும் இணையதளத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது.
2006 ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின் போது அனைவரும் வாக்களிக்க வேண்டி பிரச்சார செய்தோம். எங்களது பிரச்சாரத்திற்கான பலனும் கிடைத்தது. புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக 86மூ சதவிகிதம் வாக்கு பதிவானது.
0 கருத்துகள்:
Post a Comment